PDA

View Full Version : தென்றல் சுடும்!!!



aren
15-09-2007, 02:48 AM
வாடைக்காற்று
கோடைக்காற்று
பனிக்காற்று
இப்படி பல இருந்தாலும்
தென்றல்காற்றே
மிதமானது
இனிமையானது!!!

நீ என்னுடன்
இருந்தபொழுது
தென்றல்காற்று
இனிமையாக
இருந்தது!!!

நீ என்னுடன்
இல்லாத
இந்த நேரத்தில்
இனிமையான
தென்றல் காற்றும்
நெருப்பாக
சுடுகிறதே!!!

வந்துவிடு
நீ
உடனே
வந்துவிடு!!!

பிச்சி
15-09-2007, 11:56 AM
அண்ணா தென்றல் காற்று சுகமாக இருக்காது. ஏனெனில் சுகமான காற்று மென்காற்றுதான்.

நீ என்னுடன்
இல்லாத
இந்த நேரத்தில்
இனிமையான
தென்றல் காற்றும்
நெருப்பாக
சுடுகிறதே!!!

இந்த வரிகள். சூப்பர்...

அக்னி
15-09-2007, 12:41 PM
நீ இல்லாத போது,
அசைவை தர மறுக்கிறதே...
நில்லாதபோது,
இனிமையாய் தளுவ மறுக்கிறதே...
தென்றல்..!

உன் அசைவுகள்தானோ,
தென்றலின் பிறப்பாக்கம்..?

பாராட்டுக்கள் ஆரென் அண்ணா...

சிவா.ஜி
15-09-2007, 12:51 PM
தென்றல் சுடுவது
காத்திருப்பின் கணலாலா....
அவள் அருகில்லாத அணலாலா...
அவள் இல்லாத நேரம் வந்ததாலா..
அவளைக் காணாமல்
கோபம் கொண்டதாலா......
ஏக்கப் பெருமூச்சில்
இதயம் வெந்ததாலா....

தென்றல் சூட்டை மன்றம் உணரவைத்த ஆரென்...வாழ்த்துக்கள்.

அக்னி
15-09-2007, 12:54 PM
தென்றல் சுடுவது
காத்திருப்பின் கணலாலா....
அவள் அருகில்லாத அணலாலா...
அவள் இல்லாத நேரம் வந்ததாலா..
அவளைக் காணாமல்
கோபம் கொண்டதாலா......
ஏக்கப் பெருமூச்சில்
இதயம் வெந்ததாலா....

லாலா எனப்பாடிய மனதை,
பாட வைத்தவள்...
வராததாலா..?

பாராட்டுக்கள் சிவா.ஜி...

சிவா.ஜி
15-09-2007, 12:57 PM
லாலா எனப்பாடிய மனதை,
பாட வைத்தவள்...
வராததாலா..?

பாராட்டுக்கள் சிவா.ஜி...

ஆஹா அக்னியின் இன்னொரு லாலாவா....அசத்தல். பாரட்டுக்கு நன்றி அக்னி.

அமரன்
15-09-2007, 07:19 PM
தென்றலும் அவள் நினைவில்
நெருப்பு அதன் நனைவில்....

பழைய மகிழுந்தை பழுதுபார்க்கும் கவிதை.
வார்த்தைச் சலித்தல் அவசியம் தேவை.

இலக்கியன்
16-09-2007, 02:45 PM
தென்றல் காற்றே சுட்டெரித்தனவோ வாழ்த்துக்கள் அக்னியாரே

aren
16-09-2007, 03:33 PM
தென்றல் காற்றே சுட்டெரித்தனவோ வாழ்த்துக்கள் அக்னியாரே

மறுபடியும் கவுத்திட்டீங்களே இலக்கியன். போன பதிவிலும் நீங்கள் இதையே செய்தீர்கள்.

இலக்கியன்
16-09-2007, 04:02 PM
மறுபடியும் கவுத்திட்டீங்களே இலக்கியன். போன பதிவிலும் நீங்கள் இதையே செய்தீர்கள்.

உண்மையிலே உங்கள் கற்பனை வளம் நன்றாக உள்ளது
அதுதான் எனக்கு பிடித்த அந்த வரியை கேள்வியாக கேட்டு பின்னூட்டம் தந்தேன் வாழ்த்துக்கள்

aren
16-09-2007, 04:26 PM
அதேதான் இலக்கியன். என்னிடம் கேட்பதற்கு பதில் அக்னி அவர்களிடன் கேட்கிறீர்களே என்றுதான் ஆதங்கப்பட்டேன்.

lolluvathiyar
17-09-2007, 08:54 AM
இது காதலியை பார்த்து பாடும் பாட்டோ
கல்யானம் செய்யும் வரை தானே, அதன் பின்

அவள் இல்லாத போது வரும் காற்று தென்றல்
இருக்கும் போது வரும் காற்று புயல்