PDA

View Full Version : இருபது/20 உலகக் கோப்பைத் தொடர்..



ராஜா
10-09-2007, 03:35 PM
http://www.dinakaran.co.in/epaperdinakaran/1192007/11092007_DKN_CHN_13-2.jpg
நன்றி-தினகரன்

போட்டிகள் அட்டவணை..

11 Sep 2007 South Africa vs West Indies

1st Match Group Stage,Group A, New Wanderers Stadium, Johannesburg

Live action starts from: 16:00 GMT (21:30 IST)


12 Sep 2007 Australia vs Zimbabwe

4th Match Group Stage, Group B, Newlands, Cape Town

Live action starts from: 16:00 GMT (21:30 IST)


12 Sep 2007 Kenya vs New Zealand

2nd Match Group Stage, Group C, Kingsmead, Durban

Live action starts from: 08:00 GMT (13:30 IST)


12 Sep 2007 Pakistan vs Scotland

3rd Match Group Stage, Group D, Kingsmead, Durban

Live action starts from: 12:00 GMT (17:30 IST)


13 Sep 2007 Bangladesh vs West Indies

5th Match Group Stage, Group A, New Wanderers Stadium, Johannesburg

Live action starts from: 08:00 GMT (13:30 IST)


13 Sep 2007 England vs Zimbabwe

6th Match Group Stage, Group B, Newlands, Cape Town

Live action starts from: 12:00 GMT (17:30 IST)


13 Sep 2007 India vs Scotland

7th Match Group Stage, Group D, Kingsmead, Durban

Live action starts from: 16:00 GMT (21:30 IST)


14 Sep 2007 Australia vs England

9th Match Group Stage, Group B, Newlands, Cape Town

Live action starts from: 12:00 GMT (17:30 IST)


14 Sep 2007 India vs Pakistan

10th Match Group Stage, Group D, Kingsmead, Durban

Live action starts from: 16:00 GMT (21:30 IST)


14 Sep 2007 Kenya vs Sri Lanka

8th Match Group Stage, Group C, New Wanderers Stadium, Johannesburg

Live action starts from: 08:00 GMT (13:30 IST)


15 Sep 2007 New Zealand vs Sri Lanka

11th Match Group Stage, Group C, New Wanderers Stadium, Johannesburg

Live action starts from: 12:00 GMT (17:30 IST)


15 Sep 2007 South Africa vs Bangladesh

12th Match Group Stage, Group A, Newlands, Cape Town

Live action starts from: 16:00 GMT (21:30 IST)

அறிஞர்
10-09-2007, 03:38 PM
வெற்றி பெறும் அணி பற்றி ஓட்டெடுப்பு நடத்தலாமே...

ராஜா
10-09-2007, 03:42 PM
இருபது/20 கிரிக்கெட்...

தற்போதைய சர்வதேச தரவரிசைப் பட்டியல்.


1. ஆஸ்திரேலியா.

2. இங்கிலாந்து.

3. மேற்கு இந்தியத் தீவுகள்.

4. வங்க தேசம்.

5. நியூசிலாந்து.

6. இந்தியா.

7. பாகிஸ்தான்.

8.தென் ஆப்பிரிக்கா.

9. இலங்கை.

10. ஜிம்பாப்வே.
_________________

மனோஜ்
10-09-2007, 03:46 PM
தொடர்ந்து தாருங்கள் அண்ணா:icon_08:( மன்னிங்க பதிவு மாற்றம்)

ராஜா
10-09-2007, 03:47 PM
இருபது/20 போட்டியின் முக்கிய விதிமுறைகள்.. --------------------------------------------------

நேர அளவு குறித்த விதிமுறைகள்..

1. போட்டியிடும் அணிகள் அதிகபட்சமாக 20 சுற்றுகள் [ஓவர்கள்] மட்டுமே பந்து வீச வேண்டும்.

20 ஓவர்கள் பந்துவீச, 75 மணித்துளிகள் [1 மணி, 15 நிமிடம்] அனுமதிக்கப்படும்.
கால அவகாசம் குறையும் பட்சத்தில், ஒவ்வொரு 3.75 மணித்துளிக்கும் [ 3 நிமிடம், 45 விநாடிகளுக்கும்] 1 ஓவர் வீதம் குறைக்கப்படும். தாமதமாக பந்து வீசும் அணிகள் ஆடவேண்டிய ஓவர்களும் இவ்வாறே குறைக்கப்படும்.

2.ஒரு அணி ஆடி முடித்தபிறகு, அடுத்த அணி தயாராவதற்கு சாதாரணமாக 15 மணித்துளிகள் அவகாசம் [இடைவேளை] கொடுக்கப்படும். எனினும், தவிர்க்கமுடியாத காரணங்களால் 20 ஓவர்கள் என்பது குறைக்கப்படுமேயானால், இடைவேளையும் 10 மணித்துளிகளாகக் குறைக்கப்படலாம்.

3. ஒரு மட்டையாளர் ஆட்டமிழக்கும் தருவாயில், அடுத்து வரும் மட்டையாளர் விக்கெட் விழுந்து 30 விநாடிகளுக்குள் பந்தை எதிர்கொள்ளத் தயாராக இருக்கவேண்டும்.. தவறும் பட்சத்தில் TIMED OUT முறையில் ஆட்டமிழப்பார்.


4. குறைந்த பட்ச ஓவர்கள்

ஒரு போட்டி கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட...

குறைந்தபட்சம் 5 ஓவர்கள் வீசி முடிக்கப்பட்டிருக்க வேண்டும்.

முதல் அணி, முழு ஓவர்களும் பந்து வீசி, அடுத்து தன் மட்டை வீச்சை 5 முழு ஓவர்களுக்கும் ஆடியிருந்து ஆட்டம் தடை படுமேயாயின் டக்வொர்த் & லூயிஸ் முறையில் முடிவு அறிவிக்கப்படும்.

5. களத்தடுப்பு விதிமுறைகள்..

முதல் 6 ஓவர்களுக்கு களத்தடுப்பு [FIELDING] விதிமுறைகள் அமலில் இருக்கும்.

6. வீச்சாளர்களுக்கான அதிகபட்ச ஓவர்கள்..

ஒவ்வொரு வீச்சாளரும், அதிகபட்சமாக 5 ஓவர்கள் மட்டுமே வீச அனுமதிக்கப்படுவார். ஆட்டத்தின் மொத்த ஓவர்கள் [20-ஐ விட] குறைக்கப்படும் தருவாயில் மொத்த ஓவர்களில் 5-ல் ஒரு பங்கு மட்டுமே ஒவ்வொரு வீச்சாளரும் வீச அனுமதிக்கப்படுவார்.

7. தாமதமாக வீசப்படும் ஓவர்களுக்கான அபராதங்கள்..

குறிப்பிட்ட கால அவகாசத்தில் [1மணி, 15 நிமிடம்] வீசி முடிக்கப்படாத ஒவ்வொரு ஓவருக்கும் ஆறு ஓட்டங்கள் அபராதமாக விதிக்கப்பட்டு எதிரணியின் கணக்கில் சேர்க்கப்படும். [ 20 வது ஓவரின் முதல் பந்தை வீச [1 மணி, 15 நிமிடத்துக்குள்] தயாராக இருக்கும் அணிக்கு இவ்விதி பொருந்தாது.

ஒரு வீச்சாளர் பந்துவீச தயாராக இருக்கும்போது, ஒரு மட்டையாளர் தேவையின்றி நேர விரயம் செய்வாரேயானால், அவர் அணி எண்ணிக்கையில் 5 ஓட்டங்களைக் குறைக்கவும் விதிமுறை வகை செய்கிறது.

8. FREE HIT..

ஒரு வீச்சாளர் பந்துவீசும் எல்லையைத் தாண்டி [OVER STEPPING] வீசும் பந்துக்கு 2 அபராத ஓட்டங்கள் எதிரணியின் கணக்கில் சேர்க்கப்படும். அதுமட்டுமல்லாது, அடுத்து வீசப்படும் பந்து ஃப்ரீ ஹிட் ஆக அறிவிக்கப்படும். இதனால் அந்தப் பந்தில், ரன் அவுட் என்ற முறையைத் தவிர வேறு எந்தவிதத்திலும் மட்டையாளரை ஆட்டம் இழக்கச் செய்ய இயலாது.

அறிஞர்
10-09-2007, 03:48 PM
இதில் இந்தியா இல்லாதது வருத்தம் தான் அண்ணாஇந்தியாதான் இருக்கே.. மனோஜ்.. இந்தியா இல்லாத கிரிக்கெட்டா

ராஜா
10-09-2007, 03:50 PM
இதில் இந்தியா இல்லாதது வருத்தம் தான் அண்ணா

6 வதாக இருப்பது இந்தியாதான்..

இருபது/20 விளையாட்டுகள் ஓரிரு வருடங்களாகத்தான் ஆடப்பட்டு வருகின்றன. தரவரிசைகள் உலகக் கோப்பைத்தொடருக்குப் பின் மாறக்கூடும்.

ராஜா
10-09-2007, 03:54 PM
இருபது 20 கிரிக்கெட். அதிரடி வீரர்கள்..

5. சனத் ஜெயசூர்யா.. [இலங்கை]

http://www.kaputa.com/slcricket/imgx/sanath.jpg

Full name : Sanath Teran Jayasuriya

Born : Monday, June 30, 1969, Matara

Current age : 38 years 80 days

Major teams : Sri Lanka, ACC Asian XI, Asia XI, Bloomfield Cricket and Athletic Club, Colombo Cricket Club, Marylebone Cricket Club, Somerset

Playing role : Batsman, All-rounder

Batting style : Left-hand bat

Bowling style : Slow left-arm orthodox

Statsguru : Test player, ODI player

ராஜா
10-09-2007, 03:55 PM
இருபது 20 கிரிக்கெட். அதிரடி வீரர்கள்..

யுவராஜ் சிங் .. [இந்தியா]

http://newsimg.bbc.co.uk/media/images/41350000/jpg/_41350900_yuvraj_ap416.jpg

Full name : Yuvraj Singh

Born : Saturday, December 12, 1981, Chandigarh

Current age : 25 years 277 days

Major teams : India, Asia XI, Punjab, Yorkshire

Nickname : Yuvi

Playing role : Higher Middle-Order Batsman

Batting style : Left-hand bat

Bowling style : Slow left-arm orthodox

Statsguru : Test player, ODI player

http://clients.rediff.com/philipseyefi/supersix/16yuvraj.jpg

ராஜா
10-09-2007, 03:56 PM
இருபது 20 கிரிக்கெட். அதிரடி வீரர்கள்..

.ஆடம் கில்கிறிஸ்ட்.. [ஆஸி]

http://www.smh.com.au/ffximage/2006/02/14/gilly_narrowweb__300x416,0.jpg

Full name : Adam Craig Gilchrist

Born : Tuesday, September 14, 1971, Bellingen, New South Wales

Current age : 35 years 4 days

Major teams : Australia, ICC World XI, New South Wales, Western Australia

Nickname : Gilly, Churchy

Playing role : Wicketkeeper batsman

Batting style : Left-hand bat

Bowling style : Right-arm offbreak

Height : 1.86 m

Statsguru : Test player, ODI player

ராஜா
10-09-2007, 03:57 PM
இருபது 20 கிரிக்கெட். அதிரடி வீரர்கள்..

. மகேந்திர சிங் தோனி.. [இந்தியா]

http://newsimg.bbc.co.uk/media/images/41350000/jpg/_41350902_dhoni_afp416.jpg

Full name : Mahendra Singh Dhoni

Born : Tuesday, July 07, 1981, Ranchi, Bihar

Current age : 26 years 70 days

Major teams : India, Asia XI, Jharkhand

Nickname : Mahi

Playing role : Middle-Order Batsman

Batting style : Right-hand bat

Bowling style : Right-arm medium

Statsguru : Test player, ODI player

ராஜா
10-09-2007, 03:58 PM
இருபது 20 கிரிக்கெட். அதிரடி வீரர்கள்..

. ஷாஹித் அஃப்ரிதி... [பாகிஸ்தான்].

http://static.flickr.com/37/89988557_daec8cb65c.jpg

Full name : Sahibzada Mohammad Shahid Khan Afridi

Born : Saturday, March 01, 1980, Khyber Agency

Current age : 27 years 198 days

Major teams : Pakistan, Asia XI, Griqualand West, Habib Bank Limited, ICC World XI, Karachi, Leicestershire

Playing role : Batsman, All-rounder

Batting style : Right-hand bat

Bowling style : Right-arm medium, Legbreak googly

Statsguru : Test player, ODI player

ராஜா
10-09-2007, 04:00 PM
இருபது 20 கிரிக்கெட். அதிரடி வீரர்கள்..

கிரேம் ஸ்மித்... [தென் ஆப்பிரிக்கா.. அணித்தலைவர்]

http://www.abc.net.au/reslib/200704/r135501_457513.jpg

Full name : Graeme Craig Smith

Born : Sunday, February 01, 1981, Johannesburg, Transvaal

Current age : 26 years 226 days

Major teams : South Africa, Africa XI, Cape Cobras, Gauteng, Hampshire Cricket Board, ICC World XI, Somerset, Western Province

Playing role : Batsman

Batting style : Left-hand bat

Bowling style : Right-arm offbreak

Statsguru : Test player, ODI player

ராஜா
10-09-2007, 04:01 PM
இருபது 20 கிரிக்கெட். அதிரடி வீரர்கள்..

. கிரிஸ் கெயில்... [மேற்கு இந்தியத் தீவுகள்..]

http://www.hinduonnet.com/tss/tss2944/images/20061104010800801.jpg

Full name : Christopher Henry Gayle

Born : Friday, September 21, 1979, Kingston, Jamaica

Current age : 27 years 360 days

Major teams : West Indies, ICC World XI, Jamaica, Worcestershire

Playing role : Batsman, All-rounder

Batting style : Left-hand bat

Bowling style : Right-arm offbreak

Statsguru : Test player, ODI player

ராஜா
10-09-2007, 04:02 PM
இருபது 20 கிரிக்கெட். அதிரடி வீரர்கள்..

.ஸ்காட் ஸ்டைரிஸ்... [நியூசீலாந்து].

http://www.spinner.co.nz/0101/styrus.jpg

Full name : Scott Bernard Styris

Born : Thursday, July 10, 1975, Brisbane, Queensland, Australia

Current age : 32 years 69 days

Major teams : New Zealand, Auckland, Durham, Middlesex, Northern Districts

Nickname : The Rus

Playing role : All-rounder

Batting style : Right-hand bat

Bowling style : Right-arm medium

Height : 5 ft 10 in

Education : Hamilton Boys High School

Statsguru : Test player, ODI player

ராஜா
10-09-2007, 04:03 PM
இருபது 20 கிரிக்கெட். அதிரடி வீரர்கள்..

.முகம்மது அஷ்ரஃபுல்.. [ வங்கதேச அணித்தலைவர்].

http://apache.cricnjoy.com/repository/images/playerstats/bangladesh_mohammedashraful_l.jpg...http://www.foxsports.com.au/common/imagedata/0,5001,5415352,00.jpg

Full name : Mohammad Ashraful

Born : Saturday, July 07, 1984, Dhaka

Current age : 23 years 69 days

Major teams : Bangladesh, Asia XI, Dhaka Division, Dhaka Metropolis

Nickname : Ashraful Matin

Playing role : Batsman

Batting style : Right-hand bat

Bowling style : Legbreak

Statsguru : Test player, ODI player

ராஜா
10-09-2007, 04:04 PM
இருபது 20 கிரிக்கெட். அதிரடி வீரர்கள்..

. 5x6 புகழ் .. டிமிட்ரி மாஸ்கரேனஸ்... [இங்கிலாந்து].

http://www.cricinfo.com/db/PICTURES/CMS/76900/76935.jpg

அக்னி
11-09-2007, 02:51 AM
20/20 கிரிக்கெட் தகவல் திரட்டை, தொகுத்துத் தரும் ராஜா அண்ணாவுக்கு நன்றி...

ஓவியன்
11-09-2007, 03:02 AM
அசத்தலாக தொகுத்து தரும் ராஜா அண்ணனுக்கு நன்றிகளும் பாராட்டுக்களும்...........!!!

ராஜா அண்ணா, நேர்த்தியாக ஒரு திரியைத் தொகுந்து வழங்குவதிலே உங்களுக்கு நிகர் நீங்களே தான் - பாராட்டுக்கள்!.

ராஜா
11-09-2007, 08:41 AM
இதுதாங்க அந்தக் கோப்பை..!

போட்டோவுக்கு போஸ் கொடுக்கறதுக்காச்சும் நம்ம ஆள் கைக்கு வந்துச்சே..!

http://i115.photobucket.com/albums/n296/sspm3692/fpn07.jpg

ஷீ-நிசி
11-09-2007, 10:13 AM
மேட்ச் எத்தனை மணிக்கு தொடங்குது...

போட்டி அட்டவணை கிடைக்குமா.. ராஜா சார்...

அமரன்
11-09-2007, 10:14 AM
அருமையான தொகுப்பு.
தோனி கையில் கோப்பையுடன் புதிய படம் காலம் சில கடந்தபின்ன்னும் கிடைத்தால் மகிழ்ச்சி.

அமரன்
11-09-2007, 10:15 AM
மேட்ச் எத்தனை மணிக்கு தொடங்குது...

போட்டி அட்டவணை கிடைக்குமா.. ராஜா சார்...
மேலே உள்ளது ஷீ.

ராஜா
11-09-2007, 10:15 AM
மேட்ச் எத்தனை மணிக்கு தொடங்குது...

போட்டி அட்டவணை கிடைக்குமா.. ராஜா சார்...

இந்தத் திரியின் முதல் பதிவே அதுதான் ஷீ..!

ராஜா
11-09-2007, 10:16 AM
http://www.cricketnext.com/pix/stats/worldmap2.jpg

mania
11-09-2007, 10:17 AM
ராஜாவின் தலைப்பு செய்தியை பார்த்ததும் எனக்கு வந்த நினைவு...
எந்த வருடம் என ஞாபகம் இல்லை. கவாஸ்கர் ஒரு மேட்சில் வரிசையாக கேட்சுகளை கோட்டை விட்டு மேட்சையும் பரிதாபமாக தோற்று....அவசரம் அவசரமாக ப்ளேனை பிடிக்க முற்பட்டுக்கொண்டிருந்தார். அப்போது ஒரு நிருபர் வந்து ஏதோ கேட்கவே கவாஸ்கர் பொறுமையில்லாமல் "எனக்கு நேரமில்லை இப்போ நான் ப்ளேனை பிடித்தாக வேண்டும் "என்றார். அதற்கு அந்த நிருபர் "பெட்டர் லக் திஸ் டைம் "என்றாராம். இது எப்படி இருக்கு....!!!???
அன்புடன்
மணியா..

ஷீ-நிசி
11-09-2007, 10:22 AM
நன்றி அமரன்... பார்க்கவில்லை...

இது D.D யில் லைவ் பன்னுவார்களா என்பது தெரியவில்லையே....

ராஜா
11-09-2007, 10:23 AM
கேட்ச் கோட்டை விடுவது ரொம்பகாலமாகவே இருக்குன்னு தெரியுது..!

நன்றி அண்ணா..! அடிக்கடி இதுபோன்ற துணுக்குகளை அள்ளித்தெளித்து இந்தத் திரியை சுவையானதொன்றாக மாற்றுங்கள்.

ராஜா
11-09-2007, 10:26 AM
நன்றி அமரன்... பார்க்கவில்லை...

இது D.D யில் லைவ் பன்னுவார்களா என்பது தெரியவில்லையே....

இந்தியா பங்குபெறும் போட்டிகளும், அரை இறுதி மற்றும் இறுதிப் போட்டிகளும் ஒளிபரப்பு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது ஷீ..!

mania
11-09-2007, 10:33 AM
நன்றி அமரன்... பார்க்கவில்லை...

இது D.D யில் லைவ் பன்னுவார்களா என்பது தெரியவில்லையே....

ஸ்டார் கிரிக்கெட்டில் ஹிந்தி/தமிழ், ஈஸ்பிஎன்னில் ஆங்கிலம் .டி டி தெரியவில்லை (இதுவரை)
அன்புடன்
மணியா.

அக்னி
11-09-2007, 10:34 AM
தலையின் துணுக்கும், ராஜா அண்ணாவின் கிரிக்கெட் துளிகளும்,
கலந்து பருகும்போது தித்திக்கிறது...

ராஜா
11-09-2007, 10:49 AM
இருபது/20 போட்டியின் முக்கிய விதிமுறைகள்..

டை-பிரேக்கர் விதி..

அவசியம் முடிவு கண்டே ஆகவேண்டிய அரை இறுதி மற்றும் இறுதிப்போட்டிகள் டை ஆகுமேயானால், முடிவு காண்பதற்கு கீழ்க்கண்ட விதி துணை செய்கிறது.

ஒவ்வொரு அணியும் 5 வீச்சாளர்களைத் தேர்வு செய்து, ஒரு முனையில் இருந்து எதிர் முனையில் இருக்கும் விக்கெட்டூகளை நோக்கி பந்து வீசச் சொல்ல வேண்டும். [மட்டையாளர் இருக்கமாட்டார்]. அதிகமுறை விக்கெட் [ஸ்டம்ப்]களைத் தாக்கும் அணி எதுவோ, அதுவே வென்றதாகக் கருதப்படும்.

ராஜா
11-09-2007, 11:13 AM
இருபது/20 போட்டியின் முக்கிய விதிமுறைகள்..

களத் தடுப்பு வியூகம் குறித்த விதிமுறைகள்..

ஒவ்வொரு போட்டியிலும் முதல் 6 ஓவர்களில் களத் தடுப்பு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும்.. அப்போது, 2 தடுப்பாளர்கள் மட்டுமே 30 கெஜம் வட்டத்துக்கு வெளியே நிற்க அனுமதிக்கப்படுவார்கள்.

மீதி 14 ஓவர்களிலும், 5 தடுப்பாளர்களுக்கு மேல் அந்த 30 கெஜம் வட்டத்துக்கு வெளியே நிற்கக்கூடாது.

ஓவியன்
11-09-2007, 03:11 PM
சாதாரண போட்டிகளை விட கட்டுப்பாடுகள் கூடிய இவ்வகைப் போட்டிகளில் கிடைக்கும் விறு விறுப்பே அலாதி தானே..........

வேலைப் பளுக்கள் அதிகரித்து வரும் இன்றைய நவீன உலகிலே இவ் வகைப் போட்டிகள் அதிகரிப்பது நலமே..........

அறிஞர்
11-09-2007, 03:15 PM
விறுவிறு போட்டிகளை இன்று முதல் பார்க்கலாம்...
இரண்டு வார கொண்டாட்டம்...

சாராகுமார்
11-09-2007, 03:15 PM
உங்க தகவல் அருமை.நன்றி.

ராஜா
11-09-2007, 03:42 PM
டாஸ் வெற்றி ; தெ.ஆ.

பந்து வீச முடிவு.

இனியவள்
11-09-2007, 03:46 PM
இங்கே (http://eelam-tamil.com/index/WrorldCup.html) சுடக்குங்கள் நேரடியாக போட்டியை கண்டு களிப்பதற்கு

ராஜா
11-09-2007, 08:23 PM
மேற்கு இந்திய தீவுகள்..

கெயில் c பவுச்சர் b வாண்டர் வாத்........117 [57] 4x7,6x1

டேவன் ஸ்மித் c பவுச்சர் b பிலாண்டர்....35 [34] 4x3,6x0

சாமுவேல்ஸ் c டி வில்லியர்ஸ் b போலக்..6 [4] .4x0,6x1

சந்தர்பால் c பவுச்சர் b வாண்டர்வாத்.......11 [10] 4x1,6x0

ஸ்மித் c கிப்ஸ் b மார்க்கல்.........................1 [4 ] 4x0 6x0

சர்வான் c வில்லியர்ஸ் b பிலாண்டர்..........12 [8 ] 4x0 6x1

ராம்தின் .............ஆட்டம் இழக்கவில்லை.....6 .[4] 4x1 6x0
D Bravo .........ஆட்டம் இழக்கவில்லை ......0
உதிரிகள் ------------------------..-----17.
------------------------------------------------------------
மொத்த ஓட்டங்கள்...................................205.
------------------------------------------------------------

தென் ஆப்ரிக்கா பந்து வீச்சு விவரம்.
[ஓவர்-மெய்டன்-ரன்-விக்கெட்... என்ற கணக்கில்]

S போலக்.. ................4-0-52-1
M எண்டினி ................2-0-19-0
J வாண்டர் வாத் ........4-0-33-2
M மார்க்கல் ................4-0-30-1
V பிலாண்டர்.............. 4-0-35-2
A மார்க்கல் .................1-0-16-0
G ஸ்மித் ....................1-0-16-0

தென் ஆப்ரிக்காவின் வெற்றிகரமான ஓட்டம் எடுப்பு விவரம்.

G ஸ்மித் c கெயில் b ராம்பால் ...................28 [21] 4x4, 6x1
H கிப்ஸ்.. ஆட்டமிழக்கவில்லை ...................90 [55] 4x14, 6x2
A டி வில்லியர்ஸ் c ராம்தின் b எட்வர்ட்ஸ் ...16 [9] 4x1, 6x1
J கெம்ப்.. ஆட்டமிழக்கவில்லை ...................46 [22] 4x5, 6x2
உதிரிகள்......................................................28 ( 23 wd,4 lb,0 b, 1 nb,0 p)
--------------------------------------------------
மொத்தம்.. 2 விக்கெட் இழப்புக்கு.................208
--------------------------------------------------

மேற்கு இந்தியத் தீவுகள்.. பந்துவீச்சு விவரம்.
[ஓவர்-மெய்டன்-ரன்-விக்கெட்... என்ற கணக்கில்]

D பவெல் .........4-0-34-0
R ராம்பால் .......4-0-52-1
D ஸ்மித் ...........2-0-37-0
F எட்வர்ட்ஸ் .....3-0-21-1
D பிராவோ .....2.4-0-39-0
M சாமுவேல்ஸ் ....2-0-21-0

முடிவுரை : மேற்கு இந்தியத் தீவுகள் சிறப்பாக
மட்டை வீசி நல்ல கூட்டுத்தொகை எடுத்திருந்தாலும், கட்டுபாடற்ற
பந்து வீச்சாலும், மோசமான களத்தடுப்பு முறைகளாலும் தோற்கும்
நிலை ஏற்பட்டது. [3 பிடிகள் நழுவின. வைடு பந்துகள் மூலம்
மட்டுமே 22 ஓட்டங்கள் எதிரணிக்குக் கிடைத்தன.]

அமரன்
11-09-2007, 08:28 PM
பிறிதொரு திரியில் சுடச் சுட விருந்து.
இங்கே
விருந்தின் பின்னான செறிந்த பழச்சாறு.
தொரட்டும் உங்கள் சேவை அண்ணனே...!

ராஜா
12-09-2007, 05:06 AM
முதல் போட்டியின் ஆட்ட நாயகன் : கிரிஸ் கெயில்..

நேற்று நடந்த தென் ஆப்பிரிக்கா மற்றும் மேற்கு இந்திய தீவுகளுக்கு இடையே நடந்த இருபது / 20 முதல் போட்டியின் பொழுது நிகழ்த்தப்பட்ட / முறியடிக்கப்பட்ட சில சாதனைகள்:

1. முதல் சதம் எடுத்த வீரர் - கெய்ல் (மே.இ.தீவுகள்)

முதன் முதலில் சதம் அடித்த வீரர் என்ற பெருமையை மே.இந்திய தீவுகளின் கெய்ல் பெற்றார். அவர் மொத்தம் 117 ரன்கள் எடுத்தார்.

2. தனிப்பட்ட வீரரின் அதிக பட்ச ரன் குவிப்பு - கெய்ல் (மே.இ.தீவுகள்)

கெய்ல் நேற்று 117 ரன்கள் (57 பந்துகள்) எடுத்ததின் மூலம், ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங்கின் முந்தைய சாதனையான் 98 ரன்கள் முறியடிக்கப்பட்டது.

3. அதிகமான சிக்ஸர் அடித்தவர் - கெய்ல் (மே.இ.தீவுகள்)

கெய்ல் நேற்று 10 சிக்ஸ்ர்கள் அடித்தத்தின் மூலம், முந்தைய சாதனையான 5 சிக்ஸர்கள் (பாண்டிங், கில்கிரிஸ்ட், மார்ட்டின்)என்ற எண்ணிக்கை முறியடிக்கப்பட்டது

4. முதல் விக்கெட்டுக்கு அதிக ஓட்டங்கள் எடுத்தவர்கள்: கெய்ல் - டேவன் (மே.இ.தீவுகள்)

கெய்ல் - டேவன் இணை, நேற்று முதல் விக்கெட்டுக்கு 145 ரன்கள் எடுத்ததின் மூலம், முந்திய சாதனையான 132 ரன்கள் (தெ.ஆப்பிரிக்கா - ஸ்மித் & லூட்ஸ் போஸ்மென்) என்ற எண்ணிக்கை முறியடிக்கப்பட்டது.

5. இரண்டாவதாக மட்டை பிடித்து 200 ரன்களுக்கு மேல் எடுத்த முதல் அணி : தென் ஆப்பிரிக்கா

இருபது /20 கிரிக்கெட் வரலாற்றில், இது வரை எந்த அணியும், இரண்டாவதாக மட்டை பிடித்து 200 ரன்களுக்கு மேல் எடுத்ததில்லை.
நேற்று தெ.ஆப்பிரிக்கா அந்த சாதனையை செய்தது. இதற்க்கு முன் ஆஸ்திரேலியா இரண்டாவதாக மட்டை பிடித்து 199 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது.

aren
12-09-2007, 05:29 AM
கிரிஸ் கெய்ல் மிகவும் சிறப்பாக ஆடினார். மற்றவர்கள் அனைவரும் சுத்தம் கிப்ஸ் உட்பட. மேற்கு இந்தீஸ் பந்துவிச்சிலும், பில்டிங்லும் மிகவும் மோசம். அதனால்தான் இந்தத் தோல்வி.

mania
12-09-2007, 05:35 AM
நேற்று கிரிஸ் கெயில் கேல் (புயல்) மாதிரியல்லவா ஆடினார்.....!!!!:rolleyes:
ஆச்சர்யத்துடன்
மணியா...:D

mania
12-09-2007, 05:49 AM
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்.....???:rolleyes::rolleyes:
என்னை தவிற யார் அந்த ஒருவர் இந்தியாவுக்கு ஓட்டு போட்டிருக்கா....!!!!???:rolleyes::rolleyes:
வாழ்க அவர் நாமம்....வளர்க அவர் தேசிய பற்று....:aktion033::aktion033:
அன்புடன்
மணியா...:D:D

aren
12-09-2007, 05:50 AM
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்.....???:rolleyes::rolleyes:
என்னை தவிற யார் அந்த ஒருவர் இந்தியாவுக்கு ஓட்டு போட்டிருக்கா....!!!!???:rolleyes::rolleyes:
வாழ்க அவர் நாமம்....வளர்க அவர் தேசிய பற்று....:aktion033::aktion033:
அன்புடன்
மணியா...:D:D

நான் போடவில்லை தலை, என்னை ஒன்னும் செய்திடவேண்டாம்.

mania
12-09-2007, 05:53 AM
நான் போடவில்லை தலை, என்னை ஒன்னும் செய்திடவேண்டாம்.

ஹா....ஹா....ஹா....நான் என்ன கால் கட்டை விரலை கடிச்சு ஓலைகூடையிலயா வைச்சிக்க போறேன்....(முதல் மரியாதை)...ஹி...ஹி...ஹி
அன்புடன்
மணியா..:D:D:D

ராஜா
12-09-2007, 05:54 AM
இன்றைய போட்டிகள்..
--------------------------

1) நியூசிலாந்து x கென்யா. கிங்ஸ்மீட், டர்பன். இந்திய நேரம் பகல் 1-30.

2) பாகிஸ்தான் x ஸ்காட்லாந்து, கிங்ஸ்மீட், டர்பன். இந்திய நேரம் மாலை 5-30.

3) ஆஸ்திரேலியா x ஜிம்பாப்வே, நியூ லாண்ட்ஸ், கேப் டவுன். இந்திய நேரம் இரவு 9-30.

அமரன்
12-09-2007, 05:59 AM
இன்றைய போட்டிகளில் சுவாரசியம் அதிகமாக இருக்காது போல இருக்கே..!

mania
12-09-2007, 06:02 AM
இன்றைய போட்டிகளில் சுவாரசியம் அதிகமாக இருக்காது போல இருக்கே..!

எனக்கு தேவையெல்லாம் இந்தபக்கம் மூணு குச்சி அந்தபக்கம் மூணு குச்சி..அவ்வளவே....மத்தபடி கூடுவாஞ்சேரிக்கும் தெக்கனாம்பட்டிக்கும் மேட்ச்னா கூட பார்த்துவிடுவேன்...!!!!:D:D
அன்புடன்
மணியா....

அமரன்
12-09-2007, 06:05 AM
எனக்கு தேவையெல்லாம் இந்தபக்கம் மூணு குச்சி அந்தபக்கம் மூணு குச்சி..அவ்வளவே....மத்தபடி கூடுவாஞ்சேரிக்கும் தெக்கனாம்பட்டிக்கும் மேட்ச்னா கூட பார்த்துவிடுவேன்...!!!!:D:D
அன்புடன்
மணியா....
ஹி...ஹி...பள்ளி போற உங்க பேரனுக்கு கிரிக்கட் வீடியோ கேம் வாங்கிகொ(கெ)டுத்திடாதீங்க தலை....

mania
12-09-2007, 06:09 AM
ஹி...ஹி...பள்ளி போற உங்க பேரனுக்கு கிரிக்கட் வீடியோ கேம் வாங்கிகொ(கெ)டுத்திடாதீங்க தலை....

என்னை என் தாத்தாவும் அப்பாவும் இப்படி கெ(கொ)டுத்து வைத்ததற்கு நான் என் பேரனை அவ்வாறு செய்யக்கூடதா என்ன....!!!??? அவன் இப்போவே பேட்டும் பாலுமாதான் அலயறான்...!!!!:D:D
பெருமையுடன்
மணியா...

aren
12-09-2007, 06:10 AM
ஹா....ஹா....ஹா....நான் என்ன கால் கட்டை விரலை கடிச்சு ஓலைகூடையிலயா வைச்சிக்க போறேன்....(முதல் மரியாதை)...ஹி...ஹி...ஹி
அன்புடன்
மணியா..:D:D:D

நீங்க வெஜிடேரியன் என்றல்லவா நினைத்தேன்.

aren
12-09-2007, 06:12 AM
என்னை என் தாத்தாவும் அப்பாவும் இப்படி கெ(கொ)டுத்து வைத்ததற்கு நான் என் பேரனை அவ்வாறு செய்யக்கூடதா என்ன....!!!??? அவன் இப்போவே பேட்டும் பாலுமாதான் அலயறான்...!!!!:D:D
பெருமையுடன்
மணியா...

அப்படின்னா உங்க பரம்பரையிலிருந்து ஒருவரவாவது கிரிக்கெட் ஆடத்தெரிந்தவரா இருப்பார் என்கிறீர்களா. நாங்களெல்லாம் இன்னும் மாட்ச்சை டிவியில்தான் பார்த்துக்கொன்டிருக்கிறோம்.

mania
12-09-2007, 06:14 AM
நீங்க வெஜிடேரியன் என்றல்லவா நினைத்தேன்.

:D:D:D நான்வெஜிடேரியன் தான்....:rolleyes::rolleyes::D
அன்புடன்
மணியா...:D

அமரன்
12-09-2007, 06:17 AM
:D:D:D நான்/வெஜிடேரியன் தான்....:rolleyes::rolleyes::D
அன்புடன்
மணியா...:D
உங்களுக்கும் வெஜிட்டேரியனுக்கும் அதிக தூரமில்லை போலும்.

ராஜா
12-09-2007, 06:18 AM
நானும் உங்களைப் போலதான் அண்ணா..!

வியாபாரத்துக்கு வேன்ல போகும்போது எங்கயாவது வயலில் பசங்க கிரிக்கெட் ஆடினாக்கூட போய் அம்பயரிங் பண்ண ஆரம்பிச்சுடுவேன். அப்புறம், கணக்குப்பிள்ளையும், டிரைவரும் அழாக்குறையா கெஞ்சி என்னை இழுத்துக்கிட்டுப் போவாங்க..

உண்மையான கிரிக்கெட் பார்க்கணும்ன்னா அங்கதான் பார்க்கலாம்..!

ஷீ-நிசி
12-09-2007, 06:18 AM
ஸ்டார் கிரிக்கெட்டில் ஹிந்தி/தமிழ், ஈஸ்பிஎன்னில் ஆங்கிலம் .டி டி தெரியவில்லை (இதுவரை)
அன்புடன்
மணியா.

தல புரியலியே ஒன்னும்.... :cool:

aren
12-09-2007, 06:25 AM
நானும் உங்களைப் போலதான் அண்ணா..!

வியாபாரத்துக்கு வேன்ல போகும்போது எங்கயாவது வயலில் பசங்க கிரிக்கெட் ஆடினாக்கூட போய் அம்பயரிங் பண்ண ஆரம்பிச்சுடுவேன். அப்புறம், கணக்குப்பிள்ளையும், டிரைவரும் அழாக்குறையா கெஞ்சி என்னை இழுத்துக்கிட்டுப் போவாங்க..

உண்மையான கிரிக்கெட் பார்க்கணும்ன்னா அங்கதான் பார்க்கலாம்..!


பார்த்து, டெண்டுல்கருக்கும் திராவிடுக்கும் அவுட் கொடுத்தது மாதிரி நீங்கள் அந்த பசங்களுக்கு அவுட் கொடுத்திடப்போகிறீர்கள். புதிய இடம் வேறு. கொஞ்சம் ஜாக்கிரதை.

mania
12-09-2007, 06:36 AM
நானும் உங்களைப் போலதான் அண்ணா..!

வியாபாரத்துக்கு வேன்ல போகும்போது எங்கயாவது வயலில் பசங்க கிரிக்கெட் ஆடினாக்கூட போய் அம்பயரிங் பண்ண ஆரம்பிச்சுடுவேன். அப்புறம், கணக்குப்பிள்ளையும், டிரைவரும் அழாக்குறையா கெஞ்சி என்னை இழுத்துக்கிட்டுப் போவாங்க..

உண்மையான கிரிக்கெட் பார்க்கணும்ன்னா அங்கதான் பார்க்கலாம்..!

"ஆஹா என்ன பொருத்தம்.......நம்ம பொருத்தம்"
சந்தோஷத்துடன்
மணியா..:D:D

mania
12-09-2007, 06:40 AM
:D:D:D நான்வெஜிடேரியன் தான்....:rolleyes::rolleyes::D
அன்புடன்
மணியா...:D


ஹி...ஹி...ஹி....நாண்(சாப்பிடும்)வெஜிடேரியன்....:D
அன்புடன்
மணியா:D

ராஜா
12-09-2007, 07:31 AM
பார்த்து, டெண்டுல்கருக்கும் திராவிடுக்கும் அவுட் கொடுத்தது மாதிரி நீங்கள் அந்த பசங்களுக்கு அவுட் கொடுத்திடப்போகிறீர்கள். புதிய இடம் வேறு. கொஞ்சம் ஜாக்கிரதை.

ஹி..ஹி.. அம்பயரிங்கில் இதெல்லாம் சாதா"ரணம்" மாட்டிரிக்ஸ்..!

ராஜா
12-09-2007, 10:31 AM
இருபது/20 உலகக்கோப்பை , 2வது ஆட்டம், கென்யா x நியுசிலாந்து.
---------------------------------------------------------
கென்யா ஸ்கோர் விபரன் :

Maurice Ouma (W) b Shane Bond 0

David Obuya hit wicket b Mark Gillespie 0

Tanmay Mishra c Jacob Oram b Shane Bond 0

Steve Tikolo (C) lbw b Mark Gillespie 0

Collins Obuya st Brendon McCullum b Daniel Vettori 18

Thomas Odoyo c Ross Taylor b Chris Martin 18

Nehemiah Odhiambo c Ross Taylor b Chris Martin 0

Alex Obanda b Daniel Vettori 4

Jimmy Kamande b Mark Gillespie 14

Rajesh Bhudiya not out 11

Peter Ongondo b Mark Gillespie 0

Extras : 8 (b - 0, w - 6, nb - 0, lb - 2, Penalty - 0)

மொத்த ஓட்டங்கள் ; 73. (அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து..)

நியூசிலாந்து பந்து வீச்சு விவரம்.. [ஓ-மெ-ர-வி]

Shane Bond ..........4 1 12 2
Mark Gillespie 2.5 0 7 4
Jacob Oram ........2 0 20 0
Chris Martin ..............4 1 14 2
Daniel Vettori ................4 0 18 2

நியூசிலாந்து மட்டையடி விபரம்..

Lou Vincent c David Obuya b Thomas Odoyo 27

Brendon McCullum (W) not out ,,,,,,,,,,,,,,,,,,,,,16

Peter Fulton not out...................................... 21

உதிரிகள்....................................................... 10

கென்யா பந்து வீச்சு விபரம்..[ஓ - மெ - ர - வி ]

கென்யா பந்துவீச்சு விபரம் .. [ ஓ - மெ - ர - வி ]

homas Odoyo ........ 3 0 22 1
Peter Ongondo ....... 3 0 22 0
Nehemiah Odhiambo 1 0 8 0
Rajesh Bhudiya ...... 0.4 0 17 0

ராஜா
13-09-2007, 05:15 AM
4 வது ஆட்டம்: ஆஸ்திரேலியா x ஜிம்பாப்வே

ஜிம்பாப்வே 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.. ( 1 பந்து மீதம் இருக்கையில்)


ஆஸ்திரேலியா : 138 / 9 ( 20 ஓவர்)

சைமண்ட்ஸ் - 33, ஹாட்ஜ் - 35

ஜிகும்புரா - 3 விக்கெட்டுகள்


ஜிம்பாப்வே : 139 / 5 (19.5 ஓவர்)

BRM டெல்யர் - 60 (அவுட் இல்லை), மஸ்கட்ஸா - 27, சிபந்தா - 23

கிளார்க் - 2 விக்கெட்டுகள்


ஆட்ட நாயகன்: : BRM டெய்லர்.

http://i115.photobucket.com/albums/n296/sspm3692/Taylormanofmatch.jpg

mania
13-09-2007, 05:29 AM
ஆட்டத்தின் நடுவே மழை என்று ஆட்டம் நிறுத்தப்பட்டது.. அந்த நிலையில் டக்வொர்த் முறையில் இரண்டு ரன் வித்தியாசத்தில் ஆஸ்த்திரேலியா வெற்றி பெற வாய்ப்பு உள்ளது என்று தெரிந்தவுடன் நான் உறங்க போய்விட்டேன்(வெறுப்புல). காலையில் பார்த்தால் ஒரு இன்ப அதிர்ச்சி. ஸிம்பாப்வேக்கு பாராட்டுகள். ஆஸிக்கு இது ஒரு பாடம்.
அருமையான ஃபீல்டிங்.(ஸிம்பாப்வே)
அன்புடன்
மணியா...

ஷீ-நிசி
13-09-2007, 05:33 AM
ஆட்டத்தின் நடுவே மழை என்று ஆட்டம் நிறுத்தப்பட்டது.. அந்த நிலையில் டக்வொர்த் முறையில் இரண்டு ரன் வித்தியாசத்தில் ஆஸ்த்திரேலியா வெற்றி பெற வாய்ப்பு உள்ளது என்று தெரிந்தவுடன் நான் உறங்க போய்விட்டேன்(வெறுப்புல). காலையில் பார்த்தால் ஒரு இன்ப அதிர்ச்சி. ஸிம்பாப்வேக்கு பாராட்டுகள். ஆஸிக்கு இது ஒரு பாடம்.
அருமையான ஃபீல்டிங்.(ஸிம்பாப்வே)
அன்புடன்
மணியா...

எனக்கு ரொம்ப சந்தோஷம்... ஆஸ்திரேலியா அடிவாங்கியதுல...

ராஜா
13-09-2007, 05:42 AM
இன்றைய போட்டிகள்..

13 Sep 2007 வங்க தேசம் x மேற்கு இந்தியத் தீவுகள்..

5வது ஆட்டம், Group A, நியூ வாண்டரர்ஸ் களம், ஜோகன்னர்ஸ்பர்க்.

நேரடி ஒளிபரப்பு : மதியம் 1-30 மணி.


இங்கிலாந்து x ஜிம்பாப்வே..

6வது ஆட்டம், Group B, நியூ லாண்ட்ஸ், கேப் டவுன்.

நேரடி ஒளிபரப்பு : மாலை 5-30 மணி.


இந்தியா x ஸ்காட்லாந்து.

7வது ஆட்டம், Group D, கிங்ஸ் மீட், டர்பன்.

நேரடி ஒளிபரப்பு : இரவு 9-30 மணி.
_________________

ராஜா
13-09-2007, 05:44 AM
இதுவரை ஒவ்வொரு குரூப்பில் அணிகளின் புள்ளிகளின் நிலவரம்:


http://i115.photobucket.com/albums/n296/sspm3692/Teampoints130907.jpg

ராஜா
13-09-2007, 10:32 AM
மே.இ.தீவுகள் அணி: 164 / 8 - 20 ஓவர்களில்

வங்கதேசம் வெல்ல 165 ரன்கள் இலக்கு
_________________

ராஜா
13-09-2007, 12:04 PM
அதிர்ச்சிகள் தொடர்கின்றன..

மேற்கு இந்தியத் தீவுகள் அதிர்ச்சித் தோல்வி..

165-4 என்ற எண்ணிக்கை எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் வங்க தேசம் வென்றது.

மேற்கு இந்திய தீவுகள் அணி இருபது / 20 உலக கோப்பை போட்டியில் இருந்து வெளியேறியது.

ஆட்ட நாயகன் : முகம்மது அஷ்ரஃபுல்.. 61 [27]

ராஜா
13-09-2007, 12:24 PM
இங்கிலாந்து.
oooooooooooooooooo
ஓட்டங்கள் :59-3
oooooooooooooooooo
ஓவர்கள்.:06

ராஜா
13-09-2007, 12:35 PM
இங்கிலாந்து.
oooooooooooooooooo
ஓட்டங்கள் :93-3
oooooooooooooooooo
ஓவர்கள்.:10

அமரன்
13-09-2007, 12:38 PM
வங்கப் புலி அணி வட்மோரால் மிளிர்கிறது.

ராஜா
13-09-2007, 12:52 PM
இங்கிலாந்து.
oooooooooooooooooo
ஓட்டங்கள் :153-3.
oooooooooooooooooo
ஓவர்கள்.:15

அறிஞர்
13-09-2007, 12:59 PM
மேற்கு இந்தியாவுக்கு ஓட்டு போட்ட புண்ணியவான் யாருப்பா.....

மேற்கு இந்தியா... அடுத்த சுற்றை பார்க்க முடியாமல் வெளியேறியது.

ராஜா
13-09-2007, 01:14 PM
இங்கிலாந்து.
oooooooooooooooooo
ஓட்டங்கள் :188-9.கெவின் பீட்டர்சன் 79
oooooooooooooooooo
ஓவர்கள்.:20

அறிஞர்
13-09-2007, 01:20 PM
இங்கிலாந்து எளிதில் வெற்றி பெறுவார்கள் என எண்ணுகிறேன்.

ராஜா
13-09-2007, 01:21 PM
மேற்கு இந்தியாவுக்கு ஓட்டு போட்ட புண்ணியவான் யாருப்பா.....
.

ஹா..ஹா..ஹா... நியாயமான கேள்வி..! ! 1

ராஜா
13-09-2007, 01:27 PM
ஜிம்பாப்வே இலக்கு : 189.
ooooooooooooooooooooooooooo
ஓட்டங்கள் : 47 /0 .
ooooooooooooooooooooooooooo
ஓவர்கள்.: 05

டெய்லர் 22* / சிபாண்டா 22*

அறிஞர்
13-09-2007, 01:28 PM
http://text.glitter-graphics.net/heart2/a.gifhttp://text.glitter-graphics.net/heart2/r.gifhttp://text.glitter-graphics.net/heart2/r.gif

இது என்னன்னா.. புது அவதரா.....

எனக்கு ஒன்று வித்தியாசமாக யோசித்து.. செய்து தாருங்களேன்...

ராஜா
13-09-2007, 02:12 PM
ஜிம்பாப்வே இலக்கு : 189.
ooooooooooooooooooooooooooo
ஓட்டங்கள் : 80 /1 .
ooooooooooooooooooooooooooo
ஓவர்கள்.: 10

ராஜா
13-09-2007, 02:30 PM
ஜிம்பாப்வே இலக்கு : 189.
ooooooooooooooooooooooooooo
ஓட்டங்கள் : 96 /5 .
ooooooooooooooooooooooooooo
ஓவர்கள்.: 15

ராஜா
13-09-2007, 02:51 PM
ஜிம்பாப்வே இலக்கு : 189.
ooooooooooooooooooooooooooo
ஓட்டங்கள் : 138 /7 .
ooooooooooooooooooooooooooo
ஓவர்கள்.: 20

இங்கிலாந்து 50 ஓட்டங்கள் வேறுபாட்டில் வென்றது..

ராஜா
13-09-2007, 03:50 PM
அடுத்த போட்டி..

இந்தியா x ஸ்காட்லாந்து.

ராஜா
13-09-2007, 03:51 PM
இந்தியா.
http://www.animatedgif.net/barslines/ag_bar1_e0.gif
ஓட்டங்கள் :
http://www.animatedgif.net/barslines/ag_bar1_e0.gif
ஓவர்கள் :
http://www.animatedgif.net/barslines/ag_bar1_e0.gif


மழை பெய்யுதுங்கோ.. மேட்ச் நடப்பது சந்தேகம்தான்..

அறிஞர்
13-09-2007, 08:48 PM
மழை இன்றைய ஆட்டத்தை கெடுத்தது....

நாளை ஆட்டம் நடைபெறுமா.....

பாகிஸ்தானை வெள்ளிக்கிழமை இந்தியா ஜெயிக்குமா..

ராஜா
14-09-2007, 06:57 AM
இன்றைய போட்டிகள்..


14 Sep 2007

இலங்கை x கென்யா.

8வது ஆட்டம்., Group C, நியூ வாண்டரர்ஸ் ஆடுகளம். ஜோகன்னஸ்பர்க்.

1-30 PM.


ஆஸ்திரேலியா x இங்கிலாந்து.

9 வது ஆட்டம்., Group B, நியூலாண்ட்ஸ், கேப் டவுன்.

5-30 PM.


இந்தியா x பாகிஸ்தான்.

10 வது ஆட்டம், Group D, கிங்ஸ்மீட், டர்பன்.

9-30 PM.

ராஜா
14-09-2007, 06:58 AM
போட்டி எண் 7: இந்தியா x ஸ்காட்லாந்து

மழையால் ஆட்டம் கைவிடப்பட்டது.

இரு அணிகளும் தலா 1 புள்ளிகள் பெறுகின்றன.

http://i115.photobucket.com/albums/n296/sspm3692/indvscotrain.jpg

http://i115.photobucket.com/albums/n296/sspm3692/indnscotfans.jpg[/quote]

ராஜா
14-09-2007, 07:09 AM
மழை இன்றைய ஆட்டத்தை கெடுத்தது....

நாளை ஆட்டம் நடைபெறுமா.....

பாகிஸ்தானை வெள்ளிக்கிழமை இந்தியா ஜெயிக்குமா..

நியாயமான கேள்வி எண் 2.

இவர் ஒருத்தர்தானப்பா ஆரம்பத்திலிருந்தே சரியான கேள்விகளா கேட்டுகிட்டு வர்ராரு..

எல்லா ஊர் பஞ்சாயத்துக்கும் போவார் போல..!

ஓவியன்
14-09-2007, 07:39 AM
இது என்னன்னா.. புது அவதரா.....
எனக்கு ஒன்று வித்தியாசமாக யோசித்து.. செய்து தாருங்களேன்...

ஹா,ஹா!

நம்ம ராஜா அண்ணாவுக்கு அவதார் ராஜாவென்று பெயர் வைப்போமா...? :)

ஓவியன்
14-09-2007, 07:41 AM
அன்பான ராஜா அண்ணா!

அணிகளின் தற்போதைய நிலவரத்தையும், அவை பெற்றுள்ள புள்ளி விபரங்களையும் தொகுத்தளிக்கலாமே...???

ராஜா
14-09-2007, 07:58 AM
டாஸ் வெற்றி கென்யா.. பந்துவீச முடிவு..

ராஜா
14-09-2007, 09:52 AM
அன்பான ராஜா அண்ணா!

அணிகளின் தற்போதைய நிலவரத்தையும், அவை பெற்றுள்ள புள்ளி விபரங்களையும் தொகுத்தளிக்கலாமே...???

தம்பியின் அன்புக்கட்டளையை ஏற்று..

நேற்று நடந்து முடிந்த போட்டிகளின் படி அணிகளின் புள்ளிகள் விவரம்


http://i115.photobucket.com/albums/n296/sspm3692/Teampoints140907.jpg

ராஜா
14-09-2007, 03:21 PM
போட்டி எண் 9: ஆஸ்திரேலியா x இங்கிலாந்து

இங்கிலாந்து: 135 / 10 (20 ஓவர்கள்)

பிளிண்டாப் 31 ரன்கள், பீட்டர்சன் 21 ரன்கள்

ப்ராக்கன் & ஜாக்சன் 3 விக்கெட்டுகள்
________________________________________________________

ஆஸ்திரேலியா 136 / 2 (14.5 ஓவர்கள்)

ஹெய்டன் 67 ரன்கள், கில்கிரிஸ்ட் 45 ரன்கள்

பிளிண்டாப் - 1 விக்கெட்
_______________________________________________________
ஆஸி. 8 விக்கெட் வேறுபாட்டில் வெற்றி..!

ஆட்ட நாயகன் : நேதன் ப்ராக்கன்

_________________

ராஜா
14-09-2007, 03:31 PM
போட்டி எண் 8: இலங்கை x கென்யா போட்டியின் பொழுது நிகழ்த்தப்பட்ட (அ) முறியடிக்கப்பட்ட சாதனைகள்


1. ஒரு இன்னிங்க்ஸில் எடுக்கப்பட்ட அதிக பட்ச ரன் சேர்க்கை : இலங்கை ( 260 ரன்கள்)

ஒரு இன்னிங்க்ஸில் இதற்க்கு முன் எடுக்கப்பட்ட அதிக பட்ச ரன் எண்ணிக்கையான 221 ரன்கள் (ஆஸ்திரேலியா) என்ற சாதனை முறியடிக்கப்பட்டது

2. அதிக ரன் வித்தியாசத்தில் வெற்றி : இலங்கை ( 172 ரன்கள் - கென்யாவுக்கு எதிராக)

இதற்க்கு முன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவை 100 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதே சாதனையாக இருந்தது. அது இப்பொழுது முறியடிக்கப்பட்டுள்ளது.

ராஜா
14-09-2007, 03:32 PM
போட்டி எண் 8: இலங்கை x கென்யா


ஆட்ட நாயகன் ஜெயசூர்யா

http://i115.photobucket.com/albums/n296/sspm3692/jayasuriyaVkenyamanofmatch.jpg

ராஜா
14-09-2007, 04:52 PM
இந்தியா .

ஓட்டங்கள் : 68-4 .

ஓவர்கள் : 11 .

தோனி : 9*: / உத்தப்பா : 38*

வீச்சாளர் : தன்வீர் : 1*-1-1-1- .




மழை வந்துடிச்சுப்பா..!

aren
14-09-2007, 04:59 PM
இந்தியா சுத்தம். இந்த ஆட்டத்தில் படுதோல்வியடைந்ததல் அவ்வளவுதான் நம் மக்கள் வெளியேறவேண்டியதுதான். போகிற போக்கில் பார்த்தால் அதுதான் நடக்கும் போலிருக்கிறது.

பாரதி
14-09-2007, 07:33 PM
இந்தியா -பாகிஸ்தான் இடையே நடந்த 20 / 20 மட்டைப்பந்து போட்டியில் 20 / 20 ஓவர்கள் முடிவில் இரண்டு அணிகளும் சம நிலையில் உள்ளதால் வெற்றி பெற்ற அணியை நிர்ணயிக்க ஐந்து-ஐந்து வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு பந்து வீச உள்ளனர்..!!

இந்தியா: 141 / 9
பாகிஸ்தான்: 141 / 7

பாரதி
14-09-2007, 07:49 PM
"பெளல் அவுட்" முறையில் விக்கெட்டுகளை சாய்க்க இந்திய தரப்பில்
சேவாக்,உத்தப்பா, சிரிசாந்த், பதான், ஹர்பஜனும் பாகிஸ்தான் தரப்பில் குல்,தன்வீர்,அராபத், அஃப்ரிடி, ஆசிப் ஆகியோர் தயார்.

பூவா தலையாவில் வென்ற சோயிப் மாலிக் இந்தியாவை முதலில் வீசுமாறு கேட்டுள்ளார்.

பாரதி
14-09-2007, 07:57 PM
மூன்றுக்கு சுழியம் (3-0) என்கிற அடிப்படையில் இந்தியா வெற்றி!

இளசு
14-09-2007, 08:51 PM
பாரதி... அந்தக் கடைசி நிமிடங்களில் உன் ரத்த அழுத்த அளவு எவ்வளவு???????

கால்பந்து அளவுக்கு மட்டைப்பந்தும் விறுவிறுப்பாகிவிட்டதல்லவா?

ஓவியன்
14-09-2007, 08:57 PM
உண்மைதான் அண்ணா, இந்த இருபது/20 போட்டிகளின் விறு விறுப்பு மற்ற சாதாரண கிரிக்கட் போட்டிகளிலே கிடைப்பதில்லை தான்.
துடுப்பாட்டக் காரர்கள் மட்டையைச் சுழற்றும் வேகமோ........
அப்பப்பா.......

இன்று இலங்கை அணியினர் கென்யாவுக்கு எதிராக சன்னதம் ஆடினர், சாதாரண போட்டி என்றால் அப்படி ஆடி இருப்பார்களா.....?

அன்புரசிகன்
14-09-2007, 09:00 PM
ஆனாலும் இன்றய இந்தியா பாக்கிஸ்தான் ஆட்டம் இறுதிவரை மிக விறுவிறுப்பாக இருந்தது....

இறுதியில் உதைபைந்தாட்டபோட்டிபோல் பந்துவீசவிட்டது உச்சக்கட்டம்...

ஒன்றுமட்டும் உறுதி... இந்திய வீரர்கள்; துடுப்பாட்டக்காரர்கள் இல்லாத நேரத்தில் நன்றாகவெ பந்து வீசுகின்றனர்... :D :D :D :D

மனோஜ்
14-09-2007, 10:41 PM
இந்தியாவிற்கு வாழத்துக்கள்
பாரதி அண்ணாவிற்கு நன்றிகள்

aren
15-09-2007, 12:36 AM
எப்படியோ தட்டுத்தடுமாறி ஜெயித்துவிட்டது இந்தியா.

அடுத்த சுற்றுக்கு முன்னேறிவிட்டார்கள். நான் இந்தியாவின் பந்துவீச்சை பார்க்கவில்லை (பார்க்க மனமில்லை), ஆகையால் தோனியின் காப்டன்ஸி எப்படி இருந்தது என்று தெரியவில்லை. தெரிந்தவர்கள் எழுதுங்கள்.

ராஜா
15-09-2007, 07:50 AM
இன்று 2 போட்டிகள் மட்டுமே.. இன்றுடன் முதல் சுற்று ஆட்டங்கள் முடிவடைகின்றன..

15 Sep 2007

இலங்கை x நியூசிலாந்து,

11வது ஆட்டம், Group C, நியூ வாண்டரர்ஸ் ஆடுகளம், ஜோகன்னஸ்பர்க்,

மாலை 5-30.


தென் ஆப்ரிக்கா x வங்க தேசம்.

12 வது ஆட்டம். , Group A, நியூ லாண்ட்ஸ், கேப் டவுன்.

இரவு 9-30.

ராஜா
15-09-2007, 03:16 PM
நேற்று வரை நடந்து முடிந்த போட்டிகளின் படி அணிகளின் புள்ளி விவரம்:

http://i115.photobucket.com/albums/n296/sspm3692/table150907.jpg

ராஜா
15-09-2007, 03:17 PM
போட்டி எண் 11: நியூசிலாந்து x இலங்கை


வெற்றியாளர் : இலங்கை (7 விக்கெட்டுகள் வித்தியாசம்)


நியூசிலாந்து : 164 /7 ( 20 ஓவர்)

டெய்லர் - 62 ரன்கள், ஓரம் - 33 ரன்கள்

பெர்னாண்டோ - 2 விக்கெட்டுகள்


இலங்கை - 168 /3 ( 20 ஓவர்)

ஜெயசூர்யா - 61 ரன்கள், தரங்கா - 37 ரன்கள்

வெட்டோரி - 2 விக்கெட்டுகள்


ஆட்ட நாயகன்: ஜெயசூர்யா

ஓவியன்
15-09-2007, 03:19 PM
இலங்கை - நியூசிலாந்து

நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து டானியல் விட்டோரி முதலில் தாங்கள் துடுப்பெடுத்தாட முடிவு செய்து.....

துடுப்பெடுத்தாடி......

20 ஓவர்கள் முடிவில் 7 விக்கட் இழப்புக்கு 164 ஓட்டங்களைச் சேர்த்தனர், அதிகபட்டச தனி நபர் ஓட்ட எண்ணிக்கை 62 (ரெய்லர்).

பதிலளித்த இலங்கை அணி 3 விக்கட்டுக்களை இழந்து 18.5 வது பந்து பரிமாற்றத்தின் போது 168 ஓட்டங்களைக் குவித்து வெற்றியைத் தனதாக்கியது. இலங்கை அணி சார்பாக, அதிகபட்டச தனி நபர் ஓட்ட எண்ணிக்கை 62 (சனத் ஜெயசூரயா, 44 பந்துகளை முகம் கொண்டு 3 சிக்சர்கள், 6 பவுண்டரிகள் அடங்கலாக இந்த ஓட்டங்களைக் குவித்தார்)

ஓவியன்
15-09-2007, 03:21 PM
அடடே ராஜா அண்ணா வந்து எனக்கு முதல் அதே விடயத்தை பதித்து விட்டாரா........?

அசத்துங்க அண்ணா.......!!

ராஜா
16-09-2007, 03:48 AM
போட்டி எண் 12: தென் ஆப்பிரிக்கா x பங்களாதேஷ்

வெற்றியாளர் : தென் ஆப்பிரிக்கா ( 7 விக்கெட் வித்தியாசத்தில்)


பங்களாதேஷ்: 144 /10 (19.3 ஓவர்)

அப்தாப் அகமது - 36 ரன்கள், ஷாகிப் அல் ஹசன் - 19 ரன்கள்

போலாக் - 3 விக்கெட்டுகள்


தென் ஆப்பிர்க்கா : 146 / 3 (18.5 ஓவர்)

ஸ்மித் - 41 ரன்கள், ஜெ.ஏ.மோர்கல் - 41 ரன்கள்

அப்தூர் ரசாக் - 2 விக்கெட்டுகள்


ஆட்ட நாயகன் : M.மோர்கல்

ராஜா
16-09-2007, 03:50 AM
போட்டி எண் 12: தென் ஆப்பிரிக்கா x பங்களாதேஷ்


ஆட்ட நாயகன் மோர்ன் மோர்க்கல்

http://i115.photobucket.com/albums/n296/sspm3692/MorneMorkelVBangladesh.jpg

ராஜா
16-09-2007, 03:51 AM
இருபது / 20 உலக கோப்பை போட்டியின் அனைத்து லீக் சுற்று ஆட்டங்கள் முடிவு பெற்ற நிலையில் அணிகள் பெற்ற புள்ளிகள் விவரங்கள்:

http://i115.photobucket.com/albums/n296/sspm3692/table160907.jpg

ராஜா
16-09-2007, 04:19 AM
சூப்பர் 8 போட்டிகளின் விவரங்கள்:\

Sep 16, 2007

13tவது ஆட்டம் , Group E: இந்தியா x நியூசிலாந்து ;
ஜோக்ன்னஸ்பர்க்.

14வது ஆட்டம், Group F: ஆஸ்திரேலியா x வங்க தேசம்.
கேப் டவுன்.

15வது ஆட்டம், Group E: தென் ஆப்பிரிக்கா v இங்கிலாந்து,
கேப் டவுன். (பகல் இரவு போட்டி)
_____________________________________________________________________________
Sep 17, 2007

16வது ஆட்டம், Group F: பாகிஸ்தான் v இலங்கை
ஜோகன்னஸ்பர்க் - (பகல் இரவு போட்டி)
__________________________________________________________________________
Sep 18, 2007

17வது ஆட்டம், Group E: இங்கிலாந்து v நியூசிலாந்து,
டர்பன்.

18வது ஆட்டம், Group F: ஆஸ்திரேலியா v பாகிஸ்தான்,
ஜோகன்னஸ்பர்க்.

19வது ஆட்டம், Group F: வங்க தேசம் v இலங்கை,
ஜோகன்னஸ்பர்க். (பகல் இரவு போட்டி)
___________________________________________________________________________
Sep 19, 2007

20வது ஆட்டம், Group E: தென் ஆப்பிரிக்கா v நியூசிலாந்து,
டர்பன்.

21வது ஆட்டம், Group E: இங்கிலாந்ட்துv இந்தியா
டர்பன்.(பகல் இரவு போட்டி)
____________________________________________________________________________
Sep 20, 2007

22வது ஆட்டம், Group F: ஆஸ்திரேலியா v இலங்கை,
கேப் டவுன்.

23வது ஆட்டம், Group F: வங்க தேசம் v பாகிஸ்தான்,
கேப் டவுன்.

24வது ஆட்டம், Group E: தென் ஆப்பிரிக்கா v இந்தியா
டர்பன் (பகல் இரவு போட்டி)

ராஜா
16-09-2007, 11:29 AM
போட்டி எண் 13:

நியூசிலாந்து x இந்தியா

வெற்றியாளர் : நியூசிலாந்து ( 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி)

நியூசிலாந்து : 190 / 10 (20 ஓவர்கள்)

மெக்கல்லம் - 45 ரன்கள், மெக்மிலன் - 44 ரன்கள்

ஆர்.பி. சிங் & ஹர்பஜன் சிங் - தலா 2 விக்கெட்டுகள்


இந்தியா : 180 / 9 (20 ஓவர்கள்)

காம்பீர் - 51 ரன்கள், சேவாக் - 40 ரன்கள்

வெட்டோரி - 4 விக்கெட்டுகள்


ஆட்ட நாயகன் : வெட்டோரி
_________________

ராஜா
16-09-2007, 11:31 AM
போட்டி எண் 13: நியூசிலாந்து x இந்தியா


ஆட்ட நாயகன் டேனியல் வெட்டோரி

http://i115.photobucket.com/albums/n296/sspm3692/danielVettoriVInd.jpg

இந்திய தரப்பில் அரை சதம் அடித்த காம்பீர்

http://i115.photobucket.com/albums/n296/sspm3692/GambhirVNZ.jpg

ராஜா
17-09-2007, 08:48 AM
போட்டி எண் 13: நியூசிலாந்து x இந்தியா போட்டியின் பொழுது நிகழ்த்தப்பட்ட (அ) முறியடிக்கப்பட்ட சாதனைகள்

1. முதல் 5 ஓவரில் அதிக ரன் குவித்த அணி (5 ஓவர் - 67 ரன்கள்) என்ற பெருமையை இந்தியா பெறுகிறது.

2. நேற்று நியூசிலாந்து வீரர்கள் 4 பேர் ரன் அவுட் ஆனார்கள்.
இதுவே ஒரு அணியில் அதிகமான பேர் ரன் அவுட் ஆவது. இதற்க்கு முன் இலங்கை தரப்பில் 3 பேர் ரன் அவுட் ஆனதே சாதனையாக இருந்தது. மேலும் ஒரு போட்டியில் அதிகமான ரன் அவுட் ஆனதும் இந்த போட்டியில் தான். இந்தியா தரப்பில் 2 பேரும், நியூசிலாந்து தரப்பில் 4 பேரும் ரன் அவுட் ஆனார்கள். ஆக மொத்தம் 6 பேர் ரன் அவுட் ஆனார்கள். இதுவும் சாதனைதான்.

3. இந்தியாவின் அதிக பட்ச ஸ்கோர்

ராஜா
17-09-2007, 08:51 AM
போட்டி எண் 14: ஆஸ்திரேலியா x பங்களாதேஷ்


வெற்றியாளர் : ஆஸ்திரேலியா ( 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி)

பங்களாதேஷ் : 123 / 8 ( 20 ஓவர்)

தமீம் இக்பால் - 32 ரன்கள், அப்தப் அகமது - 31 ரன்கள்

பிரெட் லீ - 3 விக்கெட்டுகள் ( ஹாட் - டிரிக் சாதனை)


ஆஸ்திரேலியா : 124 / 1 (13.5 ஓவர்)

ஹெய்டன் - 73 ரன்கள், கில்கிரிஸ்ட் - 43 ரன்கள்

1 ரன் அவுட்.


ஆட்ட நாயகன்: பிரெட் லீ

ராஜா
17-09-2007, 08:52 AM
போட்டி எண் 14: ஆஸ்திரேலியா x பங்களாதேஷ்


ஆட்ட நாயகன் பிரெட் லீ (ஹாட்-டிரிக் சாதனை நிகழ்த்திய பொழுது)

http://i115.photobucket.com/albums/n296/sspm3692/BrettLeeHottrickVBan.jpg

ராஜா
17-09-2007, 08:53 AM
போட்டி எண் 14: ஆஸ்திரேலியா x பங்களாதேஷ் போட்டியின் பொழுது நிகழ்த்தப்பட்ட (அ) முறியடிக்கப்பட்ட சாதனைகள்

1. ஆஸ்திரேலியாவின் பிரெட் லீ, போட்டியின் 17 ஆவது ஓவரை வீசிய பொழுது, சகிபுல் ஹசன், மோர்டசா மற்றும் கபாலி ஆகியோரை அடுத்தடுத்து அவுட் ஆக்கினார்.

தொடர்ந்து 3 விக்கெட்டுகள் சாய்த்து, முதல் ஹாட்-டிரிக் சாதனையை இருபது / 20 போட்டியில் நிகழ்த்தினார்.
_________________

ராஜா
17-09-2007, 08:56 AM
போட்டி எண் 15: தென் ஆப்பிரிக்கா x இங்கிலாந்து


வெற்றியாளர்: தென் ஆப்பிரிக்கா (19 ரன்கள் வித்தியாசத்தில்)


தென் ஆப்பிரிக்கா : 154 / 8 (20 ஓவர்)

ஜெ.ஏ. மோர்கல் - 43 ரன்கள், பெளச்சர் - 29 ரன்கள்

பிராட் - 3 விக்கெட்டுகள்


இங்கிலாந்து: 135 / 7 (20 ஓவர்)

ஷா - 36 ரன்கள், பிரெயர் - 32 ரன்கள்

ஜெ.ஏ.மோர்கல் - 2 விக்கெட்டுகள்


ஆட்ட நாயகன் : ஜெ.ஏ.மோர்கல்

ராஜா
17-09-2007, 08:57 AM
போட்டி எண் 15: தென் ஆப்பிரிக்கா x இங்கிலாந்து


ஆட்ட நாயகன் ஜெ.ஏ.மோர்கல்

http://i115.photobucket.com/albums/n296/sspm3692/AlbieMorkelVEng.jpg

ராஜா
17-09-2007, 08:58 AM
சூப்பர் 8 போட்டிகள் தொடங்கி முதல் 3 போட்டிகள் முடிவுற்ற நிலையில் அணிகளின் செயல்பாடுகள் விவரம்

http://i115.photobucket.com/albums/n296/sspm3692/Super8day1table.jpg

ராஜா
17-09-2007, 08:59 AM
இன்று குரூப் "E" -யில் இருந்து பாகிஸ்தான் x இலங்கை அணிகள் மோத உள்ளன. இந்த போட்டி, இந்திய நேரம் இரவு 9-30க்கு..

(இன்று ஒரே ஒரு போட்டிதான்)

அறிஞர்
17-09-2007, 02:29 PM
இன்று இலங்கை வெற்றி பெற்றால் நன்றாக இருக்கும்..

aren
17-09-2007, 03:17 PM
ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவிற்கு இணையாக இருக்கும் ஒரு அணி இலங்கை அணி இந்த போட்டியில். அது எப்படி ஆடப்போகிறது என்பதைப் பொருத்தே இன்னும் வரும் போட்டிகள் அமையும். ஆகையால் இலங்கை சிறப்பாக விளையாடவேண்டும் என்பதே என் விருப்பம்.

ஜெயசூர்யாவை நம்பாமல் மற்றவர்களும் அடித்த ஆடினால் ஆட்டம் நன்றாக இருக்கும்.

முரளி இல்லாத போலிங் அட்டாக் கொஞ்சம் குறைவுதான், அதை வாஸ் மற்றும் மலிங்கா, பெர்னாண்டோ ஆகியோர் நிறப்புகிறார்கள்.

இன்றைய ஆட்டம் நிச்சயம் நன்றாக இருக்கும் என்றே தோன்றுகிறது.

இலங்கை வெற்றிபெற வாழ்த்துக்கள்.

ராஜா
18-09-2007, 07:11 AM
போட்டி எண் 16: பாகிஸ்தான் x இலங்கை


வெற்றியாளர் : பாகிஸ்தான் (33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி)

பாகிஸ்தான்: யூனிஸ்கான் - 51 ரன்கள் , சோயப் மாலிக் - 57 ரன்கள்

மலிங்கா - 3 விக்கெட்டுகள்


இலங்கை : 156 ரன்கள்

தில்சன் - 38 ரன்கள், சில்வா - 38 ரன்கள்

சாகித் அப்ரிதி - 3 விக்கெட்டுகள்


ஆட்ட நாயகன்: யூனிஸ்கான்

ராஜா
18-09-2007, 07:13 AM
போட்டி எண் 16: பாகிஸ்தான் x இலங்கை


ஆட்ட நாயகன் : யூனிஸ் கான்

http://i115.photobucket.com/albums/n296/sspm3692/youniskhanvSrilanka.jpg

ராஜா
18-09-2007, 07:14 AM
போட்டி எண் 16: பாகிஸ்தான் x இலங்கை போட்டியின் பொழுது நிகழ்த்தப்பட்ட சாதனை (அ) முறியடிக்கப்பட்ட சாதனைகள்

1. யூனிஸ் கானும், சோயப் மாலிக்கும் இணைந்து 4 -வது விக்கெட்டுக்கு 101 ரன்கள் எடுத்து சாதனை. இதுவே 4 -வது விக்கெட்டுக்கு எடுத்த அதிக பட்ச எண்ணிக்கையாகும்.
(இதுவரை 8 இணை மட்டுமே 100 ரன்களுக்கு மேல் இருபது / 20 சர்வதேச போட்டிகளில் எடுத்து உள்ளனர்)

2. ஜெயசூர்யா 4 ஓவரில் 64 ரன்கள் கொடுத்து, இருபது / 20 சர்வதேச போட்டிகளில் அதிக ரன்கள் வாரி கொடுத்தவர் பட்டியலின் முதல் இடத்தை ஜேம்ஸ் ஆண்டர்சனுடன் பகிர்ந்து கொள்கிறார்.

ராஜா
18-09-2007, 07:15 AM
சூப்பர் 8 போட்டிகளின் முதல் சுற்று முடிவுற்ற நிலையில் அணியின் செயல்பாடுகளும், அவைகள் பெற்ற புள்ளிகள் விவரங்களும்

http://i115.photobucket.com/albums/n296/sspm3692/table170907.jpg

ராஜா
19-09-2007, 05:21 AM
போட்டி எண் 17: நியூசிலாந்து x இங்கிலாந்து


வெற்றியாளர் : நியூசிலாந்து ( 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி)

நியூசிலாந்து : 164 / 9 (20 ஓவர்கள்)

மெக்மிலன் - 57 ரன்கள், ஸ்டைரீஸ் - 42 ரன்கள்

மேடி - 2 விக்கெட்டுகள்


இங்கிலாந்து : 159 / 8 ( 20 ஓவர்)

மேடி - 50 ரன்கள், சோலங்கி - 24 ரன்கள்

வெட்டோரி - 2 விக்கெட்டுகள்


ஆட்ட நாயகன் : மெக்மில்லன்

ராஜா
19-09-2007, 05:22 AM
போட்டி எண் 17: நியூசிலாந்து x இங்கிலாந்து


ஆட்ட நாயகன் மெக்மில்லன்

http://i115.photobucket.com/albums/n296/sspm3692/McMillanVEng.jpg

ராஜா
19-09-2007, 05:25 AM
போட்டி எண் 18: ஆஸ்திரேலியா x பாகிஸ்தான்

வெற்றியாளர் : பாகிஸ்தான் ( 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி)


ஆஸ்திரேலியா: 164 / 7 (20 ஓவர்)

ஹுசே - 37 ரன்கள், ஹாட்ஜ் - 36 ரன்கள்

சொஹைல் தன்வீர் - 3 விக்கெட்டுகள்


பாகிஸ்தான் - 165 /4 ( 19.1 ஓவர்)

மிஸ்பா உல் ஹக் - 66 ரன்கள், சோயப் மாலிக் - 52 ரன்கள்

எஸ்.ஆர்.கிளார்க் - 3 விக்கெட்டுகள்


ஆட்ட நாயகன் : மிஸ்பா உல் ஹக்

ராஜா
19-09-2007, 05:26 AM
போட்டி எண் 18: ஆஸ்திரேலியா x பாகிஸ்தான்


ஆட்ட நாயகன் மிஸ்பா உல் ஹக்

http://i115.photobucket.com/albums/n296/sspm3692/MisbahulHaq2VAus.jpg

ராஜா
19-09-2007, 05:29 AM
போட்டி எண் 19: இலங்கை x பங்களாதேஷ்


வெற்றியாளர் : இலங்கை (64 ரன்கள் வித்தியாசத்தில்)

இலங்கை : 147 / 5 (20 ஓவர்)

முபாரக் - 31 ரன்கள், ஜெயவர்த்தனே - 30 ரன்கள்

அப்தூர் ரஷாக் - 1 விக்கெட்


பங்களாதேஷ் : 83 /10 ( 15.5 ஓவர்)

அப்தப் அகமது - 18 ரன்கள், ஷாகிப் அல் ஹசன் - 18 ரன்கள்

ஜெயசூர்யா - 2 விக்கெட்டுகள்


ஆட்ட நாயகன் : பெர்னாண்டோ

ராஜா
19-09-2007, 05:30 AM
போட்டி எண் 19: இலங்கை x பங்களாதேஷ்


ஆட்ட நாயகன் பெர்ணாண்டோ


http://i115.photobucket.com/albums/n296/sspm3692/DilharaFernandoVBangla.jpg

ராஜா
19-09-2007, 05:31 AM
நேற்று வரை நடந்து முடிந்த சூப்பர் 8 போட்டிகளிக்கு பிறகு அணிகளின் புள்ளி விவரங்களும், செயல்பாடுகளும்


http://i115.photobucket.com/albums/n296/sspm3692/table180907.jpg

ராஜா
20-09-2007, 02:42 AM
போட்டி எண் 20: தென் ஆப்பிரிக்கா x நியூசிலாந்து

வெற்றியாளர்: தென் ஆப்பிரிக்கா (6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில்)

நியூசிலாந்து : 153 / 8 (20 ஓவர்)

மெக்மிலன் - 48 ரன்கள் (அவுட் இல்லை) மெக்கல்லம் - 38 ரன்கள்

எம்.மோர்கல் - 4 விக்கெட்டுகள்


தென் ஆப்பிரிக்கா : 158 / 4 (19.1 ஓவர்)

கெம்ப் - 89 ரன்கள் (அவுட் இல்லை), பவுச்சர் - 23 ரன்கள்

கில்லெஸ்பி - 2 விக்கெட்டுகள்


ஆட்ட நாயகன்: ஜஸ்டின் கெம்ப் [தெ.ஆ].

ராஜா
20-09-2007, 02:48 AM
போட்டி எண் 20: தென் ஆப்பிரிக்கா x நியூசிலாந்து


ஆட்ட நாயகன் கெம்ப்


http://i115.photobucket.com/albums/n296/sspm3692/KempVNZ.jpg

ராஜா
20-09-2007, 03:02 AM
போட்டி எண் 21: இந்தியா x இங்கிலாந்து


வெற்றியாளர் : இந்தியா (18 ரன்கள் வித்தியாசத்தில்)


இந்தியா : 218 / 4 (20 ஓவர்கள்)

சேவாக் - 68 ரன்கள், யுவராஜ் - 58 ரன்கள்

டிரெம்லெட் - 2 விக்கெட்டுகள்


இங்கிலாந்து : 200 / 6 (20 ஓவர்கள்)

சோலங்கி - 43 ரன்கள், பீட்டர்சன் - 39 ரன்கள்

பதான் - 3 விக்கெட்டுகள்


ஆட்ட நாயகன் : யுவராஜ்

ராஜா
20-09-2007, 03:19 AM
போட்டி எண் 21: இந்தியா x இங்கிலாந்து


ஆட்ட நாயகன் யுவராஜ் (தொடர்ந்து 6 சிக்ஸர்)

முதல் சிக்ஸர்

http://i115.photobucket.com/albums/n296/sspm3692/firstsix.jpg

இரண்டாம் சிக்ஸர்

http://i115.photobucket.com/albums/n296/sspm3692/secondsix.jpg

மூன்றாம் சிக்ஸர்

http://i115.photobucket.com/albums/n296/sspm3692/thirdsix.jpg

நான்காம் சிக்ஸர்

http://i115.photobucket.com/albums/n296/sspm3692/fourthsix.jpg

ஜந்தாம் சிக்ஸர்

http://i115.photobucket.com/albums/n296/sspm3692/fifthsx.jpg

ஆறாம் (சாதனை) சிக்ஸர்

http://i115.photobucket.com/albums/n296/sspm3692/sixthsix.jpg

ராஜா
20-09-2007, 03:26 AM
இன்றைய போட்டிகள்..

Sep 20, 2007

22வது ஆட்டம், Group F: ஆஸ்திரேலியா v இலங்கை,
கேப் டவுன்.

மதியம் 1-30.
_____________________________________

23வது ஆட்டம், Group F: வங்க தேசம் v பாகிஸ்தான்,
கேப் டவுன்.

மாலை 5-30.
_____________________________________

24வது ஆட்டம், Group E: தென் ஆப்பிரிக்கா v இந்தியா
டர்பன்.

இரவு 9-30.
_____________________________________

ராஜா
20-09-2007, 04:22 AM
போட்டி எண் 21: இந்தியா x இங்கிலாந்து போட்டியின் பொழுது நிகழ்த்தப்பட்ட சாதனைகள் (அ) முறியடிக்கப்பட்ட சாதனைகள்


1. இருபது / 20 போட்டி மற்றும் ஒரு நாள் போட்டிகளில் மிக குறைந்த பந்துகளில் (12 பந்துகள்) 50 ரன்கள் எடுத்து யுவராஜ் உலக சாதனை

2. இருபது / 20 போட்டிகளின் ஒரு ஓவரில் 6 பந்துகளிலும் தொடர்ந்து 6 சிக்ஸர் அடித்து யுவராஜ் சாதனை.

3. இருபது / 20 போட்டிகளில் இந்தியா அடித்த அதிக பட்ச ரன் சேர்க்கை (218)

கொசுறு: 1. 7 சிக்ஸர் அடித்ததின் மூலம், இருபது / 20 போட்டிகளில் 1 இன்னிங்சில் அதிக சிக்ஸர் அடித்தவர் பட்டியலில், கெய்லுக்கு (10 சிக்ஸர்) அடுத்த நிலையில் உள்ளார்
2. முதல் விக்கெட்டுக்கு சேவாக், காம்பீர் இணை 136 ரன்கள் எடுத்ததின் மூலம், கெய்ல் மற்றும் ஸ்மித் இணைக்கு (145 ரன்களுக்கு) அடுத்த நிலையில் உள்ளார்கள

ராஜா
20-09-2007, 04:22 AM
நேற்று முடிந்த சூப்பர் 8 ஆட்டங்களின் நிலவரப்படி அணிகள் பெற்ற புள்ளிகளின் விவரமும், செயல் பாடுகளும்

http://i115.photobucket.com/albums/n296/sspm3692/table190907.jpg

pathman
21-09-2007, 04:54 AM
ராஜா அவர்களே நேற்று நடந்த 3 போட்டிகளும் பதிய படவில்லையே ?

ராஜா
21-09-2007, 01:02 PM
ராஜா அவர்களே நேற்று நடந்த 3 போட்டிகளும் பதிய படவில்லையே ?

இதோ பதிகிறேன் பத்மன்..!

இன்று ஓய்வு நாள் அல்லவா..? அதான் ஆற அமர பதியலாம் என்றிருந்தேன்..!

ராஜா
21-09-2007, 01:08 PM
போட்டி எண் 22: ஆஸ்திரேலியா x இலங்கை


வெற்றியாளர் : ஆஸ்திரேலியா (பத்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி)

இலங்கை : 101 /10 (19.3 ஓவர்கள்)

முபாரக் - 28 ரன்கள், சங்கக்காரா - 22 ரன்கள்

ஸ்டூவர்ட் கிளார்க் - 4 விக்கெட்டுகள்


ஆஸ்திரேலியா: 102 /0 (10.2 ஓவர்)

ஹெய்டன் - 58 ரன்கள், கில்கிறிஸ்ட் - 31 ரன்கள்


ஆட்ட நாயகன்: ஸ்டுவர்ட் கிளார்க்

ராஜா
21-09-2007, 01:13 PM
போட்டி எண் 22: ஆஸ்திரேலியா x இலங்கை


ஆட்ட நாயகன் ஸ்டுவர்ட் கிளார்க்

http://i115.photobucket.com/albums/n296/sspm3692/stuartclarkVPak-1.jpg

என்னவன் விஜய்
21-09-2007, 01:16 PM
இலங்கை அணி வெளியேறியது மிகவும் கவலையக உள்ளது

ராஜா
21-09-2007, 01:19 PM
போட்டி எண் 23: இந்தியா x தென் ஆப்பிரிக்கா


வெற்றியாளர் : இந்தியா (37 ரன்கள் வித்தியாசத்தில்)

இந்தியா : 153 / 5 (20ஓவர்)

ரோகித் சர்மா - 50 ரன்கள் (அவுட் இல்லை), தோனி - 45 ரன்கள்

போலக் - 2 விக்கெட்டுகள்


தென் ஆப்பிரிக்கா : 116 / 9 (20ஓவர்)

பெளச்சர் - 36 ரன்கள், ஜெ.ஏ.மார்கல் - 36 ரன்கள்

ஆர்.பி.சிங் - 4 விக்கெட்டுகள்


ஆட்ட நாயகன் : ரோகித் சர்மா

ராஜா
21-09-2007, 01:20 PM
போட்டி எண் 23: இந்தியா x தென் ஆப்பிரிக்கா

ஆட்ட நாயகன் ரோகித் சர்மா

http://i115.photobucket.com/albums/n296/sspm3692/rohitsharmavSA.jpg

ராஜா
21-09-2007, 01:22 PM
சூப்பர் 8 சுற்றுகள் முடிவடைந்த நிலையில் அணிகளின் பெற்ற புள்ளிகளும், அதன் செயல் பாடுகளும்

http://i115.photobucket.com/albums/n296/sspm3692/table210907.jpg[/b]

ராஜா
21-09-2007, 01:24 PM
இருபது/20 உலக கோப்பையில் இதுவரை

விக்கெட் கீப்பரின் செயல்பாடுகள்:

5 போட்டிகளில் விக்கெட் கீப்பராக செயலாற்றிய தோனி - ஒரே ஒரு வீரர் அவுட் ஆக காரணமாக இருந்திருக்கிறார். ( 1 கேட்ச் பிடித்துள்ளார்)

ஆனால், நேற்று பகுதி நேர விக்கெட் கீப்பராக செயல்பட்ட கார்த்திக், அந்த ஒரு போட்டியிலையே இரண்டு வீரர்கள் அவுட் ஆக காரணமாக இருந்திருக்கிறார். ( 2 ஸ்டம்பு அவுட் செய்தார்)

ஆச்சரியமாக இருக்கிறதா? அதுதான் தோனி..

அதிக பட்சமாக ஆஸ்திரேலியாவின் கில்கிரிஸ்ட் 9 வீரர்கள் அவுட் ஆக காரணமாக இருந்திருக்கிறார்.

ராஜா
21-09-2007, 01:25 PM
இருபது/20 உலக கோப்பையில் இதுவரை

மட்டை பிடிப்பாளர்களின் செயல்பாடுகள் :

அதிக ரன்கள் அடித்தவர் பட்டியல்
ஆஸ்திரேலியாவின் ஹெய்டன் 203 ரன்கள் எடுத்து முதலிடத்தில் இருக்கிறார். இவர் 3 அரைசதம் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அடுத்தடுத்த நிலைகளில் பீட்டர்சன் 178 ரன்களுடனும், கெம்ப் 173 ரன்களுடனும் இருக்கின்றனர்.

இந்தியாவின் சார்பில் காம்பீர் 128 ரன்களுடன் முதல் இடத்திலும், சேவாக் 124 ரன்களுடன் இரண்டாம் இடத்திலும் இருக்கின்றனர்.

ராஜா
21-09-2007, 01:26 PM
இருபது/20 உலக கோப்பையில் இதுவரை

பந்து வீச்சாளர்களின் செயல்பாடுகள்:

ஆஸ்திரேலியாவின் கிளார்க் 12 விக்கெட்டுகள் எடுத்து முதல் இடத்திலும், பாகிஸ்தானின் சாகித் அப்ரிதி 11 விக்கெட்டுகள் எடுத்து இரண்ட்டாம் இடத்திலும், வெட்டோரி 10 விக்கெட்டுகள் எடுத்து மூன்றாம் இடத்திலும், இந்தியாவின் ஆர்.பி. சிங் 9 விக்கெட்டுகள் எடுத்து நாலாம் இடத்திலும் இருக்கிறார்கள்

ராஜா
21-09-2007, 01:27 PM
இருபது/20 உலக கோப்பையில் இதுவரை

கள தடுப்பு வீரர்களின் செயல்பாடுகள்:

தென் ஆப்பிரிக்காவின் டி.வில்லியர்ஸ் 6 கேட்சுகள் பிடித்து முதல் இடத்தில் உள்ளார். அவரை தொடர்ந்து பாகிஸ்தானின் முகமது ஹபிஸ் மற்றும் யூனிஸ் இருவரும் - 5 கேட்சுகள் பிடித்து இரண்டாவது இடத்திலும், அஸ்திரேலியாவின் கிளார்க், பிரட் லீ, இங்கிலாந்தின் பிளிண்டாப் இன்னும் சிலர் 4 கேட்சுகள் பிடித்து 3 - ம் இடத்தில் உள்ளனர். இந்தியாவின் கார்த்திக் 3 கேட்சுகள் பிடித்து நான்காம் இடத்தில் உள்ளார்

ராஜா
21-09-2007, 01:28 PM
இருபது/20 உலக கோப்பையில் இதுவரை

இரு வீரர்கள் ஒன்று கூடினால் எப்படி இருக்கும்? :

மேற்கு இந்திய தீவுகளின் கேயல், ஸ்மித் இருவரும் சேர்ந்து 145 ரன்கள் எடுத்ததே அதிக ரன்களாகும். அதற்க்கு அடுத்த நிலையில், இந்தியாவின் சேவாக், காம்பீர் இருவரும் சேர்ந்து 136 ரன்களும், அதற்க்கு அடுத்து நிலையில் தென் ஆப்பிரிக்காவின் கிப்ஸ், கெம்ப் இருவரும் சேர்ந்து எடுத்த 120 ரன்களாகும்.

ராஜா
23-09-2007, 08:40 AM
போட்டி எண் 24: பாகிஸ்தான் x நியூசிலாந்து

வெற்றியாளர் : பாகிஸ்தான் (6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில்)

நியூசிலாந்து : 143 / (20 ஓவர்)

டெய்லர் - 37 ரன்கள் (அவுட் இல்லை), வின்செண்ட் - 28 ரன்கள்

உமர் குல் - 3 விக்கெட்டுகள்


பாகிஸ்தான்: 147 / 4 ( 18.5 ஓவர்)

இம்ரன் நசீர் - 59 ரன்கள், முகமது ஹபீஸ் - 32 ரன்கள்

ஸ்டைரிஸ், படேல், பாண்ட், வெட்டோரி - தலா 1 விக்கெட்


ஆட்ட நாயகன் : உமர் குல்

ராஜா
23-09-2007, 08:41 AM
போட்டி எண் 24: பாகிஸ்தான் x நியூசிலாந்து


இறுதி போட்டிக்குள் நுழைந்த வெற்றி களிப்பில், பாகிஸ்தான் வீரர்கள்

http://i115.photobucket.com/albums/n296/sspm3692/PAKVsNZ.jpg

ராஜா
23-09-2007, 09:14 AM
போட்டி எண் 25: இந்தியா x ஆஸ்திரேலியா


வெற்றியாளர் : இந்தியா (15 ரன்கள் வித்தியாசத்தில்)

இந்தியா : 188 / 5 (20 ஓவர்)

யுவராஜ் - 70 ரன்கள், தோனி - 36 ரன்கள்

ஜான்சன் - 2 விக்கெட்டுகள்


ஆஸ்திரேலியா : 173 / 7 (20 ஓவர்)

ஹெய்டன் - 62 ரன்கள், சைமண்ட்ஸ் - 43 ரன்கள்

ஸ்ரீசாந்த் - 2 விக்கெட்டுகள்


ஆட்ட நாயகன் : யுவராஜ்

ராஜா
23-09-2007, 09:29 AM
போட்டி எண் 25 (இரண்டாம் அரையிறுதி போட்டி) : இந்தியா x ஆஸ்திரேலியா


இந்தியா இறுதி போட்டிக்குள் நுழைந்ததை கொண்டாடும் இந்திய ரசிகர்கள்

http://i115.photobucket.com/albums/n296/sspm3692/IndianfansduringIndvAus.jpg

ஆட்ட நாயகன் யுவராஜ் சிங்

http://i115.photobucket.com/albums/n296/sspm3692/YuvrajsinghvAUS.jpg

மன்மதன்
23-09-2007, 10:00 AM
யாருப்பா அது.. கடைசியில் பாகிஸ்தானுக்கு இப்ப வந்து ஒரு ஓட்டுப் போட்டு போனது...

ராஜா
23-09-2007, 11:00 AM
போட்டி எண் 25 (இரண்டாம் அரையிறுதி போட்டி) : இந்தியா x ஆஸ்திரேலியா போட்டியின் பொழுது நிகழ்த்தப்பட்ட சாதனைகள் (அ) முறியடிக்கப்பட்ட சாதனைகள்....

1. யுவராஜ் சிங் அடித்த ஒரு சிக்ஸர் 119மீ தூரம் சென்றது. இதுவே இந்த உலக கோப்பை போட்டியில் மிக பெரிய சிக்ஸராகும். இதற்க்கு முன் பாகிஸ்தானின் மிஸ்பா-உல்-ஹக் 111மீ தூரத்துக்கு அடித்த சிக்ஸ்ரே சாதனையாக இருந்தது.

ஷீ-நிசி
23-09-2007, 11:14 AM
போட்டி எண் 25 (இரண்டாம் அரையிறுதி போட்டி) : இந்தியா x ஆஸ்திரேலியா போட்டியின் பொழுது நிகழ்த்தப்பட்ட சாதனைகள் (அ) முறியடிக்கப்பட்ட சாதனைகள்....

1. யுவராஜ் சிங் அடித்த ஒரு சிக்ஸர் 119மீ தூரம் சென்றது. இதுவே இந்த உலக கோப்பை போட்டியில் மிக பெரிய சிக்ஸராகும். இதற்க்கு முன் பாகிஸ்தானின் மிஸ்பா-உல்-ஹக் 111மீ தூரத்துக்கு அடித்த சிக்ஸ்ரே சாதனையாக இருந்தது.

மிஸ்பா-உல்-ஹக் அடித்தது 111மீ அல்ல 113 மீ ராஜா சார்...

ராஜா
23-09-2007, 11:53 AM
மிஸ்பா-உல்-ஹக் அடித்தது 111மீ அல்ல 113 மீ ராஜா சார்...

1. PakPassion - Pakistan Cricket Forum

- Biggest 6 Of The Tournament ...
Misbah's is measured at 111 while the next is measured at 109. Can you clearly say 100% that Misbah's six was more than Yuvraj's or Kemp's ... I think not ! ..

2. Yahoo! Answers -

Who is smashed longest six in this tournament ?
MISBAH-UL-HAQ of Pakistan hited 111 m long six against the World Champion Australia at New Wanderers Stadium, Johannesburg on September 18, 2007. Source(s): ..

3. MSN India Cricket

With three matches still remaining, the biggest six of the tournament so far was hit by Pakistan's Misbah-ul-Haq in his team's six-wicket victory over World Champions Australia in the Super Eight stage. Misbah smashed 66 runs off just 42 deliveries in an innings that included seven fours and that gargantuan 111m six..

ஷீ-நிசி
23-09-2007, 02:39 PM
மன்னிக்கனும்... நான் தான் தவறான தகவல் சொல்லிவிட்டேன்...

111 மீ என்பதே சரியானது... மேட்ச் நடக்கும்போது டிவியில் டிஸ்ப்ளே ஆனதை தவறாக பார்த்திருக்கிறேன் என்பது தெரிகிறது....

இணையத்தில் உலாவியதில் 111மீ என்பதே சரி என்பது புரிந்தது... நன்றி ராஜா சார்,

ராஜா
24-09-2007, 08:34 AM
இன்று...

முதல் ICC 20/20 உலகக் கோப்பை.. இறுதிப்போட்டி..

இந்தியா x பாகிஸ்தான்.

ஜோகன்னஸ்பர்க், தென் ஆப்ரிக்கா.

இந்திய நேரம் மாலை 5-30.

அமரன்
24-09-2007, 08:46 AM
சபாஸ்..சரியான போட்டி....

சாராகுமார்
24-09-2007, 03:18 PM
இந்தியா கோப்பை வென்றுள்ளது மிக்க மகிழ்ச்சி.வாழ்த்துக்கள்.

aren
24-09-2007, 03:20 PM
கோப்பையை வென்றி இந்தியாவிற்கு வாழ்த்துக்கள்.

இந்தியா மீது நம்பிக்கை வைத்த தலைக்கு நம் வாழ்த்துக்களை சொல்வோம்.

அறிஞர்
24-09-2007, 03:22 PM
வாவ்... இந்தியா சாதனை படைத்தது...

புதியவர்கள்... அணி.... பலரை வீழ்த்தி.. வெற்றியை தனதாக்கி கொண்டது....

இது வரை சரியாக விளையாடத.. கம்பீரின் ஆட்டம் இன்று சிறப்பு...

பதான், ஆபி சிங்க்... பவுலிங் அருமை...

அக்னி
24-09-2007, 03:23 PM
இந்திய அணிக்கு
:angel-smiley-023::nature-smiley-002::nature-smiley-002::music-smiley-009::sport-smiley-018::music-smiley-009::nature-smiley-002::nature-smiley-002::angel-smiley-023:வாழ்த்துக்கள்...:angel-smiley-023::nature-smiley-002::nature-smiley-002::music-smiley-009::sport-smiley-018::music-smiley-009::nature-smiley-002::nature-smiley-002::angel-smiley-023:

அறிஞர்
24-09-2007, 03:25 PM
இந்தியா மீது நம்பிக்கை வைத்து ஓட்டளித்த 6 பேருக்கு (ஜீவா மலர் வசந்தகுமார் ஷீ-நிசி mania pathman )சிறப்பு வாழ்த்துக்கள்.

ipsudhan
24-09-2007, 03:48 PM
இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையை தட்டி சென்றது,

வாழ்த்துகள் இந்திய அணிக்கு

அமரன்
24-09-2007, 04:00 PM
இந்திய அணிக்கு வாழ்த்துகள்....
வெற்றிகள் தொடர் பயணமாகட்டும்......

ஷீ-நிசி
24-09-2007, 04:02 PM
இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்!

http://i128.photobucket.com/albums/p163/shenisi/India.jpg

வாழ்த்துக்கள் இந்தியா.....

ராஜா
24-09-2007, 04:02 PM
இந்திய அணிக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்..!

அறிஞர்
24-09-2007, 04:40 PM
இந்திய அணிக்கு மிகப்பெரிய பரிசு....

கிரிக்கெட் சங்கள்... அணிக்கு 2 மில்லியன் அமெரிக்க டாலர்கள்., யுவராஜிற்கு 1 கோடி பரிசு... என அறிவித்துள்ளது...

மிகப்பெரிய சாதனை..

ராஜா
24-09-2007, 04:51 PM
ஹி..ஹி..

இனி கேப்டன் பதவி கிடைக்கலேன்னு யுவராஜ் தகராறு பண்ண மாட்டாரு..!

ராஜா
24-09-2007, 04:53 PM
http://i115.photobucket.com/albums/n296/sspm3692/Twenty20worldcup.jpg

ஓவியன்
24-09-2007, 04:56 PM
வெற்றி பெற்ற இந்திய வீரர்களுக்கு வாழ்த்துக்கள்.......
இறுதிவரை போராடிய பாகிஸ்தானிய வீரர்களுக்குப் பாராட்டுக்கள்....

இறுதி ஓவர், ஒரு திரில்லர் படம் போலமைந்து விட்டது....
சிக்கசரைக் கொடுத்தாலும் விக்கட்டை வீழ்த்தி வெற்றிக் கனியை பறித்தார் சர்மா.....

Mathu
24-09-2007, 06:05 PM
வெற்றி பெற்ற இந்திய அணிக்கு வாழ்த்துகள்.
கெளதம் கம்பீரின் நிதானமான ஆட்டம், RP சிங், பதனின் சிறந்த பந்து வீச்சு வெற்றிக்கனியை சுவைக்க வைத்திருக்கிறது.
இறுதிவரை போராடிய பாக் வீரர்களுக்கும் வாழ்த்துகள்

மன்மதன்
24-09-2007, 06:29 PM
மிஸ்பாவுல் ஹக் நமக்கு வெற்றியை தந்தார் என்றும் சொல்லலாம்.. நம் இதயத்துடிப்பை எகிற வைத்த கடைசி ஓவரில் 12 ரன் என்றிருக்க ஒரு சிக்ஸரை லாவகமாக அடித்து நான்கு பந்துகளில் 6 ரன்கள் என்ற நிலையில் வந்தும், ஏன் அப்படி ஒரு கிண்டு கிண்டினார் என்பது மட்டும் புரியவில்லை.. அங்கே ஒரு ஃபீல்டர் இருக்கிறார் என்று தெரிந்தும் அங்கே அடித்தது மடத்தனமே.. ஜொஹிந்தர் சிங்கின் 4 பந்தில் எளிதாக முடித்திருக்க வேண்டிய ஆட்டம்..

கேப்டன் தோனியை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.. எங்களை அதிகம் எதிர்பார்க்காதீர்கள் என்று சொல்லி சொல்லியே கோப்பையை கைப்பற்றி நம்மை பெருமைப்பட வைத்து விட்டார். அந்த கடைசி ஓவரை ஜோஹிக்கு கொடுப்பது என்பது தோனியால் மட்டுமே முடியும்..

அவ்வப்போது சொதப்பினாலும் அனைவருமே வெகு சிறப்பாக விளையாடி கோப்பையை கைப்பற்றினர்.. இந்திய அணிக்கு பாராட்டுகள்..

மொத்தத்தில் இந்த மேட்ச் சூப்பர்ப்... நல்ல கிரிக்கெட்........

இதுவரை உலகக்கோப்பை போட்டியில் இந்தியாவை பாகிஸ்தான் ஜெயித்ததில்லை என்பதை எங்கே முதல் மேட்சில் மாற்றிவிடுவார்களோ என்று கவலைப்பட்டோம்... அட இப்போது ஃபைனலில் வென்று விடுவார்களோ என்று கூட தோணியது.. நம்ம ஆள்கள் இதை மட்டும் விட்டுக்கொடுக்கவே மாட்டார்கள்..இனி எந்த உலகக்கோப்பையிலும் பாகிஸ்தான் இந்தியாவை வெல்ல முடியாது.. ஜெய்ஹிந்த்.........

அறிஞர்
24-09-2007, 06:34 PM
அண்ணன், தம்பி.. பதான் ஜோடி.. எதிர்காலத்தில் சிறப்பாக இருக்கும் என எண்ணுகிறேன்..

மன்மதனின்... கருத்து அருமை...

pathman
25-09-2007, 04:22 AM
இந்தியா மீது நம்பிக்கை வைத்து ஓட்டளித்த 6 பேருக்கு (ஜீவா மலர் வசந்தகுமார் ஷீ-நிசி mania pathman )சிறப்பு வாழ்த்துக்கள்.

அறிஞர் அவர்களே நான் இலங்கையில் பிறந்தது வளர்ந்தாலும் எனக்கு நினைவு தெரிந்த நாள் முதலாக எனக்கு மிக பிடித்த அணி இந்திய அணியே. இந்திய அணி வெற்றி பெற்றால் ஒரு சந்தோசம் வரும் பாருங்கள் அதை வார்தையால் சொல்ல இயலாது. இந்திய அணி தோல்வி அடையும் போது தூக்கம் தொலைவில் நிற்க்கும்.

இது ஏன் எப்படி என்று இன்னும் தெரியவில்லை !

ஷீ-நிசி
25-09-2007, 04:28 AM
மன்மதனின் விமர்சனம் சூப்பர்...

pathman
25-09-2007, 04:54 AM
எல்லோரும் அவுஸ்ரேலியா, தென்னாபிரிக்கா என்று ஆரூடம் சொல்ல அதை பொய்யாக்கி இறுதி போட்டி வரை வந்த இந்திய, பாக்கிஸ்தானி அணிகளுக்கு வாழ்த்துகள்.

இறுதி வரை போராடிய பாக்கிஸ்தானிய அணிக்கு வாழ்த்துகள்.

சாராசரிக்கு குறைந்த ஒட்டங்களே பெற்றாலும் தனது பந்து வீச்சாளர்களை சிறந்த முறையில் பயன்படுத்திய தோனி, அதை செவ்வனே நிறைவேற்றிய ஆர்.பீ சிங், பதான், சிறப்பாக பேட் செய்த கௌதம் காம்பீர் மற்றும் அனைத்து இந்திய அணி வீரர்களுக்கும் வாழ்த்துகள்.

ராஜா
25-09-2007, 07:54 AM
அண்ணன், தம்பி.. பதான் ஜோடி.. எதிர்காலத்தில் சிறப்பாக இருக்கும் என எண்ணுகிறேன்..
.

அறிஞரே...

யூசுஃப் பதான் அப்படி ஒன்றும் மிகச் சிறந்த வீரர் இல்லை.. உள்நாட்டு போட்டிகளிலேயே அவரது மட்டையடி சராசரி 30% என்ற அளவில்தான் இருக்கிறது.. சுழற்பந்து வீச்சிலும் அவர் சுமாரானவர்தான்..

அவரைவிட சிறந்த வீரர்கள் இருந்தும், யூசுஃபை, உலகக் கோப்பைக்கு அழைத்துச் சென்று, பெயருக்கு ஒரு போட்டியில் ஆட வைத்து, லட்சக்கணக்கான ரூபாய்களை ஊதியமாகப் பெற்றுத்தந்தது, இர்ஃபான் பதானின் பலத்த சிபாரிசாகத்தான் இருக்கவேண்டும்..

ராஜா
25-09-2007, 07:57 AM
இருபது / 20 உலக் கோப்பை இறுதி போட்டி

(போட்டி எண் 27 ) இந்தியா x பாகிஸ்தான்

சாம்பியன்: இந்தியா.. ( 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி)

இந்தியா : 157 / 5 (20 ஓவர்)

காம்பீர் - 75 ரன்கள் , ரோகித் சர்மா - 30 ரன்கள்

உமர் குல் - 3 விக்கெட்டுகள்


பாகிஸ்தான் - 152 /10 (19.3 ஓவர்)

மிஸ்பா - உல் - ஹக் - 43 ரன்கள், இம்ரன் நசீர் - 33 ரன்கள்

பாதான் மற்றும் ஆர்.பி. சிங் - தலா 3 விக்கெட்டுகள்


ஆட்ட நாயகன் : இர்பான் பதான்

தொடர் நாயகன்: ஷாகித் அப்ரிதி

ராஜா
25-09-2007, 07:58 AM
http://i60.photobucket.com/albums/h7/texneed/mtm/3-8.jpg

ராஜா
25-09-2007, 08:00 AM
http://i60.photobucket.com/albums/h7/texneed/mtm/2-7.jpg

ராஜா
25-09-2007, 08:04 AM
இந்தியா இறுதி போட்டிக்குள் நுழைந்ததும், கிரிக்கெட் பிரியரான இந்தி நடிகர் சாருக்கான் ஜோகன்ஸ்பர்க் பறந்து சென்று, இந்திய வீரர்களை உற்சாகப்படுத்தினார்

http://i115.photobucket.com/albums/n296/sspm3692/shahrukhKhan.jpg

ராஜா
25-09-2007, 08:05 AM
இந்த தொடரில், இந்தியாவின் சார்பில் 200 ரன்களுக்கு மேல் எடுத்த கெளதம் காம்பீர், இந்த போட்டியில் மிகவும் அற்புதமாக 75 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வித்திட்டார்

http://i115.photobucket.com/albums/n296/sspm3692/GauthamGambhirswingfor6.jpg

ராஜா
25-09-2007, 08:06 AM
இந்தியாவின் கேப்டன் தோனி, தனது உண்மையான அதிரடி ஆட்டத்தை இந்த தொடரில் காட்டவில்லை. ஆனால், சிறப்பாக வீரர்களை வழி நடத்தி சென்றார். இதோ அவர் 6 ரன்களுக்கு அவுட் ஆன விதம்

http://i115.photobucket.com/albums/n296/sspm3692/Dhoniout.jpg

ராஜா
25-09-2007, 08:08 AM
பாகிஸ்தான் தரப்பில் பந்து வீச்சில் மிரட்டிய உமர் குல்

http://i115.photobucket.com/albums/n296/sspm3692/UmarGultookthreewickets.jpg

அமரன்
25-09-2007, 08:08 AM
தோனி கேப்டன் ஆவாரா?

ராஜா
25-09-2007, 08:09 AM
போட்டியின் பொழுது, மிக முக்கியமான மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி தந்த இர்பான் பதான்.

http://i115.photobucket.com/albums/n296/sspm3692/IrfanpathanJumpsaftertakingthreewic.jpg

ராஜா
25-09-2007, 08:10 AM
இதோ இர்பான் பதான், யாசிர் அரபாத்தை அவுட் ஆக்கிய விதம்


http://i115.photobucket.com/albums/n296/sspm3692/yasirArfatbowledbyPathan.jpg

ராஜா
25-09-2007, 08:12 AM
இந்த தொடர் முழுவதும் அற்புதமாக பந்து வீசிய ஆர்.பி.சிங், இந்த போட்டியிலும் 3 விக்கெட்டுகள் எடுத்தார்..
இதோ அவர் கம்ரன் அக்மலை அவுட் ஆக்கிய பொழுது


http://i115.photobucket.com/albums/n296/sspm3692/RPsinghtookthreewickets.jpg

ராஜா
25-09-2007, 08:13 AM
இம்ரான் நசீரை, மிகவும் அருமையான நேர் பந்து வீச்சால் ரன் அவுட் செய்த உத்தப்பாவை தூக்கி மகிழும் வீரர்கள்


http://i115.photobucket.com/albums/n296/sspm3692/RobinUtappacelebratesimranNazirruno.jpg

ராஜா
25-09-2007, 08:15 AM
நான்கு பந்துகள் இருக்கின்றன. வெற்றி பெற 6 ரன்கள் வேண்டும்.. மிஸ்பா, ஜொகிந்தர் சிங்கின் 3 வது பந்தை இப்படி தூக்கி பின் புறம் அடிக்கிறார்...(இதுவே அவர் செய்த தவறு)

http://i115.photobucket.com/albums/n296/sspm3692/MisbahscoopedJogindersharma.jpg

ராஜா
25-09-2007, 08:16 AM
அவர் அடித்த அந்த பந்தை பிடித்து விட்டால், இந்தியா வெற்றி.. இல்லையேல் தோல்வி அடையும் நிலை.. தவறு எதுவும் செய்யாமல், ஸ்ரீசாந்த அந்த பந்தை மிகவும் லாவகமாக பிடித்து, இந்தியாவின் வெற்றியை உறுதி படுத்தினார்.

http://i115.photobucket.com/albums/n296/sspm3692/Importantcatchbysrichanth.jpg

ராஜா
25-09-2007, 08:17 AM
ஸ்ரீசாந்த் கேட்ச் பிடிக்க, இந்தியா வெற்றி பெற, நம் இந்திய வீரர்கள் மகிழ்ச்சியில் ஸ்டெம் எல்லாவற்றையும் எடுத்து மகிழ்ச்சி ஆராவாரம் செய்கிறார்கள்... ஒருபுறம், மிஸ்பா தான் செய்த தவறுக்கு வருந்தி தலை குனிந்து இருக்கிறார்

http://i115.photobucket.com/albums/n296/sspm3692/Misbharegratehismistake.jpg

ராஜா
25-09-2007, 08:19 AM
இந்தியாவின் தேசிய கொடி மற்றும் கோப்பையை எடுத்து கொண்டு, இருபது/20 சாம்பியன்களான இந்திய வீரர்கள் திடலை சுற்றி ஓடி வந்து, தங்களது நன்றிகளை ரசிகர்களுக்கு தெரிவித்தார்கள்

http://i115.photobucket.com/albums/n296/sspm3692/Indinaflags.jpg

ராஜா
25-09-2007, 08:20 AM
உலக கோப்பையுடன் இந்திய அணி கேப்டன் மகேந்திர சிங் தோனி

http://i115.photobucket.com/albums/n296/sspm3692/DhoniwithTwenty20Worldcup.jpg

ராஜா
25-09-2007, 08:21 AM
உலக கோப்பையுடன் இந்திய அணி

http://i115.photobucket.com/albums/n296/sspm3692/Champiions.jpg

உதயசூரியன்
25-09-2007, 01:45 PM
வாழ்த்துக்கள்.... இந்தியாவிற்கு....

கூட்டு முயற்சி... விடா முயற்சி தான் எப்போதும் வெற்றி பெறும்...

அந்த விஷயத்தில்...
னம்மவர்கள்.. ஆஸ்திரேலியாவிடமும்.. கடைசி ஓவர்களை வீனடித்தார்கள்....விக்கட்டுக்கள் கையிலிருந்தும்..
இங்கிலாந்திடமும்...வீனடித்தார்கள்.. கடைசி ஓவர்களில்...

பாகிஸ்தானிடம்.. கையில் 6 விக்கட்டுக்களை வைத்து வாயை பார்த்து கொண்டு... 13 வது ஓவரிலிருந்து... சொதப்பிய ஆட்ட காரர்களை என்ன சொல்வது...
13 வது ஓவரிலிருந்து அடித்து ஆடினாள்.. 200 இ தாண்டியிருக்கும்

இது நிஜம்..

அப்புறம்..

அருமையான பாக் துவக்கத்தை... நசிர் ரன் அவுட் மூலம் தடுத்து..
வெற்றியை தம் பக்கம் இழுத்து வந்து விட்டு...
17 மற்றும்.. 18 வது ஓவரில்......... ரன்னை கொடுத்து விட்டு...
பேந்த பேந்த முழித்த... நமது விரர்களை பார்க்க
அப்படியே..
"பேஸ்ட்மென்ட் வீக்" என்று சொல்லும் வடிவேலுக்களாக தான் தெரிந்தார்கள்...
இருந்த போதும்...
விடா முயற்சிக்கு வாழ்த்துக்கள்...

இதன் மூலம் நம் தவறுகளை மறுக்க கூடாது..
அதை களைய வேண்டும்...
தோனி...சரியாக விளையாட வில்லை..
அசிங்க மான முறையில் அவுட் ஆனார்...
அடித்து ஆட கூடியவர்களுக்கு ஏற்ற போட்டி இது..
இதிலேயே.. அவரின் பேட்டிங்க் கேள்வி குறியாகி போனது வருத்தமே...

தொடரில்..யுவராஜ் சிங்க் பொதுவாக நல்லா ஆடினார்....
கடைசியில் கவுத்துட்டார்..

பாஜி... சொதப்பி விட்டுட்டார்...

இறுதியில் வெற்றி இந்தியாவிற்க்கு....

ஆனால்.. பாக் அணியில் பல திறமையானவர்கள் இருக்கிறார்கள் என்பது... நிரூப்பித்துள்ளனர்...

23 பந்துக்கு.... 53 ரன் எடுக்க வேண்டிய நிலை.. வெளியில் 2 விக்கட்டுக்கள் தான்..
இன்னிலையில் இந்தியா இருந்து இருந்தால்.. அடுத்த 3 பந்துகளில் ஆட்டம் இழந்து...(எல்லாம் கடைசி நேர பிரஷர் தான்) தானாகவே கையிலே கொடுத்திருப்பர்..

ஆனால் பாக் வீரர்களின் போராடும் குணம்.. 5 சிக்சர்கள்.. அற்புதம்..
னம்ம ஆளுங்களை அழ வைத்து விட்டனர்...
அவர்களின் சேஸிங்க் பிளான் அருமை...
3 சிக்சர்களை அடித்த போது.. ஒரு ரன் 2 ரன்னுக்கு வாய்ப்பு இருந்தும்.. ஓடாமல்.. நின்று சிக்சராக அடித்த அந்த வீரர் (அக்) பாராட்டு குறியவர்...
கலக்கலாக 4 பந்துக்கு 6 ரன்கள் கடைசி விக்கட் என்ற நிலையிலும்.. அவர் பொறுமையில்லாமல் தூக்கிய கடைசி ஷாட்டில் தான் இந்தியாவிற்கு.. ஒளியே பிறந்தது..
இது பாகிஸ்தானின் தவறான ஆட்டத்திற்க்கான பரிசு தான் இந்தியாவின் வெற்றி...

அந்த வீரரின் தவறான ஷாட்டும் தான் பாக் இன் தோல்விக்கு காரனம்...
அதே நேரத்தில்.. இருந்த டென்ஷனில்.. அந்த காட்சை.. கோட்டை விடாமல் பிடித்த சிரி சாந்துக்கு.. வாழ்த்துக்கள்......வெற்றியின் மகிழ்ச்சியில்.. நானும் இணைந்து கொள்கிறேன்..
இந்தியாவிற்கு வாழ்த்துக்கள்....

வாழ்க தமிழ்

ஷீ-நிசி
25-09-2007, 02:23 PM
வாழ்த்துக்கள்.... இந்தியாவிற்கு....

கூட்டு முயற்சி... விடா முயற்சி தான் எப்போதும் வெற்றி பெறும்...

அந்த விஷயத்தில்...
னம்மவர்கள்.. ஆஸ்திரேலியாவிடமும்.. கடைசி ஓவர்களை வீனடித்தார்கள்....விக்கட்டுக்கள் கையிலிருந்தும்..
இங்கிலாந்திடமும்...வீனடித்தார்கள்.. கடைசி ஓவர்களில்...

பாகிஸ்தானிடம்.. கையில் 6 விக்கட்டுக்களை வைத்து வாயை பார்த்து கொண்டு... 13 வது ஓவரிலிருந்து... சொதப்பிய ஆட்ட காரர்களை என்ன சொல்வது...
13 வது ஓவரிலிருந்து அடித்து ஆடினாள்.. 200 இ தாண்டியிருக்கும்

இது நிஜம்..

அப்புறம்..

அருமையான பாக் துவக்கத்தை... நசிர் ரன் அவுட் மூலம் தடுத்து..
வெற்றியை தம் பக்கம் இழுத்து வந்து விட்டு...
17 மற்றும்.. 18 வது ஓவரில்......... ரன்னை கொடுத்து விட்டு...
பேந்த பேந்த முழித்த... நமது விரர்களை பார்க்க
அப்படியே..
"பேஸ்ட்மென்ட் வீக்" என்று சொல்லும் வடிவேலுக்களாக தான் தெரிந்தார்கள்...
இருந்த போதும்...
விடா முயற்சிக்கு வாழ்த்துக்கள்...

இதன் மூலம் நம் தவறுகளை மறுக்க கூடாது..
அதை களைய வேண்டும்...
தோனி...சரியாக விளையாட வில்லை..
அசிங்க மான முறையில் அவுட் ஆனார்...
காட்டான் களுக்கு ஏற்ற போட்டி இது..
இதிலேயே.. அவரின் பேட்டிங்க் கேள்வி குறியாகி போனது வருத்தமே...

தொடரில்..யுவராஜ் சிங்க் பொதுவாக நல்லா ஆடினார்....
கடைசியில் கவுத்துட்டார்..

பாஜி... சொதப்பி விட்டுட்டார்...

இறுதியில் வெற்றி இந்தியாவிற்க்கு....

ஆனால்.. பாக் அணியில் பல திறமையானவர்கள் இருக்கிறார்கள் என்பது... நிரூப்பித்துள்ளனர்...

23 பந்துக்கு.... 53 ரன் எடுக்க வேண்டிய நிலை.. வெளியில் 2 விக்கட்டுக்கள் தான்..
இன்னிலையில் இந்தியா இருந்து இருந்தால்.. அடுத்த 3 பந்துகளில் ஆட்டம் இழந்து...(எல்லாம் கடைசி நேர பிரஷர் தான்) தானாகவே கையிலே கொடுத்திருப்பர்..

ஆனால் பாக் வீரர்களின் போராடும் குணம்.. 5 சிக்சர்கள்.. அற்புதம்..
னம்ம ஆளுங்களை அழ வைத்து விட்டனர்...
அவர்களின் சேஸிங்க் பிளான் அருமை...
3 சிக்சர்களை அடித்த போது.. ஒரு ரன் 2 ரன்னுக்கு வாய்ப்பு இருந்தும்.. ஓடாமல்.. நின்று சிக்சராக அடித்த அந்த வீரர் (அக்) பாராட்டு குறியவர்...
கலக்கலாக 4 பந்துக்கு 6 ரன்கள் கடைசி விக்கட் என்ற நிலையிலும்.. அவர் பொறுமையில்லாமல் தூக்கிய கடைசி ஷாட்டில் தான் இந்தியாவிற்கு.. ஒளியே பிறந்தது..
இது பாகிஸ்தானின் தவறான ஆட்டத்திற்க்கான பரிசு தான் இந்தியாவின் வெற்றி...

அந்த வீரரின் தவறான ஷாட்டும் தான் பாக் இன் தோல்விக்கு காரனம்...
அதே நேரத்தில்.. இருந்த டென்ஷனில்.. அந்த காட்சை.. கோட்டை விடாமல் பிடித்த சிரி சாந்துக்கு.. வாழ்த்துக்கள்......வெற்றியின் மகிழ்ச்சியில்.. நானும் இணைந்து கொள்கிறேன்..
இந்தியாவிற்கு வாழ்த்துக்கள்....

வாழ்க தமிழ்


இப்பகூட பாராட்ட முடியலைன்னா உங்களை எல்லாம் என்னத்த சொல்றது??:icon_ush:

உதயசூரியன்
25-09-2007, 02:34 PM
நான் வாழ்த்தலைன்னு யார் சொன்னது....
நல்லா படிங்க

ஷீ-நிசி
25-09-2007, 02:42 PM
நான் வாழ்த்தலைன்னு யார் சொன்னது....
நல்லா படிங்க

நல்லா வாழ்த்தி இருக்கறீங்க... படிக்கும்போதே ரொம்ப சந்தோஷமா இருக்குது...

உதயசூரியன்
25-09-2007, 02:44 PM
வாழ்த்துக்களுடன்.. ஒரு ஆய்வு விமர்சனம் கொடுத்துள்ளேன்...
நேற்று வெற்றி களிப்பில் இருந்தேன்..

அதனால் இன்று எழுதினேன்...
அந்த பந்து சிக்சாக மாறியோ அல்லது 4 பந்துகளையும் விளையாடி பாக் வெற்றி பெற்றிருந்தாலோ .. நம்மவர்களின் பேச்சு இப்படி இருந்திருக்காது...

அதே நேரத்தில்..
நல்ல போட்டியை கொடுத்த பாகிஸ்தானை பாராட்டாமல் இருக்க முடியாது...

இந்திய எனது நாடு என்பதனால் மகிழ்ச்சி..குதூகலம்.. உண்டு..
ஆனால்..
நானும் எனது ஊறில் கேப்டனாக இருந்த காரணத்தினால்.. அதை விவாதித்துள்ளேன்.. மற்றும் குறைகளை திருத்தவேண்டும் என்பது என் விருப்பம்.. ஏனென்றால் இந்தியா என்பதில் எனக்கும் உரிமை இருக்கிறது என்ற நினைப்பில்..

( இன்றும் எங்கள் லோக்கல் டீமுக்கு நாங்க தான் பயிற்சியாளர் மற்றும்.. ஆடாமல் வெளியிலிருக்கும் காப்டன்)

வாழ்த்துக்கள் ஷீ நிஷிக்கும்

உதயசூரியன்
25-09-2007, 02:48 PM
நான் சரியான விமர்சனத்தை தான் கொடுத்துள்ளேன்...

எனது பதிப்பில். யாருக்கேனும் கஷ்டாமாயிருந்தால்.. என்னை மன்னிக்கவும்...

வாழ்த்துக்கள்

விளையாட்டை விளையாட்டாக பாருங்கள்..

இரு நாட்டு சண்டை போல் பார்க்காதீர்

வீரர்கலை தூக்கி வைத்து ஆட வேண்டாம்.. தூக்கி கீழே போடவும் வேண்டாம்

ஷீ-நிசி
25-09-2007, 02:53 PM
வாழ்த்துக்களுடன்.. ஒரு ஆய்வு விமர்சனம் கொடுத்துள்ளேன்...
நேற்று வெற்றி களிப்பில் இருந்தேன்..

அதனால் இன்று எழுதினேன்...
அந்த பந்து சிக்சாக மாறியோ அல்லது 4 பந்துகளையும் விளையாடி பாக் வெற்றி பெற்றிருந்தாலோ .. நம்மவர்களின் பேச்சு இப்படி இருந்திருக்காது...
அதே நேரத்தில்..
நல்ல போட்டியை கொடுத்த பாகிஸ்தானை பாராட்டாமல் இருக்க முடியாது...

இந்திய எனது நாடு என்பதனால் மகிழ்ச்சி..குதூகலம்.. உண்டு..
ஆனால்..
நானும் எனது ஊறில் கேப்டனாக இருந்த காரணத்தினால்.. அதை விவாதித்துள்ளேன்.. மற்றும் குறைகளை திருத்தவேண்டும் என்பது என் விருப்பம்.. ஏனென்றால் இந்தியா என்பதில் எனக்கும் உரிமை இருக்கிறது என்ற நினைப்பில்..

( இன்றும் எங்கள் லோக்கல் டீமுக்கு நாங்க தான் பயிற்சியாளர் மற்றும்.. ஆடாமல் வெளியிலிருக்கும் காப்டன்)

வாழ்த்துக்கள் ஷீ நிஷிக்கும்

அப்படித்தான்.. விளையாட்டுனா எதிரணி கைய கட்டி வேடிக்கை பார்த்துட்டு இருப்பானா, எந்த பந்து வந்தாலும் சிக்ஸருக்கு தூக்க வேண்டிய நிலையில் தான் மிஸ்பா-உல்-ஹாக், சிக்ஸருக்கு போகவும் வாய்ப்புள்ளது. கேட்ச் ஆகவும் வாய்ப்புள்ளது.

கடைசி ரிசல்ட் என்ன.. அதுதான் முக்கியம், வெற்றி பெற்றார்களா பாராட்டுவோம். எல்லா பேட்ஸ்மேனும் எல்லா நாட்களிலும் ஜொலிக்க முடியாது. எல்லா போட்டிகளிலும் யுவ்ராஜ் ஜொலித்தால் மற்ற பேட்ஸ்மேன்கள் எதற்கு?

இங்கிலாந்து, ஆஸ்திரேலியாக்கு எதிராக யுவராஜ் சிறப்பாக ஆடினார்
லீக் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக உத்தப்பா சிறப்பாக ஆடினார்
பைனலில் பாகி. எதிராக காம்பிர் சிறப்பாக ஆடினார்.

ஸ்ரீசாந்த் ஆஸ்திரேலியாவிற்கு எதிராய் சிறப்பாக பவிலிங் போட்டார்..
பாகிஸ்தானுக்கு எதிராய் சரியாய் அமையவில்லை.

பதான் சிறப்பாக செயல்பட்டார்..

எப்பொழுதுமே எல்லாராலுமே சிறப்பாக ஜொலிக்கமுடியாது..

அதுதான் கூட்டுமுயற்சி தேவை. அது இருந்ததனால்தான் இந்தியா சிறப்பாக ஜெயிக்க முடிந்தது.

அதனால் இந்த நேரத்தில் விமர்சனங்கள் தேவையில்லை..

வாழ்த்துவோம் 100%

உதயசூரியன்
25-09-2007, 03:09 PM
அதை தானே சொல்லியிருக்கிறேன்... கூட்டு முயற்சி... மற்றும் விடா முயற்சிக்கு கிடத்த வெற்றி என்று....

என்னவன் விஜய்
25-09-2007, 07:49 PM
இறுதியில் பாகிஸ்தான் அணியின் தலைவர் பேசியதுதான் எனக்கு கவலையை கொடுத்தது
நன்றி

ராஜா
26-09-2007, 11:19 AM
உதய சூரியனின் விமர்சனம் வெகு அருமை..!

உண்மைதான்.. மிஸ்பா உல் ஹக்கின் விநாடி நேர முட்டாள்தனமே இந்திய வெற்றிக்கு அடிப்படை..

என்றாலும் முட்டி மோதி இறுதிப்போட்டிவரை வந்து, மிஸ்பா கொடுத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட ஸ்ரீ சாந்த் உள்ளிட்ட இந்திய அணிக்கு பாராட்டுகள்.

வெற்றியின் கொண்டாட்டத்தில் செய்த தவறுகளை மறந்துவிடக் கூடாது..

உதயசூரியனின் விமர்சனத்தில் இந்தியா செய்த தவறுகளைப் பட்டியல் இட்டுள்ளார்.. அவற்றைத் திருத்திக்கொள்ள இந்திய அணி முயலவேண்டும்.

ராஜா
26-09-2007, 11:32 AM
இருபது / 20 உலக கோப்பை போட்டிகளில் லீக் சுற்று ஆட்டங்களில் இருந்து இறுதி ஆட்டம் வரை நடந்த போட்டிகளும் அதன் முடிவுகளும்

http://i115.photobucket.com/albums/n296/sspm3692/ICCworldcuptwenty20MatchResults.jpg

ராஜா
26-09-2007, 11:34 AM
20/20 உலகக் கோப்பை.. சில புள்ளி விவரங்கள்..

மிக அதிக ரன் மற்றும் குறைவான ரன்


1. ஒரு இன்னிங்சில் மிக அதிக ரன் அடித்த அணி என்ற பெருமையை இலங்கை பெறுகிறது. அது கென்யாவுக்கு எதிராக 260 ரன்கள் எடுத்தது.

2. மிக குறைவான ரன் அடித்த அணி என்ற பெருமையை பங்களாதேஷ் பெறுகிறது. அது இலங்கைக்கு எதிராக 83 ரன்கள் எடுத்தது.

ராஜா
26-09-2007, 11:37 AM
20/20 உலகக் கோப்பை.. சில புள்ளி விவரங்கள்..

200-க்கு மேல் ரன்கள் எடுத்த அணிகள் 5 மட்டுமே. அவை

1. இலங்கை - 260 /6 ( V ) கென்யா

2. இந்தியா - 218 / 4 ( V ) இங்கிலாந்து

3. தென் ஆப்பிரிக்கா - 208 / 2 ( V ) மே.இ.தீவுகள்

4. மே.இ.தீவுகள் - 205 / 6 ( V ) தென் ஆப்பிரிக்கா

5. இங்கிலாந்து - 200 / 6 ( V ) இந்தியா

ராஜா
26-09-2007, 11:38 AM
20/20 உலகக் கோப்பை.. சில புள்ளி விவரங்கள்..

100 - க்கு கீழ் ரன்கள் எடுத்த அணிகள் 2 மட்டுமே. அவை

1. பங்களாதேஷ் - 83 / 10 ( x) இலங்கை

2. கென்யா - 88 / 10 ( x ) இலங்கை

ராஜா
26-09-2007, 11:41 AM
20/20 உலகக் கோப்பை.. சில புள்ளி விவரங்கள்..

ஒரே போட்டியில் மிக அதிக ரன்கள் ...

இந்தியாவுக்கும், இங்கிலாந்துக்கும் இடையே நடந்த போட்டியில் இரு அணிகளும் சேர்ந்து எடுத்த 418 என்பது தான் மிக அதிகபட்ச ரன் சேர்க்கையாகும்

இந்தியா 218.

இங்கிலாந்து 200.

ராஜா
26-09-2007, 11:43 AM
20/20 உலகக் கோப்பை.. சில புள்ளி விவரங்கள்..

மிகக் குறைவான ரன்கள்..

மிக குறைவாக கென்யா, நியூசிலாந்துக்கு இடையேயான போட்டியின் பொழுது 147 ரன்கள் எடுக்கப்பட்டது.

ராஜா
26-09-2007, 11:46 AM
20/20 உலகக் கோப்பை.. சில புள்ளி விவரங்கள்..


அதிக வித்தியாசத்தில் வெற்றி பெற்ற விவரம் ..

ரன்கள் அடிப்படையில்:

மிக அதிகமாக இலங்கை, கென்யாவை 172 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.

விக்கெட் அடிப்படையில்:

மிக அதிகமாக ஆஸ்திரேலியா, இலங்கையை பத்து (10) விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது

பந்துகள் அடிப்படையில்:

மிக அதிகமாக நியூசிலாந்து, கென்யாவை 74 பந்துகள் மீதம் இருக்கையில் வெற்றி கண்டது ..

ராஜா
26-09-2007, 11:49 AM
20/20 உலகக் கோப்பை.. சில புள்ளி விவரங்கள்..


குறைந்த வித்தியாசத்தில் வெற்றி பெற்ற விவரம் ..

ரன்கள் அடிப்படையில்:

மிக குறைவாக இந்தியா, பாகிஸ்தானை 5 ரன்கள் வித்தியாசத்தில் (இறுதி போட்டி) வெற்றி கண்டதும்,
நியூசிலாந்து, இங்கிலாந்தை 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டதும் உள்ளது .

விக்கெட் அடிப்படையில்:

மிக குறைவாக பாகிஸ்தான், பங்களாதேசை நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.

பந்துகள் அடிப்படையில்:

மிக குறைவாக ஜிம்பாப்வே, ஆஸ்திரேலியாவை 1 பந்து மீதம் இருக்கையில் வெற்றி கண்டது

ராஜா
26-09-2007, 11:53 AM
20/20 உலகக் கோப்பை.. சில புள்ளி விவரங்கள்..



[U]அதிகமான மற்றும் குறைவான உபரி (Extra runs) ரன்கள் கொடுத்த அணிகள்..

மிக அதிக பட்சமாக மேற்கு இந்திய தீவுகள் அணி, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 28 உபரி ரன்களை வாரி வழங்கியது.

மிக குறைவாக பங்களாதேஷ் (இரு முறையும்), இங்கிலாந்து ஒரு முறையும் வெறும் 2 ரன்களை மட்டுமே உபரியாக கொடுத்தன.

ராஜா
26-09-2007, 11:57 AM
20/20 உலகக் கோப்பை.. சில புள்ளி விவரங்கள்..


அதிக ரன் குவித்த வீரர்கள்..

1.மாத்யூ ஹெய்டன் [ஆஸி] 265 ஓட்டங்கள் [4x50] 6 போட்டிகளில்..

2. கௌதம் கம்பீர் [இந்தியா] 227 ஓட்டங்கள் [3x50] 6 போட்டிகளில்..

ராஜா
26-09-2007, 11:58 AM
20/20 உலகக் கோப்பை.. சில புள்ளி விவரங்கள்..


உலக கோப்பை போட்டியில் சதம் அடித்த ஒரே வீரர் என்ற பெருமையை மேற்கு இந்திய தீவுகளின் கிரிஸ் கெய்ல் பெறுகிறார்.

அவர் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 117 ரன்கள் எடுத்தார். இதுவே ஒரு வீரர் எடுத்த அதிக பட்ச ரன் சேர்க்கை ஆகும்.

ராஜா
26-09-2007, 12:04 PM
20/20 உலகக் கோப்பை.. சில புள்ளி விவரங்கள்..


அதிவேக ரன் குவிப்பாளர்கள்..(Strike rate)

1. ஷாகித் அஃப்ரிதி.. 197.82. [46 பந்துகள், 91 ரன்கள்.]

2. கிரிஸ் கெயல்.... 195.00. [59 பந்துகள், 117 ரன்கள்]

3. யுவராஜ் சிங்...... 194.73. [76 பந்துகள், 148 ரன்கள்].

ராஜா
26-09-2007, 12:08 PM
20/20 உலகக் கோப்பை.. சில புள்ளி விவரங்கள்..


மட்டையடி மாண்பாளர்கள்..

மிக குறைவான பந்துகளில் 50

இந்தியாவின் யுவராஜ் சிங் 12 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து உலக சாதனை படைத்தார். அதில் 4 x 4 , 6 x 6 ரன்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

6 x 6

இந்தியாவின் யுவராஜ் சிங், இங்கிலாந்துக்கு எதிராக ஒரு ஓவரில் 6 பந்துகளிலும், 6 ரன்கள் எடுத்து உலக சாதனை புரிந்தார்.

அதிக 50

ஆஸ்திரேலியாவின் ஹெய்டன் 4 போட்டிகளில் 50 ரன்கள் எடுத்தார்

அதற்க்கு அடுத்த நிலையில் இந்தியாவின் காம்பீர் 3 போட்டிகளில் 50 ரன்கள் எடுத்தார்.

அதிக 6

நியூசிலாந்தின் மெக்மிலன் 5 போட்டிகளில் 13 சிக்ஸர் அடித்தார்

இந்தியாவின் யுவராஜ் சிங் 5 போட்டிகளில் 12 சிக்ஸர் அடித்தார்

மே.இ.தீவுகளின் கிரிஸ் கெய்ல் 2 போட்டிகளில் விளையாடி 10 சிக்ஸர் அடித்தார்.

ஒரு இன்னிங்சில் தனிநபரின் அதிக 6

மேற்கு இந்திய தீவுகளின் கிரிஸ் கெய்ல், ஒரு இன்னிங்சில் 10 சிக்ஸர் அடித்து சாதனை புரிந்தார்

ராஜா
26-09-2007, 12:10 PM
20/20 உலகக் கோப்பை.. சில புள்ளி விவரங்கள்..


பந்துவீச்சு புலிகள்..

தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள்..

பாகிஸ்தானின் உமர் குல் மொத்தம் 13 விக்கெட்டுகள் எடுத்து முதல் நிலையில் உள்ளார்.

ஆஸ்திரேலியாவின் கிளார்க், இந்தியாவின் ஆர்.பி.சிங், பாகிஸ்தானின் அப்ரிதி ஆகியோர் 12 விக்கெட்டுகள் எடுத்து இரண்டாம் நிலையில் உள்ளனர்.

நியூசிலாந்தின் வெட்டோரி 11 விக்கெட்டுகள் எடுத்து மூன்றாம் நிலையில் உள்ளார்.

4 விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள்

ஒரு போட்டியில் 4 விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள் மொத்தம் 10 பேர். அதில் யாரும் இரு முறை 4 விக்கெட்டை எடுக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதில் நியூசிலாந்தின் கிலெஸ்பி முதலிடம் வகிக்கிறார். அவர் 2.5 ஓவர்கள் வீசி வெறும் 7 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகள் சாய்த்தார்.

அடுத்த நிலையில் இந்தியாவின் ஆர்.பி. சிங் 4 ஓவர்கள் வீசி 13 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகள் எடுத்தார்.

ஜிம்பாவேயின் ஜிகும்புரா, பாகிஸ்தானின் உமர் குல், அப்ரிதி, முகம்து அசீப், நியூசிலாந்தின் வெட்டோரி, ஆஸ்திரேலியாவின் கிளார்க், பங்களாதேசின் ஷாகிப் அல் ஹசேன், தென் ஆப்பிரிக்காவின் எம்.மோர்கல் ஆகியோரும் 4 விக்கெட்டுகள் எடுத்தவர்கள் ஆவார்கள்.

உதயசூரியன்
26-09-2007, 02:54 PM
சே.. சே..
என்ன மாதிரியான திரி.. இது...
20 க்கு 20 மட்டை பந்து ஆட்டத்தையே.. கண் முன் நிறுத்தியுள்ளார்... நண்பர் ராஜா அவர்கள்...

இதை விட அலசி பார்க்க எந்த ESPNணும், Star sportsம் தேவை இல்லை....

யாரங்கே.... விளையாட்டு சானலை இழுத்து மூட சொல்லுங்கள்...

பாராட்டுக்கள் ராஜா...
ராஜாவின் சேவை.. இம்மன்றத்திற்கு தேவை...
வாழ்க தமிழ்

அக்னி
26-09-2007, 03:17 PM
மிக்க நன்றி ராஜா அண்ணா...
விரிவான தகவல்கள் ரசிப்பாய் இருந்தன...
தொடரவேண்டும் உங்கள் கிரிக்கெட் ஆய்வுக்கட்டுரையும்...

அக்னி
26-09-2007, 03:21 PM
இதன் மூலம் நம் தவறுகளை மறுக்க கூடாது..
அதை களைய வேண்டும்...
தோனி...சரியாக விளையாட வில்லை..
அசிங்க மான முறையில் அவுட் ஆனார்...
காட்டான் களுக்கு ஏற்ற போட்டி இது..
இதிலேயே.. அவரின் பேட்டிங்க் கேள்வி குறியாகி போனது வருத்தமே...

சிவப்பு எழுத்தில் காட்டியதைத் தவிர உதயசூரியனின் விமர்சிப்பும் மிக அருமையாக இருந்தது.
உதயசூரியன் அவர்களே,
இதனை மட்டும் அகற்றி அல்லது மாற்றி அமைத்துவிடுவீர்களா?
இது எனது தனிப்பட்ட வேண்டுகோள்...

அறிஞர்
26-09-2007, 03:25 PM
உபரித்தகவல்களுக்கு நன்றி.... ராஜா....

உதயசூரியன்
26-09-2007, 03:47 PM
மாற்றி விட்டேன் அக்னி அவர்களே...
பேச்சு வழக்கில் இருந்த வார்த்தையை போட்டுள்ளேன் மற்ற படி ஒன்று மில்லை...

சென்னை பாஷை சில நேரங்களில் தலை தூக்கிவிடுகிறது...

மன்னிக்கவும்

வாழ்க தமிழ்

pathman
27-09-2007, 04:46 AM
இறுதியில் பாகிஸ்தான் அணியின் தலைவர் பேசியதுதான் எனக்கு கவலையை கொடுத்தது
நன்றி


செய்ப் மாலிக் கூறியது முதலில் எனது நன்றியை முஸ்லிம் நாடுகளில் வசிக்கும் முஸ்லிம் நண்பர்களுக்கு தெரிவித்தது கொள்கின்றேன் (அப்பட்டமான மதவெறி) மதத்தை விளையாட்டுடன் கலக்கும் ஒரே நாடு.

இந்த வேளை அப்ரிடி கூறினார் எனது வாழ்த்துகளை இந்திய மக்களுக்கும் இந்திய ரசிகர்களுக்கும் தெரிவித்தது கொள்கின்றேன்
(இதுவே ஒரு பக்குவமான விளையாட்டு வீரரின் அடையாளம்)

mania
27-09-2007, 05:41 AM
எனக்கு எஸ் எம் எஸ்ஸில் வந்த செய்தி.....
முஸ்பா அந்த கடைசி பந்தை ஒருவருமில்லாத இடத்தில்தான் அடித்தாராம்..:confused:.ஆனால் உலகில் உள்ள எல்லா மூலை முடுக்குகளிலும் ஒரு மலயாளி இருப்பார் என்று அவருக்கு தெரிந்திருக்க நியாயம் இல்லைதான்........!!!!:D:D:D
அன்புடன்
மணியா..;)

ஓவியன்
27-09-2007, 05:45 AM
ஆகா மணியா அண்ணா!

என்ன கொஞ்ச நாளாக மன்றத்தின் பக்கமே காணவில்லையே...?

mania
27-09-2007, 05:51 AM
ஆகா மணியா அண்ணா!

என்ன கொஞ்ச நாளாக மன்றத்தின் பக்கமே காணவில்லையே...?

குடும்பத்தில் ஒரு துக்க நிகழ்வு....மனதே சரியில்லை....பிரயாணங்களும் அதிகம் அதான்.....
அன்புடன்
மணியா...

ஓவியன்
27-09-2007, 06:09 AM
குடும்பத்தில் ஒரு துக்க நிகழ்வு....மனதே சரியில்லை....பிரயாணங்களும் அதிகம் அதான்.....
அன்புடன்
மணியா...

மீண்டும் அந்த நினைவைக் கிளறி இருந்தால் என்னை மன்னிக்கவும் அண்ணா!

அதிலிருந்து விரைவில் மீண்டு வர என் பிரார்த்தனைகளும் துணை நிற்கட்டும்....

அக்னி
27-09-2007, 08:31 AM
மாற்றி விட்டேன் அக்னி அவர்களே...
பேச்சு வழக்கில் இருந்த வார்த்தையை போட்டுள்ளேன் மற்ற படி ஒன்று மில்லை...

புரிதலுக்கு மிக்க நன்றி...
மிகவும் தெளிவான விமர்சனக்குறிப்பில் ஒரு கரும்புள்ளி போன்றிருந்தது அந்த வசனம்.
மற்றும்படிக்கு எந்தவித கடுமையாகவும் இல்லை.
வாங்கோ அரட்டைப்பகுதிக்கு...
அங்கே வைத்துக்கொள்வோம் கச்சேரியை...

உதயசூரியன்
27-09-2007, 03:25 PM
செய்ப் மாலிக் கூறியது முதலில் எனது நன்றியை முஸ்லிம் நாடுகளில் வசிக்கும் முஸ்லிம் நண்பர்களுக்கு தெரிவித்தது கொள்கின்றேன் (அப்பட்டமான மதவெறி) மதத்தை விளையாட்டுடன் கலக்கும் ஒரே நாடு.

இந்த வேளை அப்ரிடி கூறினார் எனது வாழ்த்துகளை இந்திய மக்களுக்கும் இந்திய ரசிகர்களுக்கும் தெரிவித்தது கொள்கின்றேன்
(இதுவே ஒரு பக்குவமான விளையாட்டு வீரரின் அடையாளம்)

இதை தான் நானும் ரசித்தேன்...
எனக்கு அப்ரிடி மேல் அன்றைக்கு மரியாதையுடன் பர்க்க தோன்றியது...

மாளிக் பேச்சு கொஞ்சம் கஷ்டமாக தான் இருந்தது...
வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்

மன்மதன்
28-09-2007, 01:48 PM
செய்ப் மாலிக் கூறியது முதலில் எனது நன்றியை முஸ்லிம் நாடுகளில் வசிக்கும் முஸ்லிம் நண்பர்களுக்கு தெரிவித்தது கொள்கின்றேன் (அப்பட்டமான மதவெறி) மதத்தை விளையாட்டுடன் கலக்கும் ஒரே நாடு.

இந்த வேளை அப்ரிடி கூறினார் எனது வாழ்த்துகளை இந்திய மக்களுக்கும் இந்திய ரசிகர்களுக்கும் தெரிவித்தது கொள்கின்றேன்
(இதுவே ஒரு பக்குவமான விளையாட்டு வீரரின் அடையாளம்)

சொய்ஃப் மாலிக் சொல்லியது தவறு.. அவர் இப்படி கூறியிருக்க வேண்டும் 'உலகத்தில் வாழும் பாகிஸ்தானியர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்'

ஒருவேளை பாகிஸ்தான்/பங்களாதேஷ் மேட்சில் பாகிஸ்தான் தோல்வியடைந்தால் எப்படி சொல்லியிருப்பார்.. ஆங்கிலம் பேச தெரியாததால் வந்த வினை இது.. மன்னத்தருள்வோம்..

உதயசூரியன்
28-09-2007, 03:43 PM
சொய்ஃப் மாலிக் சொல்லியது தவறு.. அவர் இப்படி கூறியிருக்க வேண்டும் 'உலகத்தில் வாழும் பாகிஸ்தானியர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்'

ஒருவேளை பாகிஸ்தான்/பங்களாதேஷ் மேட்சில் பாகிஸ்தான் தோல்வியடைந்தால் எப்படி சொல்லியிருப்பார்.. ஆங்கிலம் பேச தெரியாததால் வந்த வினை இது.. மன்னத்தருள்வோம்..

இது தான் உண்மையோ..