PDA

View Full Version : மொபைல் போன்



ipsudhan
13-09-2007, 01:12 PM
மொபைல் போன் பற்றி திரிகள் எதுவும் இல்லாததால் இதை எழுதுகிறேன்.எனக்கு தெரிந்த தகவல்களை எழுதுகிறேன், தவறுகள் இருந்தால் சுட்டி காட்டவும்,மற்றும்

உங்கள் போன் சிறந்தது எனில் அதை நண்பர்களுக்கு பரிந்துரையுங்கள்.

என்னோட சாய்ஸ் மற்றும் சிபாரிசு : O2 mini or ATOM


போன்கள் நமது முதல் தோழன்,நம் நிழலை போல் நம்மோடு எப்போதும் இருப்பது.
போன்கள் நம் செயல்பாடுகள் மற்றும் நம் கவுரவம் அவற்றை மறைமுகமாக குறிக்கும்.எனவே போன் வாங்கும் போது சின்ன சைஸ் மற்றும் பெண்கள் உபயோகபடுத்துவை போல் உள்ள போன்களை தவிர்த்து கம்பீரமான போன்களை வாங்குங்கள்,



சில பொதுவான தகவல்கள்

மொபைல் இவ்வார்த்தை North America வழக்கம்
செல்போன் இவ்வார்த்தை European Union வழக்கம்

தற்போது உலகம் முழுவதும் பொதுவாக மூன்று வகையான நெட்வொர்க்குகள் உபயோகபடுத்துகிறார்கள்.

அவை: GSM (Global Subscriber Mode), CDMA(Code Division Multiple Access), சேட்டிலைட் போன் (இரிடியம்,குளோபல் ஸ்டார்)

GSM நெட்வொர்க்குகள் European Union, மற்ற இடங்களிலும் உபயோகபடுத்துகிறார்கள்.

CDMA நெட்வொர்க்குகள் வட அமெரிக்காவில் அதிகம் உபயோகபடுத்துகிறார்கள்
இதில், ஜப்பானில் மட்டும் Personal Digital Cellular network உபயோகபடுத்துகிறார்கள்.

GSM, CDMA வேறுபாடு என்னவென்றால்

GSM ஒவ்வொரு முறையும் சாட்டிலைட் வழியே தொடர்பு கனெக்ட் ஆகிறோம்.

CDMA இல் பொதுவாக சாட்டிலைட் உதவி இல்லாமல் தனி நெட்வொர்க்கில் இயங்கும் (எ.கா : ஒரு வாக்கி டாக்கி போல்)





மொபைல் போன் ப்ராண்டுகள்


நோக்கியோ, சோனி எரிக்ஸன், சாம்சங், மோட்டோரோலோ, எல்ஜி, சீமென்ஸ், பிலிப்ஸ், ஓ2, ஹெவ்லெட் பேக்கார்ட், IMATE, ஐ-போன்(ஆப்பிள்)

நோக்கியோ பின்லாந்தை சேர்ந்த கம்பெனி, சுமார் 1850 ல் ஆரம்பித்தது, முதல் பிஸினெஸ் தேக்கு வியாபாரம்.

சோனி எரிக்ஸன்- எரிக்ஸன் , நெட்வொர்க் டெக்னாலஜியில் சிறந்த ஸ்வீடன் கம்பெனி + வன்பொருள் துறையில் சிறந்த ஜப்பான் கம்பெனி.

சாம்சங், எல்ஜி கொரியன் கம்பெனி

மோட்டோரோலோ, ஹெவ்லெட் பேக்கார்ட், I-PHONE(ஆப்பிள்)
அமெரிக்கன் கம்பெனி

ஒ2- பிரிட்டன் கம்பெனி(A leading network provider in Europe)


மொபைல் போன் வாங்க சில டிப்ஸ்



புதிதாக போன் வாங்குபவர்கள் நோக்கியோ அல்லது சோனி எரிக்ஸன் தேர்ந்தெடுக்க முயற்சியுங்கள்.

சாம்சங், எல்ஜி, மோட்டோரோலோ போன்றவை பொதுவாக டிசைன்,செயல்பாடு, Future rich அடிப்படையில் சிறந்த போன்கள் கிடையாது.

PDA வகை போன்கள்



ஹெவ்லெட் பேக்கார்ட், ஐ-போன்(ஆப்பிள்), ஒ2 இவைகள் பிடீஏ வகையை சேர்ந்தவை, ஹெவ்லெட் பேக்கார்ட் ஐ நான் சில நாள் உபயோகபடுத்தி பார்த்ததில் அது Toy போன் போல் உள்ளது.


I-PHONE தற்போது லீகலாக அமெரிக்காவில் மட்டுமே உபயோகபடுத்த முடியும்( அன்லாக் செய்து உபயோகபடுத்தலாம்),ஆனால் I-POD போல் ஒரு வரலாற்றில் முக்கிய கண்டுபிடிப்பு என எதிர்பார்க்கபட்டு பொய்த்தது, முக்கியமாக Instant messenger, கட்,காப்பி, பேஸ்ட், வசதி கிடையாது,விலையும் அதிகம்.ஆப்பிள் சாப்ட்வேர்கள் மட்டுமே இன்ஸ்டால் செய்ய முடியும்.


http://techdigest.tv/apple-iphone-in-hand.jpg

IMATE நல்ல போன்தான் ஆனால் ஒரு மினி லேப்டாப் போல் உள்ளது,விலையும் அதிகம் ஆனால் டூயல் மோட் GSM + CDMA உள்ளது


http://www.ndtvgadgets.com/images/bigGallery/imate-jasjar_2.jpg





Black berry , Research In Motion(RIM) னின் கண்டுபிடிப்பு

இதன் பிளஸ்

ஈ-மெயில் கிளையன்ட் உள்ளதால் மிக எளிதாக ஈ-மெயில் பார்க்கவும் ரிப்ளை அனுப்பவும் முடிகிறது,மற்றும் கேமரா கிடையாது

இதன் மைனஸ்

மிக சாதாரண வசதிகள் கூட இல்லாத பேஸிக் போன்
PALM வகை போன்களில் நிறைய குறைபாடுகள் உள்ளதால் அவற்றை பற்றி எழுதவில்லை

ஒ2 UK வில் முக்கிய நெட்வொர்க் ப்ரொவைடர் அதன் கிளை கம்பெனியே ஓ2 போன்களை தயாரிக்கிறது. O2 ATOM Windows Media OS 5 ல் இயங்குகிறது.


http://www.theunwired.net/media/news/o2_xda_atom_side.jpg



SMART PHONE

இதில் நோக்கியோ & சோனி எரிக்ஸன் பற்றி பார்ப்போம்

சோனி எரிக்ஸன்

சோனி எரிக்ஸன்- இது டிசைன் அடிப்படையில் கால்குலேட்டர் போல் தோன்றினாலும் அனைவரும் விரும்பும் வகையில் இதன் லுக் உள்ளது.

இதன் மிக பெரிய சிறப்பு ,குறைந்த விலையில் நிறைய வசதிகள் உள்ள போன்.
பாட்டு கேட்க ,கேமரா மற்றும் Blue Tooth போன்ற பல வசதிகள் சிறப்பாக செயல் படுகின்றன.


மற்றொரு குறை சமீப கால சோனி எரிக்ஸன் போன்கள் எளிதில் பழுதடைகின்றன குறிப்பாக பேட்டரி மற்றும் JOY STICK.


சோனி எரிக்ஸன் போன்களில் சிறந்தது எனில் K- 750


K- 750 அனைத்து வசதிகளும் கொண்ட சிறப்பான போன். இதற்கும் W-810 க்கும் வித்தியாசம் கிடையாது , K-750 ன் FirmWare அப்டேட் செய்தால் W-810 ஆக மாறிவிடும்,

மாதிரி போட்டோ

http://thegadgetblog.com/wp-content/SonyEricssonK750iW800.jpg




இவற்றின் வசதிகள்
2 Mega Pixel Camera,
Tri Band, FM Radio, Blue Tooth, Infra Red, GPRS, USB

W-850 சில எக்ஸ்ட்ரா வசதிகளுடன் அழகான டிசைன் கொண்டது.

http://www.gsm-multimedia.fr/images/modele/SE_w850.jpg





சோனி எரிக்ஸனின் மிக பெரிய குறை :
பொதுவாக அனைத்து மாடல்களும் சிம்பியனில் இயங்காமல் FirmWare ல் செயல்படுவது .



நோக்கியோ போன்கள்

நோக்கியோவின் பெஸ்ட்


http://www.livingroom.org.au/cameraphone/nokia-n70.jpg



..விரைவில் எழுதுகிறேன்

சராஜ்
13-09-2007, 01:48 PM
மிகவும் அட்டகாசமான பதிவு...

தெரியாத பல விஷயங்கள்...

ஹெச் டி சி .... டோ போட் பற்றி தெரிந்து கொள்ள ஆவல் சார்... :)

மனோஜ்
13-09-2007, 02:00 PM
சிறப்பான தகவல்கள் புதிதாக மெபைல் வாங்குபவர்களுக்கும் உபயோகிப்பவர்களுக்கும் அருமையாக தகவலை தரும் பதிவு
தொடர்ந்து நல்ல தகவல்களை அறிந்து கொள்ள தாருங்கள்............

க.கமலக்கண்ணன்
13-09-2007, 02:17 PM
அருமையான பதிவு

ஆக்கபூர்வமான செய்திகள்

இனிய நோக்கியோவின் படம்

ஈடு இல்லாத சேகரிப்பு

உங்களுக்கு நன்றிகள் பல...

சூரியன்
13-09-2007, 02:56 PM
மிகவும் பயனுள்ள தகவல். புதிய செல்பேசி வாங்குபவர்களுக்கு உதவியாக இருக்கும். தகவலுக்கு நன்றி.

pathman
14-09-2007, 05:11 AM
நன்றி சுதன் நம் மன்றத்தில் கை தொலைபேசிகளுக்கு ஒரு திரி இல்லை என்று யோசித்து கொண்டிருந்தேன் நீங்கள் ஆரம்பித்து விட்டீர்கள்.

அனைத்து நண்பர்களும் தலைவருக்கு விண்ணப்பித்தால் சில வேலைகளில் தனி திரி தொடங்க படலாம்

சுதன்அவர்களே நான் நோக்கியா 6280 பாவித்து வருகிறேன் இது S40 (3rd Edition) வகையை சார்ந்தது இதற்கான Applications, games எங்கு எந்த தளத்தில் இலவசமாக பதிவிறக்கலாம்

அமரன்
14-09-2007, 07:14 AM
பலருக்கு உதவக்கூடிய பயன்மிக்க திரி. தொடருங்கள் சுதன்..உறவுகள் கேட்கும் சந்தேகங்களுக்கு பதில்களைத் தொடர்ந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

அமரன்

ipsudhan
14-09-2007, 02:28 PM
மிகவும் அட்டகாசமான பதிவு...

தெரியாத பல விஷயங்கள்...

ஹெச் டி சி .... டோ போட் பற்றி தெரிந்து கொள்ள ஆவல் சார்... :)

டோபாட் ஐ HTC(High Tech Computer Corporation) ன் சப்சிடரி

கம்பெனி மற்றும் HTC அதனுடைய HTC பேரிலேயே மொபைல் தயாரிக்க தொடங்கியதால் DOPOD க்கு பெரிதாக எதிர்காலம் இருக்காது என நினைக்கிறேன்.

DOPOD இல் எனக்கு தெரிந்த மாடல் 818 மற்றும் 838 pro,

நல்ல கேமிரா, விண்டோஸ் மொபைல் 5 , 6 இல் இயங்குகிறது.

சைட் ஸ்லைட் மாடல், 838 ல் முக்கிய வசதி GPS உள்ளது.

வழக்கம் போலவே பாக்கெட் ஆபிஸ் உள்ளது.


HTC, உலகில் பெரும்பாலான PDA போன்களை தயாரிப்பது (O2 ,Dell Fujitsu,Siemens, HP,Compaq, i-mate, Krome, Sharp Corporation) போன்ற

போன்களை தயாரித்து கொடுப்பது OEM முறையில் HTC தான்,இப்போது அதுவே சொந்தமாக தயாரிப்பதால் சொல்லவே வேண்டியதில்லை.

இனி 5 வருடங்களில் PDA போன்கள் என்றால் HTC தான் என்பதால் அது பற்றி தனி பதிப்பில் எழுதுகிறேன்.



நன்றி சுதன் நம் மன்றத்தில் கை தொலைபேசிகளுக்கு ஒரு திரி இல்லை என்று யோசித்து கொண்டிருந்தேன் நீங்கள் ஆரம்பித்து விட்டீர்கள்.

அனைத்து நண்பர்களும் தலைவருக்கு விண்ணப்பித்தால் சில வேலைகளில் தனி திரி தொடங்க படலாம்

சுதன்அவர்களே நான் நோக்கியா 6280 பாவித்து வருகிறேன் இது S40 (3rd Edition) வகையை சார்ந்தது இதற்கான Applications, games எங்கு எந்த தளத்தில் இலவசமாக பதிவிறக்கலாம்

நோக்கியா 6280 , Application சப்போர்ட்க்கு மிக நல்ல எடுத்துக்காட்டான போன்

கீழ் உள்ள லின்கில் டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்

hxxp://www.mobileapples.com/

இந்த லிங்கில் S60 போன்களுக்கு தேவையான முக்கியமான 20 அப்ளிகேசன்ஸ்(like acrobat reader, file explorer,notepad) உள்ளது

hxxp://www.4shared.com/dir/3223528/326e45c0/Softwares.html




பலருக்கு உதவக்கூடிய பயன்மிக்க திரி. தொடருங்கள் சுதன்..உறவுகள் கேட்கும் சந்தேகங்களுக்கு பதில்களைத் தொடர்ந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

அமரன்

உங்கள் ஊக்கங்ளே என்னை எழுத செய்கின்றன,கண்டிப்பாக தொடர்கிறேன்

ipsudhan
14-09-2007, 02:37 PM
தற்போது போன்களின் விலை விபரம்

(இவை இடத்துக்கு இடம் வேறுபடலாம்)

Nokia


6080 -4.2k
N70 Me -11.2k
N72 -9.2k
N73 ME -15.4k
N91 -11k
N80 -14.2k
N93i -26k
N95 -27k
E65 -17.5k
9300 -22K , 9.2k (w/o bill)


Sony Ericsson

K750i -8k

W700i -10.6k

W880i -12.8k (w/o bill)

mgandhi
14-09-2007, 05:47 PM
நல்ல பயன்னுல்ல தகவல் நன்றி

aren
14-09-2007, 05:50 PM
நான் Blackberry 8800 உபயோகிக்கிறேன். மிகவும் நன்றாக உள்ளது. ஒலி துல்லியமாக உள்ளது. அதுபோல் மின்னஞ்சல்கள் அனைத்தும் கைத் தொலலபேசிக்கே வந்துவிடுவதால் எங்கே இருந்தாலும் உடனே பதில் அனுப்ப உதவியாக உள்ளது.

sujeendran
15-09-2007, 08:22 AM
நல்ல தவல்கள்.

நன்றி.

தங்க கம்பி
15-09-2007, 12:40 PM
மிகவும் அருமையான விசயங்கள். நன்றி.

மாதவர்
16-09-2007, 02:11 AM
நல்ல முயற்சி வாழ்த்துக்கள்

ஓவியன்
16-09-2007, 07:40 PM
அருமை சுதன்!

அலைபேசிகளைப் பற்றி நான் வைத்திருந்த அபிப்பிராயம் உங்கள் பதிவிலே பார்த்த போது, எனக்கு ஒரே சந்தோசம்...........!

என்ன நான் நினைத்தது சரியாக உள்ளதே என்று தான்.........:)
என்னோட சாய்ஸ் மற்றும் சிபாரிசு : O2 mini or ATOM
போன்கள் நமது முதல் தோழன்,நம் நிழலை போல் நம்மோடு எப்போதும் இருப்பது.
போன்கள் நம் செயல்பாடுகள் மற்றும் நம் கவுரவம் அவற்றை மறைமுகமாக குறிக்கும்.எனவே போன் வாங்கும் போது சின்ன சைஸ் மற்றும் பெண்கள் உபயோகபடுத்துவை போல் உள்ள போன்களை தவிர்த்து கம்பீரமான போன்களை வாங்குங்கள்,

ஆம், நீங்கள் கூறிய இந்தக் கருத்தினடிப்படையிலேயே நான் இப்போது O2 ATOM ஒன்றினைப் பாவித்து வருகின்றேன், கொஞ்சம் விலை அதிகமான அலை பேசி என்றாலும் அருமையானது, சரியாகப் பாவிக்கத் தெரிந்தால் அது ஒரு நல்ல தோழன்.

Mano.G.
17-09-2007, 09:19 AM
நான் Blackberry 8800 உபயோகிக்கிறேன். மிகவும் நன்றாக உள்ளது. ஒலி துல்லியமாக உள்ளது. அதுபோல் மின்னஞ்சல்கள் அனைத்தும் கைத் தொலலபேசிக்கே வந்துவிடுவதால் எங்கே இருந்தாலும் உடனே பதில் அனுப்ப உதவியாக உள்ளது.

ஆமாம்
ஆனால் தமிழ் மென்பொருட்களை நிறுவ முடிந்தால்
நமக்கு மேலும் உதவியாக இருக்கும்

பிலாக் பெர்ரி.

மனோ.ஜி

pathman
17-09-2007, 09:56 AM
நோக்கியா 6280 , Application சப்போர்ட்க்கு மிக நல்ல எடுத்துக்காட்டான போன்

கீழ் உள்ள லின்கில் டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்

hxxp://www.mobileapples.com/


உங்கள் தகவல் சுட்டிக்கு நன்றி நண்பரே பதிவு செய்து போய் பார்த்ததில் 240 X 320 ரெசலூசன் உள்ள விளையாட்டுகள் இல்லை என்கின்றது

pathman
17-09-2007, 10:05 AM
தற்போது போன்களின் விலை விபரம்
(இவை இடத்துக்கு இடம் வேறுபடலாம்)

Nokia

6080 -4.2k
N70 Me -11.2k
N72 -9.2k
N73 ME -15.4k
N91 -11k
N80 -14.2k
N93i -26k
N95 -27k
E65 -17.5k
9300 -22K , 9.2k (w/o bill)

Sony Ericsson

K750i -8k

W700i -10.6k

W880i -12.8k (w/o bill)



அய்யோ உங்கள் ஊரில் போன் இவ்வளவு குறைவா எங்கள் ஊரில் (இலங்கை) எவ்வளவு தெரியுமா ?

6080 -10k
N70 Me -26 k
N72 -25.5 K
N73 ME -35K
N91 -33 K
N80 (New) -40 K
N80 (Used) - 35K
N93i -26k
N95 -60k
E65 -50k
9300 -28K


K750i -17k
W700i -21k
W880i -38K

ஷீ-நிசி
17-09-2007, 10:09 AM
நல்ல தகவல்கள்... நன்றி நண்பரே!

நோக்கியா E62 சிறந்த மாடலா.. அதில் hang பிரச்சினை இருப்பதாக சொல்கிறார்களே... வாங்கலாமா அந்த மாடலை...

pathman
17-09-2007, 10:15 AM
நண்பர்களே இதோ எனக்கு தெரிந்த இரண்டு இணையதள முகவரிகள்

www.zedge.net இந்த தளத்தில் பல அழகிய தீம்ஸ்கள், வால் பேப்பர் உள்ளன (இலவசமாக உங்களை பதிவு செய்தால் போதுமானது)


www.mobango.org இந்த தளத்தில் எறக்குறைய எல்லா வகையான அப்பளிகேசன்ஸ், கேம்ஸ், வீடியோக்கள், தீம்ஸ் உண்டு (இலவசமாக உங்களை பதிவு செய்தால் போதுமானது)

ipsudhan
17-09-2007, 02:31 PM
நான் Blackberry 8800 உபயோகிக்கிறேன். மிகவும் நன்றாக உள்ளது. ஒலி துல்லியமாக உள்ளது. அதுபோல் மின்னஞ்சல்கள் அனைத்தும் கைத் தொலலபேசிக்கே வந்துவிடுவதால் எங்கே இருந்தாலும் உடனே பதில் அனுப்ப உதவியாக உள்ளது.

ஆம் ஒலி துல்லியமாக இருக்கும், சிறந்த வசதி என்னவென்றால் நீங்கள் சொன்னது போல் பெஸ்ட் ஈ-மெயில் சப்போர்ட்தான்,அடுத்த பிளஸ் (இது உங்களுக்கு மட்டும்தான் : நீங்கள் national service க்கு செல்லும் போது கேமிரா இல்லாத போன் தேடி அலைய வேண்டியதில்லை, சரியா?), ஆம் நீங்கள் GPS உபயோகிறீர்களா?



ஆமாம்
ஆனால் தமிழ் மென்பொருட்களை நிறுவ முடிந்தால்
நமக்கு மேலும் உதவியாக இருக்கும்

பிலாக் பெர்ரி.

மனோ.ஜி

பிளாக் பெர்ரிக்கு அப்ளிக்கேஷன் கிடப்பதே எளிது இல்லை இதில் தமிழிலா?

ipsudhan
17-09-2007, 02:42 PM
அருமை சுதன்!

அலைபேசிகளைப் பற்றி நான் வைத்திருந்த அபிப்பிராயம் உங்கள் பதிவிலே பார்த்த போது, எனக்கு ஒரே சந்தோசம்...........!

என்ன நான் நினைத்தது சரியாக உள்ளதே என்று தான்.........:)
ஆம், நீங்கள் கூறிய இந்தக் கருத்தினடிப்படையிலேயே நான் இப்போது O2 ATOM ஒன்றினைப் பாவித்து வருகின்றேன், கொஞ்சம் விலை அதிகமான அலை பேசி என்றாலும் அருமையானது, சரியாகப் பாவிக்கத் தெரிந்தால் அது ஒரு நல்ல தோழன்.


மற்ற போன்களை காட்டிலும் சற்றே கொஞ்சம் விலை அதிகமென்றாலும் 3 G யை தவிர வேறு எந்த குறைகளும் இல்லாத போன்

ipsudhan
17-09-2007, 03:03 PM
நல்ல தகவல்கள்... நன்றி நண்பரே!

நோக்கியா E62 சிறந்த மாடலா.. அதில் hang பிரச்சினை இருப்பதாக சொல்கிறார்களே... வாங்கலாமா அந்த மாடலை...

hang என்பதை விட எந்த அப்ளிகேஷன் ஸ்டார்ட் செய்தால் படு ஸ்லோவாகி விடுகிறது.


என்ன போனின் விலை மிகவும் குறைவு, தற்போதைய விலை 9,500 ரூ, புதிய OS ஆன சிம்பியன் 9.1 ல் இயங்குகிறது, அப்ளிகேஷன் சப்போர்ட்க்கு எல்லா நோக்கியா போன் போல சப்போர்ட் செய்கிறது.

Black berry போல் qwerty கீ போர்ட் ஆனால் அதை விட build quality & design நன்றாக உள்ளது.

இதில் இல்லாத வசதிகள் , 3G(except EU) மற்றும் Wi-Fi

E62 நமக்கான போன் அல்ல அதனால் வேறு மாடல் வரும் வரை பொருத்திருங்கள் .

ipsudhan
17-09-2007, 03:08 PM
நண்பர்களே இதோ எனக்கு தெரிந்த இரண்டு இணையதள முகவரிகள்

www.zedge.net இந்த தளத்தில் பல அழகிய தீம்ஸ்கள், வால் பேப்பர் உள்ளன (இலவசமாக உங்களை பதிவு செய்தால் போதுமானது)


www.mobango.org இந்த தளத்தில் எறக்குறைய எல்லா வகையான அப்பளிகேசன்ஸ், கேம்ஸ், வீடியோக்கள், தீம்ஸ் உண்டு (இலவசமாக உங்களை பதிவு செய்தால் போதுமானது)

நீங்கள் சொல்லிய லிங்கை பார்த்தேன், நிறைய தீம்ஸ் & வீடியோக்கள் உள்ளன, அனைவருக்கும் பயனுள்ள தளங்கள்.

தொடர்ந்து பங்களியுங்கள்

ஷீ-நிசி
17-09-2007, 04:04 PM
hang என்பதை விட எந்த அப்ளிகேஷன் ஸ்டார்ட் செய்தால் படு ஸ்லோவாகி விடுகிறது.

என்ன போனின் விலை மிகவும் குறைவு, தற்போதைய விலை 9,500 ரூ, புதிய OS ஆன சிம்பியன் 9.1 ல் இயங்குகிறது, அப்ளிகேஷன் சப்போர்ட்க்கு எல்லா நோக்கியா போன் போல சப்போர்ட் செய்கிறது.

Black berry போல் qwerty கீ போர்ட் ஆனால் அதை விட build quality & design நன்றாக உள்ளது.

இதில் இல்லாத வசதிகள் , 3G(except EU) மற்றும் Wi-Fi

E62 நமக்கான போன் அல்ல அதனால் வேறு மாடல் வரும் வரை பொருத்திருங்கள் .


எந்த அப்ளிகேஷன் ஸ்டார்ட் செய்தாலும் ஸ்லோவாகிவிடுகிறதா???

ஓவியன்
18-09-2007, 11:37 AM
மற்ற போன்களை காட்டிலும் சற்றே கொஞ்சம் விலை அதிகமென்றாலும் 3 G யை தவிர வேறு எந்த குறைகளும் இல்லாத போன்

உண்மைதான் சுதன், ஆனால் ஓ 2 இனது புதிய தயாரிப்புக்களும் 3 G இல்லாமல் வருவது தான் ஏனென்று விளங்கவில்லை. ஓ 2 பற்றிய மேலதிக தகவல்களை அறிய விரும்பின் இங்கே (http://www.seeo2.com/index.jsp?selctry=true) சொடுக்கவும்.

ஓவியன்
18-09-2007, 11:41 AM
அய்யோ உங்கள் ஊரில் போன் இவ்வளவு குறைவா எங்கள் ஊரில் (இலங்கை) எவ்வளவு தெரியுமா ?
[/B]

இலங்கைக்கும் இந்தியாக்கும் இடையான நாணய மாற்றுப் பிரச்சினையால் வருவதே இந்த பிரச்சினை பத்மன், இரண்டு இடங்களிலும் அலைபேசிகளின் கிட்டத்தட்ட ஒரே விலையே...!!

ஆதவா
18-09-2007, 11:51 AM
ஆயிரம் மொபைல் போன்கள் வந்தாலும் எனக்கு என்றென்றும் Nokia 3100 தான்... ஆனால் நோக்கியாவில் அனைத்து போன்களையும் உபயோகித்திருக்கிறேன்..... (உபயம்: எனது அண்ணன்) நோக்கியாவைப் பொறுத்தவரை தரம், துல்லியம், டேட்டா/பிஸினஸுகு ஏற்றவை.. மற்றும் கவர்ச்சி ஆகியவை நிறறகளாக இருக்கின்றன... குறைகள் என்று பார்த்தால் ஒலியமைப்பு குறைவாக இருக்கும்... மற்றும் பல..

நோக்கியா வாங்க நினைப்பவர்களுக்கு எனது ஆலோசனை...

பட்ஜெட் போன் என்றால் நீங்கள் Nokia 2310 வாங்கலாம்..

இன்னும் சற்று அதிகமாக ஓரளவு போட்டோ வசதிகள் வேண்டுமென்றால் நீங்கள் Nokia 3230 வாங்கலாம்..

பிரவுசிங்குகளுக்கு ஏற்றது Nokia 6630

மேற்கண்ட இரண்டுக்கும் N 70 வாங்கலாம்..... அதிசிறந்தது..

நல்ல தரம், அதிக ஒலியமைப்பு. (குறிப்பாக சில்னெஸ்) போட்டோக்கள் தரம். பிரவுசிங்க் போன்ற எல்லாவற்றுக்கும் N73 சிறந்தது.....

இதில் எது உங்களுக்கு தேவையோ அதைத் தேர்ந்தெடுக்கலாம்............

மற்ற கம்பனிகளைப் பற்றி எனக்குத் தெரியாது......:icon_p:

ipsudhan
18-09-2007, 02:11 PM
எந்த அப்ளிகேஷன் ஸ்டார்ட் செய்தாலும் ஸ்லோவாகிவிடுகிறதா???

அது பற்றி முழுமையாக தெரியவில்லை ஆனால் 32 MB மட்டுமே ராம் என்பதால் ஸ்லோவாகத்தான் இருக்கும்.

இதன் முன்னைய வெர்ஸன் நோக்கியா E61 ல் WiFi 3G அனைத்துமே உள்ளது, இதன் உருவத்தில் சிறிய வெர்ஸன் நோக்கியா E65 யிலும் இதே போல் ஸ்லோ மற்றும் அடிக்கடி ஹேங் ஆகிவிடும்


ஹலோ சார், உங்கள் வலைபூவை பார்தேன், தாய்மை,அம்மா ஆகிய இரண்டு கவிதைகளையும் படித்தேன், எனக்கு பிடித்திருந்தது.




உண்மைதான் சுதன், ஆனால் ஓ 2 இனது புதிய தயாரிப்புக்களும் 3 G இல்லாமல் வருவது தான் ஏனென்று விளங்கவில்லை. ஓ 2 பற்றிய மேலதிக தகவல்களை அறிய விரும்பின் இங்கே (http://www.seeo2.com/index.jsp?selctry=true) சொடுக்கவும்.


ஓ2 வின் புதிய போன் ஓ2 LIFE ல் 3G வசதி உள்ளது ஆனால் விலையோ மிக அதிகம்:traurig001:, கொஞ்ச நாள் பொறுங்கள் விலை குறையட்டும்

ipsudhan
18-09-2007, 02:23 PM
நோக்கியா வாங்க நினைப்பவர்களுக்கு எனது ஆலோசனை...


மேற்கண்ட இரண்டுக்கும் N 70 வாங்கலாம்..... அதிசிறந்தது..

நல்ல தரம், அதிக ஒலியமைப்பு. (குறிப்பாக சில்னெஸ்) போட்டோக்கள் தரம். பிரவுசிங்க் போன்ற எல்லாவற்றுக்கும் N73 சிறந்தது.....


உண்மைதான்

தற்போதைக்கு போன்களின் ராஜா என்றால் N 70 ,

N73 ன் ஸ்பெசல் Carl Zeiss லென்ஸ்கள்

மாதவர்
18-09-2007, 05:29 PM
E62 அலை பேசியில் adobe reader மூலம் நண்பர் ஒருவர் தமிழ் மின்புத்தங்களை படிக்கிறார். நமது தமிழ்மன்றம் மூலாமாக மனசே ரிலாக்ஸ் பிளிஸ் பதிவிறக்கம் செய்து படித்தார். நல்ல முயற்சியாக தெரிந்தது.

மன்மதன்
18-09-2007, 07:33 PM
மிகவும் பயனுள்ள திரி..அலைபேசி பற்றி தெரிந்து கொள்ள இந்த திரியை படித்தாலே போதும் என்று நினைக்கிறேன்.. நன்றி சுதன்..

ipsudhan
22-09-2007, 01:17 PM
உங்கள் பின்னூட்டங்களுக்கு நன்றி

Dual slider வசதியை N95 ல் நோக்கியா அறிமுக படுத்தியுள்ளது ,
மேல் நோக்கி நகர்த்தும் போது கீ பேடும் கீழே நகர்த்தும் போது மீடியா பிளேயர் கன்ட்ரோல்கள் இயங்குகின்றன.

இதன் மற்ற சிறப்புகள்

2.5 இன்ச் ஸ்கிரீன், GPS வசதி, 3G, Wi-Fi மற்றும் குறிப்பிட தகுந்த வசதியான HSDPA (for high speed internet)

புதிய OS ஆன சிம்பியன் S60 ல் இயங்குகிறது, புதிய வசதிகள் , வேகமான ஃப்ரவுசர், மேம்பட்ட RSS அப்ளிகேஷன்.


http://www.3g.co.uk/PR/Aug2007/Nokia_N95.jpg



5 MP கேமராவானது கார்ல் சீஸ் லென்ஸுடன் உள்ளது, மிக துல்லியமான போட்டாக்களை தருகிறது ஆனால் வழக்கம் போல் zoom(டிஜிட்டல்) வசதி பயனற்றாதாக இருக்கிறது.photo & video க்களை நேரிடையாக flickr & blogs ல் அப்லோடு செய்யலாம்.


நோக்கியா தவிர்த்த இதர தரமான இயர் போன்களை உபயோக படுத்தினால் இசையின் தரம் மிகச் சிறந்ததாக உள்ளது.

தற்போதைய விலை 27000 ரூ

சூரியன்
22-09-2007, 01:27 PM
இதன் விலை ரொம்போதான்

என்னவன் விஜய்
22-09-2007, 07:54 PM
சுதன் அண்ணா
நான் N93i மற்றும் PRADA ஆகியவற்றை பாவிக்கிறேன்.என்னுடைய PRADA க்கு USB pot, Bluetooth மூலம் பாடல்கள்,படங்களை அனுப்ப முடியாது உள்ளது.மற்றும் இதற்குரிய games,screen saver ஐ எங்கே பெற்றுகொள்ளலாம்.
என்ன சொன்னாலும் nokia தான் நல்லது
நன்றி

pathman
09-10-2007, 04:04 AM
எனது போனின்(நோக்கியா 6280) ஸ்பீக்கர் ஒலியை துல்லியமாகவும் சத்தமாகவும் மாற்ற என்ன வழி வேறு ஸ்பீக்கர் மாற்றலாமா? மாற்றினால் ஏதேனும் பிரச்சினை வருமா ?

அக்னி
24-10-2007, 02:10 AM
செல்லிடப்பேசி விபரங்களை அள்ளி வழங்கும்,
சுதன் அவர்களுக்கும், மற்றவர்களுக்கும்,
மிகுந்த நன்றிகள்...

புதிய தொலைபேசி வகைகளை அறிந்து கொண்டேன்.

தொடருங்கள்...

suraj
24-10-2007, 12:35 PM
நான் O2 xda உபயோகிக்கிறேன் ஆனால் கேமரா தான் சற்று மோசம் மற்றபடி 64 mb இண்டானல் மெம்மரி ,விண்டோஸ் 5 என அம்சமாக உள்ளது.

இதற்கு ஒரு mp4 கண்வர்டர் யாராவது சொல்லுங்களே!
நன்றி

ஷீ-நிசி
24-10-2007, 02:06 PM
www.mobimaaza.com

என்ற தளத்தில் சிம்பியன் வர்ஷன் போன்களுக்கு நிறைய மென்பொருட்கள் உள்ளன.

ஷீ-நிசி
24-10-2007, 02:14 PM
சுதன் அண்ணா
நான் N93i மற்றும் PRADA ஆகியவற்றை பாவிக்கிறேன்.என்னுடைய PRADA க்கு USB pot, Bluetooth மூலம் பாடல்கள்,படங்களை அனுப்ப முடியாது உள்ளது.மற்றும் இதற்குரிய games,screen saver ஐ எங்கே பெற்றுகொள்ளலாம்.
என்ன சொன்னாலும் nokia தான் நல்லது
நன்றி

நண்பரே!

நீங்கள் சொல்வது LG KE850 PRADA தானே...

http://www.zedge.net/wallpapers/1232/lg-ke850-prada-wallpapers/5-5-1/

http://www.mobileheart.com/cell-phone-games/1185-LG-KE850-Prada-Games.aspx

முயற்சியுங்கள். வால்பேப்பர் மற்றும் கேம்ஸ் களுக்கு....

ipsudhan
24-10-2007, 04:48 PM
சுதன் அண்ணா
நான் N93i மற்றும் PRADA ஆகியவற்றை பாவிக்கிறேன்.என்னுடைய PRADA க்கு USB pot, Bluetooth மூலம் பாடல்கள்,படங்களை அனுப்ப முடியாது உள்ளது.
நன்றி

நீங்கள் LG Sync இன்ஸ்டால் செய்து முயற்சித்தீர்களா?


எனது போனின்(நோக்கியா 6280) ஸ்பீக்கர் ஒலியை துல்லியமாகவும் சத்தமாகவும் மாற்ற என்ன வழி வேறு ஸ்பீக்கர் மாற்றலாமா? மாற்றினால் ஏதேனும் பிரச்சினை வருமா ?

ஸ்பீக்கர் மாற்றுவதால் ஒன்றும் பிரச்சனை வர வாய்ப்பில்லை ஆனால் நீங்கள் Nokia Care ஐ அணுகி மாற்றலாமே?


செல்லிடப்பேசி விபரங்களை அள்ளி வழங்கும்,
சுதன் அவர்களுக்கும், மற்றவர்களுக்கும்,
மிகுந்த நன்றிகள்...

தொடருங்கள்...

நன்றி அக்னி அவர்களே , கண்டிப்பாக தொடர்வோம்.


நான் O2 xda உபயோகிக்கிறேன் ஆனால் கேமரா தான் சற்று மோசம் மற்றபடி 64 mb இண்டானல் மெம்மரி ,விண்டோஸ் 5 என அம்சமாக உள்ளது.

இதற்கு ஒரு mp4 கண்வர்டர் யாராவது சொல்லுங்களே!
நன்றி

O2 xda வில் கேமரா Clarity ஐ எதிர்பார்க்க கூடாதுதான் ,1.2 MP இல் அதற்கு மேல் தெளிவு கிடைக்காது, Atom முயற்சித்து பாருங்கள் , 2MP கேமரா நன்கு தெளிவாக உள்ளது.

mp4 கன்வர்ட் செய்வதற்க்கு Nero Recode உபயோகித்தேன், நம் தளத்தில் SUPER என்ற மென்பொருளை பற்றி படித்து தற்போது SUPER தான் உபயோகிக்கிறேன் உண்மையில் SUPER தான்.

ipsudhan
24-10-2007, 04:56 PM
தற்போது wavetel ல் 2000 ரூ குறைவாக I-Phone கிடைக்கிறது,
ஆனாலும் விலை மிக அதிகம்தான், தற்போதைய விலை 25,200.

Hutch ஐ Vodafone வாங்கி விட்டது. சேவை மற்றும் விலையில் ஏதும் மாற்றம் உள்ளதா?.

அறிஞர்
24-10-2007, 05:00 PM
நல்ல பல தகவல்கள்.. நன்றி நண்பரே..

கிடைக்கும் புதுத்தகவல்களையும் தொடர்ந்து கொடுங்கள்.

pkselva
25-10-2007, 10:14 AM
நண்பர்களே! N73'ல் தமிழ் கதைகளை படிக்க உதவுங்களேன்

suraj
25-10-2007, 01:52 PM
O2 xda வில் கேமரா Clarity ஐ எதிர்பார்க்க கூடாதுதான் ,1.2 MP இல் அதற்கு மேல் தெளிவு கிடைக்காது, Atom முயற்சித்து பாருங்கள் , 2MP கேமரா நன்கு தெளிவாக உள்ளது.

mp4 கன்வர்ட் செய்வதற்க்கு Nero Recode உபயோகித்தேன், நம் தளத்தில் SUPER என்ற மென்பொருளை பற்றி படித்து தற்போது SUPER தான் உபயோகிக்கிறேன் உண்மையில் SUPER தான்.

Atom விரைவில் விண்டோஸ் 6.0 உடன் வாங்க உள்ளேன்..

நன்றிகள் ... செய்திகள் அனைத்தும் பயனுள்ளதாக உள்ளது.

ஜெயாஸ்தா
26-10-2007, 04:31 PM
உலாபேசியை பற்றி பல பயனுள்ள தகவல்களை தந்த நண்பர் சுதனுக்கும் மற்றும் நண்பர்களுக்கும் நன்றி. உபயோகமான பல தகவல்களை அறிந்து கொள்ள முடிந்தது.

ஓவியன்
28-10-2007, 02:57 AM
நான் O2 xda உபயோகிக்கிறேன் ஆனால் கேமரா தான் சற்று மோசம் மற்றபடி 64 mb இண்டானல் மெம்மரி ,விண்டோஸ் 5 என அம்சமாக உள்ளது.

உண்மைதான் என்னிடம் இருப்பதும் O2 xda Atom தான் நொக்கியாவுடன் ஒப்பிடு செய்கையில் கமரா கொஞ்சம் மோடம் போல் தானுள்ளது, ஆனால் மற்றைய விடயங்களில் அசத்துவதால் அசத்தலாகத் தானிருக்குறது.
:icon_b:

ஆஸ்கார்பாரதி
20-11-2007, 05:16 PM
தங்கள் கருத்துகலுகு ரொம்ப நன்றி

tamil81
25-11-2007, 05:02 AM
அருமையான பதிவு

ஓவியன்
25-11-2007, 09:30 AM
இந்த சுட்டியிலும் அலைபேசி பற்றி நிறையத் தகவல்கள் கிடைக்கின்றன நண்பர்களே...

http://mobilesecrets.info/

பிரவின் தந்த வேறு ஒரு சுட்டியிலிருந்து இந்த சுட்டி கிடைக்கப் பெற்றது....!! :)

ஆஸ்கார்பாரதி
13-12-2007, 04:12 PM
வணக்கம் நண்பர்களே,

நான் புதிதாக நோக்கியா N70 போன் வாங்கியுள்ளேன் அதை பற்றிய விவரங்க்கள் தெரிதால் யாரவது குறுங்கள்.

ஓவியன்
13-12-2007, 08:18 PM
வணக்கம் நண்பர்களே,

நான் புதிதாக நோக்கியா N70 போன் வாங்கியுள்ளேன் அதை பற்றிய விவரங்க்கள் தெரிதால் யாரவது குறுங்கள்.நண்பரே, உங்கள் திரியை இந்த திரியுடன் இணைத்துள்ளேன். இங்கே உங்களுக்கு தேவையான விளக்கங்கள் கிடைக்கும். அதற்கு முன்னர் நொக்கியா 70 தொடர்பாக என்ன விடயங்கள் உங்களுக்குத் தேவை என்று கூறினாலே உங்களுக்குத் தேவையான விளக்கங்கள் கிடைக்கும்...

pathman
15-12-2007, 05:06 AM
B]எனது போனின்(நோக்கியா 6280) ஸ்பீக்கர் ஒலியை துல்லியமாகவும் சத்தமாகவும் மாற்ற என்ன வழி வேறு ஸ்பீக்கர் மாற்றலாமா? மாற்றினால் ஏதேனும் பிரச்சினை வருமா ? [/B]

இளந்தமிழ்ச்செல்வன்
05-01-2008, 07:49 PM
வாழ்த்துக்கள் சுதன். மிகவும் பயனுள்ள பதிவு.

arul5318
12-01-2008, 04:47 PM
நல்ல தகவல் நன்றி நண்பரே

சுட்டிபையன்
11-05-2008, 07:14 AM
இன்றைய பரபரப்பான உலகத்தில் கணனிக்கும் மேலான ஓர் இடத்தை இன்றைய நவீன கைத்தொலைபேசிகள் தம்வசம் வைத்துள்ளன, தவளும் குழந்தை முதல் கூன் போடும் தாத்தாவரை மொபைல் கால்விரித்துள்ளது.மொபைல் பற்றிய சகல தகவல்கள், உதவிகள், உங்களுக்கு தேவையான மென்பொருட்கள் தேவைப்படுவோர், அவற்றை வைத்திருப்போர் யாவரும் பகிர்ந்து கொள்ளலாம், மொபைல் பற்றிய உதவிகள் சந்தேகங்களை ஒருவருக்கொருவர் தீர்த்து கொள்ளலாம் உங்கள் மொபைல் பற்றி மற்றவருடன் பகிர்ந்து கொள்ளலாம். எல்லோருக்கும் உதவும் என்று இந்த திரியை தொடங்குகின்றேன், நீண்ட நாட்களின் பின்னர் மன்றத்தில் இந்த திரி மூலம் மீள்வரவு கிடைக்கும் என்று நினைக்கின்றேன்:icon_b::icon_b:

சுட்டிபையன்
11-05-2008, 07:50 AM
உலகின் முன்னணி செல்போன் தயாரிப்பு நிறுவனமான நோக்கியா, தனது 'எக்ஸ்பிரஸ் மியூசிக்' வரிசையில், புதிதாக 2 செல்போன்களை அறிமுகம் செய்துள்ளது.நோக்கியா 5320 மற்றும் 5220 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த 2 செல்போன்களும், தற்போது சந்தையில் உள்ள அந்நிறுவனத்தின் 5610 மற்றும் 5310 செல்போன்களைக் காட்டிலும் மேம்படுத்தப்பட்ட வசதி மற்றும் தொழில்நுட்பங்களை கொண்டுள்ளது.

நடப்பாண்டின் 3ம் காலாண்டில் விற்பனைக்கு வர உள்ள இந்த புதிய செல்போன்களின் விலை 254 டாலர் மற்றும் 349 டாலர் (வரிக்கு முந்தைய விலை) இருக்கும் என நோக்கியா குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்றாம் தலைமுறை தொழில்நுட்பத்தில் செயல்படும் தன்மை கொண்ட இந்த செல்போனில், பாடல்களை சிறப்பாக கேட்க ஆடியோ சிப்கள் (audio chip) பொருத்தப்பட்டுள்ளது. 2 மெகா பிக்ஸல் கேமரா வசதியுடன் கூடிய இந்த செல்போனில் மைக்ரோ எஸ்டி கார்டு (8 ஜிபி) பயன்படுத்த முடியும்

Nokia 5320 & 5220
http://http://bp2.blogger.com/_wq6i_MMb2Fk/SA9wc34KpZI/AAAAAAAAAoY/ZVEDP5xfJuA/s1600-h/Nokia_5220_5320_1.jpg
Nonia 5610 பற்றிய தகவல்கள் (http://http://www.gsmarena.com/nokia_5320_xpressmusic-2348.php)


Nokia 5610
http://http://http://www.letsgodigital.org/images/artikelen/109/nokia-5610.jpg
Nokia 5610 பற்றி (http://http://www.gsmarena.com/nokia_5610-2086.php)

Nokia 5310
http://http://www.phonemag.com/images/uploads/nokia/03_Nokia_5310_XpressMusic.jpg
Nokia 5310 [பற்றிய தகவல்கள் (http://http://www.gsmarena.com/nokia_5310-2087.php)

அனுராகவன்
11-05-2008, 07:53 AM
படங்கள் தெரியலையே..
மிக அருமையான பகிர்வு..

வெற்றி
11-05-2008, 08:44 AM
பொதுவாக பெரும்பாலும் அனைத்து அலைபேசிக்கும் இந்த தளம் ஏற்றது http://www.mobile9.com/
இதற தளங்கள்
http://www.crazy4mobilez.com/
நோக்கியா க்கு http://www.nokiasoftware.nl/

http://www.fsmobilez.com/free-mobile...f&f=/Softwares

சூரியன்
11-05-2008, 01:57 PM
நல்ல செய்திகள்.
நன்றி நண்பரே.

மனோஜ்
11-05-2008, 02:11 PM
காலத்திற்கு ஏற்ற அவசிமான பதிவுக்கு நன்றி சுட்டி

சுட்டிபையன்
12-05-2008, 07:26 AM
பொதுவாக பெரும்பாலும் அனைத்து அலைபேசிக்கும் இந்த தளம் ஏற்றது http://www.mobile9.com/
இதற தளங்கள்
http://www.crazy4mobilez.com/
நோக்கியா க்கு http://www.nokiasoftware.nl/

http://www.fsmobilez.com/free-mobile...f&f=/Softwares


--------------------------------------------------------------------------------

http://motorola.i8.com/index.htm
http://public.globalnet.hr/~jsinkovi/start.htm
http://www.mobile9.com/invboard/
http://www.mototeam.tk/
http://www.halagsm.com/halas/
http://www.letsmoto.com/forums/
http://student.dei.uc.pt/~dfcruz/motorola/
http://www.fonefunshop.co.uk/forum/f...splay.php?f=18
http://www.lumeamobila.ro/placi.php
http://www.lumeamobila.ro/manuale.php
http://www.decoder.wz.cz/
http://www.gsmcyber.com/smartgsm/nokia.html
http://ufotools.com.br/suporte/panasonic/
http://vts.vlad.ru/~gsm/Panasonic/Firmware/
http://www.shonk.org/Panasonic%20Gd87/
http://members.lycos.co.uk/webuponth...ic%20software/
http://www.vickygsm.cz/
http://www.gsm-technology.com/gsm.ph..._software.html
http://v300mod.de.vu/
http://xoomer.virgilio.it/onyx/seemless/
http://italy.copybase.ch/xtra/ = progs soft etc
http://moto.imobile.com.cn/v303flash.htm
http://coma.fsb.hr/motorola/ = soft etc
http://yeson.justmine.org/
http://www.thienlong.org/support/
http://www.motoclickmania.altervista.org/
http://www.v980.net/descargas/programas/
http://www.motopage-downloads.uk.tt/
http://www.geocities.com/gsm_sandman/
http://www.crazynokia.net/
http://www.sklepgsm.com/soft/
http://www.dood.ru/soft/
http://www.gsmok.pl/support/
http://www.theserver.ch/E398/
http://www.downloads.mobilextreme.co.uk/
http://download.unlockcellular.com/
http://www.gsmsupport.ru/Samsung/Flash/
http://www.gsmegypt.org/support
http://sgh.ru/index.php?option=com_...ed&ascdesc=DESC
http://samsungpro.ru/index.php?opti...selectcat&cat=2
http://firmware.samsfan.ru/?action=list&parent=1
http://samsung-fun.ru/flash/
http://www.dood.ru/soft/
http://vts.vlad.ru/~gsm/
http://equinoks.gsm.free.fr/GSM/
http://people.itu.int/~emartine/
http://www.hack-gsmpedro.fr.st/
http://italy.copybase.ch/xtra/
http://users.adelphia.net/~duceduc/download.htm
http://yeson.justmine.org/
http://moto.imobile.com.cn/v303flash.htm
http://www.filemirrors.com/search.s...let&action=Find
http://www.thienlong.org/support/in...c84a5d94632175b
http://members.lycos.co.uk/tolis46/
http://www.v980.net/descargas/programas/
http://85.98.42.44:81/
http://www.motopage-downloads.uk.tt/
htttp://www.motorolka.com.ua/lang.htm
http://coma.fsb.hr/motorola/files/
http://xlr8.us/hofo/map.txt
http://www.id2.cz/
http://equinoks.gsm.free.fr/GSM/
http://vts.vlad.ru/~gsm/
http://www.dood.ru/soft/
http://www.gsmsupport.ru/Samsung/Flash/
http://download.unlockcellular.com/
http://85.98.42.44:81/
http://www.gsmok.pl/support/
http://www.support.intertel.pl/
http://www.gsm4you.and.pl/free/enter_download.html
http://www.gsmdevice.com/download/
http://www.vickygsm.cz/
http://www.gsm-support.net/shop/download/index.php
http://www.egsm.com.vn/support/index...&order=0%3C-LG
http://supertrubka.ru/moto/soft/
www.tornadox.net
http://www.actgsm.com/Tato/MOTOROLA/victor/
http://www.gsm4arab.com/ahmed_konsowah/samsung/
http://www.gsmhelp.info/unlock.htm
http://www.nokiafx.net/unlock.htm
http://www.3gfiles.org/
http://www.europeart.com/tienda/
http://www.forumtelgsm.hu/pub/Programok/
http://www.magboss.pl/soft/
http://www.gsmok.pl/support/
http://www.juyko.com/download/
http://www.restech.pl/upload/index.p...ction=0&order=
http://www.support.intertel.pl/
http://come.to/uknokia
http://users.net.yu/~dejan
http://www.movilhome.cjb.net
http://www.trucosmoviles.com/programas/nokia.htm
http://www.phone-tools.co.uk/software.html
http://interface.beinspired.cz/index.php?s=siepc/flflsh
http://www.honzahavana.com/flashessiemensEN.htm
http://moca.gate8.ro/Free_soft.htm
http://www.gsmdevice.com/download/cdma.htm
http://www.gsm4you.and.pl/free/enter_download.html
http://www.vickygsm.cz/
http://www.unlockmovil.com/modules.php?name=Downloads
http://www.e398.xt.pl/
http://www.e398.klasy.ws/download/aplikacje/
http://www.v525.com/modules/filemanager/files/
http://www.gsmstreet.ru/download/
http://www.unlocker.fr.st/
http://www.henrichsgu.sk/freesw/
http://www.magboss.pl/soft/
http://www.restech.pl/upload/index.p...ction=0&order=
http://homepages.nildram.co.uk/~cnnet/
http://www.gsmdunyasi.com/download/
http://www.gsm-support.net/shop/download/index.php
http://people.itu.int/~emartine/
http://www.unlockeasy.com/modules.php?name=Downloads
http://www.cable-land.net/software.htm
http://beico.com.my/project/main.htm
http://www.shonk.org/
http://corecell.topcities.com/ufs.htm

அனுராகவன்
12-05-2008, 07:54 AM
நன்றி சுட்டிபையன் அவர்களே!!
மிக நல்ல பகிர்வு..
என் வாழ்த்துக்கள்.
அனைத்து செல் மாடலும் இங்கே!!

இராஜேஷ்
12-05-2008, 08:08 AM
உங்களுக்கு தெரியுமா! வரும் 2009ம் ஆண்டில் உலகிலேயே அதிக அலை பேசி(செல்போன்) தாயாரிக்கும் நாடாக நமது இந்தியா உருவகப்போகிறது.

இராஜேஷ்
12-05-2008, 08:12 AM
தற்பொழுது ஸ்ரீபெரும்புதுரில் உள்ள நோக்கியா கம்பெனியில், ஒரு நாளைக்கு 4,00,000 (4லட்சம்) மோபைல் தாயாரிக்கப்படுகிறது. அடுத்த ஆண்டு இது 6,00,000 மாக உள்ளது.

வெற்றி
12-05-2008, 10:29 AM
சுட்டி அள்ளி விட்டு விட்டீர்கள்... மிக்க நன்றி

ஷீ-நிசி
12-05-2008, 11:01 AM
நன்றி சுட்டி..

நான் இத்தளத்தை அதிகம் உபயோகிக்கிறேன். www.zedge.net

சுட்டிபையன்
24-05-2008, 11:55 AM
சகலவிதமான போன்களுக்கும் ச்கலவிதமான தீம்களையும் செய்ய இலகுவான தளம்
www.ownskin.com

சுட்டிபையன்
24-05-2008, 11:56 AM
நோக்கியா போன்களில் லினெக்ஸ்



http://www.linuxdevices.com/files/misc/nokia-n800-4.jpgஉலகின் முன்னணி செல்போன் தயாரிப்பு நிறுவனமான நோக்கியா நிறுவனம், தனது வாடிக்கையாளர்களின் இண்டநெட் இணைப்பு சேவையைக் கருத்தில் கொண்டு, லினெக்ஸ் ஆபரேட்டிங் சிஸ்டத்தை புதிய போன்களில் வழங்குவது குறித்து யோசித்து வருகிறது.

இதன்மூலம் இண்டநெட் இணைப்புடன் கூடிய போன்கள் விற்பனையை அதிகரிக்க நோக்கியா திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

செல்போன்களில் தற்போது லினெக்ஸ் ஓ.எஸ். வெற்றிபெற்றுள்ள நிலையில், சந்தையில் லினெக்ஸ் போன்களின் மாடல்களை அதிகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

விமக்ஸ் போன்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வாடிக்கையாளர்களுக்கு லினெக்ஸ் போன்களை வழங்க நோக்கியா முடிவு செய்திருப்பதாக அந்நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறினார்.

சுட்டிபையன்
24-05-2008, 11:58 AM
"பிளாக்பெரி போல்டு" செல்போன் அறிமுகம்


http://cache.gizmodo.com/assets/resources/2008/05/BlackBerry_Bold_Launch.jpg
உலகளவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரிசர்ச் இன் மோஷன் (ரிம்) நிறுவனத்தின் புதிய அறிமுகமான பிளாக்பெரி போல்ட் (Blackberry Bold) செல்போன் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. ரிம் நிறுவனம் இதுவரை அறிமுகப்படுத்திய பிளாக்பெரி செல்போன்கள் வரிசையில், 'பிளாக்பெரி போல்டு' போனில் மட்டுமே மிகத் தெளிவான, வெளிச்சம் மிக்க வண்ணத்திரை உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதில் உள்ள வண்ணத்திரை 480x320 ரெசல்யூஷன் கொண்டது என்பதால் படங்கள் அனைத்தும் மிகத் துல்லியமாக தெரியும் என ரிம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஒருங்கிணைந்த ஜிபிஎஸ், வை-ஃபை, பிரவுஸர் மற்றும் மல்டிமீடியா வசதிகளை உள்ளடக்கிய இந்த நவீன பிளாக்பெரி செல்போனில், 624 மெகா ஹெர்ட்ஸ் பிராசசர் இருப்பதால் மின்னஞ்சல், வீடியோக்கள், இணையதள பக்கங்களை வெகு விரைவாக பதிவிறக்கம் (டவுன்லோட்) செய்ய முடியும் என்பது கூடுதல் சிறப்பம்சமாக கருதப்படுகிறது.

"MsN"

சுட்டிபையன்
24-05-2008, 12:00 PM
விரைவில் டச்-ஸ்க்ரீன் ப்ளாக்பெரி செல்போன்


http://www.geeks.com/techtips/2007/Images/touchpad.gif

கனடா நாட்டு நிறுவனமான ரிசர்ச் இன் மோஷன் (RIM) தயாரிக்கும் பிரபல ப்ளாக்பெரி செல்போன் விரைவில் டச்-ஸ்கிரீன் வசதியுடன் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதுதொடர்பாக ஐடி இதழ் ஒன்றில் வெளியாகியுள்ள செய்தியில், நடப்பு நிதியாண்டின் 3ம் காலாண்டில் டச்-ஸ்கிரீன் வசதியுள்ள ப்ளாக்பெரி அறிமுகப்படுத்தப்படும் என்றும், இது வெரிசோன் (அமெரிக்கா) மற்றும் வோடாபோன் (பிறநாடுகளில்) நிறுவனங்களின் வாயிலாக விற்பனை செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இதுகுறித்து ரிம் நிறுவனம் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டது.கடந்த பிப்ரவரி மாதம் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில் பேசிய ரிம் நிறுவன துணை முதன்மை நிர்வாகி ஜிம் பல்ஸில்லி, வாடிக்கையாளர்கள் விரும்பினால் டச்-ஸ்கிரீன் (Touch screen) வசதியுடையை ப்ளாக்பெரி செல்போனை ரிம் நிறுவனம் அறிமுகப்படுத்தும் என்றார்.

தொடுதிரை (டச்-ஸ்கிரீன்) வசதியுள்ள ப்ளாக்பெரி செல்போன் அறிமுகப்படுத்தப்பட்டால், அது ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-போன் சாதனத்திற்கு கடும் சவாலாகவும், போட்டியாகவும் விளங்கும் என இத்துறை வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சுட்டிபையன்
24-05-2008, 12:02 PM
மோட்டரோலா நவீன செல்போன் அறிமுகம்


http://www.cameraphonesplaza.com/wp-content/uploads/2007/09/Official-Image-of-MOTOROKR-.jpg
அதிநவீன தொழில்நுட்ப வசதிகளை உள்ளடக்கிய புதிய செல்போனை மோட்டரோலா நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. ஸ்டீரியோ புளூடூத்-4 மற்றும் கிரிஸ்டல் டால்க் தொழில்நுட்பங்களை கொண்ட இந்த செல்போனுக்கு மோடோரோகர் யு-9 (MOTOROKR U9) எனப் பெயரிடப்பட்டுள்ளது.

25 மெகாபைட் நினைவகத் திறன் கொண்ட இந்த புதிய போனில், மைக்ரோசாப்ட் விண்டோஸ் மீடியா பிளேயர் 11 மென்பொருளையும் இயக்கும் வசதியும் உள்ளது சிறப்பம்சமாக கருதப்படுகிறது.

மேலும் 4 மெகாபைட் நினைவகத் திறனுடைய மெமரி கார்டையும் இந்த போனில் பயன்படுத்த முடிவதால் ஏராளமான புகைப்படங்கள், பாடல்களை பதிவு செய்ய முடியும் என மோட்டரோலா தெரிவித்துள்ளது.

சுட்டிபையன்
24-05-2008, 12:05 PM
ஐ-போன்களுக்கான சேவை: கிரிக்இன்ஃபோ அறிமுகம்


http://www.ciol.com/resources/UserFiles/Image/cricinfo_mobicast.jpg
ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-போன் சாதனங்களுக்கான கிரிக்கெட் செய்தி வழங்கும் சேவையை பிரபல இணையதளமான கிரிக்இன்ஃபோ (Cricinfo) அறிமுகம் செய்துள்ளது.

இதன்படி ஐ-போன் உரிமைதாரர்கள், கிரிக்கெட் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்வதுடன், ஸ்கோர்கார்ட், போட்டி அட்டவணை, செய்திகள், புகைப்படங்கள், நிபுணர்களின் கருத்துகள் உள்ளிட்டவற்றையும் அறிய முடியும்.

ஈஎஸ்பிஎன் (ESPN) கட்டுப்பாட்டில் உள்ள கிரின்இன்ஃபோ இணையம் அறிமுகப்படுத்தியுள்ள இந்த புதிய வசதியை, சிம்பியன் வகை போன்கள், பிளாக்பெரி, விண்டோஸ் மொபைல் வசதியுள்ள ஸ்மார்ட் போன்ஸ் ஆகியவற்றிலும் பெற முடியும் என்பது இச்சேவையின் சிறப்பம்சமாக கருதப்படுகிறது.

சுட்டிபையன்
24-05-2008, 12:06 PM
சாதாரன போன்களில் கிரிக்இன்ஃபோ இணையத்தளத்துக்கு செல்வதற்க்கு

wap.cricinfo.com

சுட்டிபையன்
24-05-2008, 12:09 PM
அதிவேக மெமரி சிப் தயார்


http://www.trustedreviews.com/images/article/inline/4816-PileOfCards.jpg
செல்போன் மற்றும் மொபைல் பயன்பாட்டிற்கான அதிவேக ஒரு ஜிகாபைட் மெமரி சிப்-ஐ தயாரித்திருப்பதாக தென் கொரியாவின் ஹைனிக்ஸ் செமிகண்டக்டர் நிறுவனம் அறிவித்துள்ளது.

உலகின் 2-வது மிகப்பெரிய சிப் தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் ஹைனிக்ஸின் இந்த சிப் ஆனது, விநாடிக்கும் சுமார் 800 மெகாபைட் டேட்டாக்களை திரட்டும் என்றும், தற்போது சந்தையில் கிடைக்கும் சிப்களை விட புதிய சிப் டேட்டாவை பெறும் திறன் அதிவேகமானது என்றும் அந்நிறுவனம் வெளியிட்ட தகவல் தெரிவிக்கிறது.

மொபைல் பயன்பாடுகளின் விரிவான தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய வகையில் இந்த சிப் இருக்கும் என்றும், வேகமான செயல்பாட்டு திறனுக்காகவும், அதிவேக மெமரிக்காகவும் இது பயன்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த புதிய சிப்களை அதிகளவில் ஹைனிக்ஸ் தயாரிக்கும் என்றும், நடப்பு நிதியாண்டின் 4ம் காலாண்டில் இவை விற்பனைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

நதி
24-05-2008, 12:40 PM
சுட்டிகளை அள்ளித்தரும் பையன்~சுட்டிப்பையன்.
பொருத்தமான (காரணப்)பெயர்.
நீங்கள் ஒரு அறிவு(இயல்)களஞ்சியம் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளீர்கள்.

வெற்றி
29-05-2008, 04:21 AM
மற்றுமொரு இணைய தளம்
http://in.mobango.com/view/index.php
இலவச தளம் (ஆனால் பதிவு செய்ய வேண்டும் )

SathyaThirunavukkarasu
01-06-2008, 03:42 PM
அப்பப்பா இவ்வளவு செய்திகளா அதுவும் உடனுக்கு உடன் நிச்சயம் பாராட்டவேண்டும்

சுட்டிபையன்
28-08-2008, 02:44 PM
மொபைலிலிருந்து இலகுவாகவும் மலிவாகவும் வேகமாகவும் சால் மற்றும் போட்டோக்கள் அனுப்புவதற்கான பிரத்தியோக மென் பொருட்கள்.

Mig33http://venturebeat.com/wp-content/uploads/2007/05/mig33.jpg

mig33 யில் பல ஆயிரக்கணக்கான சாட் றூம்கள் உள்ளன அத்துடன் msn,yahoo,google talk மற்றும் Aim போன்ற சகல மெசெஞ்சர்கள் மூலமும் சாட் பண்ணலாம் அத்துடன் போட்டோகள் போன்றனவும் ப்ரிமாறலாம் சகலதும் இலவசம். காலும் பண்ணலாம் ஆனால் அதற்க்கு கட்டனம்.
http://venturebeat.com/wp-content/uploads/2007/05/mig332.jpg

மென்பொருள் தரவிறக்க (http://wap.mig33.com/v3_07/mig33beta.jar) சகல போன்களிற்க்கும் பாவிக்க முடியும்

சுட்டிபையன்
28-08-2008, 03:01 PM
Nimbuzz
http://media.getjar.com/repository/img/6865.gifhttp://www.thealarmclock.com/euro/images/nimbzz.jpg

Nokia s40, நோக்கியா பழைய மாடல்கள் 3120 போன்றவை தரவிறக்க (http://download11.getjar.com/downloads/web/pub/10725/Nimbuzz.jar)

sony ericssion, samsung, motorolla சகலதும்தரவிறக்க (http://download12.getjar.com/downloads/web/pub/10752/Nimbuzz.jar)

Nokia S60 6600,6600,60080 போன்றவை தரவிறக்க (http://download11.getjar.com/downloads/web/pub/26137/Nimbuzz.sis)

Nokia S60 3rd edition N&E series 5500,6120, N 73,93,95,96, e60, 60i, 95தரவிறக்க (http://download12.getjar.com/downloads/web/pub/26135/Nimbuzz.sisx)

http://www.nimbuzz.com/

சுட்டிபையன்
28-08-2008, 03:13 PM
Fring
http://media.getjar.com/repository/img/11160.gif
சாட் மற்றும் வாய்ஸ் சாட்
http://www.symbianv3.com/images/fring_first.PNG

தகவல்கள் மற்றும் தரவிறக்கம் (http://www.getjar.com/products/11160/fring)

சுட்டிபையன்
28-08-2008, 03:19 PM
http://media.getjar.com/repository/img/11966.gif

தகவல் மற்றும் தரவிறக்க (http://www.getjar.com/products/11966/EQO)

நூர்
05-09-2008, 04:17 PM
நன்றி அனைவருக்கும்.

majindr
10-06-2009, 08:25 AM
தகவல் தந்து உதவிய அணைத்து உள்ளங்களுக்கும் நன்றி, நண்பர்களே 2009ம் ஆண்டுக்கான புதிய மாடல் போன்களை பற்றி எழுதினால் நன்றக இருக்கும்.

கோ.முத்து
22-07-2010, 05:38 AM
நல்ல பயன்னுல்ல தகவல் நன்றி.
நான் NOKIA 6300 உபயோகிக்கிறேன். மிகவும் நன்றாக உள்ளது. ஒலி துல்லியமாக உள்ளது. அதுபோல் மின்னஞ்சல்கள் அனைத்தும் கைத் தொலலபேசிக்கே வந்துவிடுவதால் எங்கே இருந்தாலும் உடனே பதில் அனுப்ப உதவியாக உள்ளது.

mgandhi
22-07-2010, 08:22 AM
3G நோக்காயா 5800 வில் தமிழ் எழுத்துக்கள் தெரிய என்ன செய்ய வேண்டும்

மயூ
09-08-2010, 08:22 AM
3G நோக்காயா 5800 வில் தமிழ் எழுத்துக்கள் தெரிய என்ன செய்ய வேண்டும்
ஒபேரா மினி எனும் உலாவியை நிறுவிப் பாவியுங்கள். தமிழ் எழுத்துக்கள் அருமையாகத் தெரியும்.

ஒபேரா மினியில் செய்ய வேண்டிய மாற்றங்களை இங்கே காணலாம் (http://tvs50.blogspot.com/2009/06/problem-view-tamil-fonts-in-mobile.html). :icon_b: