PDA

View Full Version : புதிய வசதிகள்: எடிட்டர் தேர்வு.



இளசு
09-09-2007, 09:25 AM
அன்பு நண்பர்களுக்கு

மன்ற ஆலோசகர், நிறுவனர் இராசகுமாரன் அவர்களால்
இன்று சில புதிய வசதிகள் மன்றத்தில் வழங்கப்பட்டுள்ளன..

அவருக்கு நம் நன்றிகள்..

பணிப்பளுவுக்கிடையில் நமக்காக விரைந்து அவர் தந்த வசதிகள் யாவும்
நம் நண்பர்கள் இங்கே கோரியவை,


இன்று வந்திருக்கும் புதிய வசதிகள்:

1) திரி தலைப்புகளைக் காணும் போது திரி துவங்கிய தேதி தெரிதல் (பரிசோதனைக்காக தற்காலிகமாக நிறுத்தப் படுகிறது)

2) Text Editor-ல் WYSIWYG option, மீண்டும் அறிமுகம்

3) நேரடி தமிழ் தட்டச்சு தற்போது "பேசிக் எடிட்டரில்" மட்டும்

4) நேரடி தட்டச்சில் Bamini கீபோர்டும் சேர்க்கப்பட்டுள்ளது.. (இதில் 3 எழுத்துக்களை மாற்றி தட்டச்சு செய்ய வேண்டும்)

5) Save Draft என்னும் புதிய வசதி "நோட் பேட்" வசதி கேட்டவர்களுக்காக - விரிவான விளக்கப் பதிவு இங்கே
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=12185


பேசிக் எடிட்டர் பற்றிய விளக்கம்:


எடிட்டர் தேர்வு


இகலப்பை உதவி இல்லாமல் நேரடியாக தட்டச்சு செய்வதற்கு உங்கள் profile-க்கு சென்று ஒரு சிறு செட்டிங்க்ஸ் செய்ய வேண்டும்.

http://www.tamilmantram.com/vb/profile.php?do=editoptions
மேலே உள்ள shortcut சென்று உங்கள் எடிட் ஆப்சனை தேர்ந்தெடுங்கள்.

அதில் கடைசியாக உள்ள Miscellaneous Options என்பதில் உள்ள லிஸ்ட் பாக்ஸில் Basic Editor - A Simple text box என்பதை தேர்ந்தெடுத்து பின் save changes கொடுங்கள்,
http://i207.photobucket.com/albums/bb170/ashoohsa/basicoption.jpg

1) நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டியது
2) தேர்ந்தெடுக்கப்பட்ட பின் மறக்காமல் அந்தத் தேர்வை சேமிக்க.

திறந்திருக்கும் அனைத்து விண்டோக்களையும் மூடி, திரும்ப லாகின் ஆகி பாருங்கள். பின் உங்கள் மெசேஜ் டைப் செய்யும் பாக்ஸ் இப்படி காட்சியளிக்கும்.
http://i207.photobucket.com/albums/bb170/ashoohsa/basiceditor.jpg

1) தமிழில் (இகலப்பை இல்லாமல் phonetic முறையில் டைப் செய்ய)
2) ஆங்கிலத்தில் டைப் செய்ய
3) பாமினி பயன்படுத்துபவர் தமிழில் உள்ளீடு செய்ய.


பதிப்பு தற்காலிக சேமிப்பு வசதி

இது நீங்கள் திரி துவக்கும் போதும், பதில் பதிப்பு செய்யும் போதும், குவிக் ரிப்ளை செய்யும் போதும், அங்கே தட்டச்சு செய்யும் பெட்டிக்கு கீழே Submit New Thread, Submit Reply, Submit Quick Reply என்று வழக்கமாக வரும் பட்டனுக்கு அருகில், புதிதாக "Save Draft" என்ற பட்டனும் சேர்ந்து தோன்றும் இதை அழுத்தி தட்டச்சு செய்தவற்றை சேமித்து வைத்துக் கொள்ளலாம்.

1) இந்த வசதி மூலம் ஒரு பகுதியில் ஒரு புதிய திரி மட்டுமே சேமித்து வைக்க முடியும்.

2) அதே போல, ஒரு பகுதியில் ஒரு பதில் பதிப்பு மட்டுமே சேமித்து வைக்க முடியும்.

3) இந்த வசதியை, தனிமடல் சேமித்து வைக்கவும் உபயோகிக்கலாம்.

4) சேமித்து வைத்தவற்றை மீண்டும் தொடர, அதே பகுதிக்கு வந்து Post New Thread, Post Reply பட்டனை அழுத்தினால், நீங்கள் சேமித்து வைத்திருந்த பதிப்பு மீண்டும் தோன்றும்.

5) சேமித்து வைக்கும் இந்த பதிப்புகள், அதிக பட்சம் 1 மாதத்திற்கு மட்டுமே சேமிப்பில் இருக்கும், அதற்குள் அந்த பதிப்பை உபயோகித்து விடவும் அல்லது அவை தானாக மறைந்து விடும்.

6) சேமித்து வைத்ததை பதிக்கும் போது "Delete saved draft after clicking submit button" என்ற ரேடியோ பட்டனை தேர்வு செய்து கொள்ளவும், அல்லது நீங்கள் பதித்த பின்னரும் அங்கேயே தங்கி இருக்கும்.


http://i207.photobucket.com/albums/bb170/ashoohsa/savedraft-1.png


http://i207.photobucket.com/albums/bb170/ashoohsa/savedraft-3.png

.

அன்புரசிகன்
09-09-2007, 09:58 AM
விளக்கம் அளித்த அண்ணலுக்கு நன்றிகள் பல....

lolluvathiyar
09-09-2007, 10:02 AM
பேசிக் எடிட்டரில் மட்டும் தமிழ் நேரடியாக தட்டச்சு செய்வது பழைய வசதியை நீக்கி விட்டது. பார்மட்டிங் பன்ன முடியவில்லை. கோ அட்வான்ஸ்ட் போனால் கூட பார்மாட்டிங் வருவதில்லை

இராசகுமாரன்
09-09-2007, 10:26 AM
பேசிக் எடிட்டரில் மட்டும் தமிழ் நேரடியாக தட்டச்சு செய்வது பழைய வசதியை நீக்கி விட்டது . பார்மட்டிங் பன்ன முடியவில்லை. கோ அட்வான்ஸ்ட் போனால் கூட பார்மாட்டிங் வருவதில்லை

பேசிக் எடிட்டரில் நீக்கப் படவில்லை, அதில் மட்டுமே சேர்க்கப் பட்டுள்ளது. கோ அட்வான்ஸ்ட் போனாலும் கூட ஃபார்மேட்டிங்க் கிடைக்காது.

ஃபார்மேட்டிங், நேரடி தட்டச்சு இரண்டும் சேர்த்து கிடைக்காது.

"பேசிக் எடிட்டர்" எகலப்பை இல்லாத இடங்களில் அவசரத்திற்கு உபயோகிக்க மட்டுமே.

ஃபார்மேட்டிங் வேண்டுமென்றால், எகலப்பையுடன் சேர்த்து உபயோகிக்கவும்.

aren
09-09-2007, 10:39 AM
எனக்கு நன்றாகவே வேலை செய்கிறது. நன்றி தலைவரே.

aren
09-09-2007, 10:41 AM
Save Draft
வசதியைப் பற்றி கொஞ்சம் விளக்கமாக எழுதினால் நன்றாக இருக்கும்.

aren
09-09-2007, 10:50 AM
ஒரு பதிவை Quote செய்து பதிக்கும்பொழுது நட்சத்திரங்கள் வருகின்றனவே

இராசகுமாரன்
09-09-2007, 10:52 AM
Save Draft
வசதியைப் பற்றி கொஞ்சம் விளக்கமாக எழுதினால் நன்றாக இருக்கும்.

படங்களுடன் விளக்கினால் நன்றாக இருக்கும் என தாமதித்துள்ளோம். இப்போது உங்களுக்காக விளக்கம் சேர்க்கப் பட்டது.

இராசகுமாரன்
09-09-2007, 10:54 AM
ஒரு பதிவை Quote செய்து பதிக்கும்பொழுது நட்சத்திரங்கள் வருகின்றனவே

நீங்கள் Quote செய்தாலும் செய்யாவிட்டாலும், நேரடி தட்டச்சு உபயோகப் படுத்தும் போல சில சமயங்களில் "ஸ்டார்" வரத் தான் செய்யும். அதனால் தான் ஒரு எடிட்டரில் மட்டும் நேரடி தட்டச்சு அமையுமாறு இந்த மாற்று ஏற்பாடு.

leomohan
09-09-2007, 11:48 AM
அருமையான மாற்றங்கள். விசிவிக் வந்ததனால் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

நன்றி ராஜகுமார் அவர்களே.

கலைவேந்தன்
09-09-2007, 12:19 PM
புதிய வசதிகளுக்கு நன்றி நண்பரே!

விகடன்
05-01-2008, 08:23 AM
படவிளக்கத்துடன் அறிமுகப்படுத்தப்பட்ட பாணி அழகாக உள்ளது.
மேம்படுத்தலுடன் அறிமுகப்படுத்தலில் ஈடுபட்ட அண்ணாக்களுக்கு நன்றி

மயூ
05-01-2008, 05:24 PM
புது வசதிக்கு பாராட்டுக்கள்!

மயூ
05-01-2008, 05:36 PM
வசதிக்கு நன்றிகள்! இதில் தமிழ் 99 முறைமையையும் சேர்க்க வேண்டும் என்பது என் கருத்து. இப்போது பாமினியளவிற்கு தமிழ் 99 பயனர்கள் இருக்கிறார்கள்.. புதிதாகப் பலர் மாறுகின்றார்கள். பல அரசுகளாலும் அங்கீகரிக்கப்பட்ட இந்த முறை மன்றத்தில் இருந்தால் சிறப்பே!