PDA

View Full Version : வீர்சிங்கும் அவரது நண்பர்களும்mania
13-06-2003, 06:34 AM
பீர்பால் சிங் டெல்லியில் ஒரு பெரிய பதவியில் இருந்த சமயம் அது. அவர் பதவி ஏற்றவுடன் எல்லா
பஞ்சாபிகளுக்கும் ஒரே மகிழ்ச்சி. வீர்சிங்குக்கோ கேட்கவே வேண்டாம். தன்னுடைய வசதியான
6 நண்பர்களை அழைத்து ,''நாம் நேரில் சென்று வாழ்த்துக்கள் தெரிவிக்கவேண்டும். அதுதான்
மரியாதை''என்று சொல்ல எல்லோரும் உடனே சரி என்று ஒத்துக்கொண்டனர். எப்பிடிப்போவது, என்று அடுத்த பிரச்சனை.
ஒருவரும் தன் காரிலே போகலாம் என்று முன் வரவில்லை. சரி ஒரு பழைய காரை விலைக்கு வாங்கி டெல்லி சென்று திரும்பியதும்
விற்று காசை சமமாக பகிர்ந்து கொள்ளலாம் என்று முடிவெடுத்தார்கள்.
ஒரு பழைய கார் கடைக்கு போனார்கள்.உரிமையாளன்லத்தை சேர்ந்தவன்.இவர்கள் ஒரு பழைய அம்பாசிடர்
காரை (அதாவது டெல்லிக்கு போய் திரும்பி வரும் வரை தாங்கினால் போதும் என்கிற மதிரி) தேர்வு செய்து ,''என்ன விலை ?''
என்று கேட்டார்கள். அவனோ 28000 ரூபாய்கள் என்று சொன்னான். உடனே இவர்கள் ஒருவர் முகத்தை ஒருவர்
பார்த்து, பார்த்து 10 நிமிடங்கள் ஆயிற்று. கடைக்காரன் என்னவோ ஏதோ என்று ,''என்ன சார், என்ன ஆச்சு?''
என்று கேட்டான். வீர் சிங் கொஞ்சம் சமாளித்துக்கொண்டு ,''இல்லை...ஒவ்வொருவரும் எவ்வளவு தர வேண்டும் என்று
யோசிக்கிறோம்'' என்றார்.ஒருவராலும் கண்டுபிடிக்க முடிய வில்லை. கடைசியாக கடைக்காரனையே ஆள், ஆளுக்கு
எவ்வளவு ஆகும்? என்று கேட்டார்கள். அவன் ஒரு கணக்கை மனதில் நிமிடத்தில் போட்டுவிட்டு,'' ஆளுக்கு 13000 கொடுத்தால் போதும்''
எல்லோருக்கும் ஒரே மகிழ்ச்சி. 28000 எங்கே? 130000 எங்கே? என்று ஆளுக்கு 13000 கொடுத்துவிட்டு காரை எடுத்துக்கொண்டு டெல்லிக்கு புறப்பட்டார்கள்.
டெல்லிக்கு அருகில் போகும்போது ஒருவனுக்கு சந்தேகம் வந்தது.,'' ஏண்டா நாம் கொஞ்சம் ஏமாந்து விட்டோமோ?''என்று. ஆனால்
மற்கொண்டு எப்பிடி, எவ்வளவு என்று சொல்ல தெரிய வில்லை. வீர் சிங் உடனே,''ஏன் கவலைப்படுகிறீர்கள். நாம் பார்க்க போவதோ,
ஒரு பெரிய அறிவாளி அவரையே கேட்டு தெரிந்து கொள்ளலாம்'' என்று பிரச்சினைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தார்.
குறிப்பிட்ட மாதிரி பீர்பால்சிங்கை பார்த்து, கை குலுக்கி, பேசி போட்டோவும் எடுத்தாகி விட்டது.வெளியில் கிளம்பும் நேரம் ஒருவன் வீர்சிங்கின் தோளில் இடித்து கார் பிரச்சினையை ஞாபகப்படுத்தினான். வீர்சிங்கோ இந்த மகிழ்ச்சியான நேரத்தில் இதைப்போய்
பீர்பால் சிங்கிடம் கேப்பதா? என்று யோசனை.அவர்களுக்குள் கிசு கிசு என்று பேசிகொண்டு இருந்தார்கள்.
இதை கவனித்துவிட்ட பீர்பால் சிங்'" என்ன பிரச்னை உஙகளுக்கு ? என்னிடம் தாரளமாக சொல்லலாம். நான் தீர்த்துவைக்கிறேன்''
என்றவுடன் கட கட வென நடந்ததை அப்பிடியே ஒப்பித்தார்கள்.
பீர்பால்சிங் கொஞ்ச நேரம் யோசித்து விட்டு," இவ்வளவு தானே, நீங்கள் கவலையை விடுங்கள். '' என்று சொல்லி விட்டு ஒரு
பேப்பரை எடுத்து ஒரு வகுத்தல் கணக்கு போட்டு விட்டு ,"" கவலை வேண்டம். நீங்கள் ஆளுக்கு 13000 கொடுத்தது மிக்க சரியே!!"
என்று சொன்னார் அவர் போட்ட கணக்கு இந்தோ
7) 28000(13000
7
---------
21
21
---------
0000
0000
விளக்கம்;(பீர்பால்சிங்கின் படி) மொத்தம் கொடுத்தது 28000. மொத்தம் 7 பேர். 28000 ஐ 7 ல் வகுக்கவேண்டும். 2ல் 7 போகாது.
8ன் கீழ் 7 ...1முறை என்று முதலல் உள்ள 2 ஐ கீழே கொண்டு வந்து 21 ல் 7 ..3 முறை என்று பாக்கி மூன்று பூஜ்யத்துக்கும் 3 பூஜ்யங்கள் போட்டு 13000 சரியே என்றார்!!!
வீர்சிங் தன் நண்பர்களிடம்,''பார்த்தீரகளா, இதுக்குத்தான் நான் அவரை கேக்கவேண்டாம் என்று நினைத்தேன்.இப்போ நம்மைப்பத்தி அவர் என்ன நினைத்துக்கொள்வார்?'' வாருங்கள் போகலாம் என்று வெளிக்கதவு கிட்டே போய் விட்டார்கள்
அப்போது பீர்பால் சிங்குக்கு ஒரு சந்தேகம். இவர்கள் ஏழு பேர் தப்பு என்று சொல்கிறார்கள். நான் ஒருவன் எப்பிடி அது சரியென்று சொல்வது என்று,''கொஞ்சம் இருங்கள், நான் மீண்டும் ஒருமுறை செக் செய்கிறேன்'' என்று அப்போது உதவியாளராக இருந்த ராம் சிங்கை க்கூப்பிட்டார். பிரச்சினையை நங்கு கேட்ட அவர் ,''தப்பா நினைக்காதீர்கள், இந்த மாதி கஷ்ட்டமான கணக்கெல்லாம் முடிந்தால் கூட்டலிலே போட்டால் தான் பரவாயில்லை.,கொஞ்சம் நேரம் ஆகும் ஆனால் நிச்சயமாக இருக்கும் '' என்று
நீங்கள் ஒவ்வொருவறும் எவ்வலவு கொடுத்தீர்கள் 13000 தானே. மொத்தம் எவ்வளவு பேர் என்று அவரே சரியாக 7 என்று எண்ணி
13000,13000 என்று 7 முறை எழுதினார்
13000
13000
13000
13000
13000
13000
13000
---------------------------------
28000
------------------------


இப்போது கூட்டுகிறார் ... பூஜ்யம்...புஜ்யம்....பூஜ்யமென்று 3 பூஜ்யங்களை முதலில் போட்டார். பிறகு 3...6...9...12...15...18...21.என்று எண்ணிவிட்டு மேலும் அதனுடன் 22.. 23...24..25...26...27....28 என்று சொல்லி நீங்கள் கொடுத்தது மிக மிக சரியே??!! என்று சொன்னராம்.
எப்படி நம் கணக்கு ?

தஞ்சை தமிழன்
13-06-2003, 09:40 AM
.

ţ . ɡ ¢ 츢.

aren
13-06-2003, 10:32 AM
¢, 𼡺 측 쨸 úġ.

¨ ȢŢ ɡ ȡ .

mania
13-06-2003, 12:03 PM
, 墨 , Ţ
Ȣ¢츢. 
Ȣ
¡

aren
13-06-2003, 12:57 PM
 ¡ . ٨ Ǣ.

poo
13-06-2003, 09:05 PM
¡... Ǣ츨 Ƣﺡ...

இளசு
14-06-2003, 08:13 AM
¡....
ʧš 츣 츢...
......

(¡... 򾢧ħ Χ..
Ģ Ģ....)
:D

விகடன்
11-08-2007, 09:28 AM
வீர்சிங்கும் அவரது நண்பர்களும்

-----------------------------------------------------------------


வாசிப்பதற்கு இலகுவாக இருக்கும் பொருட்டு மாற்றி பதிக்கிறேன். பின்னூட்டம் பிறகு அண்ணா