PDA

View Full Version : பார்வை.



சாராகுமார்
12-09-2007, 02:21 PM
சில பார்வை இதயம் கிழிக்கும்;
சில பார்வை உயிரை குடிக்கும்;
ஒரே ஒரு பார்வையால்
என் இதயம் உருவி,
உருமி மேளம்
அடித்துப் போனாள்!

சிவா.ஜி
12-09-2007, 02:34 PM
இதயம் உருவி உருமிமேளம் அடித்தவளிடமே கேட்டிருக்கலாமே...கெட்டிமேளம் எப்போதென்று...?
பார்வையால் பாதிக்கப்பட்ட நாயகனுக்கு தீர்வு, சேர்கையால் நிகழ வாழ்த்துக்கள் சாராகுமார்.

கலைவேந்தன்
12-09-2007, 03:35 PM
ஒரே ஒரு பார்வை உறுமிமேளம் அடிக்கவைக்கும்!
அதிசயம்தான்! ஆனால் உண்மை!
தினந்தோறும் பேருந்துகளிலும் புகைவண்டிகளிலும் நாம் பார்ப்பவர்கள் ஆயிரமாயிரம்!
ஆனாலும் ஒரு சில பார்வைகள் நம் இதயம்கிழிக்கும்! இந்த கண்காட்டு வித்தை எப்போதாவதுதான் நிகழும்!
அந்த கனங்கள் சுனாமிகணங்கள்!
கவிதை கூறும் செய்தி அருமை சாரா!

aren
12-09-2007, 03:36 PM
சில பார்வை இதயம் கிழிக்கும்;
சில பார்வை உயிரை குடிக்கும்;
ஒரே ஒரு பார்வையால்
என் இதயம் உருவி,
உருமி மேளம்
அடித்துப் போனாள்!


உங்கள் இதயத்தை உருவிட்டு
அவள் இதயத்தைக்
கொடுத்தாளா!!!

சாராகுமார்
12-09-2007, 03:44 PM
இதயம் உருவி உருமிமேளம் அடித்தவளிடமே கேட்டிருக்கலாமே...கெட்டிமேளம் எப்போதென்று...?
பார்வையால் பாதிக்கப்பட்ட நாயகனுக்கு தீர்வு, சேர்கையால் நிகழ வாழ்த்துக்கள் சாராகுமார்.

நன்றி சிவா.

சாராகுமார்
12-09-2007, 03:46 PM
ஒரே ஒரு பார்வை உறுமிமேளம் அடிக்கவைக்கும்!
அதிசயம்தான்! ஆனால் உண்மை!
தினந்தோறும் பேருந்துகளிலும் புகைவண்டிகளிலும் நாம் பார்ப்பவர்கள் ஆயிரமாயிரம்!
ஆனாலும் ஒரு சில பார்வைகள் நம் இதயம்கிழிக்கும்! இந்த கண்காட்டு வித்தை எப்போதாவதுதான் நிகழும்!
அந்த கனங்கள் சுனாமிகணங்கள்!
கவிதை கூறும் செய்தி அருமை சாரா!

எனக்கு முதல் பின்னூட்டம் இது உங்களிடமிருந்து.நன்றி கலைவேந்தரே.

தாமரை
12-09-2007, 03:46 PM
சில பார்வை இதயம் கிழிக்கும்;
சில பார்வை உயிரை குடிக்கும்;
ஒரே ஒரு பார்வையால்
என் இதயம் உருவி,
உருமி மேளம்
அடித்துப் போனாள்!

சில பார்வை இதயம் கிழிக்கும்;
சில பார்வை உயிரை குடிக்கும்;
ஒரே ஒரு பார்வையால்
என் இதயம்
உருவி
உருமி
மேளம்
அடித்துப் போனாள்

இப்ப அர்த்தம் மாறிப் போச்சே.. இப்ப என்ன செய்வீங்க.. இப்ப என்ன செய்வீங்க

அமரன்
12-09-2007, 03:48 PM
இப்ப அர்த்தம் மாறிப் போச்சே.. இப்ப என்ன செய்வீங்க.. இப்ப என்ன செய்வீங்க

:aktion033::aktion033::aktion033:

அமரன்
12-09-2007, 03:49 PM
பார்வை பற்றிய சாராவின் கவியும் தொடர்ந்த கருத்துக்களும் நன்று..
உறுமி மேளச்சத்தம் ஆட்டுவிக்குமாமே...

சாராகுமார்
12-09-2007, 03:49 PM
உங்கள் இதயத்தை உருவிட்டு
அவள் இதயத்தைக்
கொடுத்தாளா!!!

இல்லை ஆரென் அவர்களே.அதுவெல்லாம் போயி 10 ஆண்டுகள் ஆகிவிட்டன.

சாராகுமார்
12-09-2007, 04:00 PM
சில பார்வை இதயம் கிழிக்கும்;
சில பார்வை உயிரை குடிக்கும்;
ஒரே ஒரு பார்வையால்
என் இதயம்
உருவி
உருமி
மேளம்
அடித்துப் போனாள்

இப்ப அர்த்தம் மாறிப் போச்சே.. இப்ப என்ன செய்வீங்க.. இப்ப என்ன செய்வீங்க

என்ன செய்ய.போனது போச்சு.
நன்றி தாமரை அவர்களே.

சாராகுமார்
12-09-2007, 04:02 PM
பார்வை பற்றிய சாராவின் கவியும் தொடர்ந்த கருத்துக்களும் நன்று..
உறுமி மேளச்சத்தம் ஆட்டுவிக்குமாமே...

ஆட்டுவித்ததால்தான் ஆடுகிறோம்.
நன்றி அமரன் அவர்களே.

aren
12-09-2007, 04:03 PM
இல்லை ஆரென் அவர்களே.அதுவெல்லாம் போயி 10 ஆண்டுகள் ஆகிவிட்டன.

எடுத்துக்கொண்டு போனார்களா
அல்லது
கொடுத்துவிட்டு போனார்களா

சாராகுமார்
12-09-2007, 04:12 PM
எடுத்துக்கொண்டு போனார்களா
அல்லது
கொடுத்துவிட்டு போனார்களா

இரண்டும் இல்லை.பறிச்சுட்டு போயிட்டங்க.