PDA

View Full Version : தங்கை உறவு



சிவா.ஜி
12-09-2007, 10:57 AM
பாசம் பலவகை
வேஷமில்லா பாசம் உயர்வகை-அதில்...
தங்கைப் பாசம் தனிவகை!

சகோதரப் பாசமெனும்
சாகரத்தில் மூழ்கவைத்து
சந்தோஷத்தில் முகிழ வைக்கும்
உற்சாக உறவு தங்கை!

அண்ணன் அழுதால்
அவளும் அழுது...
அண்ணன் சிரித்தால்...
அவளும் சிரித்து...
வண்ணம் கூட்டும்
சின்னப் பறவை!

இல்லமெனும் கூட்டில்
இன்பமிறைக்கும்
இனிய வானம்பாடி!
அண்ணனின் பெருமையை
அனைவருக்கும் பரப்பும்
ஆகாசவானி!

குடும்ப வானத்தின்
குளிரூட்டும் நிலவு,
கடுஞ்சொற்கள் தாங்காது
துவண்டு விடும் இலவு!
சில நேரங்களில் மட்டும்
சுகமான செலவு!

aren
12-09-2007, 10:59 AM
அருமை சிவா. தங்கையின் அருமையை அழகாக புரியவைத்துள்ளீர்கள். பாராட்டுக்கள்.

அன்புரசிகன்
12-09-2007, 11:01 AM
இரு புனிதமான உறவுகளைப்பற்றி வார்த்திருக்கிறீர்கள்.... நன்றாகவே உள்ளது...



இல்லமெனும் கூட்டில்
இன்பமிறைக்கும்
இனிய வானம்பாடி!
அண்ணனின் பெருமையை
அனைவருக்கும் பரப்பும்
ஆகாசவானி!

சொந்தத்தங்கை எனக்கில்லை. இருந்தாலும் அநுமானிக்கிறேன்... எவ்வாறு இருக்கும் என்று...

சிவா.ஜி
12-09-2007, 11:02 AM
உங்கள் பின்னூட்டம் மிகுந்த மகிழ்ச்சியத் தருகிறது.மிக்க நன்றி ஆரென்.

சிவா.ஜி
12-09-2007, 11:03 AM
நன்றி அன்புரசிகன்.எனக்கும் தங்கையில்லை.அதற்காக ஏங்கியவன்.ஆனால் இந்த மன்றத்தில் எத்தனை தங்கைகள்... அவர்களை என் சொந்த தங்கைகளாக நினைத்து எழுதிய கவிதை இது.

பூமகள்
12-09-2007, 12:34 PM
அப்பப்பா..
அருமையான கவி தங்கைக்காக.. உங்களின் தங்கையாவதில் மட்டற்ற மகிழ்ச்சி அண்ணா.


குளிரூட்டும் நிலவு
சுகமான செலவு

அருமை வரிகள்....... அற்புதம் அண்ணா.
வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்..

அன்புத் தங்கைக்காய் கவி பாடிய அண்ணாவிற்கு என் இ-பணம் 200 அன்பளிப்பு.

சிவா.ஜி
12-09-2007, 12:40 PM
ஆஹா தங்கைக்கு அண்ணன் சீதனம் தருவது போய் இங்கே அண்ணனுக்கு தங்கையின் பரிசா...பலே...மிக்க நன்றி தங்கையே

அமரன்
12-09-2007, 02:49 PM
எனக்குப் பிடித்த வா(பா)சம்
அது உனக்கும் பிடிக்குதே....
என பாடத்தோன்றுகிறது சிவா.

என் விடுமுறை நாட்களில்
நடுநிசி தாண்டியும் தூங்க மறப்பேன்.
அப்பப்போ கிடைக்கும் திட்டுக்கள்
தூக்கி வந்த தூக்கம் கலையும்
குண்டூசி விழும் சத்தத்தில்....
ஆனாலும்
காலையில் தாலாட்டும்
கலகல, கலமுல சங்கீதத்துகாக
மாலைவரை காத்திருக்க வேண்டும்....
சுகமோ சுகமது....

தினமும் காலையில்
கலங்கிய நீர்நிலையாய் கண்ணிருக்க
அதில் விழும் நிலவுமுகம் அழகு..
தெளிந்த பின் தேடும் கணங்களும்
மீள்வருகைக்காக காத்திருக்கும் கணங்களும்
சாக்லெட் காலமாகும்....
தெளிந்த பேரழகு நிலவு நிழல்
பேரானந்தம் தரும்...

சொல்லடுக்கு வரியடுக்கு மிடுக்காக இருக்க
கருத்தாடுகளமாக விரியும் கவிதைகள் தரும்
சுவையை இதில்கண்டு சொக்கி நிற்கின்றேன்
பாராட்ட பாராமுகம் காட்டும் வார்த்தைகளுடன்

ஷீ-நிசி
12-09-2007, 02:53 PM
தங்கைக்கோர் கவிதை நல்லாருக்கு சிவா...
தொடருங்கள்!

சிவா.ஜி
12-09-2007, 02:57 PM
அடேயப்பா என்ன ஒரு அழகிய பின்னூட்டம்...? அமரன் என்னை சந்தோஷத்தில் தள்ளிவிட்டீர்கள்.எங்கிருந்து இத்தனை அழகான வார்த்தைகளைப் பிடிக்கிறீர்கள். உங்களிடம் நானும் படிக்க வேண்டும்.
மனமார்ந்த நன்றி அமரன்.

அமரன்
12-09-2007, 03:03 PM
சிவா....
தணல் எத்துணை செம்மையானாலும்
சாம்பிராணி துகள்களின் தூவலில்தான்
கந்தகம் இறந்து சுகந்தம் பிறக்கும்....
தணலும் நாமே துகளும் நாமே

அறிஞர்
12-09-2007, 03:08 PM
வீட்டு குத்துவிளக்காய், செல்லமாய்
அனைவரையும் கவரும்....
தங்கைகள்..
ஒவ்வொரு வீட்டிலும்
ஒளி வீசட்டும்....

கலைவேந்தன்
12-09-2007, 03:20 PM
தங்கைக்கோர் கீதம் அருமை சிவா!

சிவா.ஜி
13-09-2007, 04:19 AM
தங்கைக்கோர் கவிதை நல்லாருக்கு சிவா...
தொடருங்கள்!

பாராட்டுக்கு மிக்க நன்றி ஷீ-நிசி.

சிவா.ஜி
13-09-2007, 04:20 AM
வீட்டு குத்துவிளக்காய், செல்லமாய்
அனைவரையும் கவரும்....
தங்கைகள்..
ஒவ்வொரு வீட்டிலும்
ஒளி வீசட்டும்....

குத்துவிளக்காய் ஒளி வீசும் தங்கைகள் வீட்டிலிருந்தாலே குதூகலம்தான்.மிக்க நன்றி அறிஞர் அவர்களே.

சிவா.ஜி
13-09-2007, 04:21 AM
தங்கைக்கோர் கீதம் அருமை சிவா!

ம்மிக்க நன்றி கலைவேந்தன்.உங்கள் பாராட்டு மிகுந்த மகிழ்வைத் தருகிறது.

சாராகுமார்
14-09-2007, 07:16 AM
தங்கை உறவு ஒரு தங்கமான உறவு
தங்கமன கவித்துள்ளீர்கள் இனிமையாய்.

அற்புதயாய் உள்ளது உங்கள் தங்கை கவிதை.வெகு அருமை.
வாழ்த்துக்கள் சிவா.ஜி.

lolluvathiyar
14-09-2007, 11:37 AM
ஆம் சிவா ஜி அன்னன் பாசம் நன்றாகவே இருக்கும் தங்கைகளிடம், ஆனா

அண்ணனின் பெருமையை
அனைவருக்கும் பரப்பும்
ஆகாசவானி!


இங்க தான் சில தங்கைகள் வம்பு பன்னிராங்க, புகு ந்த ஊட்டுல ஓவரா அன்னன் பெருமைய பரப்ப பாத்து மாபிளைக்கு மச்சுனனுக்கும் இடையில் சன்டை வர வச்சுருவாங்க*

இலக்கியன்
14-09-2007, 01:23 PM
தங்கையின் பாசம் எனக்கு கிட்டவில்லை ஆனால் உங்கள் கவிதை மூலம் அதை அனுமானிக்கு முடிகின்றது வாழ்த்துக்கள்

சூரியன்
14-09-2007, 01:26 PM
அற்புதமான வரிகள் சிவா.

தாமரை
14-09-2007, 01:55 PM
தன் கை பிடித்து
நடந்து பழகியதால்
தங்கை..

தங்கை
மங்கையாகி
மணாளன் கை பற்றும் வரை
அண்ணன் ஒரு தாய்..
அவ்வப்பொழுது
குழந்தை

தங்கை கண்கள் பணிக்க
தலைகுனிந்து விடைபெற்றும் பொழுது
ஆறுதல் சொல்லிய கண்களில்
தங்கை கண்விட்டு மறைந்ததும்
ஆறு..

பெண்களின் மனம்
ஆழமாம்
அண்ணனின் மனதை
அளந்து பார்க்காதவர்கள்
சொல்லிக் கொள்ள்கிறார்கள்.

சிவா.ஜி
15-09-2007, 04:18 AM
ஆம் சிவா ஜி அன்னன் பாசம் நன்றாகவே இருக்கும் தங்கைகளிடம், ஆனா

இங்க தான் சில தங்கைகள் வம்பு பன்னிராங்க, புகு ந்த ஊட்டுல ஓவரா அன்னன் பெருமைய பரப்ப பாத்து மாபிளைக்கு மச்சுனனுக்கும் இடையில் சன்டை வர வச்சுருவாங்க*
ரொம்ப கரெக்ட்டா சொல்றதுல வாத்தியார் வாத்தியார்தான். மிக மிகச் சரி.சில சமயங்களில் அண்ணன் புராணம் அதிகமாகி பெரிய பிரச்சனையே வந்துடுது.நன்றி தலைவரே.

சிவா.ஜி
15-09-2007, 04:21 AM
மிக்க நன்றி சாராகுமார்.மிகவும் அண்மையான உறவு தங்கை உறவு.

இலக்கியன் எனக்கும் தங்கைகள் என்பது மன்றத்தில்தான்.அந்த மிக மேன்மையான உறவு இங்கு நமக்கு கிட்டியது ஒரு பேரானந்தம்.நன்றி இலக்கியன்.

பாரட்டுக்கு மிக்க நன்றி சூரியன்.

சிவா.ஜி
15-09-2007, 04:30 AM
அருமையான ஒரு கவிதை.வழக்கமான உங்கள் சொல் விளையாடலுடன்.
பெண்களின் மனம்
ஆழமாம்
அண்ணனின் மனதை
அளந்து பார்க்காதவர்கள்
சொல்லிக் கொள்ள்கிறார்கள்.

எவ்வளவு சத்தியமான வார்த்தைகள்.அண்ணனின் மனதை யாரறிவார்.அத்தனைக் காலம் ஒட்டியே இருந்த உறவு வெட்டிப் பிரிப்பதால் ஏற்படும் வலியை யாருணர்வார். வெகு அழகான சித்தரிப்புக்கு மிக்க நன்றி தாமரை அவர்களே.

ஓவியன்
15-09-2007, 05:43 AM
அன்பான சிவா!!

நான் வாழ் நாளிலே எனக்கு கிடைக்கவில்லையே என்று ஏங்கிய ஒரு உறவு.....
தங்கை.....!

கூடப் படித்தவர்கள் விடுமுறையின் போது வீடு செல்கையில், தங்கள் தங்கைகளுக்காக பார்த்துப் பார்த்துப் பொருட்கள் வாங்கி செல்கையில் மனம் ஏங்கும்.......
தங்கையாக நினைத்து அவர் அன்பிலே மனம் மயங்கி இருந்த தங்கைகள் சிலர், தாம் வேறு நான் வேறு என்று பிரித்து மனதிலே சொற்களாலே கோடு போட்ட சோகம் கூட நெஞ்சிலே உண்டு........

ஆனால் கூடவே பிறந்த ஒரு அண்ணனின் அளவற்ற பாசத்தில் அவை எல்லாவற்றையும் கொஞ்சம் மறந்து தான் இருந்தேன்.......

வந்தேன் தமிழ் மன்றம், அது தந்தது பல தங்க(கை) உறவுகள்........
அக மகிழ்ந்து பெருமித்து நிற்கின்றேன் இன்று எனக்கும் பல தங்கைகள் உண்டென........!

அதனைத் தந்த தமிழ் மன்றத்திற்கு நன்றிகள் கோடி.......:)


சில நேரங்களில் மட்டும்
சுகமான செலவு!

சில நேரங்களில் மட்டும் சுகமான செலவு என்ற வரிகள் எனக்கு பிடிக்கவில்லை சிவா........
அதாவது அதில் வந்துள்ள "மட்டும்" என்ற சொல் மற்றைய நேரங்களில் விரும்பமில்லா செலவு என்ற அர்த்தம் தருகிறதே.........?

அன்புத் தங்கைக்காக எப்போது செலவளித்தாலும் அது சுகமான செலவுதானே எந்த ஒரு அண்ணனுக்கும்......???

பாராட்டுக்கள் சிவா அழகான ஒரு கவிதைக்கு........! :)

ஓவியன்
15-09-2007, 05:50 AM
வீட்டு குத்துவிளக்காய், செல்லமாய்
அனைவரையும் கவரும்....
தங்கைகள்..
ஒவ்வொரு வீட்டிலும்
ஒளி வீசட்டும்....

ஆகா!

நம் மன்றத்திலே ஒரு கவிஞர் ஓளித்திருந்து, இடைக்கிடை அகப் படுகிறாரே......... :)

அன்பு அறிஞரே தொடர்ந்து பொழியட்டும் உங்கள் கவி மழை........! :)

சிவா.ஜி
15-09-2007, 06:55 AM
[COLOR="DarkRed"][FONT="Latha"]சில நேரங்களில் மட்டும் சுகமான செலவு என்ற வரிகள் எனக்கு பிடிக்கவில்லை சிவா........
அதாவது அதில் வந்துள்ள "மட்டும்" என்ற சொல் மற்றைய நேரங்களில் விரும்பமில்லா செலவு என்ற அர்த்தம் தருகிறதே.........?

அன்புத் தங்கைக்காக எப்போது செலவளித்தாலும் அது சுகமான செலவுதானே எந்த ஒரு அண்ணனுக்கும்......???

பாராட்டுக்கள் சிவா அழகான ஒரு கவிதைக்கு........! :)

சில நேரங்களில் மட்டும் என்று சொல்லக் காரணம்,மற்ற எல்ல நேரங்களிலும் செய்யும் செலவுகளை நான் செலவாகவே கருதாததுதான்.சில சமயம் அந்த தங்கை தன் குழந்தைதனத்தால் அடம் பிடித்து தேவையில்லாத ஒன்றை வாங்கித் தருமாறு சண்டை பிடிப்பாள் அப்போது அது செலவென்றாலும் தங்கையவளின் விருப்பம்தானே என்று சுகமாக செய்வதால் அப்படி குறிப்பிட்டேன். நல்லதொரு பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி ஓவியன்.

ஓவியன்
15-09-2007, 07:02 AM
சில சமயம் அந்த தங்கை தன் குழந்தைதனத்தால் அடம் பிடித்து தேவையில்லாத ஒன்றை வாங்கித் தருமாறு சண்டை பிடிப்பாள் அப்போது அது செலவென்றாலும் தங்கையவளின் விருப்பம்தானே என்று சுகமாக செய்வதால் அப்படி குறிப்பிட்டேன்

அட இப்படியும் ஒரு கோணம் இருக்கா, சரிதான் சிவா........!
புரிய வைத்தமைக்கு நன்றிகள்...... :)

சிவா.ஜி
15-09-2007, 07:08 AM
புரிதலுக்கு நான்தான் நன்றி சொல்லவேண்டும் ஓவியன்.கவிதையைப் படித்துவிட்டு அருமை,நன்றாக இருக்கிறது என்ற ஒருவரி விமர்சனத்தை விட இப்படிப்பட்ட பின்னூட்டங்கள்தான் கவிஞர்கள் தங்களை புடம் போட்டுக்கொள்ள உதவியாக இருக்கிறது.நன்றி ஓவியன்.

பிச்சி
15-09-2007, 11:53 AM
சில நேரங்களில் சுகமான செலவுகள். அதை சுகமாக எடுத்துக்கொன்டால் பரவாஇல்லை. சுமையாக எடுத்துக்கொண்டால் என்ன செய்ய அண்ணா. நான் தப்பித்தேன். எனக்கு வாய்த்த அண்ணன் என்னை சுமையாக நினைக்கவில்லை.

கவிதை அற்புதம்

பிச்சி

அக்னி
15-09-2007, 12:26 PM
அழுதால் துடைக்கும்...
சிரித்தால் தட்டும்...
செல்லமாய்க் குட்டும்,
பாசக்கை...
தங்கையாய்...

பாராட்டுக்கள் சிவா.ஜி....
பின்னூட்டங்கள் இனிமை...

சிவா.ஜி
15-09-2007, 12:41 PM
சில நேரங்களில் சுகமான செலவுகள். அதை சுகமாக எடுத்துக் கொன்டால் பரவாஇல்லை. சுமையாக* எடுத்துக்கொண்டால் என்ன* செய்ய* அண்ணா. நான் த*ப்பித்தேன். என*க்கு வாய்த்த* அண்ண*ன் என்னை சுமையாக* நினைக்க*வில்லை.

க*விதை அற்புத*ம்

பிச்சி

நல்லது சகோதரி,அண்ணன் உறவு அன்பானதாய் இருந்தால் தங்கையின் கண்கள் கண்னீரை மறக்கும்.அந்த வகையில் நீங்கள் அதிர்ஷ்டசாலி.என்றும் நலமுடன் இருக்க வாழ்த்துக்கள்.பாராட்டுக்கு நன்றி பிச்சி.

சிவா.ஜி
15-09-2007, 12:43 PM
அழுதால் துடைக்கும்...
சிரித்தால் தட்டும்...
செல்லமாய்க் குட்டும்,
பாசக்கை...
தங்கையாய்...

பாராட்டுக்கள் சிவா.ஜி....
பின்னூட்டங்கள் இனிமை...
சுருக்கமாய் சொன்ன கவிதையில் மகத்தான தங்கையுறவை விவரித்தது அருமை அக்னி.பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி.

சக்திவேல்
16-09-2007, 02:34 AM
அழகான கவிதை. பாசத்தின் இலக்கனமாம் தங்கை மற்றும் அண்ணன் பற்றிய அற்புதமான அலசல் கவிதை. மிக நன்ராக இருக்கின்றது சிவா.ஜி அவர்களே, நன்றி மற்றும் வாழ்த்துக்கள்.

இல்லமெனும் கூட்டில்
இன்பமிறைக்கும்
இனிய வானம்பாடி!
அண்ணனின் பெருமையை
அனைவருக்கும் பரப்பும்
ஆகாசவானி!

முக்கியமாக இந்த வரிகள் என்னை மிகவும் கவர்ந்தது.

இந்த அண்ணன் தங்கை பாசமானது இருக்கும்வரை இயல்பானதாக இருந்துவிட்டு, திருமனம் ஆகி புருஷன்வீட்டுக்குப்போனவுடன் தான் விசுவரூபம் எடுக்கிறது.

அண்ணன் தன் தங்கைக்கு மனம் செய்விக்கப்போகும்போதான உள்ளக்கிடக்கையை கவியரசர் தனக்கே உரித்தான பானியில் "மலர்களைப்போல் தங்கை உறங்குகிறாள்" என்று எழுதியிருக்கிறார். நடிகர் திலகம் செவாலியே சிவாஜிகனேசனும் அதுக்கு உயிர் கொடுத்து இருப்பார்.

http://www.youtube.com/watch?v=SHdQ2e9W-FY

திருமனம் முடிந்து அண்ணனை விட்டு பிரிந்துபோகும்போது இருபக்கங்களிலும் துக்கம் தொன்டையைப்பிடிக்க கலக்கத்துடன் மறுகும் உள்ளக்கிடக்கையை அழகாக கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் தனது வைர வரிகளால் அலசியிருப்பார் பாருங்கள் அற்புதமாக இருக்கும்
பாரதிராஜா அவர்கள் இயக்கத்தில் உருவான கிழக்குச்சீமையிலே படத்தில் வரும் பாடல் காட்சி இது.

தங்கை மனமுடித்து புருஷன் வீட்டுக்கு செல்லும் வன்டிமாடு எட்டு வச்சு முன்னே போக போக அந்த மனம் அண்ணனை நினைத்து பின்னே செல்லும்.

http://www.youtube.com/watch?v=rsJkN_xsj_Q

இப்படி ஒரு பாச மலரை இழந்துவிட்டோமே என்று அண்ணனும், கஷ்டத்தையே தன்னிடம் அன்டவிடாத அண்ணன் என்ன கஷ்ட்டப்படுதோ, ராணி மாதிரி இருந்தோமே அந்தவீட்டில் மீன்டும் சிறிது நாட்க்கள் இருந்து வரமுடியாதா என்ற ஏக்கத்தில் இருக்கும் தங்கைக்கும், ஒரு சந்தோஷமான செய்தி வருகிறது. ஆமாம், தங்கை ஒரு பெண் மகவை ஈன்றெடுக்கின்றாள். சந்தோஷத்தில் உற்சாகம் விண்ணைத்தான்டுகிறது. ஆகா தங்கையின் மகளை மருமகளாக வீட்டுக்கு வரப்போகிறாள், பாசத்தை கொட்டு கொட்டுன்னு கொட்டலாம், தங்கை இருந்தபோது செய்யாததெல்லாம் மருமகளுக்கு செய்யலாம், மாமனின் உண்மையான ரூபத்தை உலகுக்குக்காட்டலம் என்று அண்ணனும். தான் வாழ்ந்தவீட்டில் தன் மகள் வாழப்போகிறாளே, என் அண்ணன், தன் கண்ணைப்போல மகளை பார்த்துக்குவாரே என்றநிம்மதியில் தங்கையும் இருப்பர். அந்த உற்சாக ததும்பல்களின் வெளிப்பட்டினை பாருங்கள். கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் சும்மா பூந்து விளையாடியிருக்கின்றார்.

http://www.youtube.com/watch?v=5qc75_-igS4

உற்சாகமான கற்பனைகள் சந்தோசமான மனக்கோட்டைகளைக்கட்ட அது பொறுக்காத சுற்றம் சதிவேலைகளைக்காட்ட பாச வெள்ளத்துக்கு அனைபோடப்படுகிறது. இதில் விக்கித்துப்போய் திகைக்க, பசக்கோட்டையானது மென்மேலும் வலுப்பெறுகிறது. சொந்தம் கைகூடுமோ இல்லையோ என்ற பதைபதைப்பில் திகைத்துப்போய் மனம் படுகிறது பாருங்கள் பாட்டை, இந்த சோகத்திலும் பாசத்தின் அளவிடமுடியாத வெள்ளப்பெருக்கை வெளிப்படுத்த கவியரசரை விட்டால் வேறு யார் இருக்கின்றார்கள் இங்கே நமக்கு.

http://www.youtube.com/watch?v=ZvihoDTYj4s

கிழக்குச்சீமையிலே படத்தில் ஒரு காட்சியில் அன்னன் விஜயகுமார் அவர்களின் தாய்மாமன் உறவை வெட்டிவிடச்சொல்லி பஞ்சாயத்து வைப்பார், அவரது தங்கையின் கனவர் நெப்போலியன் அவர்ககள். அண்ணன் தங்கை உறவை காவுகேட்கின்றாரே மாப்பிளை என்ற வேதனையில், பஞ்சாயதில் தாய்மாமன் பெருமைகளைப்பற்றி பெரிய பிரசங்கமே நடத்துவார் பாருங்கள் மிக அருமையாக இருக்கும். அதில் சொல்லுவார், பென் குழந்தைகள் பிறக்கும் வரைக்கும் தான் தாய்க்கு சொந்தமானவள், எப்பொழுது தொப்புள்க்கொடியினை அறுக்கின்றார்களோ அந்தக்கணம் முதல் அவள் தாய்மாமனுக்குதான் சொந்தமானவள்.

அருமையானதொரு கவிதையை தந்த சிவா.ஜி அவர்களுக்கு மீன்டும் நன்றி.

மாதவர்
16-09-2007, 02:36 AM
தங்கை இல்லையே என ஏங்கவைத்து விட்டது இந்த கவிதைகள்

சக்திவேல்
16-09-2007, 02:47 AM
ஆமாம் மாதவரே தங்கை உறவில்தான் பிரதிபலன் எதிர்பார்க்காத பாசத்தின் முழுப்பரிமானத்தையும் உணரமுடியும் என்று நினைக்கின்றேன் நான்.

ஜெயாஸ்தா
16-09-2007, 02:52 AM
தன் தங்கைக்குபெண் குழந்தை பிறந்ததும் ஆடிப்பாடி குதூகலித்து வரும் அந்த தாய்மாமனின் பாட்டு அற்புதம். அதிலும் கடைசியில் வரும் 'மச்சானை ஈரத்துணி சுத்தி படுக்கச்சொல்லு...!' என்ற வரிகளில் கிராமத்து குறும்பு.

சிவா.ஜி
16-09-2007, 04:26 AM
அசத்திட்டீங்க சக்திவேல்.ஒரு உணர்ச்சிகரமான குடும்பச்சித்திரத்தைப் பார்த்ததுபோல மன மகிழ்ச்சி.அண்ணன் தங்கைக்கான அந்த உன்னத பாசப்பிணைப்பை வெகு அழகாக ஒலி-ஒளி சித்திரமாய் காட்டிவிட்டீர்கள்.மிக அருமையான உங்கள் பின்னூட்டம் இந்த கவிதைக்கு கிடைத்ததால் கவிதைக்கும் பெருமை,எனக்கும் பெருமை....மனம் நிறைந்த நன்றிகள் சக்திவேல்.

சிவா.ஜி
16-09-2007, 04:27 AM
தங்கை இல்லையே என ஏங்கவைத்து விட்டது இந்த கவிதைகள்

ஏக்கம் எதற்கு மாதவர்,நமக்குத்தான் இந்த மன்றத்தில் நிறைய தன்ங்கைகள் கிடைத்திருக்கிறார்களே...தங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றிகள் மாதவர்.

சக்திவேல்
16-09-2007, 07:18 AM
இல்லை சிவாஜி அவர்களே, உங்களது எதார்த்தமான சிந்தனை மழுங்கடிக்கப்பட்ட மனதுகளுக்கு ஒரு சவுக்கடி.

நாமெல்லாம், ஏற்பட்டு விட்ட ஒரு சூழலுக்காக அதை தொடர வேன்டி அந்த சூழலுக்காக நம்மையே மாற்றிக்கொன்டு நம்முடைய இயல்புகளை மாற்றி, மற்றவர்கள் நம்மை வித்தியாசமாக என்னக்கூடது என்ற சுயநலத்தில், உண்மையான மனதை "சூழ்நிலையோடு ஒத்துப்போதல்" என்ற முகமூடியில் மறைத்து எதை எதையோ இழந்துவிட்டோம் அதில் ஒன்றுதான் அண்ணன் தங்கை பாசம். சொந்த வாழ்க்கையில் இழந்ததைஎல்லாம் உங்களைப்போன்றோரின் வாயிலாக நினைவூட்டப்படும்போது நிரம்ப்பவும் ஏக்கமாகப்போய்விடுகிறது. இது கதையோ, கற்பனயோ இல்லை அதீதநடிப்போ, எப்படியிருந்தாலும் உலக நடப்புதானே , இயல்பு வாழிவில் இதைவிட கேவலமாக்வெல்லாம் நடக்கின்றதே. கிழக்குச்சீமையில் அண்ணன் தங்கை பாசம் என்னும் பலவீனத்தில் அண்ணனும் தங்கையும் எப்படியெல்லாம் பாதிக்கப்படுகின்றனர் என்று பாருங்கள்.

செங்காட்டு மண்ணும், நம் வீட்டுப்பொன்னும்
கைவிட்டு போகக்கன்டால் கண்ணீர் வருமே
தங்கச்சி கண்ணில் கண்ணீரைக்கான்டால் தன்மானம் கூட அண்ணன் விட்டுத்தருமே
பந்ததை மீறிப்போக சக்தி இல்லையே
பாசத்த பங்கு போட பட்டா இல்லையே

http://www.youtube.com/watch?v=SvQbxQ_8g0c

தாய்மாமன் உறவு என்பது சாதாரமானதா? ஒரு பஞ்சாயத்தில்வைத்து தீர்வு பெறும் அளவுக்கு கேவலமானதா? அப்படி என்ன பெருமை இருக்கிறது தாய்மாமன் உறவில்?. எது எப்படி இருந்தால் என்ன பாசம் என்னும் பலவீனத்தில் இருக்கிறாயே பாதகத்தி, உன்மேல் பாசம் என்னும் பயித்தியத்தில் இருக்கின்றானடி உனது அண்ணன் எனது தேவைகளை எளிதில் நான் பெற்றுவிடுவேன்.

உலகம் பொய்தானா உறவும் பொய்தானா,
ஓடைக்கு ஓடும் தண்ணீர் சொந்தமில்லையா?
சொந்தத்தை யாரும் சொல்லாமல் போனால்,
குந்திக்கும் கர்ணணுக்கும் பந்தமில்லையா?
சொந்தட்த தாரை வார்த்து தந்தேன் தங்கச்சி,
சொல்லாமல் போறாளண்ணே இந்த ஊமச்சி
உசுர மட்டும் வச்சிருக்கேன் தாரேன் தங்கச்சி.

http://www.youtube.com/watch?v=EgEil3D3t2s

சிவா.ஜி
16-09-2007, 07:49 AM
பிரமாதம் சக்திவேல்,சூழ்நிலையோடு ஒத்துபோகிறேன் என்று பொய் முகமூடியிட்டுத் திரியும் பொய் மனிதர்களை புறங்காட்டியிருக்கிறீர்கள்.காட்டப்படும் பாசத்துக்கும் கணக்கு வைத்திருக்கும்,லாப நஷ்டம் பார்க்கும் வியாபாரிகளாக சில அண்ணன்கள் இங்கே இருக்கிறார்கள்.நெஞ்சார்ந்த பாசத்திற்கு இணையேதுமில்லை என்ற உண்மை மறந்து உள்ளம் கல்லான வெறும்கூடுகளாய் திரிகிறார்கள்.அன்பும்,பாசமும் அளக்க முடியாதவையென்ற எண்ணம் தோன்றும் வரை அவர்கள் மனிதர்களாய் இருப்பதில்லை...அனால் அது தோன்றும் காலங்களில் மனிதர்கள் அவர்கள் அருகில் இருப்பதில்லை.
லௌகீகமாகிவிட்ட வாழ்க்கையில் love என்பதன் அர்த்தம் மாறிக்கிடக்கின்றது.இவை எதையும் மாற்ற முடியவில்லையெனினும் குறைந்த பட்சம் நாமாவது அதனை உணர்ந்து நடப்போம். உணர்ச்சிக்குவியலாய் கண்ட உங்கள் பின்னூட்டம் சிலிர்க்கவைக்கிறது..மிக்க நன்றி சக்திவேல்.

மன்மதன்
16-09-2007, 09:43 AM
நன்றி அன்புரசிகன்.எனக்கும் தங்கையில்லை.அதற்காக ஏங்கியவன்.ஆனால் இந்த மன்றத்தில் எத்தனை தங்கைகள்... அவர்களை என் சொந்த தங்கைகளாக நினைத்து எழுதிய கவிதை இது.

அருமையாக எழுதியிருக்கிறீர்கள். பாராட்டுகள் சிவா.ஜி

தளபதி
16-09-2007, 10:58 AM
மிக அழகான திரி. நன்றி சிவாஜி. இந்த பாச வெள்ளத்தில் மூழ்கும்போது மூச்சு முட்டுவதில்லை.

அடடா!! தங்கை பாசத்திற்காக இத்தனை உள்ளங்கள் உருகுவதைக் காணும் போது நமது ஒவ்வொருவர் குடும்பமும் எவ்வளவு சின்னதாக சுருக்கப்பட்டு விட்டது என்பது தெரிகிறது.

நமது தந்தையோ தாயோ?? தங்கை இல்லை என்று சொல்லப் பார்ப்பது மிகக் குறைவு. ஆனால் இப்போது நம்மில் இது மிக அதிகமாகிவிட்டது. இன்னும் இது அதிகமாகும் இன்னும் வரும் காலங்களில்.

இது மிக கொடுமையான உண்மை. தம்பி உள்ளவனுக்கு அண்ணன், அக்கா, தங்கை இருக்காது. அக்கா உள்ளவருக்கு அண்ணன், தம்பி, தங்கை இருக்காது. காலம் நம்மை கட்டுப் படுத்த, உறவுகளை பழகுபவர்களிடம் பகிர்ந்து திருப்தி அடைவோம்.

இளசு
16-09-2007, 12:11 PM
வாழ்க்கை ஆரம்பிக்க தாய்
வாழ்க்கை அழகாக தங்கை
வாழ்க்கை அர்த்தமாக மனைவி
வாழ்க்கை முழுமையாக மகள்..

சிவாவின் அழகான அர்த்தமுள்ள சொற்கள் -
ஆகாசவாணி, சுகமான செலவு - அருமை!

சக்திவேலின் உணர்வுபூர்வ ஒளிக்கோர்வை..

அமரன், ஓவியன், தளபதி - என அசத்தும் பின்னூட்டங்கள்..

மனிதமும் பாசமும் குடும்ப அமைப்பும்
என்றும் தழைக்கும் எனப் பறைசாற்றுகின்றன..

பாராட்டுகள் நண்பர்களே!

(தங்கை பாசத்துக்கு சற்றும் சளைத்ததல்ல தம்பிகள் பாசம்..)

சிவா.ஜி
16-09-2007, 12:53 PM
(தங்கை பாசத்துக்கு சற்றும் சளைத்ததல்ல தம்பிகள் பாசம்..)

மிக மிக உண்மை. இதை என்னால் உறுதியாக சொல்லமுடியும்.ஏனென்றால் கடைக்குட்டியான எனக்கு அண்ணனும் அக்காவுமே உள்ளனர்.எங்களுக்குள்ளான பாசப்பிணைப்பு அலாதியானது.இன்று அவரவர் குடும்பத்துடன் தனித்தனியே வாழ்ந்தாலும்,ஏதாவது சந்தோஷ தருணங்களில் இணையும் போது...ஆஹா எத்தனை மகிழ்ச்சி..எத்தனை நினைவு மீட்டல்கள்,,அத்தனையும் சுகம். நல்ல பின்னூட்டத்திற்கு நன்றி இளசு.

சிவா.ஜி
16-09-2007, 12:56 PM
அருமையாக எழுதியிருக்கிறீர்கள். பாராட்டுகள் சிவா.ஜி

பாராட்டுக்கு மனமார்ந்த நன்றி மன்மதன்.

இலக்கியன்
16-09-2007, 02:35 PM
சத்திவேல் இளசு அண்ணாவின் பின்னூட்டம் நன்றாக உள்ளது பாராட்டுக்கள்

masan
24-01-2008, 06:19 AM
நல்ல கவிதை பாராட்டுக்கள்

சிவா.ஜி
24-01-2008, 06:22 AM
ஆஹா...எங்கோ மறைந்திருந்த தங்கை உறவை வெளியெடுத்து பாராட்டியமைக்கு மிக்க நன்றி மாசன்.