PDA

View Full Version : சுனாமி எச்சரிக்கை...!!!அக்னி
12-09-2007, 01:46 PM
இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவு பகுதியில் இந்திய நேரப்படி இன்று மாலை 4.45 மணியளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் 7.8 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து இலங்கையின் கரையோர மக்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இலங்கை நேரப்படி இரவு 8.15 - 8.30 மணிக்குள் சுனாமி ஏற்படும் என வானிலை மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இத்தகைய நிலநடுக்கத்தினால் இந்து மா சமுத்திரப் பகுதிகள் பாதிக்கப்படக்கூடும்" என்று பசிபிக் ஆழிப்பேரலை எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

இலங்கை நேரப்படி இன்றிரவு 8 மணியளவில் ஆழிப்பேரலைகள் கரையை நெருங்கலாம் என்றும் கணிப்பிடப்பட்டுள்ளது.

நன்றி: தமிழ்வின்

எந்தவித அசம்பாவிதங்களும், பேரழிவுகளும் நேராதிருக்க பிரார்த்திப்போம்...

தட்ஸ்தமிழ் இணையத்தில் வெளியான செய்தி இணைப்பு...
http://thatstamil.oneindia.in/news/2007/09/12/powerful-quake-indonesia-tsunami-alert-india.html (http://thatstamil.oneindia.in/news/2007/09/12/powerful-quake-indonesia-tsunami-alert-india.html)

CNN இல் வெளியான செய்தி இணைப்பு...
http://www.cnn.com/2007/WORLD/asiapcf/09/12/indonesia.quake/index.html?eref=rss_topstories (http://www.cnn.com/2007/WORLD/asiapcf/09/12/indonesia.quake/index.html?eref=rss_topstories)

Narathar
12-09-2007, 01:50 PM
அசம்பாவிதங்கள் நிகழாதிருக்க எல்லோர்க்கும் பொதுவான வல்ல இறைவனை பிரார்த்திப்போம்.....

சுகந்தப்ரீதன்
12-09-2007, 01:53 PM
மறுபடியுமா...கடவுளே இந்தமுறையாவது என்மக்களை துன்பத்தில் ஆழ்த்தாமல் செல்லட்டும் உன் விபரீத விளையாட்டு..!

சாராகுமார்
12-09-2007, 01:59 PM
சுனாமி என்றாலே ஈரக்குலை வெடித்து விடும் உணர்வு.வேண்டாம் இயற்கையே வேண்டாம்.

Narathar
12-09-2007, 02:01 PM
சுனாமி என்றாலே ஈரக்குலை வெடித்து விடும் உணர்வு.வேண்டாம் இயற்கையே வேண்டாம்.

உன் கோரத்தைப்பார்த்தும்.........
திருந்தாதவர்களை திருத்த வருகின்றாயா?

வேண்டாம் இயற்கை அண்ணையே.........
உன் ஒரு கண்டிப்பு போதும்

அக்னி
12-09-2007, 02:06 PM
நண்பர்களே...
தெரிந்தவர்கள், அறிந்தவர்களுக்கு உங்களால் இயன்ற எச்சரிக்கைகளை கூறுங்கள்...
மீண்டும் ஒரு கோர அழிவை தடுப்போம்...

Narathar
12-09-2007, 02:10 PM
விடை பெறுகிறேன்..........
நாளை நல்ல பொழுதாக விடியட்டும் என்ற நம்பிக்கையுடனும் நாளை சந்திப்போம் என்ற நம்பிக்கையுடனும்....

நான் இப்போது இருப்பது தெஹிவளை கடலோரத்தில்.....


வருகிறேன்.....

மனோஜ்
12-09-2007, 02:13 PM
என் அன்பு இறைவா மனிதன் உணர்வுகள் மாறும் என்பதை அறிவாய் ஆயினும் உண் இந்த அழிவால் பாதிக்கபடும் பாலர்களும் உண்டே தயவு செய்வாய் இனி ஒரு அழிவு வேண்டாம் இறைவா கருனை செய் அன்பு மக்களின் அழிவை இனி உலகம் தாங்காதே ஆமின்

aren
12-09-2007, 02:24 PM
எல்லாம் நல்லபடியாகவே இருக்க இறைவன் அருள் புரியட்டும்.

அன்புரசிகன்
12-09-2007, 02:31 PM
இன்னும் அரை மணி நேரத்திலிருந்து ஒரு மணி நேரத்திற்குள் அசம்பாவிதம் நடக்காவிட்டால்.... இயற்கை அன்னை மக்களை காத்துவிட்டாள் அல்லது மன்னித்துவிட்டாள் என்று தான் கொள்ள வேண்டும்....
மனிதா........ திருந்திவிடு.....

ஷீ-நிசி
12-09-2007, 02:43 PM
இன்னும் ஒரு மணி நேரம்தானா.... யாரும் கடற்கரை போகாதீங்கப்பா...

aren
12-09-2007, 02:55 PM
ஒன்றும் பிரச்சனையில்லை என்று இந்தோனேஷய அரசாங்கம் அறிவித்து சுனாமி எச்சரிக்கையை வாபஸ் வாங்கிவிட்டது. ஆகையால் ஒன்றும் கவலைவேண்டாம்.

lolluvathiyar
12-09-2007, 02:59 PM
நல்ல வேலை எச்சரிக்கை வந்து விட்டதே.
நடக்குமோ நடக்காதோ, எந்த உயிர் சேதமும் இருக்காது என்று நம்புவோம்

அறிஞர்
12-09-2007, 03:11 PM
இது வரை எந்த தகவலும் இல்லாததால்... மகிழ்ச்சியே..

தமிழ்நெஞ்சம்
12-09-2007, 03:47 PM
இறைவன் எல்லா மக்களையும் காப்பாற்றுவானாக!!

அக்னி
12-09-2007, 04:15 PM
சுனாமி எச்சரிக்கை மீளப்பெறப்பட்டது. எதிர்வுகூறியது போல, சுனாமி அலைகள் உருவாகவில்லை என்பதால் சுனாமி எச்சரிக்கை மீளப்பெறப்பட்டுள்ளதாக இணைய தகவல்கள் தெரிவிக்கின்றன...

http://www.tamilwin.net/article.php?artiId=4403&token=dispNews (http://www.tamilwin.net/article.php?artiId=4403&token=dispNews)

http://thatstamil.oneindia.in/news/2007/09/12/powerful-quake-indonesia-tsunami-alert-india.html (http://thatstamil.oneindia.in/news/2007/09/12/powerful-quake-indonesia-tsunami-alert-india.html)

Narathar
13-09-2007, 07:34 AM
ந்ம்மீது சீற்றத்தைக்காட்டாது........ மௌனம் காத்த இயற்கை அன்னைக்கு எமது நன்றிகள்.....

அன்புரசிகன்
13-09-2007, 07:37 AM
இன்று மீண்டும் நில அதிர்வு 7.2 அளவில் உணரப்பட்டதாக BBCNEWS இணையம் கூறுகிறதே...

ஓவியன்
13-09-2007, 07:45 AM
ஆம் நானும் அப்படித்தான் அறிந்தேன் - அசம்பாவிதங்கள் நடக்காதிருக்கட்டும்.

ஷீ-நிசி
13-09-2007, 07:51 AM
இன்று மீண்டும் நில அதிர்வு 7.2 அளவில் உணரப்பட்டதாக BBCNEWS இணையம் கூறுகிறதே...

மீண்டுமா... சுனாமி வருது வருதுனு கிளப்புற பீதி தான் ஓவரா இருக்கு...:cool:

அன்புரசிகன்
13-09-2007, 08:02 AM
சுனாமி எச்சரிக்கை விடுவதன் மூலம் ஆயிரக்கணக்கான உயிர்கள் பறிபோவதை தவிர்க்க முடியும்.
சென்றமுறை இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணத்தில் சில கிராமங்களே அழிந்திருக்கிறது.... தொலைக்காட்ச்சிப்பெட்டியில் பார்த்தபோது மண்டையே விறைத்தது போல் ஒரு பிரமை....

சுனாமி வருகிறதா என படகு எடுத்து சென்று பார்த்துவர முடியாது.... அந்த அலை கரையோரத்தை அண்மிக்கும் போதுதான் மிகப்பெரிதாக ஆர்ப்பரிக்குமாம்.... வரும் போது மிக அமைதியாகவே வரும். ஆனால் அதன் வேகம் மிகப்பெரிது..... இது நான் இணையத்திலிருந்து கற்றவை....