PDA

View Full Version : இன்னும் அடிமை வாழ்க்கை!!!



aren
09-09-2007, 02:58 PM
வீட்டின் கதவை தட்டும் சத்தம்
யார் இந்த நேரத்தில்
என்று நினைத்து
கதவைத் திறந்தால்!!!

கந்துவட்டி கந்தசாமி
கையில் பேப்பர் கட்டுடன்!!!

உங்கள் அப்பா
என்னிடம்
கடன் வாங்கியிருக்கிறார்!!!

நீ பணத்தைக்
கொடுக்கவேண்டும்
இல்லையென்றால்
உன்னை .......

அப்பா வாங்கிய கடன்
தொடர்கிறது
இன்னும் அடிமை வாழ்க்கை!!!

உள்ளம் என்பது ஆமை
அதில் உண்மை என்பது ஊமை
எங்கேயோ பாடும் பாடல்
என் காதில் விழுகிறது!!!!

ஜெயாஸ்தா
09-09-2007, 03:08 PM
சிறு கதைபோன்ற கவிதை... நிதர்ச்சன உண்மை இது. கந்துவட்டி கொடுமைமுன்னை விட இப்போது சற்றுகுறைந்திருக்கிறது என்றே நினைக்கிறேன்.

பிச்சி
10-09-2007, 08:24 AM
அப்பாவின் கடன் மகனுக்கு, அப்பா அம்மா இணைந்து வாங்கிய கடன் மகளுக்கு
சூப்பர் அண்ணா


பிச்சி

அக்னி
10-09-2007, 02:04 PM
பெற்றகடன்
தீராதது...
பிள்ளைகளுக்கு..!
தகாது, பெற்றவர்கள்
பெற்றகடன்..,
தீர்த்துவிடும்...
பிள்ளைகளை..!

தகாத இடங்களில், தகாத தேவைகளுக்குப் பெற்றிடும் கடன்கள்,
பிள்ளைகளை தீராத துன்பத்தில் ஆழ்த்திவிடும்...

பாராட்டுக்கள் ஆரென்...
உங்கள் பார்வையில் சமுதாய பிரச்சினைகள் பரவலாய் வருகின்றது...

சிவா.ஜி
10-09-2007, 02:12 PM
கடன் பட்டார் நெஞ்சம் கலங்கியது போக..இப்போது கடன் பட்டார்..பெற்ற பிள்ளைகளும் கலங்குவது கலக்கமாயிருக்கிறது. ஆனால் ஒன்று ஆரென்..தந்தையின் சொத்தில் பங்கு கேட்கும் பெரும்பாலான பங்காளிகள் கடனுக்கு கை கூடுவதில்லை..அவருக்கு பிறந்ததால் பிள்ளைதான் அதையும் சேர்த்து சுமக்க வேண்டியிருக்கிறது.சமுகப் பார்வையில் அழுத்தமான கவிதை.வாழ்த்துக்கள் ஆரென்..

மனோஜ்
10-09-2007, 02:13 PM
கந்து வட்டி கோயித்தன் எத்தனை வருடம் ஆனாலும் சாவதில்லை
அருமை கவிதை அரென் அண்ணா

மன்மதன்
10-09-2007, 04:01 PM
வட்டி என்பதே கொடுமை.. அதில் கந்துவட்டி.. அதிலும் தந்தை பட்ட கடனை மகன் அடைப்பது.. ஒரு கவிதையில் பல சோகத்தை உள்ளடக்கி கொடுத்திருக்கிறீர்கள்..பாராட்டுகள் ஆரென்..

ஓவியன்
18-09-2007, 05:08 PM
தந்தைக்கு மகன் பட்ட
கடன் இங்கே
கந்துவட்டிக் கடன்.....

பாராட்டுக்கள் அண்ணா!.

அமரன்
18-09-2007, 05:21 PM
தாய்,தந்தையர் விட்டுசென்று எச்சங்களில் கடனும் ஒன்று என்று சொல்லும் நிலை பல குடும்பங்களில்..கடனின் காரணம் என்ன என்பதுதான் முக்கியமானது..ஊதாரியின் உதிரியா? கடமையின் விளைவா? உதிரி என்றால் சுமை, கடமை என்றால் சுகம். வட்டி என்பது ஆறாதபுண்.