PDA

View Full Version : பிறந்த நாள்.



சாராகுமார்
10-09-2007, 03:46 PM
அவனுக்கு பிறந்த நாள்..

உணவகத்துக்கு போகலாம்
என்றாள் மனைவி...
கடற்கரைக்கு போகலாம்
என்றார்கள் பிள்ளைகள்...
சரி என்றான் அவன்..

இங்கே
காலையில் சாமி கும்பிட்டுவிட்டு
பாயாசம் செய்துவிட்டு
மகன் வருகைக்காக...
காத்திருந்தாள்
முதியோர் இல்லத்தில்
தாய்.

மனோஜ்
10-09-2007, 03:48 PM
காலம் நவினம் என்று செல்லி பழையவை மறக்கப்படுகிறது
அந்த பழையதில் பாசமும் மறக்கபடுவது கொடுமைதான்
கவிதை அருமை சாராகுமார்

அறிஞர்
10-09-2007, 03:50 PM
புறக்கணிக்கப்படும் தாய் பற்றி... அருமையான வரிகள்....

பெற்றவர்களுக்கு முதல் மரியாதை செய்வது தான் பிறந்த நாளின் முதல் கடமை...

சாராகுமார்
10-09-2007, 04:28 PM
மனோஜ் அவர்களுக்கும்,அறிஞர் அவர்களுக்கும் நன்றிகள் பல பல.

அக்னி
10-09-2007, 09:37 PM
தன் குழந்தையின்
பிறப்பிற்காய்
காத்திருத்தல்..,
தாய்மையின் வரம்...
தன் பிள்ளையின்
பிறந்த நாளுக்காய்
காத்திருத்தல்..,
தாய்மையின் பரிதாபம்...

பாராட்டுக்கள் சாராகுமார்...

சாராகுமார்
11-09-2007, 03:45 PM
தன் குழந்தையின்
பிறப்பிற்காய்
காத்திருத்தல்..,
தாய்மையின் வரம்...
தன் பிள்ளையின்
பிறந்த நாளுக்காய்
காத்திருத்தல்..,
தாய்மையின் பரிதாபம்...

பாராட்டுக்கள் சாராகுமார்...

நன்றி அக்னி அவர்களே.

உங்க கவியும் அருமை.

அமரன்
11-09-2007, 05:36 PM
காத்திருப்பு என்பது தாய்மையுடன் இரண்டறக்கலந்தது. ஒவ்வொரு நொடியும் காத்திருக்கிறாள் தாய். அந்நொடிகளில் சில ஆனந்த வலிதரும். பல அனர்த்த வலிதரும். சாரா சொன்னகாத்திருப்பு வலி தாய்மைக்கு மட்டுமல்ல மனிதத்திற்கே அவலம் தரும் அனர்த்தம். பாராட்டுக்கள் சாரா. தொடருங்கள்.

அன்புரசிகன்
11-09-2007, 05:40 PM
அண்மையில் பார்த்த விசுவின் படம் ஒன்று ஞாபகம் வருகிறது... தாய் மகனுக்காக லட்டு தயாரித்து வைத்திருப்பார். தந்தை அதை சுவைத்து பார்க்க ஆசைப்பட தாயார் தடுத்து மகனுக்காக வைக்கிறார். இறுதியில் மகன் மாமனார் வீட்டிற்கு சென்றுவிடுகிறார்.... படம் உருக்கமாக இருக்கும்.

கவிக்கு நன்றிகள் சாரா..

சாராகுமார்
11-09-2007, 06:19 PM
அமரன் அவர்களுக்கும்,
அன்பு ரசிகன் அவர்களுக்கும்
நன்றி நன்றி.

இலக்கியன்
11-09-2007, 09:17 PM
பெற்ற பிள்ளைகளால் புறக்கணிக்கப்படும் தாயின் நிலை சொல்லும் கவி மிகவும் நன்றாக உள்ளது

சிவா.ஜி
12-09-2007, 04:51 AM
பிறப்பித்தவளையே நிராகரித்துவிட்டு பிறந்தநாள் கொண்டாடும் மகன்கள் நாளை அவர்கள் பெற்ற பிள்ளைகளும் பிறந்தநாள் கொண்டாடுவார்கள்...அப்போது இவர்கள் இருக்கும் நிலையென்ன என்பதை ஒரே ஒரு வினாடி யோசித்தாலும்....காப்பு இல்லங்கள் காணாமல் போய்விடும்.நல்ல கவிதைக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.

aren
12-09-2007, 10:54 AM
உங்கள் கவிதை, தாயையும் தந்தையும் அநாதை இல்லத்தில் விடும் வர்க்கத்தினருக்கு ஒரு சாட்டையடி. அருமையான கவிதை வரிகள். பாராட்டுக்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

சாராகுமார்
12-09-2007, 01:45 PM
வணக்கம்.
அன்பு இலக்கியன்,
அன்பு சிவா.ஜி,
அன்பு ஆரென் அனைவருக்கும் நன்றி நன்றி.

ஷீ-நிசி
12-09-2007, 02:55 PM
மிக செமத்தியான கரு....

தொடருங்கள் சாரா.. இன்னும் பல செதுக்கள்களோடு..

வாழ்த்துக்கள்!

சாராகுமார்
14-09-2007, 07:21 AM
மிக செமத்தியான கரு....

தொடருங்கள் சாரா.. இன்னும் பல செதுக்கள்களோடு..

வாழ்த்துக்கள்!

நன்றி நன்றி திரு.நிசி அவர்களே.

lolluvathiyar
14-09-2007, 11:33 AM
இது கூட பரவாயில்லை
அதைவிட கொடுமை மனைவி குழந்தைகளையாவது வெளியே அழைத்து போகமாட்டார்கள். மாறாகா கெர்ல் பிரென்ட்ஸ் ஹோட்டலுக்கு கூட்டி செல்வார்கல். கெர்ல் பிரென்ட்ஸ் இல்லாதவர்கள் ஆன் நன்பர்களை அழைத்து தன்னி பார்ட்டி அல்லவா வைக்க போவார்கள்.

சாராகுமார்
14-09-2007, 02:35 PM
இது கூட பரவாயில்லை
அதைவிட கொடுமை மனைவி குழந்தைகளையாவது வெளியே அழைத்து போகமாட்டார்கள். மாறாகா கெர்ல் பிரென்ட்ஸ் ஹோட்டலுக்கு கூட்டி செல்வார்கல். கெர்ல் பிரென்ட்ஸ் இல்லாதவர்கள் ஆன் நன்பர்களை அழைத்து தன்னி பார்ட்டி அல்லவா வைக்க போவார்கள்.

நன்றி வாத்தியார் அவர்களே.

இது அதைவிட கொடுமையானது.

ஓவியன்
17-09-2007, 07:49 PM
பெற்றவளை முதியோர் இல்லத்தில் தள்ளி விட்டு மனைவியுடனும் மக்களுடனும் பிறந்த நாளா....?

அது பிறந்த நாளல்லா, உண்மை அன்பின் இறந்த நாள்!!!

சுட்டெரிக்கும் யதார்த்த வரிகளுக்கு வாழ்த்துக்கள் சாராகுமார்!.

ஆதவா
18-09-2007, 10:50 AM
யாரோ ஒரு கவிஞர் எழுதிய வரிகள்... சரியாக ஞாபகமில்லை.

கனத்த பெருமூச்சுக்கள்
முதியோர் இல்லத்தைக் கடக்கையில்..

மேற்கண்ட இருவரிகளை விரித்து எழுதியிருக்கிறீர்கள். பெரும்பாலும் முதியோர் இல்லக் கவிதைகள் விதவிதமாய் விளைந்துவிட்ட இந்த வேளையில் வித்தியாசப்படுத்தவேண்டியவை வரிகள் மற்றும் வார்த்தைகளால் மட்டுமே!

புறக்கணிக்கப்படும் மகனைப் புறக்கணிக்க பேரனிருப்பான்... காலம் இட்ட கடமைகளைச் செய்துவிட்டால் போதும்.... சொர்க்கத்து வாசல் திறந்தே இருக்கும்...

சாராகுமார்
18-09-2007, 03:09 PM
நன்றி திரு ஓவியன் அவர்களே.

நன்றி திரு.ஆதவா அவர்களே.

நன்றி.

தாமரை
18-09-2007, 03:22 PM
அவனுக்கு பிறந்த நாள்..

உணவகத்துக்கு போகலாம்
என்றாள் மனைவி...
கடற்கரைக்கு போகலாம்
என்றார்கள் பிள்ளைகள்...
சரி என்றான் அவன்..

இங்கே
காலையில் சாமி கும்பிட்டுவிட்டு
பாயாசம் செய்துவிட்டு
மகன் வருகைக்காக...
காத்திருந்தாள்
முதியோர் இல்லத்தில்
தாய்.

:icon_rollout:
அவனாசை என்னவென்று
கேட்டான்
நண்பன்
பதில்
கனத்த மௌனம்..

:icon_b:

சாராகுமார்
18-09-2007, 03:25 PM
நன்றி தாமரை அவர்களே.

தாமரை
18-09-2007, 03:30 PM
அவன் பிறக்கும் முன்
அவளது வயிறு கனத்தது..
வளர்ந்த போது கைகள் கனத்தன..
வருவாய்த் தேடித்தந்த போது
பைகல் கனத்தன
இன்னொருத்தி பிரித்த போது
இதயம் கனத்தது

மண்ணுக்கு மரம் பாரமா
கேட்டவன் சென்றுவிட்டான்..
மரத்துக்கு
மண் பாரமானதை
அறியாமலேயே!!

சாராகுமார்
18-09-2007, 03:39 PM
நன்றி தாமரை அவர்களே.