PDA

View Full Version : கலாச்சாரம்

சுகந்தப்ரீதன்
10-09-2007, 01:30 PM
கன்னியுன் மீதான
கண்ணியமான காதலும்
கருகித்தான் போனது
கலாச்சார கருவறையில்!

aren
10-09-2007, 01:41 PM
அருமையான வரிகள். கன்னியின் மீதான என்று இருக்கவேண்டுமோ?

மனோஜ்
10-09-2007, 01:44 PM
கலசாரம் என்று காலங்கள் ஓடும்
கன்னியும் ஓடுவால் உன்னைவிட்டு அதன் பின்
அருமை வரிகள் சுதப்பீரீதன்

அக்னி
10-09-2007, 01:44 PM
கருகிப்போனாலும்,
கனன்று கொண்டே இருக்கும்,
உண்மைக் காதல்...

அப்படித்தான் எண்ணுகின்றேன் ஆரென் அண்ணா...
பாராட்டுக்கள் சுகந்தப்ரீதன்...

அக்னி
10-09-2007, 01:46 PM
நண்பரே..!
இந்தக் கவிதையை "காதல் கவிதைகள்" பகுதிக்கு நகர்த்தப்படுகின்றது...

பொறுப்பாளர்
~அக்னி

சாராகுமார்
10-09-2007, 01:50 PM
அருமையான கலாச்சார காதல் கன்னி கவிதை.அருமை.

lolluvathiyar
10-09-2007, 01:54 PM
சும்மா நாலு வருன்னாலும் நச்சுனு இருந்துச்சு சுகந்த பிரியன்

சுகந்தப்ரீதன்
11-09-2007, 03:39 AM
அருமையான வரிகள். கன்னியின் மீதான என்று இருக்கவேண்டுமோ?

கன்னியின் நண்பரே....! கவனிக்க மறந்துவிட்டேன்....! நன்றி!

சுகந்தப்ரீதன்
11-09-2007, 03:40 AM
கலசாரம் என்று காலங்கள் ஓடும்
கன்னியும் ஓடுவால் உன்னைவிட்டு அதன் பின்
அருமை வரிகள் சுதப்பீரீதன்

நண்றி மனோஜ்...!

சுகந்தப்ரீதன்
11-09-2007, 03:41 AM
கருகிப்போனாலும்,
கனன்று கொண்டே இருக்கும்,
உண்மைக் காதல்...

அப்படித்தான் எண்ணுகின்றேன் ஆரென் அண்ணா...
பாராட்டுக்கள் சுகந்தப்ரீதன்...

மிக்க நன்றி சாராகுமார் மற்றும் அக்னி அண்ணாருக்கு...!

சுகந்தப்ரீதன்
11-09-2007, 03:42 AM
சும்மா நாலு வருன்னாலும் நச்சுனு இருந்துச்சு சுகந்த பிரியன்

எல்லாம் வாத்தியாரு சொல்லிதந்ததுதானே...?நன்றி வாத்தியாரே...!

அமரன்
13-09-2007, 02:11 PM
கருவறையில் பிறந்து
கருகி,
கல்லறை சேர்வது நிறைவு.

கருவறையில் கருகி
கல்லறை சேர்வது சிதைவு..

சிதைவுகள் வேதனையானவை

இனத்தின்
தாய் போன்றது கலாச்சாராம்.

தாயே சிதைக்க
தப்பாக தரித்த கருவா காதல்.????
காலாச்சாரத்தின்
அபச்சாரமா காதல்?????

விம்மலில் பிறந்த -வெஞ்சின
வெம்மை கவிதையில் மறைந்து..

காதல் சிதைவுக் கவி
உருக்கும் கருக் கதையாகவும்
உரு ஏற்றும் உறுமியாகவும்
பாராட்டுக்கள் சுகந்தப்ரீதன்.

கன்னியுன் மீதான

சரியான பிரயோகம்...
கன்னிக்கு இயம்புவது போல கவி அமைப்பு

கன்னியின் மீதான
மற்றோருக்கும் இயம்புவது போன்ற கவி அமைப்பு.

இலக்கியன்
13-09-2007, 02:29 PM
கலாச்சாரம் என்கின்ற கருவறையில் கருகியதா உம் கனவுகள்
வாழ்த்துக்கள் நண்பரே. அமரன் அண்ணாவின் பின்னூட்டம் நன்றாக உள்ளது பாராட்டுக்கள்

தாமரை
13-09-2007, 03:21 PM
கன்னியுன் மீதான
கண்ணியமான காதலும்
கருகித்தான் போனது
கலாச்சார கருவறையில்!

காதலர்கள் கருகலாம்
காதல் எப்படிக் கருகும்?
நீ அவளைப் பிரிந்தாயா?
இல்லை அவள் மீது கொண்ட காதலைக் கொள்ளுத்தினாயா?
காதலைக் கொள்ளுத்தி இருந்தால்
கவிதை எதற்கு?:confused::confused::confused:

அமரன்
13-09-2007, 03:24 PM
கண்ணியமான காதல்த்தானே அழிந்தது
காதல் அழிந்ததுன்னு சொல்லலையே...
(ஏங்க சுகந்தனுக்கு கண்ணி வைத்துக்கிட்டே காத்திருக்கீங்களா)

தாமரை
13-09-2007, 03:28 PM
கண்ணியமான காதல்த்தானே அழிந்தது
காதல் அழிந்ததுன்னு சொல்லலையே...
(ஏங்க சுகந்தனுக்கு கண்ணி வைத்துக்கிட்டே காத்திருக்கீங்களா)

கண்ணியமான காதல் அன்னியமாகி இருக்கலாம்..
அதெப்படி அழியும்?

அவர் காதல் கண்ணியம் அழிந்தது அப்படின்னு சொல்லலை.
கண்ணியமான காதல் அப்படிங்கறார்
அப்ப அவர் அழிந்ததுன்னு சொல்றது காதல்தானே..

காதலே செத்துப் போன பின்னால எந்த சோகத்தில இவரு பாடறாரு?

அக்னி
13-09-2007, 03:30 PM
காதலில்லா சோகத்திலயோ...???

தாமரை
13-09-2007, 03:36 PM
காதலில்லா சோகத்திலயோ...???

காதல் இருந்தது.. செத்துப்போச்சு.. அதனால இல்லை..
ஆனா இருக்கு, இல்லாம போனது சொல்லாம போனது
ஆனா இல்லை இருந்தா இல்லாம இருக்குமா?
காதல் இருந்திருந்தா இருந்திருப்பா
இல்லாட்டி இறந்திருப்பா

இறக்காம இருக்கா..
மனசை விட்டு
இறக்காம இருக்கா
காதலை
இறங்காம இருக்கா
மனசுக்குள்ள
உறங்காம இருக்கா

மனசு சுடுகாடாகி
காதலைப் பொதைச்சுட்டா
அடிப்பாவி..
மனசுக்குள்ள காதல்
பொறந்ததுன்னு சொன்னாளே..
அப்ப
கருவறையே கல்லறையா

அமரன்
13-09-2007, 03:41 PM
அன்பே...! ஆருயிரே....! ஊர்வசியே...! எப்படிம்மா....!

அமரன்
13-09-2007, 03:42 PM
காதலே செத்துப் போன பின்னால எந்த சோகத்தில இவரு பாடறாரு?
சுகத்தில மட்டுமா பாடல் வரும்
சோகத்திலயும் வருமல்லவா...
(சுவத்தில முட்டிப்பார்த்தும் இதுதான் வந்தது)

தாமரை
13-09-2007, 03:48 PM
சுகத்தில மட்டுமா பாடல் வரும்
சோகத்திலயும் வருமல்லவா...
(சுவத்தில முட்டிப்பார்த்தும் இதுதான் வந்தது)

என்ன அமரா நீங்களுமா சப்பைக் கட்டு கட்டுவது.. சோகம்னா என்ன சோகம்..
காதலை இழந்த சோகமா? காதல் செத்துடுச்சின்னா, அப்புறம் எப்படி நினைவு வரும்??

காதலர்கள் பிரியலாம்.. காதல் இருக்கத்தான் செய்கிறது.. காதல் இருப்பதனால்தான் காதல் சோகம் தாக்குகிறது.

காதல் இறப்பது இல்லை.. கொலை முயற்சி வேணும்னா செய்யலாம்.. ஆனா அப்பயும் காதல் அங்கே இருக்கத்தான் செய்யும்.. காயத்துடன்.

அமரன்
13-09-2007, 03:51 PM
ஹஹ்ஹா.....அண்ணா உங்கள் தமிழ் சுவைத்து நாளாகினதால் சும்மா சீண்டினேன்....

காதல் என்றுமே மறைவதில்லை
மறக்கப்படுகின்றது மறுக்கப்படுகின்றது
இக்கட்சிதான் என்னது..

சுகந்தப்ரீதன்
15-09-2007, 09:53 AM
கலாச்சாரம் என்கின்ற கருவறையில் கருகியதா உம் கனவுகள்
வாழ்த்துக்கள் நண்பரே. அமரன் அண்ணாவின் பின்னூட்டம் நன்றாக உள்ளது பாராட்டுக்கள்

மிக்க நண்றி இலக்கியரே...!

சுகந்தப்ரீதன்
15-09-2007, 10:05 AM
காதலர்கள் கருகலாம்
காதல் எப்படிக் கருகும்?
நீ அவளைப் பிரிந்தாயா?
இல்லை அவள் மீது கொண்ட காதலைக் கொள்ளுத்தினாயா?
காதலைக் கொள்ளுத்தி இருந்தால்
கவிதை எதற்கு?:confused::confused::confused:

நீ ஒரு பெண்ணை நேசிக்கிறாய்...உன் நேசிப்பை நேரம்பார்த்து சொல்லும் முன்பு..அவள் அடுத்தவனுக்கு உரிமையாகிறாள்...இந்தநிலையைதான் என் கவிதையில் எழுதினேன்...அவன் அவளை பிரியவும் இல்லை அவளை சேரவுமில்லை....இங்கே மணமானவளிடம் உன் காதலை சொல்வது சரியல்ல என்பதே கலாச்சாரம்..!ஆக காதலும் இருக்கிறது..காதலியும் இருக்கிறாள்...கலாச்சாரம்தான் தடுக்கிறது....சொல்லாத காதல் செல்லாது..அதைதான் கருகிபோனது என குறிப்பிட்டேன்...அய்யா தாமரை இதுக்கு மேல என்னால விளக்கமுடியாது....புரிஞ்சா பதில்சொல்லுங்க....!வாழ்த்துக்கள் நண்பரே....!தொடரட்டும் உங்கள் தாக்குதல் என்மீது மீண்டும் மீண்டும்..ஆவலுடன் காத்திருக்கிறேன்...!

சுகந்தப்ரீதன்
15-09-2007, 10:08 AM
கன்னியுன் மீதான

சரியான பிரயோகம்...
கன்னிக்கு இயம்புவது போல கவி அமைப்பு

கன்னியின் மீதான
மற்றோருக்கும் இயம்புவது போன்ற கவி அமைப்பு.

மிக்க நன்றி அண்ணா...உங்கள் சீண்டலில் சிறப்பாக வர ஆரம்பித்திருக்கிறார் நம்ப தாமரை....நம்ப கவிதைகள் பக்கம்... எனக்காக வாதாடியமைக்கு மிக்க நன்றி அண்ணா...!

பென்ஸ்
20-09-2007, 05:39 AM
நீ ஒரு பெண்ணை நேசிக்கிறாய்...உன் நேசிப்பை நேரம்பார்த்து சொல்லும் முன்பு..அவள் அடுத்தவனுக்கு உரிமையாகிறாள்...இந்தநிலையைதான் என் கவிதையில் எழுதினேன்...அவன் அவளை பிரியவும் இல்லை அவளை சேரவுமில்லை....இங்கே மணமானவளிடம் உன் காதலை சொல்வது சரியல்ல என்பதே கலாச்சாரம்..!ஆக காதலும் இருக்கிறது..காதலியும் இருக்கிறாள்...கலாச்சாரம்தான் தடுக்கிறது....சொல்லாத காதல் செல்லாது..அதைதான் கருகிபோனது என குறிப்பிட்டேன்...அய்யா தாமரை இதுக்கு மேல என்னால விளக்கமுடியாது....புரிஞ்சா பதில்சொல்லுங்க....!வாழ்த்துக்கள் நண்பரே....!தொடரட்டும் உங்கள் தாக்குதல் என்மீது மீண்டும் மீண்டும்..ஆவலுடன் காத்திருக்கிறேன்...!

மன்னிக்கவேண்டும் சுகந்தபிரீதன்... உங்கள் கவிதை அழகாயினும்... கவிதைக்கான உங்கள் விளக்கத்தில் எனக்கு உடன்பாடில்லை.
உங்கள் கவிதையை நான் வாசித்த போது கலாசார கட்டுபாடுகள் உள்ளடங்கிய ஜாதி, மதம், காலாசார வித்தியாசம் போன்றவற்றை சொல்லுகிறிர்கள் என்று இருந்தேன்.... அதில் நான் ஒரு பங்கு வரை ஒத்து போகிறென்.

ஆனால் மனமானவளை கண்ணியென்று சொல்லுவது இந்த இடத்தில் ஒத்து போகாது.
மணமானவளிடம் தன் ஒருதலை காதலை சொல்ல நினைப்பது தவறு என்றே சொல்லுவேன். இதில் கலாசாரத்தை குறை கூற என்ன இருக்கறது. சமுதாய கட்டுபாடுகள் எல்லாமே அடுத்தவர்களுக்கு நம் சிந்தனையாலோ, செயலாலோ பாதிப்புகள் வரக்கூடாது என்பதாலே வகுக்கபடுகின்றன.

மேலும் மன்றத்தில் வரு கருத்து மாற்ரங்கள் ஆரோக்கியமாக எடுத்து கொள்லபடவேண்டும். இதில் தாக்குதல் என்று எதுவும் இல்லை. தக்குதல்களை மன்றம் அனுமதிக்கவும் செய்யாது....

தொடருங்கள் உங்கள் கவி சிந்தனைகளை...

சுகந்தப்ரீதன்
23-09-2007, 09:13 AM

என் விளக்கத்தை எழுதிவிட்டு நான் எதிர்பார்த்தேன் இப்படி ஒரு கேள்வியை யாராவது ஒருவர் கேட்பார் என்று ...கடைசியில் அதை நீங்களே கேட்டுவிட்டீர்கள்! அத்ற்கான விளக்கம் இதோ... நான் எந்த இடத்திலும் கலாச்சாரத்தை மீறவில்லை நண்பரே... அவள் கன்னியாய்
மணமாகாமல் இருந்தபோது உருவான அந்த காதல் அவளுக்கு திருமணமானபோது கருகிபோனது... இங்கே நான் கலாச்சாரத்தை குறைகூறவில்லை... என் கண்ணியத்தைதான் அவளிடம் அப்படி உறைத்திருக்கிறேன்... காதலை உறைக்கவில்லை! ஏனெனில் மணமானவளை நேசிப்ப*து மரபல்ல என்று எனக்கும் நன்றாக தெரியும் நண்பரே... புரிந்துகொள்ளும் விதத்தில்தான் இருக்கிறது அது தாக்குதலா? தாக்கமா என்று... !