PDA

View Full Version : பதிவுகள் சேமிக்கும் வசதி: வழிகாட்டி



இளசு
09-09-2007, 06:45 PM
பதிவுகள் சேமிக்கும் வசதி: வழிகாட்டி


இந்த புதிய வசதி இப்போது நமது தளத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் முக்கிய பயன், நீண்ட திரிகளை துவக்குபவர்கள், துவங்கிய பதிப்பை முடிக்க நேரமில்லாதவர்கள், பாதியில் சேமித்து வைத்து விட்டு, பின்னர் மீண்டும் வந்து தொடர்வதற்கான வசதியாகும்.

நீங்கள் திரி துவக்கும் போதும், பதில் பதிப்பு செய்யும் போதும், குவிக் ரிப்ளை செய்யும் போதும், அங்கே தட்டச்சு செய்யும் பெட்டிக்கு கீழே Submit New Thread, Submit Reply, Submit Quick Reply என்று வழக்கமாக வரும் பட்டனுக்கு அருகில், புதிதாக "Save Draft" என்ற பட்டனும் இப்போது சேர்ந்து தோன்றும். இதை அழுத்தி தட்டச்சு செய்தவற்றை சேமித்து வைத்துக்கொள்ளலாம்.


1) இந்த வசதி மூலம் ஒரு பகுதியில் ஒரு புதிய திரி மட்டுமே சேமித்து வைக்க முடியும்.

2) அதே போல, ஒரு பகுதியில் ஒரு பதில் பதிப்பு மட்டுமே சேமித்து வைக்க முடியும்.

3) இந்த வசதியை, தனிமடல் சேமித்து வைக்கவும் உபயோகிக்கலாம். ஒரு தனிமடல் மட்டுமே சேமித்து வைக்கலாம்.

4) சேமித்து வைத்தவற்றை மீண்டும் தொடர, அதே பகுதிக்கு வந்து Post New Thread, Post Reply பட்டனை அழுத்தினால், நீங்கள் சேமித்து வைத்திருந்த பதிப்பு மீண்டும் தோன்றும்.

5) சேமித்து வைக்கும் இந்த பதிப்புகள், அதிக பட்சம் 1 மாதத்திற்கு மட்டுமே சேமிப்பில் இருக்கும், அதற்குள் அந்த பதிப்பை உபயோகித்து விடவும். இல்லாவிடில் அது தானாக மறைந்து விடும்.

6) சேமித்து வைத்ததைப் பதிக்கும்போது "Delete saved draft after clicking submit button" என்ற ரேடியோ பட்டனை தேர்வு செய்து கொள்ளவும், அல்லது நீங்கள் பதித்த பின்னரும் அங்கேயே தங்கி இருக்கும்.

மேலும் தகவல்கள் கிடைக்கும் போதும், உங்கள் சந்தேக கேள்விகள் வரும்போதும் இப்பதிவு பதுப்பிக்கப்படும்..

நன்றி..


இப்புதிய வசதியின் விரிவான விளக்கம் படங்களுடன் வழங்க உதவிய அருமை நண்பர் அஷோ அவர்களுக்கு மிக்க நன்றி..

.

இந்தப் புதிய சேமிக்கும் வசதி -

கீழே உள்ள படத்தில் (எண் 1) பார்த்தால் புரியும். draft enabled என்று உள்ளது.

Delete saved Post draft after என்பது முதலில் (எந்த வரியும் டைப் செய்யாவிட்டால்) அது ஆக்டிவாக இல்லாமல் இருக்கும். (எண் 2)

டைப் செய்த பின் அதை தற்காலிகமாக சேமிக்க நினைத்தால் save draft (எண் 3) என்று கொடுத்தால் அது தற்காலிகமாக அந்த திரிக்கு உங்கள் புரஃபைலுக்கு மட்டும் சேமிக்கப்படும்.



http://i207.photobucket.com/albums/bb170/ashoohsa/sav01.png


பின் அதை அப்போதைக்கு மூடி விட்டு, மறுபடியும் தேவைப்படும் போது அந்தத் திரியை திறந்து அதன் மேலே உள்ள POST REPLY (எண் 4) கிளிக் செய்தால்


http://i207.photobucket.com/albums/bb170/ashoohsa/sav02.png


அந்த சேமித்த வார்த்தைகளுடன் POST REPLY திறக்கும். அதில் (எண் 5) நாம் சேமித்த நேரம் மற்றும் அது என்றுடன் தானாக அழிந்துபடும் என்பது தெரிய வரும்.


http://i207.photobucket.com/albums/bb170/ashoohsa/sav03.png


மறுபடியும் அதில் கூடுதலாக அல்லது அந்த வார்த்தைகளையே மட்டும் பதிக்க நினைத்தால் submit reply (எண் 6) அழுத்தவும். மறக்காமல் இந்த மாதிரி அந்த திரிக்கு மட்டும் சேமித்ததையும் அழித்து விட Delete saved post draft after submit reply என்பதை டிக் செய்ய வேண்டும். (எண் 7).

http://i207.photobucket.com/albums/bb170/ashoohsa/sav04.png

================ ================== =================== =======


மேலே சொன்னது ஒரு திரியில் கருத்து போஸ்ட் செய்வது பற்றி. அதே ஒரு கதை அல்லது ஒரு சிரிப்பு படம் திரி பதிவதாக இருந்தால் என்ன என்று பார்ப்போம்.

முதலில் திரி திறக்க வேண்டிய இடத்தில் New thread (எண் 8 ) கிளிக் செய்து கொள்ள வேண்டும்.


http://i207.photobucket.com/albums/bb170/ashoohsa/sav05.png


முதலில் திரிக்கு தலைப்பு முதலியவைகளை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். (எண் 9)

அடுத்து திரியில் பதிக்க வேண்டியதை உள்ளே பதிக்க வேண்டும்.(எண் 10).

பாதியிலே அதை அப்போதைக்கு முடித்து சேமிக்க வேண்டியிருந்தால் (எண் 11) save Draft அழுத்தி சேமிக்க வேண்டும்.

உங்கள் பதிப்பு சேமிப்பது அதன் கீழே உள்ள (எண் 12) saving drfat please wait என்பதை பார்த்தால் தெரியும். உங்கள் பதிவின் வார்த்தைகளைப் பொறுத்து நேரம் குறைவாகவோ, கூடியோ சேமிக்கும். அது முடியும் வரை காத்திருக்கவும். முடிந்த பின் அந்தப் பக்கத்தை மூடி விடலாம்.


http://i207.photobucket.com/albums/bb170/ashoohsa/sav06.png


மறுபடியும் அடுத்த சந்தர்ப்பத்தில் அந்த திரியை முடிக்க / தொடர நினைத்தால் அந்த திரி உள்ள பாரத்திற்கு சென்று அதே போல New thread (எண் 8 - மேலே உள்ள படத்திற்கு முன் உள்ளது) கிளிக் செய்து கொள்ள்ள வேண்டும்.

அதில் நீங்கள் சேமித்த விவரம் தலைப்பில் தெரிய வரும் (எண் 13)

பின் அதில் செய்ய வேண்டிய கூடுதல் வார்த்தை முதலியன சேர்த்து பின் அதை பதிக்க நினைத்தால் submit reply (எண் 15) அழுத்தவும். மறக்காமல் இந்த பாரத்திற்கு மட்டும் சேமித்ததையும் அழித்து விட Delete saved thread draft after submit reply என்பதை டிக் செய்ய வேண்டும். (எண் 14).


http://i207.photobucket.com/albums/bb170/ashoohsa/sav07.png

பாரதி
09-09-2007, 07:14 PM
நல்ல விளக்கமான பதிவு அண்ணா. இராசகுமாரனுக்கும், உங்களுக்கும், உதவிய அஷோவிற்கும் மிக்க நன்றி.

அன்புரசிகன்
09-09-2007, 07:22 PM
மிக அருமையாக விளக்கம் தந்துள்ளீர்கள். நன்றி அண்ணலே

பூமகள்
09-09-2007, 07:23 PM
விரிவாக படங்களூடே விளக்கம் அளித்த ஆஸோ அண்ணாவிற்கும் இந்த கூடுதல் உத்தியை புகுத்திய இராசகுமாரன் அண்ணாவிற்கும் என் மனமார்ந்த நன்றிகள் மற்றும் பாராட்டுக்கள்..!!:icon_clap: :smartass:

அக்னி
09-09-2007, 07:25 PM
விளக்கமாகத் தந்த உறவுகளுக்கு நன்றி...

*ஒரு பதிவை, அல்லது திரியை சேமித்தபின், அதனை பதிவிடாமல் அழிப்பது எப்படி..?

*ஒரு பதிவை அல்லது திரியை ஒரு பகுதியில் சேமித்தபின்னர், அதனைப் பதிவிடாமல் புதிதாக ஒன்றை பதிவிடுவதாயின் சேமித்த பதிவிற்கு என்ன நேரிடும்..?

இவற்றிற்கான விளக்கத்தையும் மேலே குறித்துவிடுங்களேன்...

praveen
10-09-2007, 05:51 AM
*ஒரு பதிவை, அல்லது திரியை சேமித்தபின், அதனை பதிவிடாமல் அழிப்பது எப்படி..?


ஏற்கெனவே ஒரு பகுதியில் சேமித்ததை அழிக்க அதை திறந்து நாம் எடிட் செய்து வெற்றிடமாக்கி சேமிப்பது மூலம் அழிக்கலாம்.




*ஒரு பதிவை அல்லது திரியை ஒரு பகுதியில் சேமித்தபின்னர், அதனைப் பதிவிடாமல் புதிதாக ஒன்றை பதிவிடுவதாயின் சேமித்த பதிவிற்கு என்ன நேரிடும்..?


மேலே சொன்னது போல அந்த சேமித்ததை எடிட் செய்து பதிப்பதன் மூலம் பழையது தானே அழிந்து போகும். ஒரு பாரத்திற்கு ஒரு பதிவு தான் சேமிக்க இயலும்.

இளசு
10-09-2007, 06:27 AM
நன்றி மீண்டும் அஷோவுக்கு.

lolluvathiyar
10-09-2007, 06:44 AM
அருமையான விளக்கம் இதெல்லாம் ஆசோவால தான் முடியும். நல்ல கனினி வாத்தியாராக இருப்பார் போல இருக்கு

அமரன்
10-09-2007, 07:54 AM
இராசகுமாரன் அண்ணா, அண்ணா, அருமை நண்பர் அசோ மூவருக்கும் நன்றி.
~~அமரன்

மன்மதன்
10-09-2007, 08:12 AM
அற்புதமான ஐடியா... அனைவருக்கும் பயன் தரும்..

அக்னி
10-09-2007, 11:33 AM
மேலே சொன்னது போல அந்த சேமித்ததை எடிட் செய்து பதிப்பதன் மூலம் பழையது தானே அழிந்து போகும். ஒரு பாரத்திற்கு ஒரு பதிவு தான் சேமிக்க இயலும்.
நன்றி அசோ...

ஒரு தடவை சேமித்து, அதனைப் பதிவேற்ற முன்னர், இன்னொரு பதிவை பதிந்தால் சேமித்ததும் இல்லாமற் போய்விடும் அல்லவா..?
அப்படியானால்,
அண்ணா அதனை முக்கிய குறிப்பாக கொடுத்துவிடுங்கள்...

அறிஞர்
10-09-2007, 01:47 PM
நன்றி அசோ.. தங்களின் உதவி.. மிக பயனுள்ளது.

தமிழ்ச்சூரியன்
19-09-2007, 11:36 PM
படங்களுடன் தெளிவான விளக்கங்கள் அளித்த அனைத்து நண்பர்களுக்கும் என் மனமுவந்த நன்றிகள் உரித்தாகுக. தட்டச்சு செய்து, இடையில் கணினியில் ஏதேனும் சிக்கலாகி, தட்டச்சு செய்தவை அனைத்தும் காணாமல் போய் விட்டால் எவ்வளவு வருத்தப்படுவோம். இந்த சேமிக்கும் வசதி அனைத்து நண்பர்களுக்கும் உற்சாகமளிக்கும் என்பதில் ஐயமில்லை.

Narathar
20-09-2007, 09:25 AM
விளக்கமளிப்பதில் இளசுவை மிஞ்ச யாரும் இல்லை......
நல்லமுறையில் விளக்கியுள்ளீர்கள்
அதை நம்மவர்கள் நல்ல முறயில் பாவிக்கட்டும்