PDA

View Full Version : தளம் பற்றிய சந்தேகம்



slwaran
09-09-2007, 06:38 PM
தோழர், தோழிகளே!

எனது பதிவுகள் தெளிவில்லாமலும் விளக்கம் இல்லாமலும் இருப்பதற்கு மண்ணிக்வும். எனக்கு எப்படி ஒரு புதிய தகவலை பதிவது என்பது பற்றி தெளிவான விளக்கம் ஏற்படவில்லை. இப்பொழு நான் அடிக்கும் தகவலும் எல்லோரும் பார்க்க முடியுமா என்றும் விளங்கவில்லை. எனவே எனக்கு இந்தப் போருமை பயன்படுத்துவது எப்படி என்ற தெளிவான விளக்கத்தைத் தரவும். அத்துடன் படங்களை, வீடியோக்களை (தரமா, நல்ல) சேர்ப்பது எப்படி என்பதையும் விளங்கப்படுத்தவும்.

அமரன்
09-09-2007, 06:45 PM
இலங்கேஸ்வரன் உங்கள்+அன்பர்கள் அனைவருக்காகவும் இவ்விடயங்கள் அடங்கிய விவரண தொகுப்பு ஒன்றை வெகுவிரைவில் தர முயற்சிக்கின்றோம். அதுவரை பொறுத்துருங்கள். உங்கள் பதிவுகள் வாசிக்ககூடியவாறு உள்ளது. அப்படியே தொடருங்கள். உங்களுக்காக சில தகவல்களை தனி மடலில் அனுப்பியுள்ளேன்.
~~அமரன்

பூமகள்
09-09-2007, 06:45 PM
அன்பு மன்றத்து நண்பரே..
உங்களின் பதிவை தெளிவாக எங்களால் படிக்க முடிகிறது. நீங்கள் எந்த மாதிரி ஆன பதிவுகளைத் தர விரும்புகிறீர்கள்?? கவிதையா?? சுவையான கதைகள், சம்பவங்கள்?? அல்லது படங்கள் ஆ??
அனைத்திற்கும் தனித்தனியே பிரிவுகள் உள்ளன.

படங்களை இணைக்க விருப்பம் எனில்..
http://www.picoodle.com/ இது போன்ற தளங்களுக்குச் சென்று முறையே இலவசமாக Register செய்தபின் நீங்கள் விரும்பிய படத்தை அதில் அப்லோட் செய்து பின் அதன் Direct URL ஐ.. இங்கு உங்கள் படத்தின் URL என்று கொடுத்தால் அது நம் தமிழ் மன்றத்தில் உங்கள் போஸ்டில் இணைக்கப்பட்டு விடும்.

உங்கள் படைப்புக்களைக் காண மன்றம் காத்துக் கொண்டிருக்கிறது.
வாழ்த்துக்கள் அன்பு நண்பரே..!

அறிஞர்
10-09-2007, 01:56 PM
விரைவில் உம் சந்தேகம் தீரும் படி பதிவு வருகிறது.

அமரன்
10-09-2007, 04:29 PM
இலங்கேஸ்வரன் உங்கள் சந்தேகங்களை தீர்க்க கீழே உள்ள சுட்டியை கிளிக்குங்கள்.

தமிழ் மன்ற உதவிகள். http://www.tamilmantram.com/vb/showthread.php?t=12198

அக்னி
10-09-2007, 10:46 PM
இலங்கேஸ்வரன் அவர்களே...
உங்களுடைய சந்தேகங்களைத் தீர்விக்கும் திரியின் சுட்டியைப் பதிவு 5 இல் அமரன் இணைத்துள்ளார்.
அங்கு சென்று உங்களது சந்தேகங்களைத் தீர்த்தபின்னர்,
வவுனியா சிறுவர் இல்லம் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=12157)
இந்த திரியைப் பூரணப்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
நன்றி!

நேசம்
11-09-2007, 08:31 AM
unicode converter பகுதியில் ஆங்கிலத்தில் அடித்து romanised தேர்வு செய்தால் தமிழில் தெரியும்
ஆனால் இப்பொழுது ஆங்கிலத்தில் அடித்தல் தமிழில் தான் தெரிகிறாது.பின்னர் romanised தேர்வு பார்க்கும்போது எதும் தவறுகள் இருந்தால் சரி செய்ய கடினமாகிறாது.

அன்புரசிகன்
11-09-2007, 08:40 AM
எனக்கு சரியாக தான் செயற்படுகிறது. உதாரணமாக se என unicode converter பதிந்து romanish ஐ அழுத்தினால் செ என வருகிறதே...

தளபதி
11-09-2007, 10:35 AM
நான் "a simple test box" பயன்படுத்தி இருக்கிறேன். என்னால் பாவனைகளைப் பயன் படுத்த முடியவில்லை. இதை நான் பயன் படித்திக்கொண்டிருந்தேன். ஆனால் அது மறைந்துவிட்டது. இதற்கு பெரியோர் உதவியை எதிர்ப்பார்க்கிறேன்.

அன்புரசிகன்
11-09-2007, 10:39 AM
நான் "a simple test box" பயன்படுத்தி இருக்கிறேன்.
எனக்கு புரியவில்லை... அது என்ன? எதற்காக பயன்படுத்தினீர்கள்?

தளபதி
11-09-2007, 11:53 AM
நன்றி நண்பரே!! இந்த வாரம் தடாலடியாக எனக்கு போனிடிக் கீபோர்டு வரவில்லை, நான் டைப் அடிப்பதெல்லாம் ஆங்கிலத்திலேயே வந்தது. இது என்னடா புது கதை?? என்று user cp சென்று அங்கு எடிட் option− ல் misc option− ல் "a simple test box" என்று பயன்படுத்திய பிறகு எனக்கு போனிடிக் கீபோர்டு வந்தது.

இப்போது எனக்கு பாவனைகள் (expressions) வராமல் போய்விட்டது. தொந்திரவுக்கு மன்னிக்கவும். உங்கள் பொறுமைக்கு நன்றி.

அறிஞர்
11-09-2007, 02:22 PM
தமிழில் டைப் பண்ண வேண்டுமானால்... எளிதான மோடில் பாவணைகள் வராது... விரைவில் சரிசெய்யப்படும்.

ஆர்.ஈஸ்வரன்
09-12-2007, 09:30 AM
யுனிகோடு கன்வெர்டரில் ஆங்கில்த்தில் டைப் செய்யச் செய்ய தமிழ் எழுத்து வந்து கொண்டிருந்தால் அதை உடனே சரி செய்ய வசதியாய் இருக்கும்

அன்புரசிகன்
09-12-2007, 09:40 AM
யுனிகோடு கன்வெர்டரில் ஆங்கில்த்தில் டைப் செய்யச் செய்ய தமிழ் எழுத்து வந்து கொண்டிருந்தால் அதை உடனே சரி செய்ய வசதியாய் இருக்கும்

நீங்கள் பாமினி எழுத்துரு முலம் பதிபவரா அல்லது Romanized முறையில பதிபவரா?