PDA

View Full Version : அட்சயத்திருதிகை!!!



aren
11-09-2007, 02:25 PM
தொட்டால் சிணுங்கி என் மனைவி
இன்று திட்டியும் சிணுங்காமல்
நாளை அட்சயத்திருதிகை!!!!

அறிஞர்
11-09-2007, 02:27 PM
ஆரென் மூன்று வரியில் அழகாக எழுதுகிறீர்கள்....

மனைவி இதை காண்பாரா....

aren
11-09-2007, 02:29 PM
என் எதிரே நிற்கிறார்கள். நான் ஜூட்!!!

ஆதவா
11-09-2007, 02:30 PM
சிணுங்கி என்பதே சரியான பதம் என்று நினைக்கிறேன்.... யாராவது கருத்து சொல்லுங்கள்>...

சிவா.ஜி
11-09-2007, 02:31 PM
அட்வான்ஸ் புக்கிங் பண்னிட்டீங்களா ஆரென்..இப்பெல்லாம் இந்த நாளில் நகைக்கடைகளில் திருவிழாக்கூட்டம்தான்.யார் சொன்னது மக்கள்கிட்ட பணமில்லன்னு...அனுபவசாலி ஆரெனுக்கு வாழ்த்துக்கள்+ஆறுதல்கள்.

சிவா.ஜி
11-09-2007, 02:32 PM
சிணுங்கி என்பதே சரியான பதம் என்று நினைக்கிறேன்.... யாராவது கருத்து சொல்லுங்கள்>...

சிணுங்கிதான் சரி ஆதவா.

தாமரை
11-09-2007, 02:37 PM
தொட்டால் சினிங்கி என் மனைவி
இன்று திட்டியும் சினிங்காமல்
நாளை அட்சயத்திருதிகை!!!!

சிணுங்கி
அட்சயத்திருதியை..

ஆரென்.. அதெல்லாம் 4 வருஷத்திற்கு முன்னால.. இப்ப எல்லாம் பத்து நாளைக்கு முன்னலேயே பாத்து செலக்ட் பண்ணி வச்சிட்டு வந்திடறாங்க..

அய்யோ அய்யோ இப்புடி அப்பிராண்ணியான மனைவியை வச்சுகிட்டு உங்க புலம்பல் ரொம்ப ஓவர்தான்,,,,:icon_p::icon_p:

க.கமலக்கண்ணன்
11-09-2007, 02:44 PM
அட்சயத்திருதியை வைத்து

அருமையான கவிதையை 3 வரிகளில்

அற்புதமாக அமைத்திட்ட ஆரெனுக்கு வாழ்த்துக்கள்

aren
11-09-2007, 03:06 PM
சிணுங்கி என்பதே சரியான பதம் என்று நினைக்கிறேன்.... யாராவது கருத்து சொல்லுங்கள்>...


மாத்திட்டேன் ஆதவா. சுட்டிக்காடியதற்கு நன்றி.

aren
11-09-2007, 03:08 PM
அட்வான்ஸ் புக்கிங் பண்னிட்டீங்களா ஆரென்..இப்பெல்லாம் இந்த நாளில் நகைக்கடைகளில் திருவிழாக்கூட்டம்தான்.யார் சொன்னது மக்கள்கிட்ட பணமில்லன்னு...அனுபவசாலி ஆரெனுக்கு வாழ்த்துக்கள்+ஆறுதல்கள்.

இங்கே முஸ்தபா செண்டர், 24 மணிநேரமும் திறந்திருக்கிறது. எப்பொழுது வேண்டுமானாலும் போய் நகைகளை வாங்கிக்கொள்ளலாம்.

aren
11-09-2007, 03:10 PM
சிணுங்கி
அட்சயத்திருதியை..


அய்யோ அய்யோ இப்புடி அப்பிராண்ணியான மனைவியை வச்சுகிட்டு உங்க புலம்பல் ரொம்ப ஓவர்தான்,,,,:icon_p::icon_p:

நீங்கள் என் மனைவியைப் பற்றி தெரியாமல் பேசுகிறீர்கள் என்றே நினைக்கிறேன். ஆகையால் உங்களை அவர் மன்னித்துவிடுவார்.

இங்கேயெல்லாம் எவ்வளவு கும்பல் வந்தாலும் அதை சரிகட்டிவிடுவார்கள்.

சாராகுமார்
11-09-2007, 03:53 PM
நமது பணத்தை
வாவு வாங்கும்
அட்சயத்திருதிகை.

ஆரென் உங்க கவிதை அருமை.வாழ்த்துக்கள்.

அமரன்
11-09-2007, 05:42 PM
ஹும்.....அனுபவஸ்தர்கள் பகிர்வை ரசிக்கத்தான் முடிகிறது. நடத்துங்க நடத்துங்க.

அட்சயத்திருதியை..
பொன்னகைக்காக
புன்னகைக்கும் திருநாள்

பெண்மணிகளால்
கணவனின் MONEY
நகைக்கடல்களில் கரைக்கப்படும்
சதுர்த்தியோ இந்நாள்...!

மூன்று முத்துக்கள் தந்த ஆரென் அண்ணாவுக்கு பாராட்டுக்கள்.

aren
11-09-2007, 05:47 PM
கவலைவேண்டாம் அமரன். அட்சயத்திருதியை எங்கே போய்விடப்போகிறது. நீங்களும் அனுபவிப்பீர்கள்.

பூமகள்
11-09-2007, 05:58 PM
அனுபவசாலிகளின் புலம்பல்கள் மன்றத்தில் எங்கும் எதிரொலிக்கிறது அட்சயதிருதியை பற்றி....!!:D:lachen001:
பார்த்து மக்கா... உங்களின் மனைவிகளின் காதுகளுக்கு எட்டிவிடப்போகிறது!!!!!!!!!!!!!!!! :icon_wink1:

மற்றதை நான் சொல்ல வேண்டியதில்லை என்று நினைக்கிறேன்..!!:cool: :icon_nono: :smartass: (மேலும் விவரங்களுக்கு சிரிங்கப்பூ...!! திரி #4-வது படம் பார்க்கவும்)

அழகு முத்தாய்ப்பு மூன்று வரிக்கவி.... வாழ்த்துக்கள் அரென் அண்ணா.:icon_b::icon_rollout:

அக்னி
11-09-2007, 06:11 PM
"அட்சயத்திருதியை" என்றால் என்ன..? அல்லது எதற்காக கடைப்பிடிக்கப்படுகின்றது...

ஒன்றுமட்டும் புரிகிறது...

பொன்சுரக்கும் அட்சயபாத்திரம்
கணவரிடம் என்று
சொன்னது யார்?
அட்சயதிருத்தியை என்று
இப்படிச் சுரண்டுகின்றார்களே,
மனைவிமார்...

ஆனால், எதற்காக என்றுதான் இன்னும் புரியவில்லை...

இலக்கியன்
11-09-2007, 09:22 PM
மூன்றுவரியில் அழகான படைப்பு வாழ்த்துக்கள்

ஓவியன்
13-09-2007, 11:18 PM
ஆமா, அட்சயத்திருதிகை என்றால் என்ன?, அதற்கும் மனைவிக்கும் பொன்னகைக்கும் என்ன சம்மந்தம்..?

எனக்கு ஒன்றுமே புரியலையே....? :confused:

lolluvathiyar
14-09-2007, 11:45 AM
இன்று திட்டியும் சிணுங்காமல்
நாளை அட்சயத்திருதிகை!!!!

அங்க உங்க வீட்ல அப்படீங்களா?
இங்க எங்க வீட்ல அப்படி எல்லாம் இல்லை.
முதல் தேதியே சம்பளகவரை பிடுங்கிடுவாங்க.
பெட்ரோல் போட டீ சாப்பிட நான் தான் கையை கட்டி நிக்கனும்.

சினுங்க வேண்டிய அவசியமில்லை

பென்ஸ்
14-09-2007, 12:40 PM
தொட்டால் சிணுங்கி என் மனைவி
இன்று திட்டியும் சிணுங்காமல்
நாளை அட்சயத்திருதிகை!!!!

ஆரென்..

மிக மிக அருமையான கவிதை. இதை ஹைக்கு என்று சொல்லலாமா என்று தெரியாது, அதை விட இது ஹைட்கூ(நன்றி : பிரதிப்).

செமகலக்கலா இருக்கு...
இந்த கவிதையை எழுதிய பிறகு பச்ச தண்ணி கூட வீட்டுல கிடைக்கலையாமே..!!!

aren
14-09-2007, 12:42 PM
ஆரென்..

மிக மிக அருமையான கவிதை. இதை ஹைக்கு என்று சொல்லலாமா என்று தெரியாது, அதை விட இது ஹைட்கூ(நன்றி : பிரதிப்).

செமகலக்கலா இருக்கு...
இந்த கவிதையை எழுதிய பிறகு பச்ச தண்ணி கூட வீட்டுல கிடைக்கலையாமே..!!!

நன்றி பென்ஸ்.

இதுவரைக்கும் இந்த கவிதையைப் பற்றி மூச்சே வீட்டில் விடவில்லையே. ஆகையால் தப்பித்தேன் இதுவரை. வீட்டில் பார்த்தால் அவ்வளவுதான். தயவுசெய்து சொல்லிடாதீங்க.

ஓவியன்
14-09-2007, 12:47 PM
இதுவரைக்கும் இந்த கவிதையைப் பற்றி மூச்சே வீட்டில் விடவில்லையே. ஆகையால் தப்பித்தேன் இதுவரை. வீட்டில் பார்த்தால் அவ்வளவுதான். தயவுசெய்து சொல்லிடாதீங்க.

ஆரேன் அன்ணா அண்ணியோட அலைபேசி எண்ணை தனிமடலில் அனுப்ப முடியுமா...?
ஒன்றுமில்லை, உங்களைப் பற்றி கொஞ்சம் பெருமையாகக் கூறத்தான்...!!! :D

அமரன்
14-09-2007, 12:51 PM
ஓவியன் உங்கள் பதிவின் இறுதியில் இரு வார்த்தைகள் சேர்க்க மறந்துவிட்டீரே....
நாராயணா...!நாராயணா....!

ஓவியன்
14-09-2007, 12:54 PM
என்னப்பா நான் அண்ணாவைப் பற்றி நன்றாக கூற வேண்டும் என்றால் கலகம் பண்ணப் போற மாதிரி பில்டப் கொடுக்கிறீர்....?

ஆரென் அண்ணா என்னைப் பர்றி என்ன நினைப்பார்...? :D

அமரன்
14-09-2007, 12:55 PM
நாரதர் கலகமும் நன்மையில் முடியும்னு சொல்றாங்களே....!
அப்படின்னா நான் சொன்னது தப்பில்லையே...!:rolleyes::rolleyes:

aren
14-09-2007, 01:31 PM
என்னை ஒரு வழி பண்ணாமல் விடமாட்டீர்கள் போலிருக்கிறது.

ஓவியன்
14-09-2007, 01:55 PM
சரி சரி...
முதலிலே அட்சயத்திருகை என்றால் என்ன என்று சொல்லுங்க...?
தெரியலை என்று சொல்லி இருந்தேன் இல்லே...

அமரன்
14-09-2007, 01:59 PM
சரி சரி...
முதலிலே அட்சயத்திருகை என்றால் என்ன என்று சொல்லுங்க...?
தெரியலை என்று சொல்லி இருந்தேன் இல்லே...
எனக்கும் இது தெரியாது...யாராவாது சொல்லுங்களேன்....!

தாமரை
14-09-2007, 02:02 PM
அட்சயத் திருதியை என்பது சித்திரை மாதம் வரும் வளர்பிறை மூன்றாம் திதி (மூன்றாம் நாள்.. அமாவாசை, பிரதமை, துவிதியை, திரிதியை) ஆகும். இந்நாளிலே தான், திரௌபதி சூரியனை வணங்கி அட்சய பாத்திரம் பெற்றாளாம். குபேர குபேர செல்வத்திற்கு அதிபதியாக நியமிக்கப் பட்டாரம். அந் நாள்ளில் செய்யும் காரியம் மிகுந்த வளர்ச்சியைக் கொடுக்கும் என்பது சிலரின் நம்பிக்கை.

மக்கள் அதைத் திரித்து அந்நாள்ள் பொன்னாள். அந்நாளில் பொன் வாங்கினால் இல்லத்தில் பொன் பெருகும் என ஆரம்பித்து அட்சயத் திருதியை நாட்களில் பொன் வாங்க ஆரம்பித்தனர். நகைக்கடையினர் இதை நன்கு பயன்படுத்திக் கொள்ள ஆரம்பித்து விட்டனர்...

ஓவியன்
14-09-2007, 02:09 PM
ஆகா இதுக்கு பின்னாலே இவ்வளவு கதை இருக்கா - மிக்க நன்றி செல்வன் அண்ணா! :)