PDA

View Full Version : ஈராக்கில் இருந்து படையை குறைக்க அமெரிக்க



சூரியன்
14-09-2007, 06:32 AM
வாஷிங்டன் : ஈராக்கில் இருந்து அமெரிக்க படைகளை குறைக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. தற்போதுள்ள படைகளில் 1,68000 படை வீரர்கள் ஈராக்கில் உள்ளனர். அவர்களில் ஒரு பகுதியை திரும்ப அழைத்து கொள்ள அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இது குறித்து தனது நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அதிபர் புஷ் ராணுவ தளபதி ஜெனரல் டேவிட்டின் ஆலோசனைப்படி ஈராக்கில் உள்ள அமெரிக்க படைகளில் ஒரு பகுதியை திரும்ப அழைத்து கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது என கூறினார்.

lolluvathiyar
14-09-2007, 07:23 AM
ஒரு பகுதியை அழைத்து பயன் இல்லை.
முழுவதும் அழைத்து கொண்டால் மேலும் பாவ என்னிக்கை ஏறாமலாவது இருக்கும்

சிவா.ஜி
14-09-2007, 07:30 AM
சரியாகச் சொன்னீர்கள் வாத்தியார் அவர்களே.ஆனாலும் அவர்களின் பாவ எண்ணிக்கை எந்த நாளும் குறையாது..நம்ம ஊர் அரசியல்வாதிகளின் சொத்துக்களைப் போல ஏறிக்கொண்டேதான் இருக்கும்.

ஓவியன்
14-09-2007, 07:35 AM
அமெரிக்க படையினர் தாங்கள் தங்கள் ஆதிக்கத்தை நிலை நாட்டவே படைகளை வேறு இடங்களில் வைத்திருக்கின்றனர், மத்திய கிழக்கின் ஆதிக்கத்தை தங்கள் கைக்குள் வத்திருப்பதன் பொருட்டே சவூதியிலும் ஈராக்கிலும் தங்கள் படைத் தளங்களை வைத்துள்ளனர். எனது கருத்துப்படி அமேரிக்கா ஒரு போதும் முற்றாக தங்கள் தளங்களை இந்த இரு நாடுகளிலும் இருந்து நீக்கப் போவதில்லை.