PDA

View Full Version : பெண் பார்க்கும் படலம்



பிச்சி
11-09-2007, 06:05 AM
எவனோ ஒருவன் என்னைப்
பெண் பார்த்தான்.

நரம்பு வெட்டிய உணர்வுகளை
பல் நுனியில் சிக்க வைத்து
கண் செதுக்கிய இதயத்தைக்
கைக்குட்டையில் அடக்கிக் கொண்டேன்

ஐம்புலனை அறிய முயன்றான்.

இமை எழுப்பிய ராகத்தால்
யாழிசையைக் கொன்றுவிட்டு
கரம் காத்த கவிதைகளை
ஒட்ட வைத்து கட்டவிழ்த்தேன்.

சதுர்குணத்தை சோதித்தான்

பூச்சிகளின் நடனத்தை,
புல்லறிவின் ஒழுக்கத்தை
நெஞ்சுக்குள் புதைத்துக் கொண்டு
நாணத்தை நறுக்கி வைத்தேன்

அழகியலைத் தேடினான்

முகில் வருடிய கேசத்தைப்
பின்னி முதுகிலிட்டு
மாலை நேர மஞ்சள் நிலவை
கொஞ்ச நேரம் மங்க வைத்தேன்.

சில நாழிகையில் மறுதலித்தான்

செந்நிலவை செதுக்கி வைத்து
மலைச்சாரலுக்குள்
சிறைபிடிக்க முயன்றேன்..
நெஞ்சுக்குள் இட்ட துளைக்கு
கண்ணீரல்ல மருந்து..

இளசு
11-09-2007, 06:18 AM
சொல்லாடல் வழக்கம்போல் புதுமை..

ஐம்புலன், சதுர்குணம் என வந்தபோது
மூன்று, இரண்டு, ஒன்று என வருமென
ஏனோ எதிர்பார்த்தேன்.......................

பாராட்டுகள் பிச்சி..

பிச்சி
11-09-2007, 06:20 AM
சொல்லாடல் வழக்கம்போல் புதுமை..

ஐம்புலன், சதுர்குணம் என வந்தபோது
மூன்று, இரண்டு, ஒன்று என வருமென
ஏனோ எதிர்பார்த்தேன்.......................

பாராட்டுகள் பிச்சி..

எனக்கு அப்படி ஒரு யோசனையே இல்லை அண்ணா. மிக்க நன்றி.

பென்ஸ்
11-09-2007, 06:31 AM
நிராகரிக்கபடுதல்...
அந்த வலி பெண்னுக்கு மட்டும்தானா...!!!
இன்றய சூழ்நிலையில் ஆணுக்கும் இருக்கிறதே..!!!

இன்று காலம் மாறி போயிருக்கிறதே குழந்தை.
பணம் பணத்தை சேரும்
குணம் குணத்தை சேரும் என்பார்கள்...

இதில் ஒன்றை வைத்து கொண்டு இரண்டுக்கும் ஆசைபடும் போது
நம் தகுதியை மீறி போய் விடுகிறது
சமமாகவேனும் பார்க்கபடவில்லையென்றால்
தரகுறைவாகதானே பார்க்கபடும்...
அவ்வாறே நடத்தபடவும் செய்யும்...

ஆனால் பாவம் இவள் என்ன செய்வாள்
தன் பெற்றோரின் பேராசை அன்பினால்
நறுக்கபடுவது இவள் மூக்கும் சேர்ந்துதானே...

யதாற்த்தம் மீறும் உலகில்
போராட்டம் தேவை...
வலி தாங்கும் வலிமையும் தேவை...

போகட்டும் இவன்
சொர்க்கத்தில் உனக்காக நிச்சயிக்கபட்டவன் இவன் அல்ல...

பென்ஸ்
11-09-2007, 06:33 AM
சொல்லாடல் வழக்கம்போல் புதுமை..

ஐம்புலன், சதுர்குணம் என வந்தபோது
மூன்று, இரண்டு, ஒன்று என வருமென
ஏனோ எதிர்பார்த்தேன்.......................

பாராட்டுகள் பிச்சி..

நான் கவணிக்க மறந்து
மீண்டும் கவணித்த அடுக்கு அது...

ரசிப்பவனுக்கு கல்லும் சிலையாய்..
நீங்கள் சொல்லும் போது நானும் உங்கள் விழி வழியே...

பிச்சி அடுத்த முறை இளசு இப்போ கொடுத்த இந்த குறிப்பையும் பயன் படுத்தலாமே...!!!

பூமகள்
11-09-2007, 06:34 AM
எவனோ ஒருவன் என்னைப்
பெண் பார்த்தான்.

நரம்பு வெட்டிய உணர்வுகளை
பல் நுனியில் சிக்க வைத்து
கண் செதுக்கிய இதயத்தைக்
கைக்குட்டையில் அடக்கிக் கொண்டேன்


அன்புத் தங்கையே.... அப்பப்பா... அருமை கவிவரிகள் பிச்சி.
படபடக்கும் நெஞ்சம் படும் அவதிகளை அந்த கணத்தின் பெண்ணின் மனத்தை அழகாக செதுக்கியுள்ளாய்...!! முத்தான வாழ்த்துக்கள்..!!



ஐம்புலனை அறிய முயன்றான்.

இமை எழுப்பிய ராகத்தால்
யாழிசையைக் கொன்றுவிட்டு
கரம் காத்த கவிதைகளை
ஒட்ட வைத்து கட்டவிழ்த்தேன்.

ஓ... இசை பாட இமை படபடப்போசை.....அருமை சிந்தனை.. இனிய வாழ்த்துக்கள்...பிச்சி...!!




சதுர்குணத்தை சோதித்தான்

பூச்சிகளின் நடனத்தை,
புல்லறிவின் ஒழுக்கத்தை
நெஞ்சுக்குள் புதைத்துக் கொண்டு
கனவுக்குள் ஒளிந்துகொண்டேன்.


இதோ.... நாட்டியத்தின் அழகு பூச்சியின் நளினத்திலும் காணும் விந்தை..
நடமாடிய கவிக்கு நர்த்தன வாழ்த்துக்கள்...!!



அழகியலைத் தேடினான்

முகில் வருடிய கேசத்தைப்
பின்னி முதுகிலிட்டு
மாலை நேர மஞ்சள் நிலவை
கொஞ்ச நேரம் மங்க வைத்தேன்.


அக அழகு காண மஞ்சள் நிலவை மங்க வைக்கும் முகில் கூட்டம்...
மன்மத கவிக்கு மத்தாப்பு வாழ்த்துக்கள்...!!



சில நாழிகையில் மறுதலித்தான்

செந்நிலவை செதுக்கி வைத்து
மலைச்சாரலுக்குள்
சிறைபிடிக்க முயன்றேன்..
நெஞ்சுக்குள் இட்ட துளைக்கு
கண்ணீரல்ல மருந்து..

அரும்பாகி மலரும் முன்னே..... எருவாகி எரிந்த சில வினாடி கணத்தின் தாக்கம்.... ஆறாக் காயமாய்.... துளையிட்ட நெஞ்சத்து வலி வெல்ல கண்ணீர் மருந்தாக்கா உன் தன்னம்பிக்கை கடைசி வரிகளுக்கு தங்க வாழ்த்துக்கள் பிச்சி..!!

மொத்தத்தில் அனைத்து வரிகளும் அழகு.
பெண் பார்த்து விட்டு மறுத்துச் சென்றபின் பெண்ணின் கோணத்தில் வடித்த கவி அருமை...!!

இந்த படைப்புகளைத் தான் காணாமல் ஏங்கினோம் பிச்சி... வந்து தொடர்ந்து கலக்குங்க...!!:icon_b:

வாழ்த்துக்கள்..!!:icon_rollout:

பிச்சி
11-09-2007, 06:42 AM
ஆமாம். அந்த வலி ஆணுக்கும் இருக்கும். ஒரு பக்கம் மட்டும் யோசிப்பதைவிட இன்னொரு பக்கத்தையும் யோசிக்கவேண்டும். வலி தாங்கும் வலிமை இல்லாவிடில் சிறு பிரச்சனையும் மலையே
உங்கள் விமர்சனம் ரொம்ப சூப்பராக இருக்கிறது.
நன்றி அண்ணா

பிச்சி
11-09-2007, 06:46 AM
நான் கவணிக்க மறந்து
மீண்டும் கவணித்த அடுக்கு அது...

ரசிப்பவனுக்கு கல்லும் சிலையாய்..
நீங்கள் சொல்லும் போது நானும் உங்கள் விழி வழியே...

பிச்சி அடுத்த முறை இளசு இப்போ கொடுத்த இந்த குறிப்பையும் பயன் படுத்தலாமே...!!!

நிச்சயம் பயன்படுத்திக் கொள்கிறேன் அண்ணா இளசு அண்ணாவுக்கு மீண்டும் நன்றி

பிச்சி
11-09-2007, 06:49 AM
விரிவான விளக்கம் அக்கா.நிரம்ப நன்றி. இப்போதான் உங்களோட பிரபஞ்ச கவிதை படித்தேன். வித்தியாசமாக இருக்கிறது.

பூமகள்
11-09-2007, 07:05 AM
மகிழ்ச்சி பிச்சி..
உன் கவி படிக்கையில் நீ தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கரைத்துக் குடித்திருப்பது புரிகிறது..
ஏதும் தமிழில் பட்டப்படிப்பு முடித்துள்ளாயா பிச்சி இல்லை பிறந்ததிலிருந்தே இப்படித்தானா???!!! (விரும்பின் பதில் தனிமடலில் கூறவும்.)

வாழ்த்துக்கள் பிச்சி...அருமை...!!

பென்ஸ்
11-09-2007, 07:07 AM
மகிழ்ச்சி பிச்சி..
உன் கவி படிக்கையில் நீ தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கரைத்துக் குடித்திருப்பது புரிகிறது..
ஏதும் தமிழில் பட்டப்படிப்பு முடித்துள்ளாயா பிச்சி இல்லை பிறந்ததிலிருந்தே இப்படித்தானா???!!! (விரும்பின் பதில் தனிமடலில் கூறவும்.)
வாழ்த்துக்கள் பிச்சி...அருமை...!!

விருப்பம் இல்லையென்றால் இங்கேயே பதிக்கலாம்...:aetsch013::aetsch013:

பிச்சி
11-09-2007, 07:11 AM
மகிழ்ச்சி பிச்சி..
உன் கவி படிக்கையில் நீ தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கரைத்துக் குடித்திருப்பது புரிகிறது..
ஏதும் தமிழில் பட்டப்படிப்பு முடித்துள்ளாயா பிச்சி இல்லை பிறந்ததிலிருந்தே இப்படித்தானா???!!! (விரும்பின் பதில் தனிமடலில் கூறவும்.)

வாழ்த்துக்கள் பிச்சி...அருமை...!!

நான் எந்த ஒரு தமிழ் இலக்கனமும் படித்ததில்லை. படித்தது B.Sc.. CS . எனது அப்பா நிறைய புக்ஸ் வாங்கி கொடுப்பார். எல்லாமே இலக்கிய புக்ஸ்., அதை படித்து படித்தே கவிதை எழுத ஆரம்பித்தேன். கவிதை எழுதுவது எங்கள் வீட்டுக்குப் பிடிக்காது. அதனால அவங்கலுக்குத் தெரியாது.

பிச்சி
11-09-2007, 07:12 AM
விருப்பம் இல்லையென்றால் இங்கேயே பதிக்கலாம்...:aetsch013::aetsch013:

முதலில் எனக்கு புரியவே இல்லை :confused: . அப்பறமா பாத்தா.....:D:D:D

தளபதி
11-09-2007, 07:19 AM
நிதர்சணம், பெண்பார்க்கும் படலம் ஒரு கடினமான சம்பவம். இதை எவ்வாறு மன கஷ்டம் இல்லாமல் நடத்தலாம் என்று ஒரு விவாதம் நடத்தலாம்??

பறக்கும் புறாவின்
பின்புறம் பிடிக்க
படபடவென்று அடித்தது
அதன் சிறகுகளை.
சிதறின சில இறகுகள்.

பிடியை விட்டுவிட
உணர்ந்த வலி
சிறகுகள் அடித்த
கரத்தில் அல்ல!!
சிதறிய இறகுகள்
விழுந்த, இதயத்தில்.!!!

பிச்சி
11-09-2007, 07:26 AM
மிகவும் நன்றி தளபதி அண்ணா. உங்கள் கவிதை அருமை.. ஒவ்வொரு முறையும் சிறகுகளை உதிர்த்துவிட்டுத்தான் பறக்கிறது பறவைகல்.,

பென்ஸ்
11-09-2007, 07:43 AM
நான் எந்த ஒரு தமிழ் இலக்கனமும் படித்ததில்லை. படித்தது B.Sc.. CS . எனது அப்பா நிறைய புக்ஸ் வாங்கி கொடுப்பார். எல்லாமே இலக்கிய புக்ஸ்., அதை படித்து படித்தே கவிதை எழுத ஆரம்பித்தேன். கவிதை எழுதுவது எங்கள் வீட்டுக்குப் பிடிக்காது. அதனால அவங்கலுக்குத் தெரியாது.

இப்படியே பேசு... டீவி தொகுப்பாளர் ஆயிடலாம்...:lachen001::lachen001:

மனோஜ்
11-09-2007, 07:55 AM
காலத்தின் கோலம் இது
வருத்ததின் ஆரம்பம் இது ஆனால்
வாழ்க்கையின் தொடக்கமும் இதுதான்

சிற்பான கவிதை பிச்சி

jpl
11-09-2007, 08:10 AM
வழக்கம் போல் பிச்சியின் முத்திரைக் கவி..

ஷீ-நிசி
11-09-2007, 08:14 AM
பிச்சியின் வரிகள் என்றைக்குமே மிக வித்தியாசமானவை...

கவிதையின் கருவும் அருமை... தேர்ந்தெடுத்த வார்த்தைகளும் அருமை...

வாழ்த்துக்கள் பிச்சி! (கவிதை போட்டுட்டு எஸ்கேப் ஆகிடறீங்க!)

அக்னி
11-09-2007, 12:49 PM
தலைப்பிலேயே பிழை...
கவிதையில் அல்ல... வாழ்வின் இந்த நிகழ்வின் தலைப்பில்...
அதனால்தானோ, பார்த்ததும் பறந்துவிடுகின்றார்கள்...

பெண் பார்க்கும் படலம்...
வாழ்க்கைத் துணை தேடும் படலம் என்று மாறவேண்டும்...

நாணிய விழிகளுக்குள்
விழுந்த விம்பம்,
தேடிய விழிகளுக்குள்
ஏன் பதிவதில்லை..?

ஒரு வருந்தத்தக்க விடயம், அரிய கவி வரிகளில்...
பாராட்டுக்கள் பிச்சி...

மகாகவியின் வரிகளிலிருந்து...
"பெண்ணறத்தினை ஆண்மக்கள் வீரந்தான்
பேணுமாயின் பிறகொரு தாழ்வில்லை..."

க.கமலக்கண்ணன்
11-09-2007, 01:07 PM
நம் நாட்டு பெண்களை ஏதோ மாடு வாங்க போவது போல

நடந்து காட்ட சொல்லுவதும் பாட சொல்லுவதும் இன்னும் பல

நங்கைகள் பலரும் படும் வேதளையை மிக அழகாக எடுத்துரைத்த பிச்சிக்கு வாழ்த்துக்கள்.

:icon_b: மற்றும் இளசு அவர்களின் பின்னூட்டமும் பூமகளின் இருவரிகள் விமர்சனமும் அருமை...

சிவா.ஜி
11-09-2007, 01:20 PM
உணச்சிக்குவியலாய் ஒரு அழகான கவிதை. பார்க்கவந்தவர்கள் செய்யச் சொன்ன ஒவ்வொரு செயலையும் தன் பாணியில் கவிதையின் நாயகி செய்துகாட்டியதை இலக்கியத் தேனில் குழைத்து படிப்பவர் சுவைக்கக் கொடுத்த பிச்சியின் திறமையை நினைத்து வியக்கிறேன்.பென்ஸ் சொன்னதுபோல அவளுக்காய் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டவன் நிச்சயமாய் இவனில்லை.இதை நிராகரிப்பு என எடுத்துக்கொள்ளாமல்....நிம்மதியான விடுவிப்பு என மகிழவேண்டும்.வாழ்த்துக்கள் பிச்சி.

aren
12-09-2007, 11:15 AM
ஒரு பெண்ணின் மனநிலையை இன்னொரு பெண்ணால்தால் பார்க்கமுடியும் என்பார்கள். நீங்கள் அழகாக பார்ததிருப்பது உங்கள் கவிதை வரிகளில் வெளிப்படுகிறது. பாராட்டுக்கள்.

lolluvathiyar
14-09-2007, 12:10 PM
கவிதை அற்புதம் பிச்சி, பென்னி உனர்வுகளை அருமையாக வடித்திருகிறாய்



ஐம்புலனை அறிய முயன்றான்.
சதுர்குணத்தை சோதித்தான்
அழகியலைத் தேடினான்


நீண்ட* கால*ம் வாழ* வேண்டும் அத*னால் அப்ப*டி பார்ப*து த*வ*றில்லையே.



சில நாழிகையில் மறுதலித்தான்
நெஞ்சுக்குள் இட்ட துளைக்கு
கண்ணீரல்ல மருந்து..

எதற்க்கு கன்னீர், நெஸ்ட் என்று மனதில் கூறி கொண்டு அடுத்த ஆளை அழைத்து விடலாம். அவன் பிடிக்காமல் ஓக்கே சொல்லி அப்புரன் வாழ் நாள் பூரா கஸ்டபடனும்.

சூரியன்
14-09-2007, 12:16 PM
நம் நாட்டு பெண்களை ஏதோ மாடு வாங்க போவது போல

நடந்து காட்ட சொல்லுவதும் பாட சொல்லுவதும் இன்னும் பல

நங்கைகள் பலரும் படும் வேதளையை மிக அழகாக எடுத்துரைத்த பிச்சிக்கு வாழ்த்துக்கள்.




தற்போது அந்த நடைமுறை கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகின்றன.

இலக்கியன்
14-09-2007, 01:16 PM
ஒரு பெண்ணில் மென்மையான உணர்வுகளை சுமந்து வந்தது உங்கள் கவிதை
பாராட்டுக்கள்

பிச்சி
15-09-2007, 11:17 AM
அனைவருக்கும் பிச்சியின் நன்றிகள்.