PDA

View Full Version : அரவா ராவா..?



தீபன்
02-05-2007, 12:39 AM
தமிழ் எழுத்து வடிவத்திலேயே எனக்கு சந்தேகம் வந்துவிட்டது நண்பர்களே...

தீர்த்து வைப்பீர்களா...?

ரகர வரிசையிலே ர் என்பது சரியா..? அல்லது ர போட்டு குற்றுப் போடுவது சரியா..? இப்பிடியே ரி, ரீ என்பவற்றிலும் ரானா போடுவதா அல்லது அரவை பயன்படுத்துவதா சரி..?

leomohan
02-05-2007, 09:25 AM
தமிழ் எழுத்து வடிவத்திலேயே எனக்கு சந்தேகம் வந்துவிட்டது நண்பர்களே...

தீர்த்து வைப்பீர்களா...?

ரகர வரிசையிலே ர் என்பது சரியா..? அல்லது ர போட்டு குற்றுப் போடுவது சரியா..? இப்பிடியே ரி, ரீ என்பவற்றிலும் ரானா போடுவதா அல்லது அரவை பயன்படுத்துவதா சரி..?

இது கணினி எழுத்துருவினால் வந்த குழப்பமாக இருக்கலாம்.

வழக்கமாக ர போட்டு புள்ளி போடும் வழக்கம் ர கடைசி எழுத்தாக இருந்தால்.

நடுவில் வரும் போது ர போட்டு புள்ளி வைப்பதில்லை. ர் என்று எழுதுகிறோம்.

ஆனால் கணினி மென்பொருட்கள் ர போட்டு புள்ளி வைக்க விடுவதில்லை.

தீபன்
02-05-2007, 11:38 PM
நன்றி நண்பரே.. ஆனால் நீங்கள் கூட வளக்கம் என்று நளுவத்தான் பார்க்கிறீர்கள்... சரியான விளக்கத்தை தரவில்லை! இலக்கணப்படி அல்லது தமிழ் அரிச்சுவடிப்படி எந்த வடிவம் சரியானது என்பதுதான் என் கேள்வி..?
மன்றத்தில் தமிழ் அறிஞர்கள் யாருமில்லையா..?

slwaran
10-09-2007, 04:10 PM
தோழர், தோழிகளே!
"ர்" என்பது சரியான தமிழ் எழுத்தா? அப்படியாயின் "ர" அடித்து குற்று வைப்பது என்ன எழுத்து? இதைப்பற்றி தமிழ் ஆர்வலர்கள் சற்று தெளிவுப்படுத்துங்கள்

மனோஜ்
10-09-2007, 04:18 PM
இதைபற்றிய சந்தோகம் முன்பு ஒரு முறை எழுப்பப்பட்டு பதியபட்டது என்று நினைக்கிறோன்

ஜெயாஸ்தா
15-09-2007, 10:42 AM
இதைபற்றிய சந்தோகம் முன்பு ஒரு முறை எழுப்பப்பட்டு பதியபட்டது என்று நினைக்கிறோன்

நண்பர்கள் சரியென்று எதைச் சொன்னார்கள்? (நான் அடிக்கும் போது கூட ர போட்டு புள்ளி வைத்தால் 'ர்' என்றுதான் வருகிறது)

அமரன்
15-09-2007, 10:47 AM
ஒத்த விடயம் ஓரிடத்தில் அலசப்படுவது சாலச் சிறந்தது. எனவே இதே உள்ளட்டக்கத்துடன் உள்ள மற்றொரு திரியுடன் இதை இணைக்கின்றேன்.
-பொறுப்பாளர்.

ஆதவா
18-09-2007, 12:31 PM
புத்தகங்கள், மற்றவர்களுடைய எழுத்துக்கள் என்று வரும் பொழுது "ர்" சரியான பதத்திலேயே வந்தது.... கணிணியில் சில எழுத்துருக்கள் (Fonts) சரியாக வடிவமைக்கப்படாததால் ஏற்பட்ட குழப்பமே தவிர "ர்" என்ற எழுத்தே சரியானது...

ர போட்டு ஒற்று வைக்கவேண்டிய அவசியமில்லை. ஏனெனில் நெடில் துணையெழுத்தும் "ர" வும் ஒரே வடிவத்தில் இருக்கிறது.

எந்த ஒரு இலக்கணமும் ர எழுதி ஒற்று வைக்கவில்லை.... இதில் எந்த ஒரு குழப்பமும் வேண்டியதில்லை

வவுனியன்
07-03-2008, 09:16 AM
யுனிகோட் முறையில் "ர்" எழுதுவது சரியானத? "ர்" என்று தமிழிழ் ஒரு எழுத்து உண்டா? "ர" வுக்கு மேல் குற்று வைத்தால் தானே அது சரியான "ர்" ஆகும். இந்த பிரச்சனையை தீர்ப்பதற்கு ஏதாவது வழி உண்டா?

ஷீ-நிசி
07-03-2008, 09:31 AM
'ர்' என்பது சரிதானேங்க.....

ர மேல புள்ளியெல்லாம் நீங்க வைக்கவே முடியாது கம்ப்யூட்டர் டைப்பிங்ல..... :)

வவுனியன்
07-03-2008, 09:58 AM
'ர்' என்பது சரிதானேங்க.....

ர மேல புள்ளியெல்லாம் நீங்க வைக்கவே முடியாது கம்ப்யூட்டர் டைப்பிங்ல..... :)
msword இல் பாமினி எழுத்துருவில் கொஞ்சம் டைப் பண்ணி பாருங்க..
ர மேல குற்று வரும்

praveen
07-03-2008, 10:40 AM
நல்ல சிந்தனை, நிறைய நேரம் இருக்கிறாதோ இப்படி சிந்திக்க :)

சரி ர வரிசையில் ர், ர ரா ரி ரீ ரு ரூ ரெ ரே ரை ரொ ரோ இதில் நீங்கள் சொன்னபடி எத்தனை இடத்தில் அம்மாதிரி வந்திருக்கிறது மற்றும் வரவில்லை என்று பார்த்தீர்களா. நீங்கள் சொல்லும் ர் தவிர ரி ரீ என்பதிலும் அம்மாதிரி ர போட்டு மேலே கொம்பு இடவில்லை.

இதுமாதிரி வேண்டுமென்றே விட்டிருக்க மாட்டார்கள் இம்மாதிரி யுனிகோடாக்கம் செய்த வல்லுநர்கள். புழக்கத்தில் இம்மாதிரி எழுதுவது குறைந்ததால் வழக்கத்தில் உள்ளதை அப்படி தந்திருக்கிறார்கள். இதனால் நிறைய இங்க் மற்றும் எழுதும் நேரம் (ஒரு எழுத்துக்கு அல்ல, அதே எழுத்து திரும்ப திரும்ப வருவதற்கு) மிச்சம் என்று கண்டிருப்பார்களோ என்னவோ?.

எனக்கு இன்னும் ஆராய்ந்ததில் தெரிந்த சில விசயங்கள்

ர என்ற எழுத்தை ர் (புள்ளி இல்லாமல்) இட்டால் பின்னர் அடுத்து ரா என்று இடும்போது பிரச்சினை வரும் என்பதால் அதை கீழே நீட்டி விட்டிருக்கிறார்கள்.

ரெ, ரே இவற்றில் அடுத்து ரோ ரொ என வரும் போது பிரச்சினை வரும் என்பதாலும் அதனை நீட்டி விட்டிருக்கிறார்கள்.

இன்னும் ஆராய்ச்சி செய்யலாம் வேறு வேலை இருப்பதால் இத்தோடு விட்டு விடுகிறேன் :)

அமரன்
07-03-2008, 01:21 PM
மூவருக்கு கணினித்தமிழ் தொடர்பான ஒரே சந்தேகம். மூவர் பதிவுகளும் கூட்டாக்கப்படுகிறது.

இளசு
07-03-2008, 07:07 PM
அடிக்கடி நிறுத்தி, ஊன்றி, எடுத்து எழுதினால்
எழுத்தாணி ஓலையைச் சேதப்படுத்தும் என்பதால்
கூட்டெழுத்துகள் அதிகம் பழந்தமிழில்.

பின் அச்சில் அவை குறைந்தன.. அச்சுப்பொறி வசதிக்காக..
கணினியில் இன்னும் குறைவு.. ர் போல..

காலத்துக்கேற்ற மாற்றம். நல்ல மாற்றம்.