PDA

View Full Version : பிச்சைக்காரி...!



பூமகள்
09-09-2007, 06:40 AM
http://img36.picoodle.com/img/img36/9/9/8/poomagal/f_ecuadorquitm_c058e92.jpg

பிச்சையெடுக்கும்
பிஞ்சுக் கைகள்
பிறந்ததே பாரமாய்
சுமக்கும் தாயின்
உடலும் உள்ளமும்...!

கங்காரு குட்டி போல்
கட்டியிருக்கும்
பிரியா பந்தம்..!

வேலையின்றி
வேலை செய்யும்
தெம்பிருந்தும்
பிச்சை கேட்கும் தாயே??? - உனைப் போல்
சோம்பேறிப் பிள்ளை
வளர்க்க எண்ணமா???

வியர்வை சிந்தி
வேலை செய்து
வாழ்ந்தால் உனை
வியந்து பார்க்கும்
உலகமல்லவா???!!!!!


காசு கேட்டு
காலம் தள்ள
சுடவில்லை
மனம் உனக்கு????

விருந்து கேட்காதே.. - இனி
வேலை கேள்..!
விருந்து படை உன்
வியர்வை வைரங்களால்!

குறிப்பு:
அன்பு மன்றத்து நெஞ்சங்களே...

நான் விடுப்பில் சென்றபொழுது ஒரு நிகழ்ச்சி என்னை பாதித்தது. அதன் தாக்கமே இக்கவிதை.

கடைத்தெருவில் ஒன்றரை வயது குழந்தையை வயிற்றைச் சுற்றி துணியால் கட்டிக் கொண்டு பிச்சைகேட்டாள் என்னிடம் ஒரு பிச்சைக்காரி..!
அவளின் நிலை கண்டு எனக்கு பரிதாபம் வரவில்லை. மாறாக கோபம் வந்தது. அதன் வெளிப்பாடே இந்தக் கவி. அதற்காக என்னை யாரும் இறக்கமில்லாதவள் என்று நினைக்கவேண்டாம். அவள் மிகவும் பலசாலியாகவே இருந்தாள், ஊனம் கூட இல்லை. ஆகவே தான் என்னால் கோபத்தை கட்டுப்படுத்த இயலவில்லை.

இதோ இங்கே அந்தக் கவி உங்களுக்காய்..!

அன்புரசிகன்
09-09-2007, 06:55 AM
ஆட்டோவுக்கு பணம் எடுக்கையில் நமது பணப்பையில் கையை வைத்து வெருட்டுவது போல் பிச்சைகேட்க்கும் ரகங்களும் உண்டு. இவர்களால் வேலைசெய்ய முடியாது. மரத்துவிட்டனர். பழகியும் விட்டனர்....

பூமகள்
09-09-2007, 06:58 AM
உண்மை தான் அண்ணா.
அவர்களாய் திருந்தவேண்டும்... மரத்துப் போயிருக்கும் அவர்கள் மனம் மாற வேண்டும்..!
மிக்க நன்றிகள் உங்களின் பின்னூட்டத்திற்கு..!

சிவா.ஜி
09-09-2007, 07:59 AM
பூமகள் இதெல்லாம் சும்மா இருந்தே சுகம் கண்டுவிட்டதின் விளைவு.பரிதாபம் தேட ஒரு கைக்குழந்தை,பலசமயங்களில் அந்த குழந்தையும் வாடகைக்கு எடுக்கப்பட்டதாக இருக்கும்.இவர்கள் மேலெல்லாம் பரிதாப்படுவது தேவையில்லாதது.அதனால் உங்களின் கோபம் நியாயமானதுதான்.ஆனால் அதன் விளைவாய் உதித்த கவிதைக்காக அந்த பிச்சைக்காரியை மன்னித்துவிடலாம்.நல்ல வரிகளில் இயல்பான ஆதங்கம் வெளிப்பட்டிருக்கிறது.பாராட்டுக்கள் பூமகள்.

பூமகள்
09-09-2007, 08:02 AM
மிக்க நன்றிகள் சிவா அண்ணா.
உங்களின் பின்னூட்டம் கண்டு மகிழ்ச்சி.

பிச்சி
10-09-2007, 08:31 AM
விருந்து கேட்காதே.. - இனி
வேலை கேள்..!
விருந்து படை உன்
வியர்வை வைரங்களால்!

வேலை கொடுக்க ஆள் இருக்கிறார்களா இந்த உலகில்?

கவிதை அருமை அக்கா. ஆனால் நம்ம ஊர் பிச்சைகாரி இல்லையே?

பூமகள்
10-09-2007, 08:46 AM
அவள் இருந்த ஊரில் வேலைகள் கண்டிப்பாய் கிடைக்கும் பிச்சி..
கவலை வேண்டாம்.
நன்றிகள் சகோதரி.
ஆமாம் சகோதரி.. இது வெளிநாட்டு பிச்சைக்காரி... நம்ம ஊர் பிச்சைக்காரி படம் கிடைக்கவில்லை....அதான்...

அமரன்
10-09-2007, 08:54 AM
மன்றத்தில்தான் படித்தேன். ஷீ யின் வரிகளாக இருக்கவேண்டும். அவர்கள் வாழ அது அழுகிறது என்னும் உள்ளீடுகொண்ட வரிகள் அவை. அதே சாயல்கொண்ட கவிதை பூமகளிடமிருந்து.
பிச்சை இல்லாத தேசம் இனியும் வருமா என்பது சந்தேகமே. உழைக்க முடிந்தவர்கள்,துடிப்பவர்களுக்கு வேலை இல்லை/கொடுக்க மனமில்லை என்பது நிதர்சனம். கொடுக்க முனைபவர்களுக்கு பித்தன் பட்டம் கொடுப்பவர்கள் ஒரு முனை தட்டிப்பறிக்க நினைப்பவர்கள் இன்னொரு முனை என பல்முனைத் தாக்குதல்கள் பிச்சை என்பதை அழியாது பாதுக்காக்கின்றன. வேதனை என்னவெனில் குருத்துகள் காய்வதுதான். நம்மால் முடிவது திட்டங்களை விதந்துரைப்பதும் திட்டுக்கள் கொடுப்பதுமே...! அந்நிலை மாறின் இந்நிலை மாறும். மாறவேண்டும் என்பது பலர் அவா.
பூமகளுக்கு பாராட்டிச்சொல்லியே எனது விரல்கள் புத்துணர்ச்சிகொள்கின்றன.

~~அமரன்

lolluvathiyar
10-09-2007, 09:03 AM
கவிதை அருமை பூமகளே, பிச்சை காரர்களை திட்டுவதை விட நாலு பேரு நம்மை பார்த்து உயர்வாக நினைக்க வேண்டும் என்று அவர்களுக்கு பிச்சை போடுகிறார்களே அவர்கள் தான் பிச்சைகாரர்களை ஊக்கு விக்குகிறார்கள்.
இதைவிட கேவலம் அரசாங்கமே இலவசம் என்ற பெயரில் பிச்சையை வளர்கிறது.


வேலை கொடுக்க ஆள் இருக்கிறார்களா இந்த உலகில்?


பிச்சி எந்த காலத்தில் இருகிறீர்கள். இன்று கூலி ஆள் கிடைப்பதே இல்லை தெரியுமா?

பூமகள்
10-09-2007, 09:03 AM
மிக்க நன்றிகள் அமர் அண்ணா உங்களின் அழமான விமர்சனத்திற்கு.:nature-smiley-008:
உண்மையில் உங்களின் வரிகள் பார்த்த பின்னர் தான் என் எழுத்துக்கள் புதுத்தெம்பு பெற்று மீண்டும் பிரசவிக்கின்றன மன்றத்தில்.:sport-smiley-018:

நன்றிகள் பல.

அக்னி
10-09-2007, 09:24 AM
குழந்தையில்,
பாலுக்காய் அழுகை...
அரவணைத்து ஊட்டியது தாய்மை,
இனி ஏந்தாதே கை என்று...

வளர்ந்தபின்னர்,
தாய்மை ஏந்திய சேய்மையோடு,
ஏந்தின கைகள் பிச்சைக்காக...
முதற்பிச்சையாக்கி விட்டாயே,
உன் மகவை...

ஏழ்மையில், ஏந்தும் கை...
நாளை வெறுமைதரும் உன் சேய்க்கு...
உழைப்பில், சிவக்கும் கை...
நாளை வலிமைதரும் உன் சேய்க்கு...

பாராட்டுக்கள் பூமகள்...
வலிமையான வரிகள் நிறைந்த வலியான கவிதை...

பென்ஸ்
10-09-2007, 09:32 AM
பிச்சைகாரர்கள்... சமுதாயத்தில் மிகவும் சர்ச்சைக்குள்ளானவர்கள்...
பொதுவில் மிகவும் கவனிக்கபட கூடியவரக்ள், கவணிக்கபடவேண்டி தன்னை ஜோடித்து கொள்ளுபவர்கள், இவர்கள் சிலர்
கவணிக்கபடாமல் (பிள்ளைகளால்) இப்படி யானவர்கள் சிலர்...

மன்றத்தில் பலமுறை பல கவிஜர்களால் மிகவும் ஆராய்ந்து விவாதிக்கபட்ட கதாபாத்திரம்....

உணர்ச்சி கவிஜர் ஷீ பார்வையில் "பிளாட்ஃபாரம் - நடைபாதை (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8075)" என்று எழுதி மனதை கிழித்தார்..


ஒரு முறை பிச்சைகாரியாய்.. (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5908) நானும்....

இதேல்லாம் ஒன்றுமில்லை (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5951) , மற்றுமொரு பார்வை இருக்கிறது என்று "பூ"வும்

பூமகள்
10-09-2007, 09:37 AM
அழகான பின்னூட்டக் கவி..
அசத்துங்கள் பிறந்த நாளில்.
வாழ்த்துக்களுக்கு நன்றிகள் அக்னி அண்ணா.

இலக்கியன்
10-09-2007, 09:52 AM
வியர்வை சிந்தி
வேலை செய்து
வாழ்ந்தால் உனை
வியந்து பார்க்கும்
உலகமல்லவா???!!!!!

ஆம் நியமானவரிகள் வாழ்த்துக்கள் தோழி
உடலை வருத்தாது இது போன்ற சோம்போறிகளுக்கு பிச்சை இடுவதே தவறு அவர்களை
வளர்க்க உதவக்கூடது. பாத்திரம் அறிந்து பிச்சை போடு அழகாக சொன்னீர்கள்

சாராகுமார்
10-09-2007, 01:38 PM
பூமகள்,கவிதை அற்புதம்.நமது நாட்டில் பிச்சை எடுப்பது ஒரு தொழில் மாதிரி செய்கிறார்கள்.அதுவும் கைப்பிள்ளைகளை வைத்து பிச்சை எடுப்பது கொடுமையானது.அவர்களுக்கு சவுக்கு அடி கொடுத்தாலும் திருந்த மாட்டார்கள்.அவர்கள் தாய் கிடையாது.மோசமானவர்கள்.

இணைய நண்பன்
10-09-2007, 01:56 PM
உடம்பில் சக்தி இருந்தால் உழைத்து சாப்பிட வேண்டும்.இப்படி பிச்சை எடுத்து சோம்பேறியாகின்றவர்களை நானும் கண்டிக்கிறேன்.பூமகள் உங்கள் கருத்தையும் கவிதையையும் பாராட்டுகிறேன்.நன்றி

மனோஜ்
10-09-2007, 02:06 PM
பிச்சை எடுத்து பிழைத்திடும்
பிழைப்பு ஒரு பிழைப்பா என்று
பிதட்டிடும் பலருக்கு செய்யும்
தொழிலே தேய்வமாகிவிட்டது
கொடுமைதான் பூமகள்
கவியான சாடல் அருமை

பூமகள்
10-09-2007, 02:57 PM
வாழ்த்துக்கள் தோழி
உடலை வருத்தாது இது போன்ற சோம்போறிகளுக்கு பிச்சை இடுவதே தவறு அவர்களை
வளர்க்க உதவக்கூடது. பாத்திரம் அறிந்து பிச்சை போடு அழகாக சொன்னீர்கள்

மிகச் சரியாகச் சொன்னீர் நண்பரே... உங்களின் பின்னூட்டத்திற்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள் கோடி..!!

பூமகள்
10-09-2007, 02:58 PM
பூமகள்,கவிதை அற்புதம்.நமது நாட்டில் பிச்சை எடுப்பது ஒரு தொழில் மாதிரி செய்கிறார்கள்.அதுவும் கைப்பிள்ளைகளை வைத்து பிச்சை எடுப்பது கொடுமையானது.அவர்களுக்கு சவுக்கு அடி கொடுத்தாலும் திருந்த மாட்டார்கள்.அவர்கள் தாய் கிடையாது.மோசமானவர்கள்.

மிக்க நன்றிகள் அன்புச் சகோதரர் சாராகுமார்.
உங்களின் கருத்திற்கும் விமர்சனத்திற்கும் நன்றிகள் பல.

பூமகள்
10-09-2007, 03:01 PM
உடம்பில் சக்தி இருந்தால் உழைத்து சாப்பிட வேண்டும்.இப்படி பிச்சை எடுத்து சோம்பேறியாகின்றவர்களை நானும் கண்டிக்கிறேன்.பூமகள் உங்கள் கருத்தையும் கவிதையையும் பாராட்டுகிறேன்.நன்றி

மிக்க நன்றிகள் இக்ராம் அண்ணா. உங்களின் கருத்துக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றிகள்..!!:icon_shades:

பூமகள்
10-09-2007, 03:02 PM
கொடுமைதான் பூமகள்
கவியான சாடல் அருமை

மிக்க நன்றிகள் அண்ணா. உங்களின் பின்னூட்டக்கவி வடிவில் அருமை.
நன்றிகள்.

மன்மதன்
10-09-2007, 03:34 PM
அன்றாடம் சிக்னலில் பார்க்கும் காட்சி.. கவிதையாய் அழகாக வடித்திருக்கிறீர்கள்.. நன்றாக இருக்கிறது பூமகளே..

பூமகள்
10-09-2007, 03:37 PM
சரியாகச் சொன்னீர்கள்... உங்களின் பின்னூட்டத்திற்கும் பாராட்டுதலுக்கும் நன்றிகள் அன்புச் சகோதரர் மன்மதரே...!!

ஷீ-நிசி
13-09-2007, 05:02 AM
கங்காரு குட்டி போல்
கட்டியிருக்கும்
பிரியா பந்தம்..!

இந்த வரிகள் ரொம்ப நல்லாருக்கு பூமகள்!

பூமகள்
13-09-2007, 05:14 AM
மிக்க நன்றிகள் ஷி-நிசி தோழரே..!!
தொடர்ந்து விமர்சியுங்கள்...!!

ஷீ-நிசி
13-09-2007, 05:29 AM
மிக்க நன்றிகள் ஷி-நிசி தோழரே..!!
தொடர்ந்து விமர்சியுங்கள்...!!

கங்காரு குட்டி போல்
கட்டியிருக்கும்
பிரியா பந்தம்..!

இந்த வரிகள் ரொம்ப நல்லாருக்கு பூமகள்!

பென்ஸ்
13-09-2007, 05:55 AM
கங்காரு குட்டி போல்
கட்டியிருக்கும்
பிரியா பந்தம்..!

இந்த வரிகள் ரொம்ப நல்லாருக்கு பூமகள்!

என்ன ஷீ நிப்பாட்டிங்க...

ஷீ-நிசி
13-09-2007, 06:14 AM
என்ன ஷீ நிப்பாட்டிங்க...

பூமகள் இன்னொரு தடவை சொல்லட்டும்னு.....:icon_rollout: