PDA

View Full Version : எப்படி எனதாக்கிக் கொள்வேன்!!!!aren
13-09-2007, 03:33 PM
வானத்தை அண்ணாந்து பார்த்தேன்
அங்கே பருந்தாக நீ!!!

கொஞ்சம் கீழே தலையை இறக்கி
மாமரத்தைப் பார்த்தேன்
அங்கே கிளையில் கிளியாக நீ!!!

தென்னை மரத்தைப் பார்த்தேன்
அங்கே தேங்காய்க்குபதில் நீ!!!

குளிக்கலாமென்று குளக்கரைக்குச் சென்றேன்
அங்கே தண்ணீரில் நீ!!!

வீட்டு மொட்டை மாடிக்கு வந்தேன்
அங்கே என் படுக்கையில் ஒயிலாக நீ!!!

உன்னருகில் படுத்துக்கொண்டு
உன்னை அணைக்க மெதுவாக கையைக்கொண்டு போக

அடச்சீ கையை எடு
சகோதரன் என்னைத் தள்ளினான்
கட்டிலிலிருந்து கீழே தடாலென விழுந்தேன்!!!

கனவிலும் வந்து என்னை கொல்பவளை
எப்படி எனதாக்கிக் கொள்வேன்!!!

ஐயா ஐடியா கொடுங்களேன்
ஓடாதிங்க ஓடாதிங்க
எங்கே ஓடறீங்க!!!

செய்வதறியாமல்
நான்!!!

சாராகுமார்
13-09-2007, 03:52 PM
கவிதை அருமை.

சம்மதம் வாங்கி,தாலி கட்டுங்கள்.உங்களுக்கு சொந்தமாகிவிடும்

இனியவள்
13-09-2007, 06:31 PM
மதிமுகம் பார்த்தாலும்
மனதில் இருப்பவள் முகம்

குயில் முகம் கண்டாலும்
என் மனதில் இசையெழுப்பிக்
கொண்டிருப்பவள் ஞாபகம்

ஆரென் அண்ணா கொஞ்சம் கஷ்டம் தான்
உங்கள் நிலையை பார்த்தால் :cool:

அமரன்
13-09-2007, 06:41 PM
பருந்து,கிளி - முரண்
தேங்காய் (இளநீர்)- உவர்ப்பும் இனிப்பும் (துவர்ப்பு)
தண்ணீரில் விம்பம்-நிலையற்ற தன்மை.
மொட்டைமாடிப் படுக்கை-வித்தியாசம்

காதலில் நாலும் தெரிந்த உங்களுக்கு எதற்கு ஐடியா..அதான் ஓடுகின்றோம்.

இளசு
13-09-2007, 08:37 PM
முத்திய நிலைக்கு
குத்தாலம், எலுமிச்சை,
வேப்பிலை, ஆனந்த சிகிச்சை (விவேக்கைக் கேளுங்க)
இப்படி கைவசம் நிறய்ய இருக்கு..

இருங்க அன்பின் ஆரென்,,
இப்ப நீங்க ஏன் ஓடுறீங்க???

aren
14-09-2007, 02:02 AM
கவிதை அருமை.

சம்மதம் வாங்கி,தாலி கட்டுங்கள்.உங்களுக்கு சொந்தமாகிவிடும்

நன்றி சாராகுமார். அதுக்குத்தானே வழிகேட்கிறேன். அனைவரும் ஓடுகிறார்களே.

aren
14-09-2007, 02:03 AM
மதிமுகம் பார்த்தாலும்
மனதில் இருப்பவள் முகம்

குயில் முகம் கண்டாலும்
என் மனதில் இசையெழுப்பிக்
கொண்டிருப்பவள் ஞாபகம்

ஆரென் அண்ணா கொஞ்சம் கஷ்டம் தான்
உங்கள் நிலையை பார்த்தால் :cool:

ஏங்க இப்படி பயமுறுத்துறீங்க.

aren
14-09-2007, 02:04 AM
பருந்து,கிளி - முரண்
தேங்காய் (இளநீர்)- உவர்ப்பும் இனிப்பும் (துவர்ப்பு)
தண்ணீரில் விம்பம்-நிலையற்ற தன்மை.
மொட்டைமாடிப் படுக்கை-வித்தியாசம்

காதலில் நாலும் தெரிந்த உங்களுக்கு எதற்கு ஐடியா..அதான் ஓடுகின்றோம்.


ஏதோ உங்கள் அனுபவங்களை என்னுடன் பகிர்ந்துகொண்டு உதவுவீர்கள் என்று நினைத்தேன், நீங்களுமா?

aren
14-09-2007, 02:05 AM
முத்திய நிலைக்கு
குத்தாலம், எலுமிச்சை,
வேப்பிலை, ஆனந்த சிகிச்சை (விவேக்கைக் கேளுங்க)
இப்படி கைவசம் நிறய்ய இருக்கு..

இருங்க அன்பின் ஆரென்,,
இப்ப நீங்க ஏன் ஓடுறீங்க???


முடிவே பன்னிட்டீங்களா நான் பைத்தியக்காரன் என்று. நான் எங்கே ஓடுவது, ஒன்னுமே தெரியாமல் நின்றுகொண்டுதானே இருக்கிறேன்.

சாராகுமார்
14-09-2007, 05:03 AM
முடிவே பன்னிட்டீங்களா நான் பைத்தியக்காரன் என்று. நான் எங்கே ஓடுவது, ஒன்னுமே தெரியாமல் நின்றுகொண்டுதானே இருக்கிறேன்.

முயற்சி திருவினையாக்கும்.சில நேரம் வினையாகும்.நிற்க வேண்டாம்.கனவு காணுங்கள்.பலிக்கட்டும்.

பென்ஸ்
14-09-2007, 05:21 AM
முத்திய நிலைக்கு
குத்தாலம், எலுமிச்சை,
வேப்பிலை, ஆனந்த சிகிச்சை (விவேக்கைக் கேளுங்க)
இப்படி கைவசம் நிறய்ய இருக்கு..

இருங்க அன்பின் ஆரென்,,
இப்ப நீங்க ஏன் ஓடுறீங்க???

:lachen001::lachen001::lachen001:ஆரென்.. இப்படி யாயிடுச்சே உங்க நிலமை.

சிவா.ஜி
14-09-2007, 06:23 AM
ஆரென் பருந்து விருந்து தரும்,கிளி கொஞ்சி விளையாடும்,தேங்காய் சுவைக்கும்....ஆனால் இதெல்லாம் உங்கள் "சிகிச்சை" முடிந்தபிறகு...

aren
14-09-2007, 06:40 AM
:lachen001::lachen001::lachen001:ஆரென்.. இப்படி யாயிடுச்சே உங்க நிலமை.

என்னை ஒரு மாதிரியாக்க முடிவே கட்டிட்டீங்களா.

aren
14-09-2007, 06:41 AM
ஆரென் பருந்து விருந்து தரும்,கிளி கொஞ்சி விளையாடும்,தேங்காய் சுவைக்கும்....ஆனால் இதெல்லாம் உங்கள் "சிகிச்சை" முடிந்தபிறகு...


சிவா யூ டூ. நீங்களுமா இந்த கட்சியிலே சேர்ந்துட்டீங்க.

ஷீ-நிசி
14-09-2007, 06:47 AM
சகோதரன் தள்ளிவிடும் அளவிற்கு உங்கள் கனவு போயிருக்கிறது...

ஆரென். இனி தனியாக கனவு காணுங்கள்.. கனவுகள் தடைபடாது....

lolluvathiyar
14-09-2007, 11:41 AM
சம்மதம் வாங்கி,தாலி கட்டுங்கள்.உங்களுக்கு சொந்தமாகிவிடும்

வேண்டா தப்பிதவறி அந்த தப்ப பன்னீராதீங்க. அப்புரம் உங்களுக்கு நீங்களே சொந்தமில்லாமல் போய் விடும்.
இந்த ஐடியா ஓக்கேவா

இலக்கியன்
14-09-2007, 01:20 PM
ஐயா ஐடியா கொடுங்களேன்
ஓடாதிங்க ஓடாதிங்க
எங்கே ஓடறீங்க!!!

செய்வதறியாமல்
நான்!!!

இதற்கு ஒரு கால் கட்டுபோட்டால் சரி :D

அக்னி
15-09-2007, 01:15 PM
ஆரென் கவிதையைப் பார்த்தேன்...
ஆனேன் மின்னலாக நானும்...
(வேறென்ன செய்வது, பிடிக்கத் துரத்தினால்...)

இயல்பான வரிகளில் இருப்பினும்,
காதல் கொண்டவரின் பார்வைகள், நிஜமான நிறைவாகவே உள்ளது...
பாராட்டுக்கள் ஆரென் அண்ணா...