PDA

View Full Version : வலி'கள்'



அமரன்
11-09-2007, 07:55 AM
பூக்களைப் பறிக்காதீர்
பொறிக்கப்பட்ட ஏட்டை
முட்டி வீழ்த்தும் வேகத்தில்
பூவனச் செடி...தலை
கொய்யவந்த பிஞ்சு விரலை
கட்டிய கை கண்டு...!
***************************************
இடுங்கிய மாங்கனியின்
விழியில் ஒரு துளி
அணில்பிள்ளை நகக்கீறல்
கிட்டாத சோகமோ...!
*******************************
அழுகிய தக்காளி
வரைந்தது ஈரஓவியம்
கொவ்வை அலகு
கொத்தாத தாபமோ..!
*******************************
வெடித்த முட்டை
இரத்தம் சிந்துகிறது
குஞ்சு அலகு
கொஞ்சல் நினைவில்...!
***********************************
பறவைகள் பலவால்
சல்லடையான மூங்கில்காடு
காய்ந்து கிடக்கிறது
கோகிலத்தின் மூச்சுக்காற்றில்
கோகுலம் ஆவதற்கு...!
***********************************


~~அமரன்

jpl
11-09-2007, 08:05 AM
பறவைகள் பலவால்
சல்லடையான மூங்கில்காடு
காய்ந்து கிடக்கிறது
கோகிலத்தின் மூச்சுக்காற்றில்
கோகுலம் ஆவதற்கு...!
இதுவன்றோ அமரனின் கவிக் கோகுலம்..

சிவா.ஜி
11-09-2007, 01:27 PM
அமரன் அசத்தலான ஒரு புதுப் பரிமானத்தில்.....வாவ்....அருமை.
பிஞ்சுக்கைகளில் படரும் பாக்கியத்தைத் தட்டிப் பறிக்கும் தாயின் கைகள் நோக்கி மலரின் ஆவேசம்.
சூம்பிய மாவின் மனவேதனை,அழுகிய தக்காளியின் ஆதங்க கண்ணீர்,உடைபட்ட முட்டையின் அடைபட்ட ஆசை,காய்ந்த மூங்கில் காட்டின் காணம் கேட்பதற்கான காத்திருப்பு...அடடா அருமை அமரன்.மனமார்ந்த பாராட்டுக்கள்.

சுகந்தப்ரீதன்
11-09-2007, 01:59 PM
வெடித்த முட்டை
இரத்தம் சிந்துகிறது
குஞ்சு அலகு
கொஞ்சல் நினைவில்...!

ரொம்ப தூரம் போய்டீங்க அமரரே....என்ன எங்காவது காட்டுக்கு பொய்டு வந்திங்களா..?மிக அருமையாக இருக்கிறது அத்தனையும்...வாழ்த்துக்கள்...!

மனோஜ்
11-09-2007, 02:07 PM
இயற்கையின் மடியில்
இளமையாய் தவழ்த தாங்களின்
இந்த கவிதை அருமை அமரன்

அமரன்
11-09-2007, 06:03 PM
இதுவன்றோ அமரனின் கவிக் கோகுலம்..
நன்றி புஸ்பலதா அவர்களே. உங்கள் தில் பெற்ற முதல் வாழ்த்தில் உள்ளம் புளகாங்கிதம் கொள்கிறது.

அமரன்
11-09-2007, 06:09 PM
அமரன் அசத்தலான ஒரு புதுப் பரிமானத்தில்.....வாவ்....அருமை.
பிஞ்சுக்கைகளில் படரும் பாக்கியத்தைத் தட்டிப் பறிக்கும் தாயின் கைகள் நோக்கி மலரின் ஆவேசம்.
சூம்பிய மாவின் மனவேதனை,அழுகிய தக்காளியின் ஆதங்க கண்ணீர்,உடைபட்ட முட்டையின் அடைபட்ட ஆசை,காய்ந்த மூங்கில் காட்டின் காணம் கேட்பதற்கான காத்திருப்பு...அடடா அருமை அமரன்.மனமார்ந்த பாராட்டுக்கள்.

அழகான பின்னூட்டம். நினைத்ததை எழுதுவது பெரிதல்ல. நினைத்து எழுதியதை விளங்கி விளம்புவது மிகப்பெரிது. நன்றி கலந்த பாராட்டுக்கள் சிவா.

அமரன்
11-09-2007, 08:56 PM
ரொம்ப தூரம் போய்டீங்க அமரரே....என்ன எங்காவது காட்டுக்கு பொய்டு வந்திங்களா..?மிக அருமையாக இருக்கிறது அத்தனையும்...வாழ்த்துக்கள்...!
ஆமாங்க சுகந்தா...ஜெர்மன் சாலை ஓரங்கள் காடுகளாக காட்சி கொடுக்க நீண்ட தூரம் போய்விட்டேன். அப்போதுதான் இவைகளைப் பிடித்தேன். நன்றி.

அமரன்
11-09-2007, 08:57 PM
இயற்கையின் மடியில்
இளமையாய் தவழ்த தாங்களின்
இந்த கவிதை அருமை அமரன்
ஊட்டத்துக்கு நன்றி மனோஜ்..
சின்ன வயதில் தவழும் போது பல விடயங்கள் தெரிவதில்லை. வளர்ந்து தவழும்போது நடப்பதில் காட்டிலும் அதிகமா விடயங்கள் பல புலப்படுகிறது. என்ன ஒரு விந்தை.

இலக்கியன்
11-09-2007, 09:14 PM
புதிய பரிமானத்துடன் உங்கள் கவிப்படைப்பு தொடரட்டும் வாழ்த்துக்கள்

இளசு
11-09-2007, 09:43 PM
இயற்கையின் படைப்புகள்
இரம்மிய வண்ணம், மணம், சுவை, வனப்பு...
இயல்பான முதிர்வுகள்.. சிதிலங்கள்..
இவை யாவுமே இன்னொரு நிகழ்வால்
இன்னும் பயனாகி, இடையறாச் சங்கிலிக்கணுக்களாகி...

இடையில் தடைகள் வந்த சோகங்கள் சொல்லும்
இன்னொரு உயர் பரிமாணக் கவிதை!

அமரனின் உயரம் கண்டு
அண்ணனின் அண்ணாந்த பாராட்டுகள்!

அக்னி
11-09-2007, 10:15 PM
இயற்கையின் ஏக்கநிலைகள்,
அமரன் கவித்துவத்தில்...
தூக்கி எறியும் சிதிலங்களால்,
வடிக்கப்பட்ட கவிச்சிற்பங்கள்...

அருமை... சிகரம் நோக்கி போகின்றீர்கள்...
முகில்கள் சாமரம் வீச, தொடர்ந்தும் பொழியுங்கள் கவிமழையை...

அமரன்
12-09-2007, 11:37 AM
இகரத்தில் இயம்பி
அகரத்தில் முடித்த
இளமைச்சிகரத்துக்கும்.....

அடி ஒற்றி வந்து
நிழல் விளம்பம் தந்த
அக்னி மழைக்கும்
கோடி நன்றி.....

எட்டும் உயரத்தில் இருக்கும் எனக்கு
எட்டாத உயரத்திலிருந்து வரும் உங்கள்
திகட்டாத பாராட்டுக்கள்
திட்டுகள் அமைத்து மேலும் உயர்த்துகின்றன