PDA

View Full Version : வாலறிவன் (அ.மை. - 27)இளசு
13-09-2007, 05:15 AM
வாலறிவன்


அறிவியல் மைல்கற்கள் - 27

ஹாலியின் வால்நட்சத்திரம்

எட்மண்ட் ஹாலி 1656 -1742

---------------------------------------------

அ.மை: 26 - பூவிலும் பாலுண்டு இங்கே -

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11844

---------------------------------------------------
அறிவியல் இமயமான நியூட்டனில் இருந்து புறப்பட்ட
அறிவு நதிகள் பல.. அதில் ஒருவர் - நம் 27ம் நாயகர் எட்மண்ட் ஹாலி!

1687ல் வெளியான 'பிரின்ஸிபியா மேதமேட்டிக்கா'' என்னும் உலகைப்புரட்டிய
தம் நூலில் நியூட்டன் வால்நட்சத்திரங்களின்(சுருக்கமாய் வாலிகள்) சுற்றுப்பாதையை அளக்கும் முறை
பற்றிச் சுட்டிக்காட்டியிருந்தார்.

வாலிகளின் வான இருப்பிடங்களை இரண்டு மாத இடைவெளிகளில் மூன்றுமுறை அளந்தால் போதும்..
அவற்றின் முழு சுற்றுப்பாதையும் சொல்லிவிட முடியும்..
1608-ல் ஒரு மகாவாலியை (Great Comet)அவதானித்து இந்த
உண்மையை நிறுவினார் நியூட்டன்.

நியூட்டன் அனுமானித்தது : வாலிகள் எங்கோ நீண்ட ஒரு தொலைவிலிருந்து வருகின்றன..
அந்த நீண்ட பயணத்தில் சூரியனைக் கடக்கும்போது நமக்குத் தெரிகின்றன..
பின் கண்காணா நீண்ட இடத்துக்கு தொடர்ந்து போய்க்கொண்டிருக்கின்றன..
எனவே ஒரு வாலி ஒரு முறைதான் நமக்குத் தெரியும்..
அவற்றின் பாதை மிக மிக நீளமான ( பாரபோலிக்) பாதை!

இப்படி ஒருமுறை தெரிவது ஒரு புதிய வாலி என எண்ணிய நியூட்டன் மகாவாலியைத் தொடர்ந்து
இன்னும் 23 வாலிகளைப் பற்றித் தொகுத்து குறிப்புகள் எழுதிவைத்தார்.

பின்னர் வேறு பணிகளின் அழைப்பினாலோ, அல்லது வாலிகளின் மேல் வந்த அலுப்பினாலோ
அந்தக் குறிப்புகளைத் தொடர்ந்து ஆழமாய் அலசாமல் ஓரமாய்ப் போட்டுவிட்டார்.

ஆனாலும் அந்தக் குறிப்புகள் அப்படியே செல்லரித்துப்போகாமல், ஒரு நல்ல காரியம் செய்தார்.
இலண்டனில் இருந்த தம் நண்பரிடம் அவற்றை ஒப்படைத்தார்.

அந்த நண்பரின் பெயர் - எட்மண்ட் ஹாலி (Edmond Halley).
அவரே இந்த 27ம் மைல்கல்லின் நாயகர்.

நியூட்டனின் குறிப்புகளை வைத்து மேலும் ஆராய்ந்த ஹாலி,
1607, 1618, 1686 ஆண்டுகளில் தென்பட்ட வாலிகளின் பாதைகளைக் கணக்கிட்டுச் சொன்னார்.
அந்தக் கணக்கு சொன்ன உண்மை : 1607 , 1682ல் வந்த வாலிகள் சென்ற பாதை ஒன்றே!
அப்படியானால்.... அப்படியானால்..
அந்த இரண்டு சமயங்களில் தெரிந்தவை ஒரே வாலியாக இருக்கலாம் அல்லவா?
இதை அவர் அறிவுலகுக்குச் சொன்னது 1696ல்.


அடுத்த பத்தாண்டுகளில் ஹாலி ஆக்ஸ்போர்டு பல்கலையில் புவியியல் பேராசிரியர்.
அப்போது தொடர்ந்த ஆராய்ச்சிகளால், விடா முயற்சிகளால் -
1531-ல் வந்த வாலியும் , முந்தைய 1607,1682 ஆண்டுகளில் வந்த வாலி(கள்) போல்
அதே பாதையில் சென்றதைக் கண்டறிந்தார்.

ஆஹா... பொறி தட்டியது ஹாலிக்கு!

புலப்படாத தூரத்தில் இருந்து புறப்பட்டு மீண்டும் எங்கோ புலப்படாத இடத்துக்குப்
போவன இல்லை இந்த வாலிகள்..

ஒரு மிக நீள்வட்டப் பாதையில் மீண்டும் மீண்டும் சுற்றிச் சுற்றி வருவன இவை!

அப்படியானால்...?
பூமிக்கு தொலைவில் இருக்கும் இவற்றையும் ஈர்ப்பு சக்தி இழுக்க வல்லது!!!!

எத்தனை அரிய உண்மை.. !
இதை அறிய எத்தனை அரிய - தொடர் உழைப்பு!

அத்தோடு நின்றாரா நம் நாயகர் ஹாலி..

அந்தக் குறிப்பிட்ட வாலி ஒரு நீள்வட்டச் சுற்று சுற்றி நமக்குத் தெரியும்படி
பூமிக்கு அருகில் வர 76 ஆண்டுகள் ஆகிறதைக் கணக்கிட்டு,
1705 -ல் இப்படி எழுதினார்:

''ஆகவே, அந்த வாலி மீண்டும் 1758-ல் வரும் என முன்னறிவிக்கிறேன்''.

வந்ததா வாலி! வந்தது! 1758 கிறிஸ்துமஸ் அன்று வான்வெளியில் நின்றது!
ஹாலியின் அறிவியல் கணிப்பு வென்றது!

அதன்பிறகு ஒவ்வொரு 76 ஆண்டுகளுக்கும் அதன் வருகை தொடர்கிறது.
அதன் பெயரே ; ஹாலியின் வால்நட்சத்திரம். (ஹாலியின் வாலி..)

அலுக்கவைக்கும் பல பெரும் கணக்குக்குறிப்புகளைச் சலிக்காமல் தொடர்ந்து
ஆராய்ந்து, புவியீர்ப்பின் வீச்சை விஸ்தரித்து, ''தூமகேது'' தாம் சொன்னபடி
வானில் வரும் எனக் கணித்த ஹாலி..
நம் நாயகர் வரிசையில் இடம்பெறத் தகுதி உள்ளவர்தாம்..
இல்லையா நண்பர்களே?

ஷீ-நிசி
13-09-2007, 05:27 AM
அறிவுக்கெட்டாத ஆச்சரியங்கள்..... நன்றி இளசு அவர்களே!

இளசு
13-09-2007, 05:31 AM
நன்றி ஷீ-நிசி

முனைப்பு , உழைப்பே மூலதனங்களாக்கி
உலகுக்கு இப்படி அறிவுதானம் வழங்கிய
மேதைகளுக்கு நன்றி சொல்லவே இந்தத் தொடர்..

தொடர் ஊக்குவிப்புக்கு நன்றி..

aren
13-09-2007, 05:43 AM
ஒரு இஞ்ச் கொடுத்தால் யார்டு எடுத்துக்கொள்வார்கள் என்று ஒரு சிலரைக் குறிப்பிடுவோம். அந்த வகையில் இந்த ஹாலியும் நியூட்டன் அவர்களிடம் இருந்ததைப் பெற்று இன்னும் பல விஷயங்களை இந்த உலகிற்கு கொடுத்தார். ஆனால் இவர் யார்டு எடுத்துக்கொண்டது உலகிற்கு நன்மை செய்ய. ஆகையால் இவர் பாராட்டுக்க்குறியவர் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர்.

நன்றி இளசு அவர்களே. பல தெரியாத விஷயங்களை எங்களுக்குத் தெரியவைக்கும் உங்களுக்கு எங்கள் நன்றிகள்.

நன்றி வணக்கம்
ஆரென்

இளசு
13-09-2007, 05:48 AM
உண்மைதான் அன்பின் ஆரென்..

பாதிப் பணி என்னும் ஏணியில் ஏறுவது
அறிவுக்கனியைப் பறித்தளிக்கத்தான் என்றால்..

அது மிகவும் நல்ல செய்கையே!

உங்கள் ஊக்கத்துக்கு நன்றி..

சிவா.ஜி
13-09-2007, 06:36 AM
மேதை நியூட்டனின் குறிப்புகளே ஹாலிக்கு வாலியின் சரித்திரம் தெரிந்துகொள்ள பயன்பட்டதென்றால்..ஹாலி உண்மையிலேயே ஒரு வாலிதான்(நியூட்டனின் பாதியை எடுத்துக்கொண்டதால்).
அந்த சரித்திர நாயகனின் கடும் உழைப்பின் பலன் எத்தனை மகத்தானது..அதன் விளைவுகள் எத்தனை அற்புதமானது என்று எங்கள் சிற்றறிவுக்கும் புரியும்படி தந்த இளசுவுக்கு மனமார்ந்த நன்றிகள்.தொடர்ந்து தந்து எங்கள் அறிவையும் விசாலமாக்குங்கள் இளசு.

இளசு
13-09-2007, 07:25 PM
நன்றி சிவா..

வால் நட்சத்திரத்தைச் சுருக்கி வாலி என அழைக்க
பாதி பெற்றதால் ஹாலியும் வாலி என நீங்கள் சொன்ன
அந்த ' நேரத்துத்தக்க'' நறுக் -கருத்து ரசிக்க வைக்கிறது.

அன்புரசிகன்
13-09-2007, 07:44 PM
ஹேலியின் வால்வெள்ளி பற்றி 1995ல் வெரித்தாஸ் வானொலியில் கேட்டறிந்தேன்... உங்களின் பார்வை சற்றெ வித்தியாசமான பார்வை... நன்றிகள் அண்ணா...

இளசு
13-09-2007, 07:58 PM
படித்தறிந்தவற்றைப் பகிரும் எளியவனின் முயற்சி இது அன்பு..

ஊக்கங்களே இதன் ஊதுகாற்று! நன்றி!

ஓவியன்
13-09-2007, 08:43 PM
நியூட்டன் போட்ட கோட்டிலே ரோடு போட்டவர் இந்த எட்மன் ஹாலி, அவரது சாதனைப் படிகளை அழகுத் தமிழிலே இலகு நடையிலே தந்த அண்ணலுக்கு நன்றிகள் பல...

இதோ அண்ணா விளக்கிய வாலறிவனின் புகைப் படம்..........http://upload.wikimedia.org/wikipedia/commons/3/3e/Edmond_Halley_5.jpg

நன்றி - விக்கிபீடியா

அன்பான இளசு அண்ணா!

இனிமேல் ஹாலியின் வால்வெள்ளி மீள ஒரு போதும் பூமிக்கு அருகே வரப் போவதில்லை என்று எங்கோ படித்த ஞாபகம் உள்ளது, அந்த தகவல் உண்மைதானா?

இளசு
13-09-2007, 08:47 PM
ஆஹா.... வால் போஸ்ட்டர் போல படம் வாலறிவனுக்கு..

நன்றி ஓவியன்..

இனி வருமா ஹாலியின் வாலி?

படித்துச் சொல்கிறேன் - கிடைத்தால்..

அதற்குள் மன்ற நட்சத்திரங்கள் சொல்லிவிடுவார்கள்!

மனோஜ்
13-09-2007, 09:40 PM
அறுமையன்னா இந்த வால்நட்சத்திரங்கள் பார்க்க ஆசை
சில நேரங்களில் வானத்தில் நகர்ந்து செல்லும் நட்சத்திரங்கள கவனித்து பார்பதுன்டு சில நட்சத்திரங்கள் கீழ் விழவதையும் பார்த்துன்டு

சிறப்பான தொடருக்கு மிக்க நன்றி அன்பு அண்ணா

பாரதி
14-09-2007, 08:03 PM
வழமை போல மிக நல்ல பதிவு அண்ணா..!

இன்றைய நாளில் இருப்பது போன்ற விஞ்ஞான வசதிகள் இல்லாத நாட்களில் இது போன்று கணிப்பதே சாதனைதான்!

உங்களுக்கு என் அன்பு அண்ணா..

இளசு
14-09-2007, 09:22 PM
நன்றி மனோஜ்

பூமியின் ஈர்ப்புக்கு வந்த துருவ ஜல்லிகள் - எரிகற்கள்!

சூரியனின் ஈர்ப்புக்காக அதைச் சுற்றி வரும் துருவ பிண்டங்கள் - வாலிகள்..


நன்றி பாரதி..

நுண்ணறிவால் மட்டுமே இத்தனை சாதித்தவர்களை எண்ணிப் பிரமிப்பு அடங்கவில்லை!

ஓவியன்

1986 -ல் வந்தது மீண்டும் 2061-ல் வரும்..

http://www.geocities.com/capecanaveral/launchpad/1364/Comets.html

நீ இருந்து நிச்சயம் பார்ப்பாய்.. மன்றத்தில் பதிவு அளிப்பாய்!

ஜெயாஸ்தா
10-01-2008, 01:35 PM
வால்நட்சத்திரங்கள் பற்றி சுவையான செய்தியை தந்தமைக்கு நன்றி. இந்த திரியை இப்போதுதான் முதன் முதலாக பார்க்கிறேன். படிக்க மிகவும் சுவரசியமாக உள்ளது. அப்படியே தொடர்ந்து ஒவ்வொரு பகுதியாக படிக்க ஆரம்பித்துவிட்டேன்.

இளசு
14-01-2008, 08:26 PM
நன்றி நண்பர் ஜெயாஸ்தா அவர்களே..

அறிவியலை எளியத் தமிழில் எனக்கு விளக்கிக்கொள்வதற்கான முயற்சி இது..

உங்கள் ஊக்கமொழிக்கு நன்றி.. தொடர்வேன்..

யவனிகா
16-01-2008, 03:44 PM
அறிவியலை அழகுத் தமிழில் சொல்வது நல்ல பணி...கண்டிப்பாக இதைத் தொடர்ந்து தர வேண்டும். மிகவும் உபயோகமான பதிப்பு இது.வாழ்த்துக்கள் இளசு அவர்களே.

இளசு
04-02-2008, 08:44 PM
உங்கள் பின்னூட்ட ஊக்கம் கண்டு மிக்க மகிழ்ச்சி யவனிகா அவர்களே..

நிச்சயம் என்னால் இயன்றவரை இப்பணியைத் தொடர்வேன்.. நன்றி!

ஆதவா
06-02-2008, 01:32 AM
ஓ! இதைத்தான் வாலறிவன் என்று சொல்வார்களோ?!!!

நல்ல பயனுள்ள தக்வல்.. எனக்கு இம்மாதிரி விண்ணை ஆராயவேண்டுமென்ற சிறுவயதிலிருந்தே ஆவல்... படித்ததும் மன நிறைவு..

நானூறு வருடங்களுக்கு முன்னமே என்னமா கண்டுபிடிக்கிறார்கள்!!!!

நியூட்டன் அண் ஹாலி ஆர் கிரேட்...

இந்த வாலி எதை மையமாக வைத்து சுற்றுகிறது???

அனுராகவன்
23-02-2008, 08:29 AM
நன்றி நண்பரே..
என் வாழ்த்துக்கள்

இளசு
23-02-2008, 02:26 PM
இத்தொடரின் பல பாகங்களிலும் ஒரே நாளில் சஞ்சரித்து ஆதவன்
அளித்த உற்சாகத்துக்கு மொத்த நன்றி...!

பின்னூட்ட ஊக்கம் அளித்த அனு அவர்களுக்கு நன்றி!

Narathar
30-09-2008, 07:35 PM
அலுக்கவைக்கும் பல பெரும் கணக்குக்குறிப்புகளைச் சலிக்காமல் தொடர்ந்து
ஆராய்ந்து, புவியீர்ப்பின் வீச்சை விஸ்தரித்து, ''தூமகேது'' தாம் சொன்னபடி
வானில் வரும் எனக் கணித்த ஹாலி..
நம் நாயகர் வரிசையில் இடம்பெறத் தகுதி உள்ளவர்தாம்..
இல்லையா நண்பர்களே?

நிச்சயமாக அவர் ஒரு நாயகர் தான் அதில் சந்தேகமே இல்லை...
அதுபோல அறிவியலின் மன்ற நாயகர் நீங்கள் தான்.....

வாழ்த்துக்கள் :)