PDA

View Full Version : முதல் அனுபவம்

aren
12-09-2007, 03:19 PM
தலைகால் புரியவில்லை
சந்தோஷத்தால்!!!

முதன் முதலாக ஒரு காதல் கடிதம்
என்னுடைய கலாவிற்கு
என் கைப்பட எழுதினேன் கவிதையாக!!!

அதன் நகல் என் கையில்
அதன் அசல் அவள் கையில்!!!

பதிலுக்காக காத்திருக்கும்
அந்த கொஞ்ச அவகாசத்தில்
என் சுவாசமே நின்றுவிடும் அபாயம்!!!

மனதில் பட்டாம்பூச்சி சுற்றியது
கண்களில் மிரட்சி தலை காட்டியது
நெற்றியில் வேர்வைத் திட்டுகள்
உமிழ்நீர் நாக்கின் நுனியில்
திக் திக் திக் சத்தம் மட்டும் எனக்குள்!!!

வீட்டுக் கதவைத் திறந்தாள்
மெல்ல நடந்து வந்தாள்
அவள் மனக்கதவை திறப்பாளா
கவலைக்கோடுகள் என் மனதில்!!!

நெருங்கினாள்
உதட்டில் புன்னகையுடன்
என்னைப் பார்த்து
ஏன் என்னை இவ்வளவு
நாள் காத்திருக்கவைத்தாய்!!!

வாயெல்லால் பல்லாக
சொல்லத்தெரியாமல்
ஒரு அசட்டுச் சிரிப்புடன் நான்!!!!

முதல் அனுபவம்
என்றுமே இனிமையுடன்
என் மனதில்
இன்றும் அகலாமல்!!!

தாமரை
12-09-2007, 03:23 PM
அதன் நகல் என் கையில்
அதன் அசல் அவள் கையில்!!!

அப்பு நீங்க விவரம்தான்..!!!

ஆனால் பாவம் இங்க சில மக்கள்
ஜெராக்ஸா எடுத்து தட்டி விட்டுகிட்டிருக்காங்க..
ஒண்ணுமே ஒர்க் அவுட் ஆகலையே தலைவான்னு ஒரே புலம்பல்,

aren
12-09-2007, 03:26 PM
நன்றி தாமரை.

பச்சைக்கொடி காட்டிட்டாங்க இல்லையா. நானும் ஜெராக்ஸ் எடுத்திருந்தால் என்பாடு திண்டாட்டமாகத்தானே ஆகியிருக்கும்.

நன்றி வணக்கம்
ஆரேன்

சாராகுமார்
12-09-2007, 03:32 PM
முதல் அனுபவம் முத்தான அனுபவம்.
அருமையான காதல் கடித அனுபவம்.
வாழ்த்து வாழ்த்துக்கள்.

aren
12-09-2007, 03:33 PM
நன்றி சாராகுமார்.
முதல் அனுபவம் என்றைக்கும் மனதில் நிறைந்திருக்கும் என்பார்கள், அதுபோல்தான் இதுவும்.
நன்றி வணக்கம்
ஆரென்

தாமரை
12-09-2007, 03:33 PM
நன்றி தாமரை.

பச்சைக்கொடி காட்டிட்டாங்க இல்லையா. நானும் ஜெராக்ஸ் எடுத்திருந்தால் என்பாடு திண்டாட்டமாகத்தானே ஆகியிருக்கும்.

நன்றி வணக்கம்
ஆரேன்

எங்கப்பன் குதிருக்குள்ள இல்லன்னு சொன்ன மாதிரி ஜெராக்ஸ் எடுத்ததைச் சொல்லிட்டு அப்புறம் என்னத்துக்கு மறைக்க முயற்சி பண்ணறீங்க..

அதன் நகல் என் கையில்
அதன் அசல் அவள் கையில்!!!

அம்மணி கவனம்.. இன்னமா முழுப் பூசணிக்காயைச் சோத்தில மறைக்கிறாரு

aren
12-09-2007, 03:34 PM
நண்பரே, நான் இன்னொரு காப்பியை என் கைப்பட எழுதி வைத்திருந்தேன். ஜெராக்ஸ் எடுக்கவில்லை.

நிராகரிப்பு நடந்தால் அடுத்த முறை மாத்தி எழுதவேண்டும் இல்லையா, அந்த முன் ஜாக்கிரதை என்று வேண்டுமானால் சொல்லுங்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

ஜெயாஸ்தா
12-09-2007, 03:38 PM
வாயெல்லால் பல்லாக
சொல்லத்தெரியாமல்
ஒரு அசட்டுச் சிரிப்புடன் நான்!!!!

இந்த யாதார்த்த உண்மையை அப்படியே போட்டு உடைத்துவிட்டீர்களே ஆரென். ம்... பெண் உறுப்பினர்கள் நம்மை பற்றி என்ன நினைப்பார்கள்?

aren
12-09-2007, 03:40 PM
இந்த யாதார்த்த உண்மையை அப்படியே போட்டு உடைத்துவிட்டீர்களே ஆரென். ம்... பெண் உறுப்பினர்கள் நம்மை பற்றி என்ன நினைப்பார்கள்?

நன்றி ஜே.எம்.

யதார்த்த உண்மை என்று நிங்கள்தானே இங்கே போட்டு உடைத்துவிட்டீர்கள். நாம் சொல்லாமல் இருந்திருந்தால் அவர்களுக்கு தெரிந்திருக்காது இல்லையா.

நன்றி வணக்கம்
ஆரென்

தாமரை
12-09-2007, 03:43 PM
நண்பரே, நான் இன்னொரு காப்பியை என் கைப்பட எழுதி வைத்திருந்தேன். ஜெராக்ஸ் எடுக்கவில்லை.

நிராகரிப்பு நடந்தால் அடுத்த முறை மாத்தி எழுதவேண்டும் இல்லையா, அந்த முன் ஜாக்கிரதை என்று வேண்டுமானால் சொல்லுங்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

சமாளிக்க நீங்க இன்னும் நிறைய கத்துக்கணுமப்பு:mini023: - நகல் என்றால் என்ன?:icon_nono::icon_nono:
ஏதோ கஷ்டப்பட்டு கையில் எழுதிட்டா சரியாப் போயிடுமா?:icon_p:

அடுத்த முறை எழுதுவீங்க.. அவங்களுக்கே தான் கொடுப்பீங்கன்னு என்ன நிச்சயம்.:huepfen024:

மிக மிக முக்கியமான கேள்வி : அம்மணி இந்தக் கேள்விக்கு பதில் வராம விட்றாதீங்க..:icon_clap::icon_clap::icon_clap:

முதல் முதல் எழுதிய காதல் கடிதத்தில் உள்ள வார்த்தைகள் உங்களுக்கு மறந்து போயிருமா? அதெப்படி அதுவும் உடனே மறக்கும். அப்ப உருகி உருகி எழுதினதா சொல்றது பொய்தானே! அப்ப யார் எழுதினதை பார்த்துக் காப்பியடிச்சுக் கொடுத்தீங்க...:sport-smiley-008::sport-smiley-008::sport-smiley-008:

ம்ம்ம் அப்பிடித்தான் நங்கு நங்குன்னு கொட்டுங்க அம்மணி..:sport-smiley-005::sport-smiley-005::sport-smiley-005:

aren
12-09-2007, 03:51 PM

அதே ஆளுங்களுக்கு மறுபடியும் கொடுப்போமா? வேறு ஆளுக்கு எழுதும்பொழுது கொஞ்சம் மாத்திக்கலாமேன்னுதான் நகல்.

நாங்க கொஞ்சம் உஜார் பார்ட்டிதான்.

அமரன்
12-09-2007, 03:53 PM
கடிதம் கொடுத்த கணக்கவிதை இனிப்பு.
தொடர்ந்த கும்மாங்குத்துக்களும்..
------------------------------------------------
கொடுத்ததபோது இருந்த பதை பதைப்பை விட
அதை ப்கிர்ந்தபோது அதிகமாக இருக்குமே ஆரென் அண்ணா...

aren
12-09-2007, 03:55 PM
கடிதம் கொடுத்த கணக்கவிதை இனிப்பு.
தொடர்ந்த கும்மாங்குத்துக்களும்..
------------------------------------------------
கொடுத்ததபோது இருந்த பதை பதைப்பை விட
அதை ப்கிர்ந்தபோது அதிகமாக இருக்குமே ஆரென் அண்ணா...

அதே அதே சபாபதே!!!

நன்றி அமரன்

விகடன்
12-09-2007, 03:58 PM
உங்கள் அநுபவத்தை கவிதை வடிவில் தந்த விதமும் எங்களுக்கு உங்களைப் போலவே ஓர் உணர்வைத்தரும் வகையில் அமைந்திருந்தது.

வாசிக்கத் தொடங்கிவிட்டேன்.
முடிவு எப்படியிருக்கும் என்றொரு ஆதங்கம் ஒருபுறம்.
இடையே விட்டு விட்டு தாவுவதை எண்ணாத மனம் இன்னொருபுறம்.
இருந்தாலும் என்னதான் முடிவென்பதை அறிவதற்காய் ஆவலுடன் அதிகதியில் வாசிக்க தூண்டியது உங்கள் எழுத்துப் வன்மை/ புலமை.

பாராட்டுக்குள் அரேன்.

aren
12-09-2007, 04:01 PM
நன்றி விராடன்.

உங்கள் முதல் அனுபவத்தை இங்கே எடுத்துவிடுங்கள். மனதில் பயம் கொந்த கொந்தளிப்பு இன்று நினைத்தாலும் அது ஒரு இனிமையான நேரம்.

நன்றி வணக்கம்
ஆரென்

விகடன்
12-09-2007, 04:04 PM
நன்றி விராடன்.

உங்கள் முதல் அனுபவத்தை இங்கே எடுத்துவிடுங்கள். மனதில் பயம் கொந்த கொந்தளிப்பு இன்று நினைத்தாலும் அது ஒரு இனிமையான நேரம்.

நன்றி வணக்கம்
ஆரென்

இந்தத்துறையில் விராடன் முழுமையாகவே வீக்.
நம்மளை யார் கணக்கெடுக்க ஒருவருமே இல்லை என்பதை நங்கு புரிந்து அதன் பிரகாரம் அங்கலாய்ப்போ ஆதங்கமோ இல்லாமல் அசராமல் போகும் எனது வாழ்க்கை விடுகதையாகவே இன்றும்....:)

aren
12-09-2007, 04:06 PM
இந்தத்துறையில் விராடன் முழுமையாகவே வீக்.
நம்மளை யார் கணக்கெடுக்க ஒருவருமே இல்லை என்பதை நங்கு புரிந்து அதன் பிரகாரம் அங்கலாய்ப்போ ஆதங்கமோ இல்லாமல் அசராமல் போகும் எனது வாழ்க்கை விடுகதையாகவே இன்றும்....:)

நம் மக்கள்கிட்டே சொல்லுங்கள், உங்கள் விடுகதைகளில் இருக்கும் முடிச்சை அவிழ்த்துவிடுவார்கள்.

முயற்சியுடையார்
இகழ்ச்சியடையார்!!!

உன்னால் முடியும் தம்பி
எடுத்த காரியத்தில்
இன்றே இறங்கு நம்பி!!!

வெற்றி நிச்சயம்!!!

பென்ஸ்
12-09-2007, 04:18 PM
ஆரென் கலக்கல்...
கவிதையும்... முதல் அனுபவமும்...
என்றும் இனிப்பாய்

நான் மட்டும் தான் ரொம்ம்ம்ம்ம்ப நல்லவன் போல...

சூரியன்
12-09-2007, 04:27 PM
நல்ல படைப்பு அண்ணா.

அக்னி
15-09-2007, 01:30 PM
முதல் அனுபவம்,
காத்திருந்த நொடிகளின் தவிப்பு..,
முடிவு 01:
இதழ்களின் ஈரத்தில் தாகம் தணித்தது...
முடிவு 02:
கரங்களின் முத்தத்தில் தணிக்கையானது...

கொடுத்துவைத்த ஆரென் அண்ணா...

சிவா.ஜி
15-09-2007, 01:46 PM
அடாடா முதல் பந்திலேயே காதலி க்ளீன் போல்டா....அப்ப நீங்க வெற்றிகரமான வீச்சாளர்(இனிமே இது பத்தாதுங்க ஆரென் நல்ல பேச்சாளராகனும்...இல்லன்னா நீங்க க்ளீன்போல்ட்)முதல் அனுபவத்தை சுவாரசியம் குறையாமல் சொன்ன ஆரென்..வாழ்த்துக்கள்+பாராட்டுக்கள்.

மன்மதன்
10-10-2007, 04:15 PM
நெருங்கினாள்
உதட்டில் புன்னகையுடன்
என்னைப் பார்த்து
ஏன் என்னை இவ்வளவு
நாள் காத்திருக்கவைத்தாய்!!!

முதல் பந்திலேயே விக்கெட்டா.. கலக்கலா இருக்கே..!!

ஓவியன்
11-10-2007, 04:35 AM
பிறந்த குழந்தையின் முதல் சிரிப்பு..
ம்மா...!!!
என்ற அக்குழந்தையின் முதல் வார்த்தை...
தத்தி தவழ்ந்து எழுந்து நிற்கும் நடக்க எத்தனிக்கும்,
அக்குழந்தையின் முதல் எத்தனிப்பு...
அக்குழந்தை எழுதிய முதல் எழுத்து...
அக்குழந்தை விடலையாகி அவ(ன்/ள்) மனதில்
உருக்கொள்ளும் முதல் காதல்...
அந்த முதல் காதலிற்கான
முதல் முயற்சி எல்லாமே அழகு தான் ஆரென் அண்ணா!.

சுகந்தப்ரீதன்
11-10-2007, 04:55 AM
இளமைகால நினைவுகளை நினைத்து பார்த்து கவிதை தந்த அரேண் அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்...!அருமையான அனுபவம்..உங்களுக்கு...!
கலாவுக்கும் என் வாழ்த்துக்கள்...!