PDA

View Full Version : கிறுக்கல்கள்



இலக்கியன்
13-09-2007, 02:12 PM
http://img159.imageshack.us/img159/9721/naamloosgk7.png (http://imageshack.us)

வரியில்லா மொழி
ஒலியில்லா பேசும்
அவள் கண்கள்
********* ******

ஏன் இத்தனை மொழிகள் இந்த உலகத்தில்
அவள் கண்களால் பேசும்-இந்த
மெளன மொழியே போதும் பெண்ணே
***********************************

வான் மதியே
தேய்ந்ததுவோ
உன் மதிமுகம்
கண்டதாலா
*************

காதல் கவிதை என்றார்கள்
காதலியின் கண்களை
வரைந்த போது
*************

மனோஜ்
13-09-2007, 02:20 PM
நிலா முகம் மனதில் நிலைத்ததா
அருமை நண்பா

இலக்கியன்
13-09-2007, 02:22 PM
நிலா முகம் மனதில் நிலைத்ததா
அருமை நண்பா

நன்றி மனோஜ் உங்கள் பின்னூட்டத்துக்கு
நிலா அவள் முகம் நிலைத்தது என் நெஞ்சில் மட்டுமே

பூமகள்
13-09-2007, 02:43 PM
வரியில்லா மொழி
ஒலியில்லா பேசும்
அவள் கண்கள்
மௌன மொழியால் கவி பேசிய விதம் அழகு.
அருமை வரிகள் இலக்கியரே...!!
மிகவும் ரசித்தேன். வாழ்த்துக்கள்... மற்றும் பாராட்டுக்கள்..!!:icon_rollout:

இலக்கியன்
13-09-2007, 02:50 PM
மௌன மொழியால் கவி பேசிய விதம் அழகு.
அருமை வரிகள் இலக்கியரே...!!
மிகவும் ரசித்தேன். வாழ்த்துக்கள்... மற்றும் பாராட்டுக்கள்..!!:icon_rollout:

நன்றி பூமகள் உங்கள் அழகான பின்னூட்டத்துக்கு

அமரன்
13-09-2007, 02:55 PM
காணும் காட்சிகள் யாவும்
காதலின் ஆட்சியடா..அவள்
கண்களில் தெரிவது யாவும்
காதலின் மாட்சியடா..!
*****************************************
பேசிப் பேசி கொல்வர் சிலர்
பேசாமல் வெல்வார் சிலர்
கொல்பவரும் வெல்பவரும்
விழிவீச்சில் வீழ்ச்சியடா...!

***********************************
முக நிலவுகண்டு
தேயும் வானிலவு ...அவள்
அக நிலவுகண்டுதான்
மாயம் ஆனதுவோ...?
***********************************
கவிதை பேசும் கண்களை
வரைய முடியுமோ...அவள்
கண்கள் பேசும் கவிதைகளை
வரையறுக்கத்தான் முடியுமோ....!
****************************************
கிறுக்கிய இலக்கியன் கைகளை
இறுகப்பிடித்து குலுக்குகின்றேன்

அக்னி
13-09-2007, 02:59 PM
வரியில்லா மொழி
ஒலியில்லா பேசும்
அவள் கண்கள்வெட்டும் இமைகள் மட்டும்,
எனக்கு எமன்கள்...



ஏன் இத்தனை மொழிகள் இந்த உலகத்தில்
அவள் கண்களால் பேசும்-இந்த
மெளன மொழியே போதும் பெண்ணேமௌன மொழியில்,
சலசலத்தது அருவி...
நனைந்தது என் இதயம்...



வான் மதியே
தேய்ந்ததுவோ
உன் மதிமுகம்
கண்டதாலாஆமாம்...
மதியிழந்தேன்...,
மதிமுகம் கண்டதால்...
ஒளி இழந்தது நிலா...



காதல் கவிதை என்றார்கள்
காதலியின் கண்களை
வரைந்த போதுஎனது கண்களை வரைந்தேன்...
காதல் குருடு என்றார்கள்...

பாரட்டுக்கள் இலக்கியன்...

இலக்கியன்
13-09-2007, 03:00 PM
காணும் காட்சிகள் யாவும்
காதலின் ஆட்சியடா..அவள்
கண்களில் தெரிவது யாவும்
காதலின் மாட்சியடா..!
*****************************************
பேசிப் பேசி கொல்வர் சிலர்
பேசாமல் வெல்வார் சிலர்
கொல்பவரும் வெல்பவரும்
விழிவீச்சில் வீழ்ச்சியடா...!

***********************************
முக நிலவுகண்டு
தேயும் வானிலவு ...அவள்
அக நிலவுகண்டுதான்
மாயம் ஆனதுவோ...?
***********************************
கவிதை பேசும் கண்களை
வரைய முடியுமோ...அவள்
கண்கள் பேசும் கவிதைகளை
வரையறுக்கத்தான் முடியுமோ....!
****************************************
கிறுக்கிய இலக்கியன் கைகளை
இறுகப்பிடித்து குலுக்குகின்றேன்


மிகவும் அற்புதமான பின்னூட்டம் வாழ்த்துக்கள் அமரன் அண்ணா
பாராட்டுக்கு நன்றி

இலக்கியன்
13-09-2007, 03:11 PM
வெட்டும் இமைகள் மட்டும்,
எனக்கு எமன்கள்...

மௌன மொழியில்,
சலசலத்தது அருவி...
நனைந்தது என் இதயம்...

ஆமாம்...
மதியிழந்தேன்...,
மதிமுகம் கண்டதால்...
ஒளி இழந்தது நிலா...

எனது கண்களை வரைந்தேன்...
காதல் குருடு என்றார்கள்...

பாரட்டுக்கள் இலக்கியன்...

அழகான பின்னூட்டம் கவிதையாக வாழ்த்துக்கள் அக்னியாரே

சாராகுமார்
13-09-2007, 03:42 PM
இது கிறுக்கல்கள் அல்ல.கிறுக்கியை பற்றிய சிதறல்கள்.கவி புதுமை இனிமை அருமை.

இலக்கியன்
13-09-2007, 03:50 PM
இது கிறுக்கல்கள் அல்ல.கிறுக்கியை பற்றிய சிதறல்கள்.கவி புதுமை இனிமை அருமை.

உங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி சாராகுமார்

சுகந்தப்ரீதன்
16-09-2007, 03:39 AM
இலக்கியரே...விழியை மொழியாய் படித்திருக்கிறீர்கள்...அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் நண்பரே...!

வசீகரன்
16-09-2007, 07:38 AM
காதல் கவிதை என்றார்கள்
காதலியின் கண்களை
வரைந்த போது

மொழி பேசிய அந்த
கயல்விழி அழகு...
விழி மொழியை புனைந்த
இலக்கியன் கவி அழகோ அழகு..!

இலக்கியம் படைத்த இலக்கியனுக்கு
பாராட்டுகள் பல...!

வசீகரன்

சூரியன்
16-09-2007, 07:40 AM
நல்ல கவிதை.

kampan
16-09-2007, 08:06 AM
எல்லாருடைய கவிதைகளும் அருமை

சித்திரம் போல் உடலிருக்கும்
சித்திராவின் குரலிருக்கும்
பத்திரம் என பலருரைத்தும்
எம் மனம் பத்திவிடும் அவளுக்காய்

பாவையர் கண்களில் இருப்பது
கரு விழியல்ல
ஆண்களை கட்டிவைக்கும்
கை விலங்குகள்

பென்ஸ்
20-09-2007, 05:25 AM
இலக்கியன்...
மனதில் தோன்ருவதை அப்படியே
உணர்வுகளை வடிக்கும் போது...
அதுமட்டும் எப்படி கவிதையாய் வருது...

காதலின் விந்தை அதுதானோ....

எழுத்துகள் இன்னும் செம்மைபட வேண்டும்....

இலக்கியன்
21-09-2007, 12:58 PM
இலக்கியரே...விழியை மொழியாய் படித்திருக்கிறீர்கள்...அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் நண்பரே...!

நன்றி நண்பரே உங்கள் பின்னூட்டத்துக்கு

இலக்கியன்
21-09-2007, 12:59 PM
நல்ல கவிதை.

உங்கள் கருத்துக்கு நன்றி

இலக்கியன்
21-09-2007, 01:00 PM
எல்லாருடைய கவிதைகளும் அருமை

சித்திரம் போல் உடலிருக்கும்
சித்திராவின் குரலிருக்கும்
பத்திரம் என பலருரைத்தும்
எம் மனம் பத்திவிடும் அவளுக்காய்

பாவையர் கண்களில் இருப்பது
கரு விழியல்ல
ஆண்களை கட்டிவைக்கும்
கை விலங்குகள்

கவிதையாலே கருத்திட்ட கம்பனே நன்றிகள்

இலக்கியன்
21-09-2007, 01:01 PM
காதல் கவிதை என்றார்கள்
காதலியின் கண்களை
வரைந்த போது

மொழி பேசிய அந்த
கயல்விழி அழகு...
விழி மொழியை புனைந்த
இலக்கியன் கவி அழகோ அழகு..!

இலக்கியம் படைத்த இலக்கியனுக்கு
பாராட்டுகள் பல...!

வசீகரன்

அழகான பின்னூட்டம் நன்றி நண்பரே

இலக்கியன்
21-09-2007, 01:02 PM
இலக்கியன்...
மனதில் தோன்றுவதை அப்படியே
உணர்வுகளை வடிக்கும் போது...
அதுமட்டும் எப்படி கவிதையாய் வருது...

காதலின் விந்தை அதுதானோ....

எழுத்துகள் இன்னும் செம்மைபட வேண்டும்....

உங்கள் பின்னூட்ட கருத்துக்கு நன்றி

jpl
22-09-2007, 12:35 AM
வரியில்லா மொழி
ஒலியில்லா பேசும்
அவள் கண்கள்
இல்லா மொழியையும் புரிய
வைத்த கண்களை என் சொல்ல?
இலக்கியனுக்கு புரிந்திருக்கின்றது..

அறிஞர்
23-09-2007, 02:29 AM
வாவ்.. கண்களை ரசித்தது.. வரிகளில் தெரிகிறது.....

எல்லாரின் வரிகளும்... சிறப்பாக உள்ளது...

ஜெயாஸ்தா
23-09-2007, 03:01 AM
சில திரைப்படங்களில் பாடல்கள் அருமையாக இருக்கும். ஆனால் படப்பதிவு நன்றாக இருக்காது. அது போல் தங்களின் விழியைப் பற்றி கவிதைகள் அருமையாக உள்ளது அந்தப் படங்களைவிட...! வாழ்த்துக்கள் நண்பா...!