PDA

View Full Version : கனவு'கள்'

அமரன்
12-09-2007, 11:22 AM
ஈரவெள்ளம் பிடுங்கிச்செல்லும்
தனது மாளிகைகளுக்கு
காவலாகச் செல்லாதா...
வறுமை....!
******************************************
ஓய்ந்த மழையின் பின்னான
வெள்ளாமை விவசாயிக்கு
விளைச்சலை மறுக்குமா
குப்பத்து நிலங்கள்...!
********************************
சிப்'புகளில் பாடவிதானம்
பயிர்ச்சிகளதில் தூவானம்
மேற்கில் உதயம்.
கிட்டுமா...
பார்க்கும் கீழ் பள்ளி சிறார்க்கு...!

aren
12-09-2007, 11:35 AM
கடைசி கவிதை கொஞ்சம் புரியவில்லை எனக்கு. கொஞ்சம் விளக்கமாக சொல்லமுடியுமா?

முதல் கவிதை அருமை. அழகாக வந்திருக்கிறது.

பாராட்டுக்கள் அமரன். உங்களிடமிருந்து பல விஷயங்களை நான் இங்கே கற்றுக்கொள்கிறேன் (பீஃஸ் கேட்காதீர்கள்)

சிவா.ஜி
12-09-2007, 11:41 AM
பாராட்டுக்கள் அமரன்.வார்த்தை செறிவு வளர்ந்துகொண்டே இருக்கிறது.பிரமிப்பாய் கொஞ்சம் பொறாமையாகவும் இருக்கிறது.வெறும் வார்த்தைகள் மட்டுமல்ல சிந்தனையின் வீச்சும் மிக ஆழமாக உள்ளது.விமர்சிக்க ஒன்றுமில்லை.வாழ்த்துக்கள் அமரன்.

அமரன்
12-09-2007, 11:46 AM
கடைசி கவிதை கொஞ்சம் புரியவில்லை எனக்கு. கொஞ்சம் விளக்கமாக சொல்லமுடியுமா?
முதல் கவிதை அருமை. அழகாக வந்திருக்கிறது.
பாராட்டுக்கள் அமரன். உங்களிடமிருந்து பல விஷயங்களை நான் இங்கே கற்றுக்கொள்கிறேன் (பீஃஸ் கேட்காதீர்கள்)

மேற்கத்தைய நாடுகள் சிலவற்றில் பள்ளிப் பாடங்களை யூ.எஸ்.பி, கம்பியூட்டர் சிப்களில் ஏற்றி கற்றலை இலகுவாக்க ஆலோசிக்கிறார்கள் என்பதை தொலைக்காட்சி செய்தியில் பார்த்தேன். கீழைத்தேச மாணவனாக நான் மாறினேன்.எனது கனவு கவிதையானது.
நீங்கள் தரவேண்டிய ஃபீஸ் கனவு மெய்ப்படுமா? என்பதுக்குப் பதில்.

அமரன்
12-09-2007, 11:58 AM
நன்றி சிவா
ஆரோக்கியமான போட்டியை போல ஆரோக்கியமான பொறாமையும் நல்லதுதான்.
செறிவு எல்லாமே என் தேடலில் கிடைத்தவை.
தேடல்கள்பல மன்றத்தால் கிடைத்தவை.

ஷீ-நிசி
12-09-2007, 03:00 PM
அமரா... உம் கவிதை சற்றே விளங்க மறுக்கிறதே... விளக்கம் தரமுடியுமா??

அமரன்
12-09-2007, 03:08 PM
முதலாவது கவிதை வெள்ளத்தில் அடித்துசெல்லப்பட்டது ஏழைகளின் குடிசைகள்" செய்தியின் குழந்தை.

இரண்டாவது அவர்களுக்கு மந்திரி நிவாரணம் வழங்கினார் என்ற செய்தியின் குழந்தை.

மூன்றாவது மேற்கத்தைய நாடுகள் சிலவற்றில் பள்ளிப் பாடங்களை யூ.எஸ்.பி, கம்பியூட்டர் சிப்களில் ஏற்றி கற்றலை இலகுவாக்க ஆலோசிக்கிறார்கள் என்ற செய்தியின் குழந்தை.

தாமரை
12-09-2007, 03:11 PM
மேற்கத்தைய நாடுகள் சிலவற்றில் பள்ளிப் பாடங்களை யூ.எஸ்.பி, கம்பியூட்டர் சிப்களில் ஏற்றி கற்றலை இலகுவாக்க ஆலோசிக்கிறார்கள் என்பதை தொலைக்காட்சி செய்தியில் பார்த்தேன். கீழைத்தேச மாணவனாக நான் மாறினேன்.எனது கனவு கவிதையானது.
நீங்கள் தரவேண்டிய ஃபீஸ் கனவு மெய்ப்படுமா? என்பதுக்குப் பதில்.

அதை பென்ஸூ இங்கே ஆய்ந்து கொண்டிருக்கிறார் என்று தெரியுமா உமக்கு.

ஆனால் ஒன்று நாமாய் கற்றலில் இருக்குமின்பம் அறிவு உம்மில் செலுத்தப்படும் பொழுது இல்லாதிருப்பதை அறிவீராக. உம்மையறியாமல் புகுத்தப் படும் நினைவுத்திவலைகள் உம்மை பைத்தியமாக்கும் என்பதையும் அறிவீராக.

நினைவிற்கும் சிந்தனைக்கும் உள்ள தொடர்பு, அறிவியல் இன்னும் அறியாத ஒன்று

உமக்கு புரிகிறதென்று நினைக்கிறேன்

அமரன்
12-09-2007, 03:13 PM
புரிந்தது அண்ணா...

அறிஞர்
12-09-2007, 03:14 PM
முத்தான.. மூன்று கவிதைகள்..

முதல் கவிதை.. மனதை கொஞ்சம் நெருடுகிறது...

சுகந்தப்ரீதன்
13-09-2007, 03:17 AM
புரிந்தது அண்ணா...

எனக்கு புரியவில்லை எப்படி எல்லா தலங்களையும் தொடமுடிகிறது உங்களால்....இன்னும் நிறைய படிக்கனும் போலிருக்கு....தொடர்ந்து கொடுங்கள் அமரரே...!வாழ்த்துக்கள்!

அமரன்
13-09-2007, 12:09 PM
முத்தான.. மூன்று கவிதைகள்..
முதல் கவிதை.. மனதை கொஞ்சம் நெருடுகிறது...

நன்றி அறிஞரே..

எனக்கு புரியவில்லை எப்படி எல்லா தலங்களையும் தொடமுடிகிறது உங்களால்....இன்னும் நிறைய படிக்கனும் போலிருக்கு....தொடர்ந்து கொடுங்கள் அமரரே...!வாழ்த்துக்கள்!

தொட்டியில் உள்ள உறுமீனுக்காக தூண்டிலுடன்
பக்கவாட்டுப் பார்வைபார்த்து காத்திருக்கும்போது
தொட்டியை ஊடறுத்து பார்வை படரும்
நினைவு நிழல்கள் சில் கவனத்தை திசைதிருப்புமே...
அதுதான் தாமரை அண்ணாப் பதிவு சுகந்தா..

ஓவியன்
13-09-2007, 11:43 PM
பிடுங்கிச் செல்லும்
ஈரவெள்ளம் விட்டுப்
போவது தான் வறுமை...
-----------------------
மழை ஓய்ந்து
விளைச்சலை கொடுக்க
நதியுண்டு....

அந்த நதியையே
பூட்டி ஓய வைத்தால்.....

-----------------------

"சிப்" களின் போது
தீர்மானிக்கும் அரசியல்
செப்ப கூட விடுவதில்லை
"சிப்"களில் பாட விதான
தொழிற் நுட்பத்தைக் கூட....

-----------------------

அழகழகான குறுங்கவிதைகளுக்குப் பாராட்டுக்கள் அமர்!. :)