PDA

View Full Version : மதில்மேல் பூனை

சுகந்தப்ரீதன்
11-09-2007, 04:26 AM
தேடினான் தேவதையை
ராமனாய்மாறி சீதையை
கண்ணனாய்மாறி ராதையை
தேவதையோ தென்படவில்லை!
காத்திருந்தான் கண்ணகிக்கு!
பொறுமைக்கோ பொறாமை
மலர்தூவி மாதவியை அனுப்ப
மான்குட்டியாய் மருண்டோடினான்!
மதில்மேல் பூனையாய்
தனிமையில் தவிக்கிறான்!
கண்ணகிக்கு காத்திருப்பதா?
மாதவியுடன் மகிழ்வதாவென்று?

தளபதி
11-09-2007, 04:35 AM
சிறகு முளைக்கும் வரை
பறக்கக் காத்திருப்பது
தவறில்லையே!!!

நல்ல கவிதை!! சுகம் தா!! சுகந்தா!!

சிவா.ஜி
11-09-2007, 04:55 AM
சட்டு புட்டுன்னு கண்ணகிக்கு ஒரு முடிவை சொல்லிடுங்க ப்ரீதன்.இல்லன்னா உங்க கதி அதோகதிதான்.வாழ்த்துக்கள்.

சுகந்தப்ரீதன்
11-09-2007, 06:17 AM
சிறகு முளைக்கும் வரை
பறக்கக் காத்திருப்பது
தவறில்லையே!!!

நல்ல கவிதை!! சுகம் தா!! சுகந்தா!!

நன்றி தளபதி...!

சுகந்தப்ரீதன்
11-09-2007, 06:17 AM
சட்டு புட்டுன்னு கண்ணகிக்கு ஒரு முடிவை சொல்லிடுங்க ப்ரீதன்.இல்லன்னா உங்க கதி அதோகதிதான்.வாழ்த்துக்கள்.

உங்கள் அறிவுறைக்கு நண்றி நண்பரே..!

இளசு
11-09-2007, 06:22 AM
வாழ்க்கை நம் மீது வீசும் குழப்பப்புதிர்கள் பல..

இதயம் சொல்வதைக் கொஞ்சம் அடக்கி
மூளை சொல்வதைக் கேட்டால் -

இன்றைய தென்றல் விரட்டப்படும்..
நாளைய புயல் தடுக்கப்படும்!

கட்டற்ற உற்சாகம் தற்காலிகமாய்..
காலமெல்லாம் நிம்மதி நிரந்தரமாய்..

எது உங்கள் விருப்பம்?

வாழ்த்துகள் - சுகந்தன்..

சுகந்தப்ரீதன்
11-09-2007, 09:16 AM
வாழ்க்கை நம் மீது வீசும் குழப்பப்புதிர்கள் பல..

இன்றைய தென்றல் விரட்டப்படும்..
நாளைய புயல் தடுக்கப்படும்!

எது உங்கள் விருப்பம்?

வாழ்த்துகள் - சுகந்தன்..

பூவையும் நேசி புயலையும் நேசின்னு சொன்னா அடிச்சிருவிங்க....போலிருக்கு....எனக்காக எழுதுனதாவே எல்லோரும் சொல்லுரிங்க....இளமையில் எல்லோருக்கும் ஏற்படும் தடுமாற்றத்தை கொஞ்சம் கற்பனை கலந்து சொன்னேன்....மற்றபடி நான் ரொம்ப நல்லபையங்க....கண்ணகிக்கு காத்துகிட்டிருக்கேன்....பிள்ளையாரைப்போல பிரம்மசாரியாய்.....!

மனோஜ்
11-09-2007, 09:25 AM
குழுப்பங்கள் குழுத்திடும் இளமையில்
குறியாய் இரு உன் எதிர்கால வாழ்க்கைக்கு

அருமை கவிதை நன்பா

அமரன்
11-09-2007, 11:07 AM
மதில் மேல் பூனையாகப் பலர்
துணையை தேடுவதில் மட்டும் அல்ல
துணையாக கூடுவதிலும்...

ஊரை அழிக்கும் கண்ணகிகளை விட
யாழ் மீட்டும் மாதவிகள்
பாராட்டுக்குரியவர்கள்
பேணப்பட வேண்டியவர்கள்.
அக்காலம் பேசவில்லை நான்
இக்காலம் மட்டும் பேசுகின்றேன்.

பூவையோ புயலையோ
இதய சுத்தியுடன்
நேசித்தால் போதும்
அடிகள் கிடைக்காது
சுகந்தா பாராட்டுக்கள்.

சுகந்தப்ரீதன்
11-09-2007, 01:43 PM
குழுப்பங்கள் குழுத்திடும் இளமையில்
குறியாய் இரு உன் எதிர்கால வாழ்க்கைக்கு

அருமை கவிதை நன்பா

எதிர்கால வாழ்க்கைக்கு எதுல குறியாயிருக்கனும்னு சொல்லியிருந்தா குழப்பமில்லாம இருந்திருக்கும்.....மறுபடியும் குழப்பிட்டீங்க மனோஜ்...!

வாழ்த்துக்கள்...!

சுகந்தப்ரீதன்
11-09-2007, 01:49 PM
ஊரை அழிக்கும் கண்ணகிகளை விட
யாழ் மீட்டும் மாதவிகள்
பாராட்டுக்குரியவர்கள்
பேணப்பட வேண்டியவர்கள்.
அக்காலம் பேசவில்லை நான்
இக்காலம் மட்டும் பேசுகின்றேன்.

.

எக்காலத்திலும் இதுபொருந்தும் அமரரே...ஆமா என்கிட்ட சொல்லாம எங்க போனிங்க...நீங்க இல்லாம பின்னுட்டமெல்லாம் குறைங்சிடுச்சி தெரியுமா...அதான் நீங்க வந்தபிறகு கவிதையை பதிச்சேன்....முத்ல் பின்னுட்டம் உங்களுதா இருக்கும்னு நினைச்சேன்...லேட்டா வந்தாலும் எனக்கு நெருக்கமாகவே வந்துட்டீங்க....உங்க கவிதையில் மேற்கொண்ட வரிகள் மிகஅருமை நண்பரே....!எனது வாழ்த்துக்களும் நன்றிகளும்...!

தாமரை
11-09-2007, 02:01 PM
மாதவிகள்
மணமாகாமல் தவிப்பர்
மாதவர்கள்
என்ன செய்வர்?

கோவலன் தாலிகட்டி
காவலன் ஆகியிருந்தால்
இப்படி ஒரு கவிதை
இன்று வந்திருக்குமா?

தவறு மாதவி மேலா
கோவலன் மேலா
மாதவிக்கு கண்ணகி மேலா

கொண்டவன் தடம் மறந்தபோது
கண்ணகியும் அமைதி காத்தாள்..
வந்தவன் உழைக்க மறந்த போது
மாதவியும் அமைதி காத்தாள்..

விட்டுச் சென்றபொழுது
இருவரும் மௌனிகள்..

காசிழந்த போது மாதவி விரட்டவில்லையே!
கண்ணகியும் விரட்ட வில்லையே!
காற்சிலம்பு விற்கத் தர
கண்ணகிக்கு கிடைத்த வாய்ப்பு
மாதவிக்கு கிடைக்கவில்லை
ஏனெனில்
கால்(சிலேடை) சிலம்பும்
அவளுக்கும் மிஞ்சவில்லை..

ஆணாதிக்க கதையினிலே
உமக்கு
அடிபடக் கிடைத்தது மாதவியா?

அமரன்
11-09-2007, 02:04 PM
நீ....ண்ட நாளாச்சு...உங்களைப் பார்த்து

ஆணாதிக்க கதையினிலே
உமக்கு
அடிபடக் கிடைத்தது மாதவியா?

ஆமா இது யாருக்கு

தாமரை
11-09-2007, 02:09 PM
பூவையும் நேசி புயலையும் நேசின்னு சொன்னா அடிச்சிருவிங்க....போலிருக்கு....எனக்காக எழுதுனதாவே எல்லோரும் சொல்லுரிங்க....இளமையில் எல்லோருக்கும் ஏற்படும் தடுமாற்றத்தை கொஞ்சம் கற்பனை கலந்து சொன்னேன்....மற்றபடி நான் ரொம்ப நல்லபையங்க....கண்ணகிக்கு காத்துகிட்டிருக்கேன்....பிரம்மனைபோல பிரம்மசாரியாய்.....!

ஓஒ நீங்க பிரம்மனைப் போல பிரம்மச்சாரியா???
பிரம்மனுக்கு மூன்று மனைவியர்..

சரஸ்வதி, சாவித்திரி, காயத்ரி.. :mini023::mini023::mini023:

சுகந்தப்ரீதன்
11-09-2007, 02:28 PM
ஓஒ நீங்க பிரம்மனைப் போல பிரம்மச்சாரியா???
பிரம்மனுக்கு மூன்று மனைவியர்..

சரஸ்வதி, சாவித்திரி, காயத்ரி.. :mini023::mini023::mini023:

எனக்கு தெரிஞ்சாவரைக்கும் அவருக்கு மனைவி கிடையாது....அப்ப்டி இருந்தாக்க...பிரம்மனை நாளைக்கு நீக்கிடுறேன்...சரிய்யா..!

தாமரை
11-09-2007, 02:33 PM
எனக்கு தெரிஞ்சாவரைக்கும் அவருக்கு மனைவி கிடையாது....அப்ப்டி இருந்தாக்க...பிரம்மனை நாளைக்கு நீக்கிடுறேன்...சரிய்யா..!

அப்ப இன்னிக்கு என்ன செய்யறதா உத்தேசம்?

சுகந்தப்ரீதன்
12-09-2007, 03:15 AM
அப்ப இன்னிக்கு என்ன செய்யறதா உத்தேசம்?

தாமரை செல்வரே...நீண்ட இடைவெளிக்கு பிறகு அதிரடியா நுழைஞ்சிருக்கிங்க.....மாதவிகள் பற்றிய உங்கள் கவிதை மிக அருமை...காலம்காலமாக ஊறிபோனதாலோ என்னவோ என்னதான் பெண்மையை பற்றி பெருமையா பேசினாலும் அப்ப அப்ப ஆணாதிக்கம் அத்துமீறி உள்ள நுழைஞ்சிடுது....சின்னவீடு படத்துல பாக்கியராஜ் சார் சொல்லுற மாதிரி இது என் கவிதையில்ல..நம்ப கவிதை சரிதானே...?

அப்புறம் நீங்க சொன்னிங்கன்னு நேத்து பிரம்மனை விசாரிக்கலாம்னு போனேன்...அவரு தாமைரை மேல கோபபட்டுகிட்டு எங்கியோ போய்டாருன்னு அவரு வீட்டுல இருந்த மூனு அம்மணிகள் சொல்லிச்சு....அவங்க பேரு என்னன்னு கேட்டேன்...நீங்க சொன்ன அதே பேரை சொன்னாங்க...அங்க இருந்து நேரா கிளம்பி மன்றத்துக்கு வந்து பிரம்மன் இடத்துல பிள்ளையார உட்கார வச்சிட்டேன்....(பிள்ளையாருக்கு பொண்டாட்டி இருக்குன்னு சொல்லிபுடாதிங்க அப்பு...அப்புறம் நான் அவர தேடிகிட்டு ஏரிகரைக்கு போகனும்..)

தொடர்ந்து இந்த பக்கம் காவியசெல்வரை வந்துபோகுமாறு கேட்டுகொள்கிறேன்..வாழ்த்துக்களும்...வணக்கங்களும்..!

ஓவியன்
12-09-2007, 03:27 AM
சுகந்த ப்ரீதனின் கவிதைக்கு செல்வரது பின்னூட்டம் பிரமாதம்...
அறியாத விடயங்கள் பல அற்றிந்த திருப்தி என்னுள்ளே.......

பாராட்டுக்கள் சுகந்தா, தொடர்ந்து இணைந்திருங்க.......

சுகந்தப்ரீதன்
12-09-2007, 04:00 AM
சுகந்த ப்ரீதனின் கவிதைக்கு செல்வரது பின்னூட்டம் பிரமாதம்...
அறியாத விடயங்கள் பல அற்றிந்த திருப்தி என்னுள்ளே.......

பாராட்டுக்கள் சுகந்தா, தொடர்ந்து இணைந்திருங்க.......

உங்களவிட்டு எங்க நான் போகப்போறேன்...நீங்க அதை நம்ப தாமரை செல்வருக்கு சொல்லுங்க...அவருதான் அடிக்கடி காணாம போய்டுராரு...

நண்றி அண்ணா..!@

தாமரை
12-09-2007, 06:01 AM
தாமரை செல்வரே...நீண்ட இடைவெளிக்கு பிறகு அதிரடியா நுழைஞ்சிருக்கிங்க.....மாதவிகள் பற்றிய உங்கள் கவிதை மிக அருமை...காலம்காலமாக ஊறிபோனதாலோ என்னவோ என்னதான் பெண்மையை பற்றி பெருமையா பேசினாலும் அப்ப அப்ப ஆணாதிக்கம் அத்துமீறி உள்ள நுழைஞ்சிடுது....சின்னவீடு படத்துல பாக்கியராஜ் சார் சொல்லுற மாதிரி இது என் கவிதையில்ல..நம்ப கவிதை சரிதானே...?

அப்புறம் நீங்க சொன்னிங்கன்னு நேத்து பிரம்மனை விசாரிக்கலாம்னு போனேன்...அவரு தாமைரை மேல கோபபட்டுகிட்டு எங்கியோ போய்டாருன்னு அவரு வீட்டுல இருந்த மூனு அம்மணிகள் சொல்லிச்சு....அவங்க பேரு என்னன்னு கேட்டேன்...நீங்க சொன்ன அதே பேரை சொன்னாங்க...அங்க இருந்து நேரா கிளம்பி மன்றத்துக்கு வந்து பிரம்மன் இடத்துல பிள்ளையார உட்கார வச்சிட்டேன்....(பிள்ளையாருக்கு பொண்டாட்டி இருக்கு சொல்லிபுடாதிங்க அப்பு...அப்புறம் நான் அவர தேடிகிட்டு ஏரிகரைக்கு போகனும்..)

தொடர்ந்து இந்த பக்கம் காவியசெல்வரை வந்துபோகுமாறு கேட்டுகொள்கிறேன்..வாழ்த்துக்களும்...வணக்கங்களும்..!

பிள்ளையாருக்கும் சித்தி, புத்தி, வல்லபை என மனைவிகள் இருக்கற்தா கதை இருக்கே!..

இருங்க வீட்டில கணபதி புராணம் புத்தகம் படிச்சு லிஸ்டு தர்ரேன்..

கண்ணகி
பெயர்
பொருத்தமானதா இல்லையா?

இல்லை ஏன் எனில்
கண்+நகி
சிரிக்கும் கண்களை
உடையவளா அவள்..
அழுதழுது ஆறாகிப்
வறண்டு போன
காவிரி அல்லவா??:icon_p::icon_p::icon_p:

:icon_rollout::icon_rollout::icon_rollout:
ஆமாம் ஏன் எனில்
கண்+நஹி,
கணவன்
கணிகைப் பின்
போன போதும் சரி
கோபம் கண்ணை மறைக்க
மதுரையை எரித்த போதிலும் சரி

கண் நஹிதானே!!!:icon_b::icon_b::icon_b:

சுகந்தப்ரீதன்
12-09-2007, 06:30 AM

கந்தபுராணம் கேள்விபட்டிருக்கேன்...கணபதி புராணம் வேறு இருக்கா...நா வல்லப்பா இந்த ஆட்டத்துக்கு....நிறைய படிப்பீங்க போலிருக்கு...வாழ்த்துக்கள்...நண்பரே...!

தாமரை
12-09-2007, 06:41 AM
தாமரை செல்வரே...நீண்ட இடைவெளிக்கு பிறகு அதிரடியா நுழைஞ்சிருக்கிங்க.....மாதவிகள் பற்றிய உங்கள் கவிதை மிக அருமை...காலம்காலமாக ஊறிபோனதாலோ என்னவோ என்னதான் பெண்மையை பற்றி பெருமையா பேசினாலும் அப்ப அப்ப ஆணாதிக்கம் அத்துமீறி உள்ள நுழைஞ்சிடுது....சின்னவீடு படத்துல பாக்கியராஜ் சார் சொல்லுற மாதிரி இது என் கவிதையில்ல..நம்ப கவிதை சரிதானே...?

அப்புறம் நீங்க சொன்னிங்கன்னு நேத்து பிரம்மனை விசாரிக்கலாம்னு போனேன்...அவரு தாமைரை மேல கோபபட்டுகிட்டு எங்கியோ போய்டாருன்னு அவரு வீட்டுல இருந்த மூனு அம்மணிகள் சொல்லிச்சு....அவங்க பேரு என்னன்னு கேட்டேன்...நீங்க சொன்ன அதே பேரை சொன்னாங்க...அங்க இருந்து நேரா கிளம்பி மன்றத்துக்கு வந்து பிரம்மன் இடத்துல பிள்ளையார உட்கார வச்சிட்டேன்....(பிள்ளையாருக்கு பொண்டாட்டி இருக்கு சொல்லிபுடாதிங்க அப்பு...அப்புறம் நான் அவர தேடிகிட்டு ஏரிகரைக்கு போகனும்..)

தொடர்ந்து இந்த பக்கம் காவியசெல்வரை வந்துபோகுமாறு கேட்டுகொள்கிறேன்..வாழ்த்துக்களும்...வணக்கங்களும்..!

தாமரையில் பிறந்தவர்கள்

1. பிரம்மன் - விஷ்ணுவின் நாபிக் கமலத்தில் உதித்தவர்
2. முருகன் - சரவணப் பொய்கையில் ஆறு தாமரைகளில் பிறந்தவர்..

அப்ப தாமரைச் செல்வன்னா பிரம்மன் - அப்படின்னு ஒரு அர்த்தம் இருக்கத்தானே செய்யுது..

அதுலயும் கூத்தைக் கேளுங்க.. பிரம்மனுக்கு பிரணவ மந்திரம் மறந்து போனதால அவரை ஜெயில்ல போட்டுட்டு முருகனே பிரம்மன் வேலையைப் பார்த்தாராம்..

அப்போ தாமரைச் செல்வன்னா படைக்கிறதிலே கெட்டிக்காரன்னு தான்னே அர்த்தம்???

:mini023::mini023::mini023:

தலையை கிறு கிற்றுன்னு சுத்துதா?

சுகந்தப்ரீதன்
12-09-2007, 07:24 AM

க்ர்ர்ர்ர்ர்ருன்னு சுத்தமட்டுமல்ல கிருக்கே புடிச்சுடும் போலிருக்கு..பேசாம உங்க பேரை புராணசெல்வன் மாத்திக்கிங்க...பொருத்தமாயிருக்கும்...!

தாமரை
13-09-2007, 09:45 AM
தேடினான் தேவதையை
ராமனாய்மாறி சீதையை
கண்ணனாய்மாறி ராதையை
தேவதையோ தென்படவில்லை!
காத்திருந்தான் கண்ணகிக்கு!
பொறுமைக்கோ பொறாமை
மல்ர்தூவி மாதவியை அனுப்ப
மான்குட்டியாய் மருண்டோடினான்!
மதில்மேல் பூனையாய்
தனிமையில் தவிக்கிறான்!
கண்ணகிக்கு காத்திருப்பதா?
மாதவியுடன் மகிழ்வதாவென்று?

கண்ணனாய் மாறிய இராமன் கண்ணகிக்காய் காத்திருந்தால்..
மாதவி ஏன் வேண்டாமாம்???

சுகந்தப்ரீதன்
13-09-2007, 09:48 AM
கண்ணனாய் மாறிய இராமன் கண்ணகிக்காய் காத்திருந்தால்..
மாதவி ஏன் வேண்டாமாம்???

ராதை கொவிச்சுக்குவாங்க அதான்..!

தாமரை
13-09-2007, 10:03 AM
ருக்மணிக்கும், பாமாவிற்கும், ஜாம்பவதி, காளிந்தி, போன்ற அஷ்ட மனைவியருக்கும் கோபிகைகளுக்கும், நரகாசுரன் சிறையெடுத்து 16100 பெண்டிருக்கும் கோபிக்காத ராதை மாதவிக்கு கோபம் கொள்வாளா? என்னடா சோதனை இது..

மாதவன் - மாதவி பெயர் பொருத்தம் கூட நல்லாத்தானே இருக்கு.

ஷீ-நிசி
13-09-2007, 10:14 AM
வாழ்த்துக்கள் சுகந்தா... கவிதை ரசிக்க வைத்தது!

(பெரிய ஆளுங்க நிறைய பேசறீங்க.. படிச்சாலே தல கிறுகிறுக்குது....)

சுகந்தப்ரீதன்
13-09-2007, 11:42 AM
ருக்மணிக்கும், பாமாவிற்கும், ஜாம்பவி போன்ற அஷ்ட மனைவியருக்கும் கோபிகைகளுக்கும், நரகாசுரன் சிறையெடுத்து 1600 பெண்டிருக்கும் கோபிக்காத ராதை மாதவிக்கு கோபம் கொள்வாளா? என்னடா சோதனை இது..

மாதவன் - மாதவி பெயர் பொருத்தம் கூட நல்லாத்தானே இருக்கு.

என்னயிது அனுமார்வால்போல நீண்டுகிட்டே போகுது....எனக்கு எங்க பக்க்த்துவீட்டு பாமாவையும் எதிர்த்தவீட்டு ருக்குமனியையும்தான் தெரியும்..அதுயாரு ஜாம்பவி..இராமன் மனைவி ஜானகியத்தான் அப்படி சொல்லுரிங்களா....தாத்தா...?

சுகந்தப்ரீதன்
13-09-2007, 11:44 AM
வாழ்த்துக்கள் சுகந்தா... கவிதை ரசிக்க வைத்தது!

(பெரிய ஆளுங்க நிறைய பேசறீங்க.. படிச்சாலே தல கிறுகிறுக்குது....)

மிக்க் நன்றி நண்பரே....!
(பேசல...பேசவைக்கிராரு நம்ப தாமரை செல்வரு...முடிஞ்ச உதவிக்கு வாங்களேன் கவிஞ்ரே...!)

தாமரை
13-09-2007, 02:13 PM
என்னயிது அனுமார்வால்போல நீண்டுகிட்டே போகுது....எனக்கு எங்க பக்க்த்துவீட்டு பாமாவையும் எதிர்த்தவீட்டு ருக்குமனியையும்தான் தெரியும்..அதுயாரு ஜாம்பவி..இராமன் மனைவி ஜானகியத்தான் அப்படி சொல்லுரிங்களா....தாத்தா...?

ஜாம்பவான்,,, ஆமாம் .. இராமயணக் கரடித் தாத்தாதான்.. அனுமார் கிட்ட சஞ்சீவி மலை எடுத்துகிட்டு வரச் சொன்ன ஜாம்பவான் தாத்தாவோட வளர்ப்பு மகள்தான் இவங்க..ஜாம்பவதி. சியமந்தக மணி ஒண்ணு காணாம போக அது ஜாம்பவான் காட்டில கண்ண்டெடுத்து வச்சிருக்காரு.. அப்ப எல்லோரும் கிருஷ்ணர் எடுத்திருப்பாரோன்னு நினைக்க, கிருஷ்ணன் காட்டுக்குப் போய் அதை நம்ம கரடித் தாத்தா குகையில எடுக்கப் போனா தாத்தா பாத்திடுறாரு..

உடனே கோபத்தோட உற்றுமிகிட்டே சண்டை போட கிருஷ்ணன் கைபட்டதும் இராமன் தான் கிருஷ்ணன்னு தெரிஞ்சுடுது. அப்புறம் தன்னோட மகளைக் கட்டிக் கொடுத்து, சியமந்தக மணியையும் கொடுத்து அனுப்புறாரு..

சிரஞ்சீவிகள் :

1. மஹாபலி 2. பரசுராமர் 3. அனுமான் 4. ஜாம்பவான் 5. விபீஷணன்
6. அஸ்வத்தாமன் 7. மார்கண்டேயர் 8. கிருபர் 9. வியாசர்

அப்புறம் கிருஷ்ணன் நரகாசுரன் கிட்ட இருந்து மீட்டு கல்யாணம் செய்து கொண்டது 1600 இல்லை 16000...

அப்புறம் இன்னும் 100 மனைவிகளும் உண்டாம்.. எனவே இன்றைய கணக்கு 16108 + ராதை + கோபிகைகள்...

சாராகுமார்
13-09-2007, 03:06 PM
மதில்மேல் கண்ணகியா?மாதவியா?

அது எது என்று நமது வாழ்க்கைக்குள் வந்த பிறகுதான் தெரியும்,
கவிதை அருமை.வாழ்த்துக்கள்.

சுகந்தப்ரீதன்
15-09-2007, 08:47 AM

ச்சே இந்த கடவுள் எல்லாம் ரொம்ப மோசமப்பா...அதனால எனக்கு பிள்லையாரை மட்டும்தான் பிடிக்கும்....இன்னைக்கு எங்க தலைவருக்கு சதுர்த்தி அதை எதுக்கு கொண்டாடுராங்கன்னு தெரியாமலே கொன்டாடுறோம்..அதை விளக்கிவிடுங்கள் நண்பர் தாமரை செல்வரே....!

சுகந்தப்ரீதன்
15-09-2007, 08:49 AM
மதில்மேல் கண்ணகியா?மாதவியா?

அது எது என்று நமது வாழ்க்கைக்குள் வந்த பிறகுதான் தெரியும்,
கவிதை அருமை.வாழ்த்துக்கள்.

இருவருமில்லை மதில்மேல் நாம்தான் இருக்கிறோம்...அதான் குழப்பம்...நண்பரே...எனது வாழ்த்துக்களும் நன்றிகளும்..!

lolluvathiyar
01-11-2007, 11:26 AM
மாதவி கன்னகி சீதை இழுத்து ஒருவர் கவிதை எழுத இங்க என்னடானா எல்லா சாமிகளை இழுத்து பட்டிமன்றமே நடக்குது.

கன்னகிக்கு காத்திருக்கலாம் தப்பில்லை அவள் எப்படியும் வருவாள் (கிடைப்பாள்).
யார் முந்தராங்களோ அவ்ள் தான் கன்னகி யார் செக்கன்டோ அவள் தாம் மாதவி

பூமகள்
01-11-2007, 12:42 PM
நல்லதொரு கவிதை சொல்லி.....
தாமரை மலரின் மனோகரத்தில்
புராணம் அறிந்தோம்..!!

ரொம்ப நல்லதொரு திரி...!!
கவிதை அருமையோ அருமை..!!

பின்னூட்டங்கள் வியக்க, மகிழ, அறிய வைக்கின்றன.

கவிதைகொடுத்த ப்ரீதனுக்கும் பதிவுகளில் அசத்திய தாமரை அண்ணாவுக்கும் எனது நன்றிகளும் பாராட்டுகளும்..!!

சுகந்தப்ரீதன்
01-11-2007, 12:58 PM
மாதவி கன்னகி சீதை இழுத்து ஒருவர் கவிதை எழுத இங்க என்னடானா எல்லா சாமிகளை இழுத்து பட்டிமன்றமே நடக்குது.

அதுசரி இவ்வளவு நாளா உங்க கண்ணுல மாட்டாம இந்த பூனை தப்பிச்சிடுச்சி போலிருக்கு...நான் நன்றியை அமர் அண்ணனுக்குதான் சொல்லனும்... இல்லண்ணா தாமரை அண்ணாவ அப்பவே நீங்க தாலிச்சிருப்பீங்களே வாத்தியாரே..!

யார் முந்தராங்களோ அவ்ள் தான் கன்னகி யார் செக்கன்டோ அவள் தாம் மாதவி

ஆமாம் வாத்தியாரே நீங்க கல்யாணத்த மையமா வச்சி இத சொல்லுறீங்களா இல்ல கட்டில மையமா வச்சி சொல்லுறீங்களா..? நீங்க செகண்டத்தான் சூஸ் பண்ணிருப்பீங்கன்னு மன்றத்துல எல்லோருக்கும் தெரியுமாச்சே.. நான் சொல்றது சரிதானே வாத்தியாரே..?

சுகந்தப்ரீதன்
01-11-2007, 01:00 PM
ரொம்ப நல்லதொரு திரி...!!
கவிதை அருமையோ அருமை..!!
பின்னூட்டங்கள் வியக்க, மகிழ, அறிய வைக்கின்றன.
கவிதைகொடுத்த ப்ரீதனுக்கும் பதிவுகளில் அசத்திய தாமரை அண்ணாவுக்கும் எனது நன்றிகளும் பாராட்டுகளும்..!!

மிக்க நன்றி பூமகள் சகோதரி தங்களின் வாழ்த்துக்கு...!

யவனிகா
01-11-2007, 01:33 PM
நல்ல திரி. மேல் எழுப்பிய அமருக்கு நன்றி. கண்ணகியும் வேண்டாம்.மாதவியும் சண்டைக்காரி. இன்னும் பொறுங்கள் சுகந்தன்...பொறுமைக்கு இன்னும் கோவம் வந்து ஊர்வசி,ரம்பை,திலோத்தமை யாரையாவது அனுப்பும்...ஓடு மீன் ஓடஉறு மீன் வரும் வரை காத்திருங்கள்.

அறிஞர்
02-11-2007, 02:06 PM
சரித்திர நாயகிகளை மனதில் எண்ணி கவிதை..

அருமை.. நண்பரே.. நண்பர்களின் கருத்துக்கள் வெகு சிறப்பு

சுகந்தப்ரீதன்
03-11-2007, 06:45 AM
நல்ல திரி. மேல் எழுப்பிய அமருக்கு நன்றி. கண்ணகியும் வேண்டாம்.மாதவியும் சண்டைக்காரி. இன்னும் பொறுங்கள் சுகந்தன்...பொறுமைக்கு இன்னும் கோவம் வந்து ஊர்வசி,ரம்பை,திலோத்தமை யாரையாவது அனுப்பும்...ஓடு மீன் ஓடஉறு மீன் வரும் வரை காத்திருங்கள்.
மிக்க நன்றி அக்கா.. தங்களின் அறிவுறைபடியே காத்திருக்கிறேன்..!

சுகந்தப்ரீதன்
03-11-2007, 06:47 AM
சரித்திர நாயகிகளை மனதில் எண்ணி கவிதை..

அருமை.. நண்பரே.. நண்பர்களின் கருத்துக்கள் வெகு சிறப்பு
மிக்க நன்றி அறிஞர் அண்ணா... முதன்முதலாக எனது திரியில் தங்களின் வாழ்த்தை கண்டு மகிழ்கிறேன்..!