PDA

View Full Version : இறுதிவரை இணைவோம்இனியவள்
13-09-2007, 07:02 PM
கண்கள் கண்டு இதயம் தீண்டும்
காதலைக் காட்டிலும்
இதயம் கண்டு கண்ணைத் தீண்டும்
நட்பு கடவுளை விடச் சிறந்தது..

உன்னுருவம் காணவில்லை
உன் நிழல் தீண்டவில்லை
உன் இதயத்தை என் இதயத்தோடு
ஒன்றாக்கிக் கொண்டேன்..

என் மனதின் மெளனம் நீயறிவாய்
உன் மனதின் மொழிகள் நானறிவேன்..

எங்கள் இதயங்கள் பேசிக்கொள்கின்றன
வார்த்தைகள் மெளனிக்கும் போது...

என் சோகங்களை நீ உள்வாங்கி
சந்தோஷங்களை பரிசளித்தாய்..

உன் வாழ்வின் இனிமைகள் என்
வாழ்வின் இனிமைகள்...

தென்றல் தழுவும் மலராய் உன்னை
இன்பங்கள் தழுவட்டும்...

தோழியே என் ஓவ்வோர் அசைவிலும்
உன் விம்பம்....

என் ஆயுளின் கடைசிவரை எமக்குள்
இருக்கும் இந்த உயிர்ப் பந்தம்.....

உன் கண்களில் கலக்கம் - என்
உயிரினில் நடுக்கம்...

பிரிவென்ற சொல்லை விடுத்து
உயிர் என்ற சொல்லோடு
பிண்ணிப் பிணைவோம்

அக்னி
13-09-2007, 07:06 PM
பிரிவு...
பிளந்த இதயம்...
துடிக்கும்
மனதின் உருவம்...

முகாரிக்குத் தாளம் போடமல்,
மெல்லிசையால்
அசைந்திடும் இதயம்,
நட்பில்,
உருவாகும்...
ஜனனம்...

பாராட்டுக்கள் இனியவளே...

ஓவியன்
13-09-2007, 07:09 PM
பிரிவென்ற சொல்லால் உண்மைக் காதலிலும் உண்மை நட்பிலும் உடல்களை மட்டுமே பிரிக்க முடிகிறது உணர்வுகளைத் அசைக்கக் கூட முடியாது.

பாராட்டுக்கள் இனியவள், நீண்ட நாட்களாக காணவில்லையே, பணிகளிலே ஆழ்ந்து விட்டீர்கள் போலிருக்கின்றது. பரவாயில்லை நேரம் கிடைக்கையில் நம்மையும் வந்து பார்த்து விட்டுச் செல்லவும்.

அன்புரசிகன்
13-09-2007, 07:17 PM
உன் கண்களில் கலக்கம் - என்
உயிரினில் நடுக்கம்...


பிரிவென்ற சொல்லை விடுத்து
உயிர் என்ற சொல்லோடு

பிண்ணிப் பிணைவோம்


பந்தப்பிணைப்பின் உச்சக்கட்டம்...

கவிக்குப்பாராட்டுக்கள்....

இளசு
13-09-2007, 08:34 PM
பாராட்டுகள் இனியவள்..

வாழ்வின் அடுத்தகட்டம் கொடுத்த பார்வை இது -

எதுவும் கடந்துபோகும்!
மாற்றம் ஒன்றே மாறாதது..
அதிகப் பிணைப்பே பின்னாளில்
அதீதப் பிரிவாக...

எதையும் தாங்கும் இதயத்தின் ஒரு சுயப்பகுதி
எப்போதும் எவரும் தொடாமல் என்னுடனே....

சாராகுமார்
14-09-2007, 05:13 AM
நட்பு கடவுளை விடச் சிறந்தது..

இனிமையான வரி...
இனியவள் இனியமானவர்...
இறுதி வரை கவிதை..
இனிமை.. இனிமை. வாழ்த்துக்கள்.

க.கமலக்கண்ணன்
14-09-2007, 05:47 AM
இறுதி வரை

இணைவோம் நிச்சயமாக

இணையும் அனைத்து பொருள்களும் வெற்றியே,

இரண்டு காற்றுகள்

இணைவதால்தான் தண்ணீர் கூட பிறக்கிறது

இணைந்தால் அனைத்திலும் வெற்றி நமக்கே...

இணைத்திட்ட

இனியவளுக்கு மிக்க நன்றி மிக அருமையாக செதுக்கியதற்கு வாழ்த்துக்கள்.

சூரியன்
14-09-2007, 05:54 AM
நல்ல படைப்பு இனியவள்

சிவா.ஜி
14-09-2007, 06:16 AM
நீண்ட நாட்களுக்குப் பிறகு இனியவளின் ஒரு இனிய கவிதை.உறவுகளின் இமயம் நட்புறவு.அதன் மேன்மையுணர்த்தும் கவிதை. வரிகளில் முதிர்ச்சி தெரிகிறது.பிரிதல் என்பது இதய உணர்வுகளைத் துவைத்துவிடும்,இருந்தும் துவண்டு விடாமல் தொடர்ந்தும் நட்பு செய்வோம் என்ற கருத்து அருமை.வாழ்த்துக்கள் இனியவள்.

ஷீ-நிசி
14-09-2007, 06:17 AM
பிரிவின் வலி உணரமுடிகிறது இனியவள்.. வாழ்த்துக்கள்!

அமரன்
14-09-2007, 07:47 AM
விழிவீச்சு மோதலிலும் இதயவோசையின் ஒத்திசைவிலும் பிறக்கும் இரட்டைக் குழந்தைகள் காதலும் நட்பும்..இரண்டில் எது உசத்தி?சொல்லமுடியுமா யாராலும்? சத்தியமாக முடியாது. இரட்டைகள் வித்தியாசப்படுத்த முடியாதவை உன்னிப்பாகப் கவனிக்கும் வரை...!

பத்திரிக்கை காலங்களிலிருந்து கணினிக் காலம் வரை தொடரும் முகம் காணா நட்பு சந்திக்கும் பிரிவு யப்பானின் இரு நகரங்கள். முகம் காணாத தவிப்பு அகத்தை இருந்து துளைக்கும் என்றுமே...! அது வேண்டாமே...!
பாராட்டுக்கள் இனியவள்.

lolluvathiyar
14-09-2007, 11:20 AM
பிரிவின் துயரத்தை அழகாக எழுதி இருகிறீர்கள் இனியவள்
ஆனால் என்ன செய்ய நாம் அதை தவிர்க்க முயல்கிறோம்
பிரிவு நம்மை தவிர்பதில்லை

aren
14-09-2007, 04:57 PM
நல்ல கவிதை. இதில் பிரிவினை எங்கே வருகிறது எனக்குத் தெரியவில்லல. ஒன்றாக இருப்போம் என்றே கவிதை இருப்பதாக எனக்குப் படுகிறது. யாராவது விளக்கமுடியுமா?

நன்றி வணக்கம்
ஆரென்