PDA

View Full Version : ஞாபகம் இருக்கிறதா

இலக்கியன்
12-09-2007, 06:52 PM
என் உயிரே
காதல் செய்தாயே-என்னை
ஞாபகம் இருக்கிறதா

நான் உன் மீது
பைத்தியமாகும் வரை
காதல் செய்தாயே
ஞாபகம் இருக்கிறதா

நாம் கற்பனையில்
வாழ்வதாக-பல
கதைகள் சொன்னாயே
ஞாபகம் இருக்கிறதா

நான் உன்னை
புரிந்து கொள்ள வைத்தாயே
ஞாபகம் இருக்கிறதா

காலத்தின் கோலத்தால்
நான் உன்னை
பிரிந்து வந்தேனே
ஞாபகம் இருக்கிறதா

பிரிந்து இருப்பதிலும்
ஒருவித சுகம்
உண்டு என்றாயே
ஞாபகம் இருக்கிறதா

தொலைபேசியில்-நாம்
மணிக்கணக்கில்
பேசியது எல்லாம்
ஞாபகம் இருக்கிறதா

நான் அனுப்பிய-காசில்
நீ உன்னை அலங்கரித்தது
ஞாபகம் இருக்கிறதா

நான் அனுப்பிய
சட்டையை போட்டு போஸ்
கொடுத்து படம் எடுத்தது
ஞாபகம் இருக்கிறதா

எந்த எதிர்ப்பு வந்தாலும்
நான் உன் கூடத்தான்
வாழ்வேன் என்றாயே
ஞாபகம் இருக்கிறதா

இப்போது நீ
ஏன் என்னை
சேர மறுக்கின்றாய்?

காதலிக்கும் போது
இருந்த துணிவு
இப்போது ஏன்
உனக்கு இல்லை

அப்பா அம்மாவை
கேட்டா நீ என்னை
காதலித்தாய்

ஜாதி சமயம்
பார்த்தா நீ என்னை
காதலித்தாய்

கறுப்பு வெள்ளை
பார்த்தா நீ என்னை
காதலித்தாய்

என்னால் என் இதயத்தை
மாற்ற முடியவிலை
உன்னால் எப்படி முடிகிறது

நீ ஏன் என்னை
வெறுக்கின்றாய்
நான் இன்னும் உன்னை
வெறுக்கவில்லை

பூமகள்
12-09-2007, 07:18 PM
என்னால் என் இதயத்தை
மாற்ற முடியவிலை
உன்னால் எப்படி முடிகிறது

நீ ஏன் என்னை
வெறுக்கின்றாய்
நான் இன்னும் உன்னை
வெறுக்கவில்லை

காதலின் தோல்வியை இதற்கு மேல் யாராலும் கவி வடித்து அழவைக்க முடியாது. உண்மையில் என் கண்கள் பனித்தன இந்த கடைசி வரிகளைப் பார்க்கையில்...

அழகான கவி.. அழவைக்கும் காதல் வலி உணர்வுகளை படைத்த இலக்கியருக்கு அழுகையுடனே பாராட்டிவிடுகிறேன்..!!

வாழ்த்துக்கள்.. தொடர்ந்து படையுங்கள்..!! ( இன்னும் நன்றாய் அழவையுங்க...ஹி ஹி..!!)

இலக்கியன்
12-09-2007, 07:22 PM

இந்த கவிதை என் நண்பரின் உணர்வுகளை வெளிப்படுத்தும் முகமாக படைத்தது
அவரின் உணர்வுகளுடன் என் சிந்தனை கலந்தேன் நன்றி பூமகள் உங்கள் பின்னூட்டத்துக்கு. நீங்கள் சிந்திய கண்ணீர் என் கவிதைக்கு உரமாகிவிட்டதில் மகிழ்ச்சி

aren
13-09-2007, 03:43 AM
அவள் இன்னொருத்தனின் மனைவியாகாதவரையில் கவலைவேண்டாம். உங்கள் காதல் கனியும் நாள் வெகுதொலைவில் இல்லை.

அருமையான கவிதை. பாராட்டுக்கள்.

அமரன்
13-09-2007, 08:31 AM
காதல் பிரிவு கவிதைகள்
வற்றாத ஊற்றாகவே இருக்கின்றன.

அந்த ஊற்றின் வெளிப்பாடு
சற்றே நீளமாக இலக்கிய வரிகளிடன்
பிரிவின் முன் பின் என
இரு கரைகளைக் கொண்டு பாய்கிறது

அள்ளிக்குடிக்க வைக்கிறது.
அள்ளி அள்ளிக் குடிக்க வைக்கவில்லை.

துணைகொண்ட காதல் எத்தகையது
என்று தேடும் பாங்கு கவிதையில் தெரிகிறது.

தொடருங்கள் வளருங்கள்...வாழ்த்துக்கள் இலக்கியன்.....

நான் உன்னை
புரிந்து கொள்ள வைத்தாயே
ஞாபகம் இருக்கிறதா

பலர்
தன்னைத்தானே
புரிந்துகொள்ள வைப்பதும்
காதல்தான்...!

ஷீ-நிசி
13-09-2007, 08:53 AM
ஒவ்வொரு பகுதியும் காதலின் வலிகளை நன்றாய் உணர்த்துகின்றன...

இலக்கியன், கவிதையில் வார்த்தைகள் இன்னும் கவிதைக்காய் செதுக்குங்கள்...

வாழ்த்துக்கள்!

lolluvathiyar
14-09-2007, 11:57 AM
நல்ல கவிதை இலக்கியன். உங்கள் கேள்விகளுக்கு நான் நகைசுவையாக பதில் தந்திருகிறேன்

நான் உன் மீது
பைத்தியமாகும் வரை

பைத்தியத்த யாராவது ஞாபக வச்சிருப்பாங்களா.

நாம் கற்பனையில்
வாழ்வதாக-பல
கதைகள் சொன்னாயே

இப்பவும் அது போதும்னு தானே சொல்லிக்கரேன். நிஜத்தில் வேண்டாமென

நான் உன்னை
புரிந்து கொள்ள வைத்தாயே

சரியாக புரின்து கொள்ளாதர்க்கு நான் என்னப்பா செய்ய முடியும்

பிரிந்து இருப்பதிலும்
ஒருவித சுகம்
உண்டு என்றாயே

அத தான் இப்பவும் சொல்லரேன். எதுக்கு டிஸ்டர்ப் பன்னரே

காதலிக்கும் போது
இருந்த துணிவு
இப்போது ஏன்
உனக்கு இல்லை

அப்பா அம்மாவை
கேட்டா நீ என்னை
காதலித்தாய்

ஜாதி சமயம்
பார்த்தா நீ என்னை
காதலித்தாய்

கறுப்பு வெள்ளை
பார்த்தா நீ என்னை
காதலித்தாய்

அதுக்கு பேரு தான் காதல் இது கூட புரியாமல்

என்னால் என் இதயத்தை
மாற்ற முடியவிலை
நான் இன்னும் உன்னை
வெறுக்கவில்லை

அதுக்கு நான் என்னப்ப பன்னட்டு

சூரியன்
14-09-2007, 12:01 PM
இலக்கியன் இது உணர்ந்து எழுதிய கவிதை போல?

அருமையான வரிகள்,கருத்தை நன்றாக சொல்லியிருக்கிறீர்கள்.

வாழ்த்துக்கள்.

இலக்கியன்
14-09-2007, 04:00 PM
அவள் இன்னொருத்தனின் மனைவியாகாதவரையில் கவலைவேண்டாம். உங்கள் காதல் கனியும் நாள் வெகுதொலைவில் இல்லை.

அருமையான கவிதை. பாராட்டுக்கள்.

கவிதைகள் அனைத்தும் எம் சொந்த உணரவாக இருக்கும் என எதிர்ப்பார்க்க முடியாது
உங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி

இலக்கியன்
14-09-2007, 04:02 PM
காதல் பிரிவு கவிதைகள்
வற்றாத ஊற்றாகவே இருக்கின்றன.
அந்த ஊற்றின் வெளிப்பாடு
சற்றே நீளமாக இலக்கிய வரிகளிடன்
பிரிவின் முன் பின் என
இரு கரைகளைக் கொண்டு பாய்கிறது
அள்ளிக்குடிக்க வைக்கிறது.
அள்ளி அள்ளிக் குடிக்க வைக்கவில்லை.
துணைகொண்ட காதல் எத்தகையது
என்று தேடும் பாங்கு கவிதையில் தெரிகிறது.
தொடருங்கள் வளருங்கள்...வாழ்த்துக்கள் இலக்கியன்.....
நான் உன்னை
புரிந்து கொள்ள வைத்தாயே
ஞாபகம் இருக்கிறதா
பலர்
தன்னைத்தானே
புரிந்துகொள்ள வைப்பதும்
காதல்தான்...!

அழகான பின்னூட்டத்துக்கு நன்றி அமரன் அண்ணா

இலக்கியன்
14-09-2007, 04:06 PM
நல்ல கவிதை இலக்கியன். உங்கள் கேள்விகளுக்கு நான் நகைசுவையாக பதில் தந்திருகிறேன்
பைத்தியத்த யாராவது ஞாபக வச்சிருப்பாங்களா.
இப்பவும் அது போதும்னு தானே சொல்லிக்கரேன். நிஜத்தில் வேண்டாமென
சரியாக புரின்து கொள்ளாதர்க்கு நான் என்னப்பா செய்ய முடியும்
அத தான் இப்பவும் சொல்லரேன். எதுக்கு டிஸ்டர்ப் பன்னரே
அதுக்கு பேரு தான் காதல் இது கூட புரியாமல்
அதுக்கு நான் என்னப்ப பன்னட்டு

ளொள்ளு வாத்தியாரின் ளொள்ளுப்பதில்கள் சூப்பர் நன்றி ஜயா
கோயம்புத்தூர் குசும்புதானே வேணாங்கிறது:D

இலக்கியன்
14-09-2007, 04:07 PM
ஒவ்வொரு பகுதியும் காதலின் வலிகளை நன்றாய் உணர்த்துகின்றன...

இலக்கியன், கவிதையில் வார்த்தைகள் இன்னும் கவிதைக்காய் செதுக்குங்கள்...

வாழ்த்துக்கள்!

உங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி இது என் பழய கிறுக்கல்

இலக்கியன்
14-09-2007, 04:10 PM
இலக்கியன் இது உணர்ந்து எழுதிய கவிதை போல?

அருமையான வரிகள்,கருத்தை நன்றாக சொல்லியிருக்கிறீர்கள்.

வாழ்த்துக்கள்.

சில கவிதைகள் உணர்ந்தும் எழுத வேண்டுமே நன்றி சூரியன்

அக்னி
15-09-2007, 01:00 PM
வரமான காதல்,
தூரமானதால்..,
மறந்தாயோ..?
சருகாகக் காய்கின்றேன்...
மெல்லிய தென்றலும்,
என்னை உன்னிடம்,
சேர்த்திடாதோ என்று...

பாராட்டுக்கள் இலக்கியன்...

சிவா.ஜி
15-09-2007, 01:09 PM
நடிப்புகள் மறந்து போகலாம்...இந்த இதயத்தின் துடிப்புகள் மறக்கலாகுமா...அப்படியாயின் மறந்துவிட்ட காதல்...இறந்துவிட்ட உறவு...கவிதையின் நாயகனுடையது மெல்லிய இதயம் போலிருக்கிறது...கள் தரும் காதலென்று நினைத்து கல்லடி வாங்கியுள்ளான்...காலம் காயம் ஆற்றும். உணர்வுகள் நிரம்பிய கவிதை.வாழ்த்துக்கள் இலக்கியன்.

இலக்கியன்
16-09-2007, 03:46 PM
வரமான காதல்,
தூரமானதால்..,
மறந்தாயோ..?
சருகாகக் காய்கின்றேன்...
மெல்லிய தென்றலும்,
என்னை உன்னிடம்,
சேர்த்திடாதோ என்று...

பாராட்டுக்கள் இலக்கியன்...

அக்னியாரே அழகான கவிதைபோல அமைத்த பின்னூட்டம் நன்று

இலக்கியன்
16-09-2007, 03:53 PM
நடிப்புகள் மறந்து போகலாம்...இந்த இதயத்தின் துடிப்புகள் மறக்கலாகுமா...அப்படியாயின் மறந்துவிட்ட காதல்...இறந்துவிட்ட உறவு...கவிதையின் நாயகனுடையது மெல்லிய இதயம் போலிருக்கிறது...கள் தரும் காதலென்று நினைத்து கல்லடி வாங்கியுள்ளான்...காலம் காயம் ஆற்றும். உணர்வுகள் நிரம்பிய கவிதை.வாழ்த்துக்கள் இலக்கியன்.

ஆம் அழகான பின்னூட்டம் சரியாக சொன்னீர்கள் உண்மையிலே காதலன் நாயகன் இதயம் மெல்லியது

சாராகுமார்
16-09-2007, 04:09 PM
ஞாபகம் வருதே...
ஞாபகம் வருதே...
பழைய நினைவுகளை ஞாபக படுத்திய விதம் அருமை.நல்ல கவிதை.வாழ்த்துக்கள்.

இலக்கியன்
20-09-2007, 04:18 PM
ஞாபகம் வருதே...
ஞாபகம் வருதே...
பழைய நினைவுகளை ஞாபக படுத்திய விதம் அருமை.நல்ல கவிதை.வாழ்த்துக்கள்.

நன்றி உங்கள் கருத்துப்பகிர்வுக்கு

என்னவன் விஜய்
20-09-2007, 04:37 PM
இலக்கியன்
உங்கள் கவிதை நன்றாக இருந்தது
தொடர்ந்து எழுதுங்கள்
நன்றி

இலக்கியன்
20-09-2007, 04:46 PM
இலக்கியன்
உங்கள் கவிதை நன்றாக இருந்தது
தொடர்ந்து எழுதுங்கள்
நன்றி

நன்றி உங்கள் பின்னூட்டத்துக்கு

ஓவியன்
27-09-2007, 02:54 AM
காதலின்
சுகமும் சுமையும்
கடந்த கால ஞாபகங்களே!!!

அதைத் தொலைத்து
நின்றால் அது
காதலே அல்ல.....

பாராட்டுக்கள் இலக்கியன்!

இலக்கியன்
28-09-2007, 06:47 PM
காதலின்
சுகமும் சுமையும்
கடந்த கால ஞாபகங்களே!!!

அதைத் தொலைத்து
நின்றால் அது
காதலே அல்ல.....

பாராட்டுக்கள் இலக்கியன்!

காதல் ஒரு சுப அனுபவம் அதில் வெற்றி என்பது ஒரு சிலருக்குத்தான் நன்றி உங்கள் பின்னூட்டத்திற்கு