PDA

View Full Version : ஆட் வேர் ரிமூவ் செய்வது எப்படி



தங்கவேல்
14-09-2007, 05:23 PM
நண்பர்களே, எனது கணிணியில் ஆட் வேர் வந்து பிரவுஸ் செய்யும் போது கணிணியின் வேகத்தை குறைத்து விடுகிறது. ஏதாவது வெப்சைட் கிளிக் செய்தால் பல வெப்சைட்டுக்களும் அதுவாகவே வருகின்றது. ஆட் வேரை அழிக்கும் முறை பற்றி யாரவது உதவி செய்யுங்கள்..

aren
14-09-2007, 05:42 PM
இது ரொம்பவும் கஷ்டம். ஸ்பாம் கில்லர் மென்பொருளை இறக்குமதி செய்தாலே இதை குறைக்கமுடியும். அல்லது பாப் அப் பிளாக்கர் உபயோகித்துப் பாருங்கள்.

பாரதி
14-09-2007, 07:19 PM
அன்பு நண்பரே,

ஆட்அவேர் மற்றும் ஸ்பைபாட் இலவச மென்பொருட்களை நிறுவி இயக்குங்கள். மேலும் ஆரென் கூறியது போல பாப் அப் பிளாக்கரையும் நிறுவிக்கொள்ளலாம்.

ஆட் அவேர்:
http://www.download.com/Ad-Aware-2007-Free/3000-8022_4-10045910.html?part=dl-ad-aware&subj=dl&tag=top5

ஸ்பைபாட்:
http://spybot.com/en/mirrors/index.html

உங்கள் பிரச்சினைகள் விரைவில் தீர வாழ்த்துக்கள்.

தங்கவேல்
19-09-2007, 01:16 PM
சுத்தமா ரீ இன்ஸ்டால் செய்து விட்டேன். எதற்க்கு வம்பு என்று.

பாரதி
19-09-2007, 02:47 PM
சுத்தமா ரீ இன்ஸ்டால் செய்து விட்டேன். எதற்கு வம்பு என்று.

மிகவும் நல்லது நண்பரே... அதுதான் மிகச்சிறந்த வழியும் கூட!

praveen
19-09-2007, 03:16 PM
சுத்தமா ரீ இன்ஸ்டால் செய்து விட்டேன். எதற்க்கு வம்பு என்று.

மறுபடியும் வந்தால், என்ன திரும்ப ரீ இன்ஸ்டாலா?:lachen001:. முதலில் ஒரு நம்பிக்கையான freeware spybot search and destry என்ற சாப்ட்வேர் teatimer -உடன் பதிந்து கொள்ளுங்கள்.

அறிஞர்
19-09-2007, 03:35 PM
பாரதி சொல்வது போல் நான் ஆன் - அவேர் உபயோகிக்கிறேன். பிரச்சனைகள் இல்லை...

ஜெயாஸ்தா
20-09-2007, 03:20 PM
ஆட்வேரை தவிர்ப்பதற்கான ஒரு சாப்ட்வேறே எனக்கு ஆட்வேராக வந்து அடிக்கடி தொல்லை கொடுத்தது. கடைசியில் ஹார்ட்டிஸ்கை மண்டையில் ரெண்டுதட்டு தட்டி (அதுதாங்க பார்மேட் செய்த) பின் ரீ-இன்ஸ்டால் செய்தபின்தான் இந்த பிரச்சனை முடிவுக்கு வந்தது.

தங்கவேல்
23-09-2007, 02:13 AM
இலவச ஆட்வேர் புரோகிராம்களால் பிரச்சனை தான் வருகிறது. உதவிய அன்பு உள்ளங்களுக்கு நன்றி...

பாரதி
23-09-2007, 08:34 AM
இலவச ஆட்வேர் புரோகிராம்களால் பிரச்சனை தான் வருகிறது.

ஒட்டு மொத்தமாக நாம் அப்படி சொல்ல இயலாது. சில இலவச மென்பொருட்கள் தீமை தருவதாக இருந்தாலும், நன்மை பயக்கக்கூடிய இலவச மென்பொருட்கள் பலவும் இருக்கின்றன எனபதுதான் நான் அறிந்த உண்மை.

praveen
23-09-2007, 08:43 AM
ஒட்டு மொத்தமாக நாம் அப்படி சொல்ல இயலாது. சில இலவச மென்பொருட்கள் தீமை தருவதாக இருந்தாலும், நன்மை பயக்கக்கூடிய இலவச மென்பொருட்கள் பலவும் இருக்கின்றன எனபதுதான் நான் அறிந்த உண்மை.
சரி தான். நிறைய பேர் இலவசமாக உள்ள மென்பொருளை விட பணம் கொடுத்து வாங்குவது சிறந்தது என்று நினைக்கிறார்கள். பணம் கொடுத்து வாங்கிய சாப்ட்வேர்களை விட இலவசமாக வருவது நன்றாக உள்ளது நிறைய உள்ளது. பணம் கொடுத்து வாங்கிய புரோகிராம்களில் அதை வேறு யாரும் காப்பி எடுத்து பயன்படுத்தகூடாது என்பதை தடுக்க கூடுதலாக சில நிரல்கள் வைத்து அவை நமது கணினியின் செயல்பாட்டை பாதிக்கவும் செய்யும்.

இலவசம் என்றால் பொதுவாக மதிப்பில்லை தான்..

பாரதி
23-09-2007, 08:52 AM
பணம் கொடுத்து வாங்கிய புரோகிராம்களில் அதை வேறு யாரும் காப்பி எடுத்து பயன்படுத்தகூடாது என்பதை தடுக்க கூடுதலாக சில நிரல்கள் வைத்து அவை நமது கணினியின் செயல்பாட்டை பாதிக்கவும் செய்யும்.

இலவசம் என்றால் பொதுவாக மதிப்பில்லை தான்..

உண்மையான வார்த்தை நண்பரே. உதாரணத்திற்கு 'நார்டன்' மென்பொருள் சிறந்த எடுத்துக்காட்டு.

leomohan
14-10-2007, 03:22 PM
பாரதி அவர்கள் சொன்ன மென்பொருளை நான் பயன்படுத்துகிறேன். மிகவும் நல்ல மென்பொருள். அதுபோல TrendMicro Antivirus புதிய version பல நச்சு நிரல்களை கண்டறிகிறது.

முடிந்த அளவு legal software மட்டும் பயன்படுத்துங்கள். இல்லையென்றால் www.sourceforge.net ல் திறவுமூல மென்பொருள் பல கிடைக்கின்றன.

commercial software இறக்குமதி செய்து அதை crack செய்ய முயன்றால் பல நச்சுநிரல்கள் கணினியில் இணைந்துவிடும். கவனம் தேவை.