PDA

View Full Version : கேட்டதும் கிடைத்தது



aren
11-09-2007, 01:54 AM
கேட்டால் கிடைக்கும் என்றார்கள்
என் காதலியிடன் காதல் கேட்டேன்
கிடைத்தது என் கன்னத்தில்
ஒர் அடி!!!

jpl
11-09-2007, 02:07 AM
ஆரென் தளர வேண்டா மனம்,
காதலில் மோதல் கல் தோன்றி
மண் தோன்றா மரபு.
காதலில் ஓரடி முதலடியாய்
பரிமளிக்க வாழ்த்துக்கள்....
பாவடியால்.....

இளசு
11-09-2007, 06:28 AM
காலம் கூடிவந்தால்
அடிக்கிற கையே அணைக்கும்..

முன் வாழ்த்துகள் அன்பின் ஆரென்!

பிச்சி
11-09-2007, 06:33 AM
கேட்டால் கிடைக்கும் என்றார்கள்
என் காதலியிடன் காதல் கேட்டேன்
கிடைத்தது என் கண்ணத்தில்
ஒர் அடி!!!

விழும் ஒவ்வொர் அடிக்கும் காரணமுண்டு. நீங்கள் எப்படி கேட்டீர்கள்? :D :D

இளசு
11-09-2007, 06:35 AM
கேட்டால் கிடைக்கும் என்றார்கள்
என் காதலியிடன் காதல் கேட்டேன்
கிடைத்தது என் கண்ணத்தில்
ஒர் அடி!!!

கன்னத்தில் விழுந்த அடி-
வீங்கியதால் ஆனது
கண்ணத்தில்!!

அக்னி
11-09-2007, 12:33 PM
தந்தால் சிவக்கும்
கன்னம் என்றார்கள்...
தந்தாள் சிவந்தது...
முன்னர் அடி...
பின்னர் முத்தம்...

பாராட்டுக்கள் ஆரென் அவர்களே...

அக்னி
11-09-2007, 12:35 PM
இந்தக் கவிதை காதல்கவிதைகள் பகுதிக்கு மாற்றப்படுகின்றது.
நன்றி!

பொறுப்பாளர்
~அக்னி

அமரன்
11-09-2007, 12:55 PM
கன்னத்தில் விழுந்த அடி-
வீங்கியதால் ஆனது
கண்ணத்தில்!!
ஹஹ்ஹ்ஹ்ஹா......இதுவல்லவோ அண்ணா முத்திரை.
தலைப்பும் கெட்டதும் கிடைத்தது என்று வரவேண்டுமோ..

அமரன்
11-09-2007, 12:57 PM
அடிக்க அடிக்க
அம்மி நகரும்-அடி
கிடைக்க கிடைக்க
காதல்தேர் நகரும்..
நகர நகர
மம்மியின்
நற நறவும் வளரும்.

சிவா.ஜி
11-09-2007, 01:06 PM
அடித்தாளென்று அழுவதா,அடிக்கும் சாக்கில் கன்னம் தொட்டாளென்று மகிழ்வதா....அடியால் ..காதலுக்கு அடித்தளமிட்டாளென்று அகம் குளிர்வதா...காதல் கனிந்து காலம் கடக்கையில்.....நினைவூட்டி சிரிக்க வலியைக் கொஞ்சம் வைத்திருங்கள் ஆரென்.வாழ்த்துக்கள்.

கலைவேந்தன்
12-09-2007, 03:44 PM
அடி பலமா ஆரென்?
ஆடிப்போனீரோ?
ஆம்புலன்ஸ் வேணுமா?
ஆசை பறந்ததா?
ஆறுதல் போதுமா?

aren
12-09-2007, 03:47 PM
ஹஹ்ஹ்ஹ்ஹா......இதுவல்லவோ அண்ணா முத்திரை.
தலைப்பும் கெட்டதும் கிடைத்தது என்று வரவேண்டுமோ..

இது கொஞ்சம் ஓவராத்தெரியலை உங்களுக்கு.

aren
12-09-2007, 03:47 PM
அடி பலமா ஆரென்?
ஆடிப்போனீரோ?
ஆம்புலன்ஸ் வேணுமா?
ஆசை பறந்ததா?
ஆறுதல் போதுமா?


என்னதான் அடி கிடைத்தாலும்
எடுத்த காரியத்தை
முடிக்கமாட்டோம்ல நாங்க!!

தாமரை
12-09-2007, 03:48 PM
கேட்டால் கிடைக்கும் என்றார்கள்
என் காதலியிடன் காதல் கேட்டேன்
கிடைத்தது என் கன்னத்தில்
ஒர் அடி!!!

ஒண்ணுதானா..?? இப்ப முதல் அனுபவம் படிச்சாங்கன்னா அப்புறம்

மாறி மாறி
மாரி மாதிரி
அடியும் இடியும்..

aren
12-09-2007, 03:48 PM
அடித்தாளென்று அழுவதா,அடிக்கும் சாக்கில் கன்னம் தொட்டாளென்று மகிழ்வதா....அடியால் ..காதலுக்கு அடித்தளமிட்டாளென்று அகம் குளிர்வதா...காதல் கனிந்து காலம் கடக்கையில்.....நினைவூட்டி சிரிக்க வலியைக் கொஞ்சம் வைத்திருங்கள் ஆரென்.வாழ்த்துக்கள்.

இப்படி ஒரு ஐடியா இருக்குதா. தெரியாமப்போச்சே.

aren
12-09-2007, 03:49 PM
ஒண்ணுதானா..?? இப்ப முதல் அனுபவம் படிச்சாங்கன்னா அப்புறம்

மாறி மாறி
மாரி மாதிரி
அடியும் இடியும்..


இங்கேயும் வந்திட்டீங்களா. அப்ப இங்கேயும் மாட்டினேனா?

தாமரை
12-09-2007, 03:51 PM
இங்கேயும் வந்திட்டீங்களா. அப்ப இங்கேயும் மாட்டினேனா?

அப்ப அங்கயும் மாட்டிகிட்டீங்களா?:lachen001::lachen001::lachen001:

அமரன்
12-09-2007, 03:51 PM
அப்ப அங்கயும் மாட்டிகிட்டீங்களா?:lachen001::lachen001::lachen001:
இன்னைக்கு உங்களுக்கு ஸைடிஷ் ஆரென் அண்ணாவா...:icon_b::icon_b:

aren
12-09-2007, 03:52 PM
அப்ப அங்கயும் மாட்டிகிட்டீங்களா?:lachen001::lachen001::lachen001:

அங்கே மார்தட்டிக்கொண்டு இருக்கோம்ல. இங்கே அடிவாங்கிட்டோம், அதான் கொஞ்சம் ஜகா!!!

தாமரை
12-09-2007, 03:54 PM
அங்கே மார்தட்டிக்கொண்டு இருக்கோம்ல. இங்கே அடிவாங்கிட்டோம், அதான் கொஞ்சம் ஜகா!!!

அதாவது இருமல் வந்து பொறையேறி நெஞ்சைத் தடவிகிட்டு இருக்கீங்கன்னு சொல்லுங்க,,

இதுக்கே நெஞ்சு வலி வந்தா இன்னும் நெறைய இருக்கே!!!:aetsch013::aetsch013::aetsch013:

aren
12-09-2007, 03:56 PM
அதாவது இருமல் வந்து பொறையேறி நெஞ்சைத் தடவிகிட்டு இருக்கீங்கன்னு சொல்லுங்க,,

இதுக்கே நெஞ்சு வலி வந்தா இன்னும் நெறைய இருக்கே!!!:aetsch013::aetsch013::aetsch013:


எங்களுக்கு நெஞ்சுவலி எல்லாம் வராதுங்க. எங்க இதயம்தான் அங்கே கொடுத்துட்டோம்ல. பத்திரமா இருக்குது அங்கே.

சூரியன்
12-09-2007, 03:58 PM
அன்பு அடியை வாங்கிக் கொள்ள வேண்டியதுதானே?

தாமரை
12-09-2007, 03:58 PM
எங்களுக்கு நெஞ்சுவலி எல்லாம் வராதுங்க. எங்க இதயம்தான் அங்கே கொடுத்துட்டோம்ல. பத்திரமா இருக்குது அங்கே.

இதயம் வேற நெஞ்சு வேற .. தெரியாதா உங்களுக்கு..

அதெப்படி தெரியும்.. அதான் அம்மணி கொடுத்த வேகத்தில அத்தனையும் மாறி மாறி தானே ஞாபகம் வருது... :aetsch013::aetsch013::aetsch013:

aren
12-09-2007, 04:02 PM
இதயம் வேற நெஞ்சு வேற .. தெரியாதா உங்களுக்கு..

அதெப்படி தெரியும்.. அதான் அம்மணி கொடுத்த வேகத்தில அத்தனையும் மாறி மாறி தானே ஞாபகம் வருது... :aetsch013::aetsch013::aetsch013:


எங்களுக்கெல்லாம் தலைமுதல் கால் வரை ஒன்றுதான். எல்லாம் அவள் கையில் பத்திரமாக. அவள் பார்த்துக்கொள்வாள் என்ற நம்பிக்கையுடன் நான்.

சாராகுமார்
12-09-2007, 04:06 PM
கேட்டால் கிடைக்கும் என்றார்கள்
என் காதலியிடன் காதல் கேட்டேன்
கிடைத்தது என் கன்னத்தில்
ஒர் அடி!!!

நீங்கள் காதல் கேட்க வேண்டாம்

காதல் செய்வீர்.

அது அடி அல்ல...அல்ல..
அதையும் மீறி இடி...இடி.

அருமை.

aren
12-09-2007, 04:08 PM
நீங்கள் காதல் கேட்க வேண்டாம்

காதல் செய்வீர்.

அது அடி அல்ல...அல்ல..
அதையும் மீறி இடி...இடி.

அருமை.

எனக்குக் கிடைத்தது
உங்களுக்கு எப்படித் தெரிந்தது
அடி என்றே அனைவரிடமும்
சொல்லியிருக்கிறேன்
இடியென்று யாருக்கும் தெரியாது
அது நமக்குள் இருக்கட்டும்.

நன்றி வணக்கம்
ஆரென்

தாமரை
13-09-2007, 04:58 AM
எங்களுக்கெல்லாம் தலைமுதல் கால் வரை ஒன்றுதான். எல்லாம் அவள் கையில் பத்திரமாக. அவள் பார்த்துக்கொள்வாள் என்ற நம்பிக்கையுடன் நான்.

ஆஹா மொத்த சொத்தையும் எழுதிக் கொடுத்து இப்போ சொத்தை ஆயிட்டீங்களா!!! அந்த பத்திரம் தான் அவங்க கையிலயா..

தலையும் காலும் ஒண்ணுதானா?

அதாவது அவங்க உங்க குடுமியைப் பிடிக்கறதும் நீங்க அவங்க காலைப் பிடிக்கறதும் ஒண்ணுதான்னு சொல்லி மனசைத் தேத்திக்கிறீங்க,,

அப்படித்தானே!!!!!!!!

இலக்கியன்
13-09-2007, 02:45 PM
வாழ்த்துக்கள் அக்னி தொடரட்டும் உங்கள் கவிதைகள்

தாமரை
13-09-2007, 03:16 PM
வாழ்த்துக்கள் அக்னி தொடரட்டும் உங்கள் கவிதைகள்

அக்னியா???

அக்னி
13-09-2007, 03:18 PM
அக்னியா???
விட்டிடுங்கோ அண்ணா... இப்பிடியாவது கொஞ்சம் கவிஞராயிடறேன்...

aren
13-09-2007, 03:19 PM
வாழ்த்துக்கள் அக்னி தொடரட்டும் உங்கள் கவிதைகள்

ஹலோ!! என்ன ஆச்சு இலக்கியன்.