PDA

View Full Version : புதுப்பூ



aren
14-09-2007, 05:37 PM
புதுப்பூ வரப்போகிறது நாளை
பேசிக்கொண்டார்கள் அலுவலகத்தில்!!!

காதில் விழுந்தும் வாங்கிக்கொள்ளாமல்
மனதில் ஒரு குதுகூலத்துடன்
நாளைய தினத்தை எதிர்பார்த்து
கனவுடன் நான்!!!

புதுப்பூ
எப்படியிருக்கும்!!!

மல்லிகைபோல்
மணத்துடன் இருக்குமா!!!

ரோஜாபோல்
ரம்யமாக இருக்குமா!!!

அல்லிபோல்
அழகாக இருக்குமா!!!

தாமரைபோல்
கம்பீரமாக இருக்குமா!!!

சாமந்திபோல்
சாந்தமாக இருக்குமா!!!

இப்படி பல கனவுகளுடன்
நான்!!!

என்றும் இல்லாமல்
நேரம் தவறாமல்
அலுவலகத்தில் ஆஜர்!!!

ஹலோ நான் கவிதா
என்று கைகுலுக்க
வந்தாள் புதுப்பூ!!!

ஹலோ நான் ரமேஷ்
என்று கைகுலுக்க
புன்னகையுடன் திரும்பினேன்!!!

அங்கே
என்னுடைய பழைய காதலி
கவிதா!!!

திடுக்கிட்டு
தட்டுத்தடுமாறி
பேசத்தெரியாமல் நான்!!!!

இலக்கியன்
14-09-2007, 05:40 PM
அப்போது நிலமை மோசம்தான்
வாழ்த்துக்கள் நண்பரே வித்தியாசமாக சொன்னீர்கள் வாழ்த்துக்கள்

சாராகுமார்
14-09-2007, 06:13 PM
புதுப்பூ...
புன்னகைத்தது...
பழைய காதலியாய்.

நண்பரே,அருமையான கவிதை.வாழ்த்துக்கள்.

இணைய நண்பன்
14-09-2007, 06:35 PM
புதிய பூ என்று பார்த்தால்
பழைய பூவாகி விட்டதோ?
வித்தியாசமான கற்பனை பாராட்டுக்கள்

ஓவியன்
14-09-2007, 06:59 PM
புதுப் பூ தேடினேன்
பழைய பூ வனத்தில்,
புதியன புகுதலும்
பழையன கழிதலும்
காதலுக்கு ஒவ்வாது
என்று அறியாமலே.....

அக்னி
15-09-2007, 12:48 PM
புதுப்பூ கவிதா..
வந்தாள்...
வந்தது கவிதை...

பாராட்டுக்கள் ஆரென் அண்ணா...

சிவா.ஜி
15-09-2007, 12:54 PM
ஆஹா ஆரென் உங்கள் அலுவலகத்தில் புதுப்பூக்களை இப்படித்தான் வரவேற்பீர்களா..புதுப் பூ... வித்தியாசமான நல் கவிதை.பாராட்டுக்கள் ஆரென்.

அமரன்
15-09-2007, 06:31 PM
எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும்போது புத்துணர்ச்சியும்
புஸ்வாணம் ஆகும்போது ஆயாசமும் ஏற்படுவது இயல்பு.
கவிதையின் சம்பவத்தில் ஏற்படுவது துவர்ப்பு.
தாகமும் தணியும்....தாக்கமும் இருக்கும்.