PDA

View Full Version : டெண்டுல்கர் காப்டன்



aren
15-09-2007, 09:34 AM
டெண்டுல்கரை டெஸ்ட் போட்டிக்கும் ஒரு நாள் போட்டிக்கும் காப்டனாக்க இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. டெண்டுல்கர் பேரளவில் இதற்கு ஓகே சொல்லிவிட்டு இரண்டு நாட்கள் அவகாசம் கேட்டிருக்கிறார். ஆனால் தொடர் விட்டு தொடர் காப்டனாக இருக்க சம்மதித்திருக்கிறார். இதன் அறிவிப்பு அதிகாரப்பூர்வமான இன்னும் இரண்டு தினங்களில் வெளிவரும் என்று தெரிகிறது.

தோனி உதவி காப்டனாக இருப்பார்.

நன்றி வணக்கம்
ஆரென்

க.கமலக்கண்ணன்
15-09-2007, 09:44 AM
ஒரு நல்ல படைப்பாளி (Creative Man)

ஒரு நல்ல நிர்வாகியாக இருக்கமுடியாது. ஆனால்

ஒரு நல்ல நிர்வாகி நல்ல படைப்பாளியாக இருக்க முடியும்.

ஒரு நல்ல கடைப்பாளியை நிர்வாகியாக்கினால் எந்த அளவிற்கு பயன் தரும் என்று

ஒட்டு மொத்தமாக சொல்ல முடியாது காலம் தான் பதில் சொல்ல வேண்டும்...

aren
15-09-2007, 09:50 AM
இந்திய கிரிக்கெட்டிற்கு தலைவராக இருப்பவது எளிதான காரியமில்லை. பலருக்கு தலை வணங்க வேண்டியிருக்கும். நான் தேர்ந்தெடுக்கும் குழு களத்தில் இறங்காது, மாறாக மற்றவர்களின் குழுவிற்கு தலைதாங்க நேரிடும். இதனாலேயே திறமையான விளையாட்டாளர்கள் திறமையான காப்டனாக இந்தியாவில் இருந்தது இல்லை. டெண்டுல்கரும் அதற்கு விதிவிலக்கல்ல.

ராஜா
15-09-2007, 09:54 AM
மாட்டிரிக்ஸ் சொல்வதை அப்படியே ஏற்கிறேன்.. ராகுல் விலகியதற்குகூட
அதுவே காரணமாக இருக்கக்கூடும்.

ஓவியன்
15-09-2007, 11:39 AM
டெண்டுல்கர் கப்டனாக இருந்த போது அவரது ஆட்டம் பாதிக்கப் பட்டிருந்தது........
இப்போது மீள அவர் கப்டனாக்கப்படுகிறார்........
பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கப் போகிறது என்று........?