PDA

View Full Version : சாதல் இனிக்கிறது!!!



aren
11-09-2007, 02:28 PM
என்றும்
காதல் இனிக்கும்
சாதல் கசக்கும்!!!

இன்று
சாதல் இனிக்கிறது
காதல் சுரக்கின்றதோ!!!

அமரன்
11-09-2007, 05:07 PM
எப்போதும் மாலையில்
அஸ்தமிக்கும் ஆதவனால்
எப்போதாவதுதான்
உதயமாகிறது கவிதை...!

காதலும் கவிதையே
பாராட்டுக்கள் ஆரென் அண்ணா.

அக்னி
11-09-2007, 05:16 PM
கசத்தாலும்...
எளிதில்
வற்றாத ஊற்று காதல்...
இனித்தாலும்...
எளிதில்
கிடைக்காத பேறு சாதல்...

பாராட்டுக்கள் ஆரென் அவர்களே...

பூமகள்
11-09-2007, 05:50 PM
"மெல்ல சாகடித்தும்
உயிர் போகா
அவதி காதல்.."

அழகுக் கவி.. பாராட்டுக்கள் ஆரென் அண்ணா.