PDA

View Full Version : ஓமானில்லா(ஆ)தவன்-பாகம் 3



ஓவியன்
08-09-2007, 05:53 PM
ஓமானில்லா(ஆ)தவன்.........!

ஆதவன் மேலே எனக்கு ரொம்பக் கோபமுங்க.................
ஏன் தெரியுமா.........?

தன் தெருவுலாவை, லண்டன் விஜயத்தை, ஊட்டி சுற்றுலாவை, சென்னை சந்திப்பை எல்லாம் விலாவாரியாக எழுதிய அவர் ஏனோ அவரது ஓமான் விஜயத்தை மறந்தோ அல்லது மறைத்தோ விட்டார். நானும் இன்று எழுதுவார், நாளை எழுதுவாரென ஆவலுடன் காத்திருந்து, ஏமாந்து முடிவாக நானே எழுதுவதென்று களத்தில் குதித்து விட்டேன். என்னுடைய ஒரு பதிவிலே ஆதவன் இப்படிக் கேட்டிருந்தார்,


ஓமானில் புயல் என்றூ படிக்கும்போதெல்லாம் அடடா நம் நண்பர் ஓவியனுக்கு என்னாச்சோ என்று மனம் நினைக்கும். நல்லவேளையாக எதுவும் நடக்கவில்லை.

அனுபவக்கட்டுரை நல்ல சுவாரசியம்.. சூப்பரா எழுதறீங்க. அடுத்த பாகத்திற்கு எதிர்நோக்கி இருக்கிறேன்..

இந்த நேரத்தில படார்னு ஒரு போன் போட்டு அட்ரஸ் வாங்கி டிக்கெட் எடுத்து அனுப்புனீங்கன்னா நானும் உங்ககூட வந்து தோளோடு தோளா நின்றிருப்பேனே!!! :D

அதனால் நான் ஆதவனுக்கு ஒரு மாதிரி கஸ்ரப்பட்டு விசாவும் டிக்கட்டும் அனுப்பி ஓமானுக்கு வாருங்கள் என்று கேட்டவுடன் உடனே வருகிறேன் என்று புறப்பட்டும் விட்டார். அன்று ஒரு வியாழக் கிழமை இரவு எட்டு மணி இருக்கும், ஒரு நீல நிற (ஆதவனிடம் நீல நிற சேட்டுடன் வரவேற்க வருவதாகக் கூறி இருந்தமையால் இந்த நீல நிறம்) சேட் அணிந்து ஆதவனை வரவேற்பதற்காகப் புறப்பட்டுப் போய் மஸ்கட் விமான நிலையத்தில் ஆதவனுக்காகக் காத்திருந்தேன், ஆதவன் வந்திறங்கிய விமானத்திலிருந்த பயணிகள் எல்லோருமே வெளியே வந்துவிட்டனர் ஆதவனைக் காணவில்லை. இதென்னடா சோகம் என்று, கையில் ஆதவன் என்று எழுதிய அட்டையுடன் அங்கேயும் இங்கேயும் அலைந்து கொண்டிருந்தேன். ஏற்கனவே ஒரு முறை தனது போட்டோவை ஆதவன் அனுப்பி இருந்ததால் விமான நிலையத்துக்கு கிளம்ப முன்னர் அந்த போட்டோவை ஒரு தடவை பார்த்து விட்டு வந்திருந்தமையால் ஆதவனைக் கண்டு பிடித்து விடலாமென்ற நம்பிக்கையுடன் காத்திருந்தேன், ஆனால் ஆதவன் தான் வெளியே வருவதாக இல்லையே........

பொறுத்தது போதும் பொங்கி எழு மகனே என்று புறப்பட்டு அங்கேஇருந்த விமான ஊழியர்களிடம் விசாரித்து என் பிரச்சினையைக் கூறினேன், அவர்களும் கணினியில் தேடிப் பார்த்து விட்டு அப்போது தரையிறங்கிய விமானத்திலே கதிரவன்(ஜெசிகா புராணம் படிக்கவும்) அலைஸ் ஆதவன், வந்து இறங்கியுள்ளார் என ஊர்ஜிதப் படுத்த கொஞ்சம் நிம்மதியானேன், ஆதவன் எப்படியோ ஓமானிற்கு வந்து விட்டார் என்ற நிம்மதியிலே...

அப்போது என் பிரச்சினையின் ஆழத்தை புரிந்து கொண்ட ஒரு விமான ஊழியர் எனது பாஸ் போர்ட்டை வாங்கி வைத்துக் கொண்டு விமான நிலையத்தினுள்ளே என்னை அனுமதித்தார் ஆதவனை தேடவென்று. அவருக்கு நன்றி கூறி ஓட்டமும் நடையுமாக புயலென புகுந்தேன் விமான நிலையத்தின் டியூட்டி ப்ரீ கடைகளை நோக்கி அங்கே நம்ம ஆதவன் ஒரு பிலிப்பைன்ஸ் நாட்டு அழகியுடன் ஏதோ தகாராறிலே இருந்தார். ஆதவனைக் கண்ட மகிழ்ச்சி ஒருபுறம், அவர் என்ன தகராறிலே மாட்டினார் என்ற அதிர்ச்சி ஒரு புறமாக அவர்களை நெருங்கி என்னைச் சுருக்கமாக அறிமுகம் செய்து என்ன பிரச்சினை என்று வினவினேன். அப்போது எனக்கு ஒரு அதிர்சிகரமான பதில் கிடைத்தது,...........

அந்த அதிர்ச்சிகரமான பதில் வெகு விரைவிலே...........


பகுதி 2 (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=271485&postcount=26)

பகுதி 3 (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=524018&postcount=74)

அன்புரசிகன்
08-09-2007, 06:06 PM
சரி... ஆதவனின் மானத்தை விமானத்தில் ஏற்ற தயாராகி விட்டார் ஓவியர்... தொடருங்கள்...

பூமகள்
08-09-2007, 06:35 PM
விறுவிறுப்பான கதை...! ஆனால் சஸ்பென்ஸ் வைத்து விட்டீரே...????!!:smartass:
ஆதவா அந்த பெண்ணுடன் கடலை போட்ட வண்ணம் தானே இருந்தார்????!!!!!!!!!:icon_blush:

ரொம்ப நல்லாயிருக்கு ஓவியரே..:1:
உங்களின் ஓமானுக்கு அழைத்துச் செல்ல ஆதவா மட்டும் தான் வேண்டுமா??:icon_nono:
நாங்கள் எல்லாம் வேண்டாமா????:waffen093:

சாராகுமார்
08-09-2007, 06:41 PM
ஆதவா வின் அருமையான ஓ...மானே மானே தொடக்கம் அருமை ஒவியரே.

ஷீ-நிசி
08-09-2007, 06:41 PM
எல்லாரும் கத வுட ஆரம்பிச்சிட்டாங்கப்பா..... கலக்குப்பா ஓவியரே

ஓவியன்
08-09-2007, 06:47 PM
ஆமாம் அன்பு அதனை விட்டால் வேறு என்ன வேலை நமக்கு......!!! :sport-smiley-014:
−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−
அன்புச் சகோதரிக்கு......
அடுத்த முறை ஓமானிலே புயலடித்தால் உங்களையும் அழைக்கின்றேன்.....! :sport-smiley-014:

ஓவியன்
08-09-2007, 06:49 PM
ஆதவா வின் அருமையான ஓ...மானே மானே தொடக்கம் அருமை ஒவியரே.
மிக்க நன்றிங்க.........
இந்த பாடலும் பின்னாலே வருகுது.........! :icon_shades:


எல்லாரும் கத வுட ஆரம்பிச்சிட்டாங்கப்பா..... கலக்குப்பா ஓவியரே

கதை இல்லேப்பா, நிஜம்................!!! :icon_blush:

மனோஜ்
08-09-2007, 07:00 PM
ஐயைய்யே ஆதவன் ஓவினிடம் ஆவுட்டா............:icon_drunk:

அக்னி
08-09-2007, 07:06 PM
அக்னி மன்றத்தில வாய கண்டபாட்டுக்கு வுட்டுடாத...
பீ கேயர்ஃபுல்...

ஓவியன்
08-09-2007, 07:15 PM
:icon_drunk:எப்படி அவ்வளவு கரெக்டா பொயிண்டை பிடிச்சீங்க............?
ஓமானிலே இருந்த காலமெல்லாம் ஆதவா அதனைத் தான் செய்தார்.......! :)


அக்னி மன்றத்தில வாய கண்டபாட்டுக்கு வுட்டுடாத...
பீ கேயர்ஃபுல்...

:sport-smiley-019: :sport-smiley-019: :sport-smiley-019:

aren
09-09-2007, 01:43 AM
பாஸ்போர்டே இல்லாமல் எல்லா ஊருக்கும் போகும் ஒரே ஆள் நம்ம ஆதவனாகத்தான் இருப்பார் என்று நினைக்கிறேன்.

aren
09-09-2007, 01:47 AM
மஸ்கட் வந்தும் பெண்களிடம் ஜொல்லுவிடும் ஆசை இன்னும் போகவில்லையா?

ஓவியன்
09-09-2007, 01:49 AM
ஹீ!,ஹீ!

ஆரென் அண்ணா ஆதவன் மஸ்கட்டுக்கு பாஸ்போர்ட்டோட தான் வந்திருந்தார். :)

aren
09-09-2007, 01:53 AM
ஹீ!,ஹீ!

ஆரென் அண்ணா ஆதவன் மஸ்கட்டுக்கு பாஸ்போர்ட்டோட தான் வந்திருந்தார். :)

நீங்க*ள் சொன்னால் ச*ரிதான்.

ஷீ-நிசி
09-09-2007, 02:23 AM
மஸ்கட் வந்தும் பெண்களிடம் ஜொல்லுவிடும் ஆசை இன்னும் போகவில்லையா?

இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்... ஆரெனாரே...

(மஸ்கட் வந்தும் அவர் ஜொல்லுவிடாமல் போனால் எப்படி.....):icon_wink1:

மலர்
09-09-2007, 08:01 AM
ஹா ஹா....ஆதவனின் மானத்தையும் ரகசியத்தையும் கப்பலில் ஏற்ற ஆரம்பித்து விட்டார்...
வாழ்த்துக்கள் ஓவியன்,,,

சிவா.ஜி
09-09-2007, 08:16 AM
ஓவியன் நிஜம்தானா.....சொல்லவேஏஏஏஎயில்ல...இன்னும் வரட்டும் அப்புறம் பாத்துக்கலாம்...

ஓவியன்
09-09-2007, 12:33 PM
ஹா ஹா....ஆதவனின் மானத்தையும் ரகசியத்தையும் கப்பலில் ஏற்ற ஆரம்பித்து விட்டார்...
வாழ்த்துக்கள் ஓவியன்,,,
கப்பல் இல்லேங்க விமானம்..........! :D


ஓவியன் நிஜம்தானா.....சொல்லவேஏஏஏஎயில்ல.....
நீங்க கேட்கவேயில்லை.............! :D

சிவா.ஜி
09-09-2007, 12:36 PM
[QUOTE=ஓவியன் நீங்க கேட்கவேயில்லை.............![/QUOTE]
அது சரி இந்த மாதிரியான சரித்திர முக்கியத்துவமான நிகழ்ச்சிகளையெல்லாம் கேக்காமலே சொல்லனுமாக்கும்.....

ஓவியன்
09-09-2007, 12:38 PM
அது சரி இந்த மாதிரியான சரித்திர முக்கியத்துவமான நிகழ்ச்சிகளையெல்லாம் கேக்காமலே சொல்லனுமாக்கும்.....

அது தான் சொல்லிட்டு இருக்கேன்லே.....!
நான் ஆதவா சொல்லுவார் எண்டு இருந்திட்டன்.......
அவர் சொல்லலை அதான் களத்திலே குதித்தேன்..........! :sport009:

சிவா.ஜி
09-09-2007, 12:42 PM
அது தான் சொல்லிட்டு இருக்கேன்லே.....!
நான் ஆதவா சொல்லுவார் எண்டு இருந்திட்டன்.......
அவர் சொல்லலை அதான் களத்திலே குதித்தேன்..........! :sport009:

ரொம்ப சந்தோஷம்...எழுதுங்க எழுதுங்க...நல்லா வந்துகிட்டிருக்கு.பிலிப்பைன் பொண்ணுகிட மாட்டியிருக்கிறார் என்ன ஆகப்போகுதுன்னு பாப்போம்...

lolluvathiyar
09-09-2007, 12:47 PM
ஆதவனி வரலாற்று புத்தகத்தில் பொன் எழுத்துகளால் பொதிக்க படவேண்டிய அந்த பிலிபைன்ஸ் அழகியுடன் சில நிமிடம் என்ற அனுபவத்தை சீக்கிரம் தாருங்கள் ஓவியரே. கான துடிகிறோம்

aren
09-09-2007, 01:41 PM
பிலிப்பைன்ஸ் பெண்கள் − கொஞ்சம் ஜாக்கிரதை. ஓவியன் நீங்களாவது சொல்லக்கூடாது.

மலர்
09-09-2007, 01:44 PM
பிலிப்பைன்ஸ் பெண்கள் − கொஞ்சம் ஜாக்கிரதை. ஓவியன் நீங்களாவது சொல்லக்கூடாது.

சொல்லுறதாவது.. இதுல ஆதவனுக்கு குருவே ஓவியனாம்.....
காற்று வழியாய் செய்தி வந்த்து.

ஓவியன்
09-09-2007, 01:46 PM
பிலிப்பைன்ஸ் பெண்கள் − கொஞ்சம் ஜாக்கிரதை. ஓவியன் நீங்களாவது சொல்லக்கூடாது.

ஹீ!,ஹீ!

நான் சொல்லத் தான் நினைத்தேன், ஆனா அதற்குள் இப்படி மாட்டிகிட்டாரே...........!!! :D

ஓவியன்
13-09-2007, 06:30 PM
என்னடா இது நம்மளை நம்பி வந்தவரை (ஆதவன் தாங்க) ஒரு பொண்ணு பிடிச்சு இந்த உலுக்கு உலுக்குறாங்களே என்று ஓடிப் போய்ப் பார்த்தால் ஆதவன் தண்ணீரிலே நனைஞ்ச கோழிக்குஞ்சு போல நடுங்கிட்டிருந்தார். என்னைக் கண்டதும் பாருங்க ஓவியன், இந்த பொண்ணு ஓடி வந்து என்னோட கையைப் பிடித்து இழுக்குது, ஏதேதோ பொதக், பொதக்னு பேசுது ஒண்ணுமே புரியுதில்லையே எனக் கிட்டத் தட்ட அழவே தொடங்கிட்டார். பொண்ணைப் பார்த்தால் கிட்டத் தட்ட பதினெட்டு வயது இருக்கும், பிலிப்பைன்ஸ் பெண்களுக்கே உரிய அத்தனை பண்புகளும் இருந்தன, நானும் ஆங்கிலத்தில் அவருடன் உரையாட முற்பட்டால் அவர் என்னைப் புரிந்து கொள்ள முயல்பவராகத் தெரியவில்லை. அந்த நேரம் பார்த்து ஒரு பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த வயது ஒரு ஐம்பது மதிக்கத் தக்க பெரியவர் வந்தார், அவர் அந்த பெண், தன்னுடைய மகளென அறிமுகப் படுத்திக் கொண்டார். அத்துடன் தனது பெண்ணுக்கு மன நிலை கொஞ்சம் பாதிக்கப் பட்டு இருப்பதாகவும் அதனாலேயே அவர் ஆதவனோட அப்படி நடந்து கொண்டதாகவும், அவருக்காக தான் மன்னிப்புக் கேட்பதாகவும் கூறினார். எனக்கோ தர்ம சங்கடமாகிவிட்டது, அதென்னங்க பெரிய பெரிய வார்த்தையெல்லாம் பேசுறீங்க அப்படினு சொல்லிட்டு, கனத்த மனதுடன் அவ்விடத்தை விட்டு நகர்ந்து ஆதவனையும் அழைத்துக் (இழுத்துக் :D) கொண்டு விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தேன்.

வெளியே நான் நண்பன் ஒருவனோடு வந்த வாகனம் காத்திருக்க, அதிலே ஏறி எனது தங்ககத்தை நோக்கிப் பயணமானோம். அடடே இங்கே நான் ஆதவனைப் பற்றிக் கூற மறந்திட்டேனே. சும்மா சொல்லக் கூடாதுங்க ஆதவன் ரொம்பவே அழகான (சின்னப் :D) பையன். உயரம் என்னை விடக் கம்மியா இருந்தாலும் (:D) குட்டைனு சொல்ல முடியாத உயரத்திலே இருந்தார். கலர் என்னை விடக் கம்மியா (:D) இருந்தாலும் கறுப்பு என்று சொல்ல முடியாத கலரிலே இருந்தார். மீசை வேற வளர்த்து இருந்தார், அது உதடுகளின் மேலே ஒட்டி வைக்கப் பட்டிருக்கிறதோ என்று எனக்கு அடிக்கடி சந்தேகம் வேற வந்திட்டு இருந்தது. சரி, சரி மீசையைப் பற்றி அதிகம் பேசினா எங்கே நம்ம காலை வாரிடுவாரோ என்கிற பயத்திலே பேசாமலேயே இருந்திட்டன் (:D).

காரிலே வரும் போது சாப்பிட்டீங்களா ஆதவன் அப்படிக் கேட்டேன், இல்லை ஓவியன் வரும் போது ஒரு தோசைப் பார்சல் கட்டிட்டு வந்தேன் ஆனா அதனை பயணப்பையோட வத்ததாலே சாப்பிட முடியலை, விமானத்திலே தந்த உணவுகளைப் பார்க்க பயமா இருந்திச்சு அதாலே அவற்றையும் சாப்பிடல, அதனாலே செம பசி அப்படினார். சரி சரி இன்னும் கொஞ்ச நேரத்திலே நம்ம வீடு வந்திடும், அங்கே போய் நாங்களாகவே சமைத்து (ஆதவனின் போதாத காலம் ஆரம்பிக்கப் போகிறது என்பது வேறு விடயம் :)) சாப்பிடலாம் என்று ஆறுதல் படுத்தினேன்.

ஒருவாறாக வீடு வந்து சேர்ந்தோம், வீட்டிலே ஆதவனை வரவேற்க எனது நண்பர்கள் தயார் நிலையிலே இருந்தனர். எல்லோரையும் அறிமுகப் படுத்தி முடிந்ததும் என்னங்க எல்லோருமே "தெனாலி" மாதிரி பேசுறீங்க...?. என்று கேட்டார், அப்போது என் நண்பர்களில் ஒருவர் ஆமாங்க ஆதவன் நீங்க "தெனாலி" மாதிரி நடக்கையிலே உங்களுக்கு டப்பிங் கொடுக்க வேண்டுமென்பதற்காக நாங்க "தெனாலி" மாதிரி பேசுறோம் :) என்று ஒரு போடு போட ஆதவன் சைலண்ட் ஆயிட்டார். தொடர்ந்து ஆதவனுக்காக ஒதுக்கியிருந்த அறையிலே ஆதவனின் பொருட்களை வைத்து விட்டு ஆதவா இங்கே இருக்கும் காலம் வரை இந்த அறை உங்களோடது என்றதும் ஆதவன் குஷி ஆயிட்டார். என்னங்க ஓவியன் அறையிலே ஏசி எல்லாம் போட்டு இருக்கீங்க என்றார், ஆமா ஏசி போடாட்டி நாளைக்கு நீங்க சுக்கா ரோஸ்டா ஆயிடுவீங்க என்றது தான் ஆதவனுக்கு உறைத்தது.

இதற்கிடையிலே நான் ஆதவனுக்காக சமைக்க ஆரம்பித்து விட்டேன் குளிரூட்டியிலே உணவுப் பொருட்கள் முடிவடைந்து விட்டிருந்தன (:D) நம்ம ஆதவன் தானே எதனைச் சமைத்தாலும் சாப்பிடுவார் (:D) என்ற நம்பிக்கையிலே சமைக்க ஆரம்பித்தேன். வழக்கமாக நாங்கள் தயாரிக்கும் பிட்டினை கொஞ்சம் அதிகம் தேங்காய் பூ எல்லாம் போட்டு (ஆதவனுக்காக ஸ்பெசல்:)) தயாரித்தேன். உருளைக் கிழங்கிலே பிரட்டல் கறி ஒன்றும் வைத்தாகிவிட்டது. ஒரு ஓம்லேட் போட வேண்டியது தான் பாக்கி. ஓம்லேட்டுக்காக முட்டை எடுக்க குளிரூட்டியத் திறந்த போது குளித்து முடித்து காஷூவல் ஆடைகளுடன் குசினிக்குள் (சமையலறை) வந்தார் நம்ம் ஆதவன். அப்போது என் கையிலே முட்டைப் பெட்டி இருந்தது அதிலே முட்டைகள் வரிசையாக அடுக்கி வைக்கப் பட்டிருந்தன. அப்போது நம்ம ஆதவன் கேட்டார் பாருங்க ஒரு கேள்வி வடிவேல் கூட திரைப்படங்களிலே கேட்க மறந்த கேள்வி அது (:)). அவர் கேட்டது இது தான், ஏங்க ஓவியன் ஓமானிலே கோழிகள் எல்லாம் எப்படி அழகாக வரிசையா இந்த பெட்டிக்குள்ள வந்து முட்டை போடுது...?, நம்ம ஊர் கோழிங்க எல்லாம் கோழிக் கூட்டுக்கேயோ இல்லை எங்கேயாவது பரணிலேயோ தான் முட்டை இடும், இங்கே ப்ரீஜூக்க வந்து பெட்டியிலே அழகா முட்டை போடுதே..? அப்படினார். :icon_rollout:

ஆதவனின் ரவுசு தொடரும்....

மலர்
14-09-2007, 03:17 AM
இவ்வளவு அறிவாளி புள்ளையா ஆதவன்...
இதுகூட தெரியாம போச்சே...

Members who have read this thread : 27
அக்னி, அன்புரசிகன், அமரன், இக்ராம், இதயம், இனியவள், ஓவியன், சாராகுமார், சிவா.ஜி, சூரியன், பாரதி, பார்த்திபன், பூமகள், மதி, மனோஜ், மலர், ஷீ-நிசி, alaguraj, aren, Basheera, jpl, lolluvathiyar, mania, pradeepkt, sadagopan, unas

எழுது ராசா எழுது.....ஹா..ஹா..
அவரு இன்னும் இந்த பக்கம் வரவேஇல்லை...:icon_rollout:

ஓவியன்
14-09-2007, 07:12 AM
ஹீ!,ஹீ!

அவரு இந்தப் பக்கம் வருவதற்குள் நாம முற்றுப்புள்ளி போட்டு முடிச்சு வைச்சுருவமிலே.....!!! :D

lolluvathiyar
14-09-2007, 08:12 AM
ஆகா ஆதவனி அறிவு கொஞ் ஜொஞ்மாக வெளியிடுகிறார் நம்ம ஓவியன். மன நிலை பாதிக்க பட்டவங்க தான் ஆதவன் கிட்ட பேசுவாங்க என்கிற சீக்ரட்டை சீக்ரட்டாகவே நமக்குள்ளயே இருக்கட்டும்

சிவா.ஜி
14-09-2007, 08:20 AM
ஆனாலும் இது த்ரீமச் ஓவியன்.அந்த முட்டை மேட்டரத்தான் சொல்றேன்.இருங்க இருங்க ஆதவா வரட்டும்.ஆனா அவர்கிட்ட பேசும்போது..நீங்கதான் "இங்கே ஓமானில் உள்ள கோழியெல்லாம் ஃப்ரிட்ஜ்குள்ளதான் முட்டைபோடும்"என்று பீலாவிட்டதாகச் சொன்னாரே....

ஓவியன்
14-09-2007, 08:21 AM
மன நிலை பாதிக்க பட்டவங்க தான் ஆதவன் கிட்ட பேசுவாங்க என்கிற சீக்ரட்டை சீக்ரட்டாகவே நமக்குள்ளயே இருக்கட்டும்

ஹீ,ஹீ!

இன்னும் நிறைய சீக்ரட் எல்லாம் வரப் போகுது...!!! :D

மலர்
14-09-2007, 08:23 AM
ஹீ,ஹீ!

இன்னும் நிறைய சீக்ரட் எல்லாம் வரப் போகுது...!!! :D

இன்னைக்கு லீவு முடிஞ்சி வாரதா கேள்விபட்டேனே..... வந்துட்டாலும்.....
சீக்ரெட் எல்லாம் வெளியே வருமா

ஓவியன்
14-09-2007, 08:26 AM
அவர்கிட்ட பேசும்போது......

ஆமா அவர் பேசும் போது எப்போ உண்மையை பேசியிருக்கிறார்......
இது கூடத் தெரியாம...........?
அய்யோ, அய்யோ..........!!! :D

ஓவியன்
14-09-2007, 08:28 AM
இன்னைக்கு லீவு முடிஞ்சி வாரதா கேள்விபட்டேனே..... வந்துட்டாலும்.....
சீக்ரெட் எல்லாம் வெளியே வருமா

ஆமா வெளிவரும்........
ஏன் என்றால் இன்றும் நாளையும் எனக்கு லீவு!!! :)

பூமகள்
14-09-2007, 10:29 AM
அன்பு அண்ணா ஓவியரே... அசத்துறீங்க போங்க.. ஓமானில்..:icon_clap:
நாங்களும் உங்க பின்னாடியே வந்து எல்லாத்தியும் பார்க்கிறது போலவே இருக்கு.... சூப்பர் அண்ணா.

இப்படி போட்டு சாச்சுபுட்டீங்களே ஆதவரை.....????!!!!!!:icon_rollout:
ஹிம்... நடக்கட்டும்...நடக்கட்டும்... உங்களுக்கு இருக்கு கச்சேரி ஆதவன் வந்த பிறகு....!!!:music-smiley-008:

பென்ஸ்
14-09-2007, 10:39 AM
ஓவியா... என்னிடம் போனில் சொன்ன "அந்த" விசயத்தை மட்டும் தயவு செய்து சொல்லி ஆதவனின் மானத்தை வாங்கி விடாதே...

சூரியன்
14-09-2007, 10:40 AM
நீங்க சொன்னது போலவே அவருக்கு மீசை செஞ்சு ஒட்டுனது மாதிரியே இருக்கும். ரொம்போ சின்னப்பையன் மாதிரி இருப்பார்.

சூரியன்
14-09-2007, 10:41 AM
அப்போது என் கையிலே முட்டைப் பெட்டி இருந்தது அதிலே முட்டைகள் வரிசையாக அடுக்கி வைக்கப் பட்டிருந்தன. அப்போது நம்ம ஆதவன் கேட்டார் பாருங்க ஒரு கேள்வி வடிவேல் கூட திரைப்படங்களிலே கேட்க மறந்த கேள்வி அது (:)). அவர் கேட்டது இது தான், ஏங்க ஓவியன் ஓமானிலே கோழிகள் எல்லாம் எப்படி அழகாக வரிசையா இந்த பெட்டிக்குள்ள வந்து முட்டை போடுது...?, நம்ம ஊர் கோழிங்க எல்லாம் கோழிக் கூட்டுக்கேயோ இல்லை எங்கேயாவது பரணிலேயோ தான் முட்டை இடும், இங்கே ப்ரீஜூக்க வந்து பெட்டியிலே அழகா முட்டை போடுதே..? அப்படினார். :icon_rollout:

ஆதவனின் ரவுசு தொடரும்....

நம்ம ஆதவனின் லொள்ளு தாங்க முடியலையப்பா..,, அவர பார்த்தா நிச்சயம் கேட்கனும்.

ஓவியன்
14-09-2007, 12:09 PM
[B][COLOR="DarkSlateGray"]இப்படி போட்டு சாச்சுபுட்டீங்களே ஆதவரை.....????!!!!!!:icon_rollout:
ஹிம்... நடக்கட்டும்...நடக்கட்டும்... உங்களுக்கு இருக்கு கச்சேரி ஆதவன் வந்த பிறகு....!!!:music-smiley-008:


ஹீ!,ஹீ!!!

கச்சேரி தானே அதெல்லாம் ஆதவன் வந்தப்புறம் பாத்துக்கலாம்........!!! :)

ஓவியன்
14-09-2007, 12:12 PM
ஓவியா... என்னிடம் போனில் சொன்ன "அந்த" விசயத்தை மட்டும் தயவு செய்து சொல்லி ஆதவனின் மானத்தை வாங்கி விடாதே...

ஆதவனிடம் மானம் இருந்தால் தானே நான் வாங்கலாம், அதனை ஏற்கனவே அவர் ஓமானிலே மலிவு விலையில் விற்று விட்டுப் போயிட்டாரே.........!!! :lachen001:

ஓவியன்
14-09-2007, 12:14 PM
நீங்க சொன்னது போலவே அவருக்கு மீசை செஞ்சு ஒட்டுனது மாதிரியே இருக்கும். ரொம்போ சின்னப்பையன் மாதிரி இருப்பார்.


நம்ம ஆதவனின் லொள்ளு தாங்க முடியலையப்பா..,, அவர பார்த்தா நிச்சயம் கேட்கனும்.

ஐயோ ஆதவன் ரொம்ப பாவம்ங்க விட்டுடுங்க.........!!! :)

சூரியன்
14-09-2007, 12:18 PM
கண்டிப்பா கேட்டே தீரனும்.அவர விட கூடாது.

அன்புரசிகன்
14-09-2007, 12:48 PM
எல்லாம் சரி.... ஆனால் பெட்டிக்குள் முட்டைபோடவது தான் ரொம்ப ஒவர்...

ஓவியன்
14-09-2007, 12:51 PM
எல்லாம் சரி.... ஆனால் பெட்டிக்குள் முட்டைபோடவது தான் ரொம்ப ஒவர்...

ஆதவன் அன்புவே சொல்லிட்டார் என்ன இருந்தாலும் நீங்க அப்படி எல்லாம் கேட்டிருக்கக் கூடாது...? :D

இலக்கியன்
14-09-2007, 12:57 PM
ஓவியன் பாராட்டுக்கள் கலக்குங்கள்
எங்கே ஆதவா அழைத்து வாருங்கள்

சூரியன்
14-09-2007, 01:03 PM
ஓவியன் பாராட்டுக்கள் கலக்குங்கள்
எங்கே ஆதவா அழைத்து வாருங்கள்

அவரை கட்டித்தான் மன்றத்திக்கு தூக்கி வரவேண்டும்,.

ஓவியன்
14-09-2007, 01:13 PM
ஓவியன் பாராட்டுக்கள் கலக்குங்கள்
எங்கே ஆதவா அழைத்து வாருங்கள்

ஆதவனை அழைத்து வருபவர்களுக்கு தகுந்த சன்மானம் வழங்கப்படும்...:D

மலர்
14-09-2007, 03:27 PM
ஆதவனை அழைத்து வருபவர்களுக்கு தகுந்த சன்மானம் வழங்கப்படும்...:D

சன்மானம் என்றால்... இபணமா இல்லை..... வேற ஏதாவது..?
அதிலும் இபணம் என்றால் எவ்வளவு...?

சூரியன்
14-09-2007, 03:33 PM
ஆதவன் நாளைக்கு வர்றதா சொன்னார். தர்றதா சொன்ன சன்மானத்தை என்னை வாங்கிக்க சொன்னார்..
ஓவியன் குடுங்க சன்மானத்தை(எவ்வளவு இ-பணம்).

சாராகுமார்
14-09-2007, 05:26 PM
ஓவியன் அவர்களே,ஆதவன் அவர்களை இப்படி வாரிகிறீர்களே அவர் வந்து சுடப்போகிறார் சூரியன் மாதிரி.ஆனாலும் நல்ல இருக்கு.வாழ்த்துக்கள்.

ஓவியன்
14-09-2007, 08:23 PM
ஓவியன் அவர்களே,ஆதவன் அவர்களை இப்படி வாரிகிறீர்களே அவர் வந்து சுடப்போகிறார் சூரியன் மாதிரி.ஆனாலும் நல்ல இருக்கு.வாழ்த்துக்கள்.

ஹீ!,ஹீ!
எனக்கு சுடாதே.......
நான் ஆதவனோட சூட்டினை சமாளித்துப் பழகிட்டேன்........:)

மலர்
14-09-2007, 08:25 PM
ஆதவனை அழைத்து வருபவர்களுக்கு தகுந்த சன்மானம் வழங்கப்படும்...:D

பதிலே இல்லை...

ஓவியன்
14-09-2007, 08:25 PM
ஆதவனை அழைத்து வருபவர்களுக்கு தகுந்த சன்மானம் வழங்கப்படும்...:D

சன்மானம் என்றால்... இபணமா இல்லை..... வேற ஏதாவது..?
அதிலும் இபணம் என்றால் எவ்வளவு...?

ஆமா மானம் தான், அதுவும் ஆதவனோட மானம்.......
அதனைத் தானே இந்த திரி முழுவதும் வாரி, வாரி வழங்கிட்டிருக்கேன்....:icon_rollout:

ஓவியன்
14-09-2007, 08:27 PM
பதிலே இல்லை...

ஆமா இப்படி அவசரப்படால் எப்படீங்க.......? :D

மலர்
14-09-2007, 08:30 PM
ஆமா மானம் தான், அதுவும் ஆதவனோட மானம்.......
அதனைத் தானே இந்த திரி முழுவதும் வாரி, வாரி வழங்கிட்டிருக்கேன்....:icon_rollout:

ஆதவனுக்கே ஆப்பா....
நீங்க நடத்துங்கப்பு......
அவரக் காணோம்.....

(அவரு வந்து.... கும்பாபிஷேகத்துல இருந்து ஆரம்பிச்சி உங்களுக்கு ஒரு திருவிழாவே நடத்தலான்னு இருக்காராம்)

ஓவியன்
14-09-2007, 08:33 PM
அவரு வந்து.... கும்பாபிஷேகத்துல இருந்து ஆரம்பிச்சி உங்களுக்கு ஒரு திருவிழாவே நடத்தலான்னு இருக்காராம்

அந்த திருவிழாவிலேயும் ஓவியன் வானம் விடுவாரு.......!!! :D

ஓவியன்
18-09-2007, 06:29 AM
ஆதவரே இந்த திரி உங்கள் பார்வைக்காகக் காத்திருக்கிறது, ஓடியாங்கோ, ஓடியாங்கோ...! :D:D:D

சிவா.ஜி
18-09-2007, 06:33 AM
இன்னைக்கு வந்துட்டாருன்னு நினைக்கிறேன்.வருவாரு....நீங்க வாருனதெல்லாம் படிச்சிட்டு......வறுக்கப் போறார்.
அப்ப ஓமானுக்கு வந்து எந்த மருத்துவமணையில உங்களைப் பாக்கணும் ஓவியன்...?

ஓவியன்
18-09-2007, 06:37 AM
அப்போ ஆதவன் இன்னொரு தபா ஓமானுக்கு வரப் போகிறார் எங்கிறீங்களா..? :D

சிவா.ஜி
18-09-2007, 06:40 AM
அப்போ ஆதவன் இன்னொரு தபா ஓமானுக்கு வரப் போகிறார் எங்கிறீங்களா..? :D

முதல் தபா,தப்பா வந்துட்டார்...இந்த தபா...தப்பாம வருவார்.

அன்புரசிகன்
18-09-2007, 06:40 AM
எங்கே ஆதவனின் என்ட்ரி.....
ஆதவன் பயந்திட்டார் போலும்....

ஓவியன்
18-09-2007, 06:49 AM
முதல் தபா,தப்பா வந்துட்டார்...இந்த தபா...தப்பாம வருவார்.

அப்போ இந்த தபா தப்பு பண்ண மாட்டார் எங்கிறீங்களா..? :D

ஆதவா
18-09-2007, 07:54 AM
ஆரம்பிச்சுட்டாய்யா!!!!

ஓவியரே! ஏன் இந்த கொலை வெறி? ஓமானில் எத்தனை நல்ல விசயங்கள் செய்தேன். அதெல்லாம் உங்க கண்ணுக்கு படாதே!!! ஆதவனோட காலை வாரி விடறதுலயே குறியா இருக்கீரே????

உண்மையா நடந்த விஷயத்தை நானே சொல்றேன்... பிலிப்பைன்ஸ்காரிகிட்ட நான் சண்டை போடலை... அவங்க பாசையில பேசிகிட்டு இருந்தேன்... நாந்தான் நம்ம தலை மாதிரி பல பாசைகள் தெரிஞ்ச அதிமேதாவியாச்சே!

பிலிப்பைன்ஸ் காரியோட பெயர் சோன்லி சுஜியன் (chonlie sugian) அவ பார்க்கறது எப்படி இருக்கிறான்னு நீங்களே சொல்லீட்டீங்க. விமானத்தில இருந்து இறங்கின உடனே என்னைப் பார்த்து வந்தா. வந்துட்டு,, ஜப்பானிய பாசையில, " ஜிங்க் ஜக் ஜம் " அப்படீன்னா.. எனக்கு ஒண்ணூமே புரியலை. அப்பறமா ஆங்கிலத்தில பேசினா. " Will you marry me?" அப்படின்னா... எனக்கு ஒரே ஷாக்குங்க ஓவியன்... பின்னே! ஏற்கனவே ரஷ்யாகாரி போதாதுன்னு இப்போ பிலிப்பைன்ஸான்னு ஒரே மனக்கவலை.. நான் முடியவே முடியாதுன்னு அடிச்சு சொல்லீட்டேன். அதான் அவ அழுதா... காதல் ஒரு பைத்தியம் னு சொல்லுவாங்க.. யார் சொன்னான்னு கேக்காதீங்க. அதுமாதிரி அவளும் மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தமாதிரி ஆயிட்டா... என்ன செய்யறதுங்க தமிழ்மன்ற மக்களே! எந்த ஊருக்குப் போனாலும் என்னை விடாம சைட் அடிக்கிறாங்க பொண்ணுங்க.... நானும் எத்தனை நாளைக்குத்தான் தெரியாத மாதிரி நடிக்கிறது?

சரி அதை விடுங்க,. இந்த முட்டை கதைக்கு வருவோம். நான் ஏன் அப்படி கேட்டேன்னா அது பல அர்த்தங்கள் இருக்குங்க.. சும்மா கேப்பேனா? நான் என்ன அத்தனை அறிவிலியா? ஏன் அப்படி கேட்டேன்னா???.... பொறுங்க யோசிச்சு பதில் சொல்றேன்.

சூடா ஆம்லெட் போட்டுத்தாரேன்னு சொன்ன ஓவியர் எதுக்கு கோழிய நெரண்டிட்டு இருந்தார்னு நீங்க அவர் கிட்ட கேளுங்க,.. பதிலே சொல்லமாட்டார்...

இந்த மாதிரி திரி எழுப்பி எனது மானத்தை கப்பலேற்றும் முயற்சியெல்லாம் பனிப்பாறை பட்டு கவுந்து போகும்.... நம்ம டைட்டானிக் மாதிரி..

ஓமானில் அடிச்ச புயல் நான் வந்ததுக்கு அப்பறமாத்தான் ஓய்ஞ்சது... அது தெரியுங்களா மக்களே!!! ஏன்னா புயல் ஓய்ஞ்சதுக்கு அப்பறமாத்தான் நான் ஓமானுக்கே போனேன்...

அன்புரசிகன்
18-09-2007, 08:17 AM
சரி அதை விடுங்க,. இந்த முட்டை கதைக்கு வருவோம். நான் ஏன் அப்படி கேட்டேன்னா அது பல அர்த்தங்கள் இருக்குங்க.. சும்மா கேப்பேனா? நான் என்ன அத்தனை அறிவிலியா?

அப்டீன்னா.... ஓவியன் அறிவிலியா???

சிவா.ஜி
18-09-2007, 08:24 AM
அப்டீன்னா.... ஓவியன் அறிவிலியா???

டார்ச் அடிக்க ஆரம்பிச்சிட்ட்டாங்கய்யா....ஆரம்பிச்சிட்டாங்க...!

ஆதவா
18-09-2007, 08:24 AM
அப்டீன்னா.... ஓவியன் அறிவிலியா???

நான் எப்பவுமே நேரடியா பதில் சொல்லுவேன். சிலசமயம் மறைமுகமாகவும் தான்.... ஆனாலும் சொல்றேன். அது உண்மையோ பொய்யோ தெரியாது. ஆனால் இருக்கலாம். சொல்லுவதற்கில்லல.

ஓவியன்
18-09-2007, 08:26 AM
பிலிப்பைன்ஸ் காரியோட பெயர் சோன்லி சுஜியன் (chonlie sugian) அவ பார்க்கறது எப்படி இருக்கிறான்னு நீங்களே சொல்லீட்டீங்க. விமானத்தில இருந்து இறங்கின உடனே என்னைப் பார்த்து வந்தா. வந்துட்டு,, ஜப்பானிய பாசையில, " ஜிங்க் ஜக் ஜம் " அப்படீன்னா.. எனக்கு ஒண்ணூமே புரியலை. அப்பறமா ஆங்கிலத்தில பேசினா. " Will you marry me?" அப்படின்னா... எனக்கு ஒரே ஷாக்குங்க ஓவியன்.....

அதுசரிங்க, பிலிப்பைன்ஸ் காரி ஜப்பான் பாசையா பேசினாங்க..?
ஏங்க இப்படி அவிக்கிறீங்க...?

அமரன்
18-09-2007, 08:26 AM
என்னமோ போங்க..ஆளாளுக்கு (கதை விட) ஆரம்பிச்சிட்டாங்க...
ஓவியா...!என்னையும் கூப்பிட்டு இருக்கலாம்ல...மூவரும் கலந்து கலக்கி இருக்கலாம்..சரி அதை விடுங்க...
பிலிப்பீன்ஸு பொண்ணு மேட்டர் ஆதவா சொல்றதை ஏத்துக்கலாம்....முட்டை மேட்டர் எப்படி? நீங்க ஏன் கோழியை நெருடினீங்க? பிரிட்ஜுக்குள் எப்படி கோழி அடுக்காக முட்டைபோட்டது?
முக்கியமான சந்தேகம். நீங்க இருவரும் ஒருவரா??????????

ஆதவா
18-09-2007, 08:49 AM
அதுசரிங்க, பிலிப்பைன்ஸ் காரி ஜப்பான் பாசையா பேசினாங்க..?
ஏங்க இப்படி அவிக்கிறீங்க...?

ஏங்க பேசக்கூடாதா? அவங்களும் என்னை மாதிரி சகலகலாவல்லவி.

ஆதவா
18-09-2007, 08:50 AM
என்னமோ போங்க..ஆளாளுக்கு (கதை விட) ஆரம்பிச்சிட்டாங்க...
ஓவியா...!என்னையும் கூப்பிட்டு இருக்கலாம்ல...மூவரும் கலந்து கலக்கி இருக்கலாம்..சரி அதை விடுங்க...
பிலிப்பீன்ஸு பொண்ணு மேட்டர் ஆதவா சொல்றதை ஏத்துக்கலாம்....முட்டை மேட்டர் எப்படி? நீங்க ஏன் கோழியை நெருடினீங்க? பிரிட்ஜுக்குள் எப்படி கோழி அடுக்காக முட்டைபோட்டது?
முக்கியமான சந்தேகம். நீங்க இருவரும் ஒருவரா??????????

நாங்க ரெண்டு பேரு வேற ஆளுங்க
ஆனா
ஒருவருமே ஒருவர்தான்... :aetsch013:

ஓவியன்
18-09-2007, 07:23 PM
நாங்க ரெண்டு பேரு வேற ஆளுங்க
ஆனா
ஒருவருமே ஒருவர்தான்... :aetsch013:

சரியாக சொன்னீங்க ஆதவா!
சபாஸ்....!!! :)

ஆமா, நீங்க என்ன சொன்னீங்க...??? :aetsch013:

ஓவியன்
26-04-2011, 07:12 AM
ரகஸ்யாவில் என்னை வறுக்க ஆரம்பித்திருக்கும் ஆதவனுக்கு பதிலடி கொடுக்க, சே எல்லாமே தப்புத் தப்பாக வருது. ஆதவனுக்கு பிரதியுபகாரமாக இந்த திரியினை மேலே தூக்குகிறேன்....

அப்படியே ஓமானில் ஆதவன் பண்ணிய மீதி லூட்டிகள் தொடரும்.....

ஆதவா
26-04-2011, 07:37 AM
ரகஸ்யாவில் என்னை வறுக்க ஆரம்பித்திருக்கும் ஆதவனுக்கு பதிலடி கொடுக்க, சே எல்லாமே தப்புத் தப்பாக வருது. ஆதவனுக்கு பிரதியுபகாரமாக இந்த திரியினை மேலே தூக்குகிறேன்....

அப்படியே ஓமானில் ஆதவன் பண்ணிய மீதி லூட்டிகள் தொடரும்.....

ஆதவா : பயம்!!!

ஓவியன் : யாருக்கு பயம்?? நாங்கல்லாம் ஓடற ரயிலை ஒத்தக்கையால நிப்பாட்டினவங்க... அதுவும் லெஃப்டேண்டுல....

ஆதவா : :lachen001::lachen001:

ஓவியன்
26-04-2011, 01:18 PM
இதற்கிடையிலே நான் ஆதவனுக்காக சமைக்க ஆரம்பித்து விட்டேன் குளிரூட்டியிலே உணவுப் பொருட்கள் முடிவடைந்து விட்டிருந்தன (:D) நம்ம ஆதவன் தானே எதனைச் சமைத்தாலும் சாப்பிடுவார் (:D) என்ற நம்பிக்கையிலே சமைக்க ஆரம்பித்தேன். வழக்கமாக நாங்கள் தயாரிக்கும் பிட்டினை கொஞ்சம் அதிகம் தேங்காய் பூ எல்லாம் போட்டு (ஆதவனுக்காக ஸ்பெசல்:)) தயாரித்தேன். உருளைக் கிழங்கிலே பிரட்டல் கறி ஒன்றும் வைத்தாகிவிட்டது. ஒரு ஓம்லேட் போட வேண்டியது தான் பாக்கி. ஓம்லேட்டுக்காக முட்டை எடுக்க குளிரூட்டியத் திறந்த போது குளித்து முடித்து காஷூவல் ஆடைகளுடன் குசினிக்குள் (சமையலறை) வந்தார் நம்ம் ஆதவன். அப்போது என் கையிலே முட்டைப் பெட்டி இருந்தது அதிலே முட்டைகள் வரிசையாக அடுக்கி வைக்கப் பட்டிருந்தன. அப்போது நம்ம ஆதவன் கேட்டார் பாருங்க ஒரு கேள்வி வடிவேல் கூட திரைப்படங்களிலே கேட்க மறந்த கேள்வி அது (:)). அவர் கேட்டது இது தான், ஏங்க ஓவியன் ஓமானிலே கோழிகள் எல்லாம் எப்படி அழகாக வரிசையா இந்த பெட்டிக்குள்ள வந்து முட்டை போடுது...?, நம்ம ஊர் கோழிங்க எல்லாம் கோழிக் கூட்டுக்கேயோ இல்லை எங்கேயாவது பரணிலேயோ தான் முட்டை இடும், இங்கே ப்ரீஜூக்க வந்து பெட்டியிலே அழகா முட்டை போடுதே..? அப்படினார். :icon_rollout:



ப்ரீஜ்ஜுக்குள் வந்து கோழி எப்படி முட்டை போட்டுச்சுனு நம்ம ஆதவன் கேட்டதும், அருகேயிருந்த என்னோட ஒரு நண்பர் குபீரென சிரித்து விட்டார். ஆனால் நான் சிரிக்கவில்லை, பின்னே என்னங்க ஒரு விருந்தாளியை வீட்டுக்கு அழைத்து வந்திட்டு, அதுவும் வேறு நாட்டிலிருந்து நம்மளை நம்பி வந்த ஒரு விருந்தாளியை எப்படி நோகடிப்பதுனு நினைச்சு, சிரமப்பட்டு வந்த சிரிப்பினையும் அடக்கிக் கொண்டேன். ஆனால் ஆதவனோ விடுற பாடாக இல்லை, மறுபடியும் மறுபடியும் நம்ம வீட்டு ப்ரிஜ்ஜூக்குள் கோழி எப்படி முட்டை போட்டுச்சுனே கேட்டுட்டிருந்தார், ஒரு வழியாக ஆதவனை சமாதானப் படுத்துவதற்காக, ஆதவா இங்கே ஓமானில நாம இருக்கிற நிலையில ஆடு, கோழி எல்லாம் வளர்க்க முடியாது, இந்த முட்டைப் பெட்டி சூப்பர் மார்கெட்டில வாங்கினது என்றேன். உடனே ஆதவன் சந்தோசமாகி, அப்படி சொல்லுங்க ஓவி உண்மையை சூப்பர் மார்கெட்டு ப்ரிஜ்ஜில சிக்கினையும் முட்டைகளையும் ஒன்றாக அடுக்கி வைச்சிருப்பாங்க, அந்த சிக்கன் போட்டவைதான் இந்த முட்டைகளாக இருக்கும் என்றார். அப்படித்தான் இருக்கும் ஆதவா சரி, சரி இதோ ஆம்லெட்டு போட்டு முடிச்சாச்சு வாங்க சாப்பிடலாமென்று அவரை அழைத்துக் கொண்டு உணவருந்தும் மேசைக்கு வந்தோம், அங்கே ஏற்கனவே என் நண்பர்கள் உணவருந்த தயாராகவே இருந்தனர். ஆனால் ஆதவனோ கோழி சப்ஜெக்டில இருந்து விலகுவதாக இல்லை, இப்படித்தான் ஒருதடவை அறுப்பதற்காக வைத்திருந்த தன் வீட்டுக் கோழி வீதியில் தப்பி ஓட, அதனை விரட்டிப் பிடிக்கவென அப்போதுதான் குளித்து விட்டு இடுப்பில் கட்டிய டவலுடன் வந்த நான் அப்படியே வீதியால் துரத்திக் கொண்டு ஓட பக்கத்து வீட்டுப் பொண்ணுங்க தன்னைப்பார்த்து சிரிச்சாங்க அப்படினு வெட்கப்பட்டார். (நாங்களும் தான்:D:D:D)

பயணக் களைப்பில் இருந்ததாலோ என்னவோ நாம் நடாத்திய நளபாகத்தில் விளைந்த உணவினை ஏதும் குறை கூறாமலேயே ஆதவன் சாப்பிட்டார். ஒரு வேளை நம் மனம் கோண கூடாதென நினைத்து பேசாமல் இருந்தாரோ என்னவோ..??. எப்படியிருந்தால் எனக்கென்ன ஆதவன் தான் வாயினைத் திறந்து நாம் சமைத்த உணவில் பிழை கண்டு கொள்ளவில்லை என்ற நிம்மதி எனக்கு. ஒரு வழியாக சாப்பிட்டு முடிந்ததும் வெளியே எங்கேயாவது போய் வருவோமா இல்லை இன்றிரவு வீட்டிலேயே இருக்கப் போறீங்களா என ஆதவனை நான் கேட்க, பயண அசதியாக இருப்பதாகவும் இன்று ஓய்வாக இருந்து நாளை காலை வெளியே செல்வோம் என்றார், அத்துடன் தான் கையுடன் கொணர்ந்த மடிக்கணினியை உயிர்ப்பித்து இணைய இணைப்பு கிடைக்குமா என கேட்டார், நாமிருந்த வீட்டில் நாம் வயர்லஸ் மூலமான இணைய இணைப்பு பாவித்ததால் அந்த இணைப்பினை ஆதவாவின் கணினியில் ஏற்படுத்திக் கொடுத்தேன். இணைய இணைப்பினை ஏற்ப்டுத்திக் கொடுக்கையில் ஆதவாவின் கணினியின் டெஸ்க் டாப்பில் ஒரு வெள்ளைக்கார பெண் சிரித்துக் கொண்டிருக்க, என்ன ஆதவா இதுதான் அந்த ரஸ்ய பெண்ணா என நான் கேட்க, இல்லை ஓவி அவா வேற இவா வேற என்று ஒரு நமுட்டுச் சிரிப்பு சிரித்தார். இவா யார்னு கொஞ்சம் விளக்கமாகச் சொல்லலாமே என நான் கேட்டேன், என்னடா இத்தனை சின்ன பையனாக இருந்துகொண்டு இண்டர்நஷனல் லெவல்ல வேலைபார்த்திட்டிருக்கிறாரே என்ற கடுப்பு எனக்கு. இல்லை ஓவி அதை இப்ப கூறினா சஸ்பென்ஸ் போயிடும், அப்புறமாக விரிவாக மன்றத்தில போடுறேனே அப்படினு பிகு பண்ணினார், இனிமேலும் கேட்டால் இன்னும் அதிகமாக பிகு பண்ணுவாரென்ற காரணத்தினால் நான் அத்துடன் அந்த விடயத்தை மறந்தேன்.

அப்படியே எங்கள் வீட்டிலிருந்த மொட்டை மாடிக்கு நான் ஆதவனை அழைத்துக் கொண்டு செல்ல, ஆதவன் ரொம்ப குஷியாயிட்டார், ஓவி மொட்டை மாடினா எனக்கு ரொம்ப பிடிக்கும் ஏன்னா அமைதியாக இருந்து கவிதை எழுத மொட்டை மாடிதான் நல்ல சாய்ஸ்னார். மங்கிய ரொமாண்டிக் லைட்டில் இருந்து கொண்டு, வானில் நிலாவைப் பார்த்துக் கொண்டிருந்தால் குபு, குபுனு கவிதை அருவி கொட்டும்னார். அதுவெல்லாம் சரிதான் ஆனால் இங்கே ஓமானில் சம்மர் சீசனில் இரவிலென்றாலும் மொட்டை மாடியிலிருந்தால் கவிதை கொட்டாது மாறாக பகலில் கொட்டிய வெட்பத்தின் மீதியெல்லாம் சேர வியர்வைதான் கொட்டும்னு சொல்ல ஆதவன் கொஞ்சம் அப்செட் ஆயிட்டார். தொடர்ந்தும் நிறைய நேரம் மன்றத்தினைப் பற்றி, மன்ற உறவுகளைப் பற்றியெல்லாம் பேசிக் கொண்டே இருந்தோம். அண்மையில்தான் (2007) உலகக் கிண்ண கிரிக்கட் போட்டியில் இந்தியா மிக மோசமாக போட்டியிலிருந்து வெளியேறியிருக்க, அதனைப் பற்றி ரொம்பவே கவலையாக பேசினார் ஆதவா. என்னதானிருந்தாலும் அடுத்த உலகக் கோப்பையை ஜெயிக்கும் நாடு இந்தியாதான் என உறுதியாக இருந்தார் ஆதவா. சச்சின், கங்குலி, திராவிட் ஓய்வு பெற்று புதிய இளைஞர்கள் கிரிக்கட்டில் வரவேண்டுமென ஆசைப்பட்டார். தானும் சிறு வயதில் நன்றாக கிரிக்கட் ஆடியதாகவும், அப்படி ஒருதடவை கிரிக்கட் ஆடி இவர் அடித்த சிக்ஸர் பந்து பக்கத்து வீட்டு ஜன்னல் கண்ணாடியை உடைத்து விட தன்னை முட்டி போட வைத்து, தன் கிரிக்கட் ஆர்வத்தை மூளையிலேயே கிள்ளி எறிஞ்சிட்டாங்கனு ரொம்பவே வருத்தப்பட்டார்.

சரி ஆதவா நேரம் இரவு பன்னிரெண்டு மணிக்கு மேலாக ஆயிட்டுது, எனக்கு நாளை காலையில் அலுவலகத்தில ஒரு புரஜக்டோட சப்மிஷன் இருக்கு அதை முடித்ததும் அடுத்த மூன்று நாட்களுக்கும் லீவு எடுத்துக் கொண்டு நாளைய தினத்துக்கும் அரை நாள் விடுமுறையுடன் வந்து உங்களுடன் ஐக்கியமாயிடுறேன் அது வரை கொஞ்சம் மேனேஜ் பண்ணிக்குங்க என்றேன். சம்மதமாக ஆதவன் தலையாட்ட, ஆதவனுக்கு ஒதுக்கிய அறையின் அருகே இருந்த என் அறையினுள் நுளைந்து படுக்கையில் சரிந்தேன். படுக்கையில் இருந்து நித்திராதேவியைத் தேடிக் கொண்டிருந்தால், பக்கத்து அறையில் ஆதவன் இணையத்தில் சாட் பண்ணிக் கொண்டிருப்பதாகத் தெரிந்தது இடையிடையே பலமாக சிரிப்பார், கோபமாகவும் பேசுவார், ஏதேதோ புரியாத கவிதைகளையும் கூறி விளக்கம் கூறுவார் இப்படி ஆதவனின் இணைய அரட்டை நீ....ள யாரோ ஒருவர் `சிக்கிட்டான் சிங்கன்` கணக்கில ஆதவாகிட்ட மாட்டிகிட்டது மட்டும் புரிய நான் ஒருவாறாக உறங்கிப் போனேன். எத்தனை மணியென்று தெரியவில்லை திடீரென என் அலைபேசியில் ஒரு எஸ்.எம்.எஸ் வர, தூக்கம் கலைந்தது. என்ன ஏதுவென அலைபேசியைப் பார்த்தால் ஆதவனிடமிருந்து எஸ்.எம்.எஸ் வந்திருந்தது. சீமான் ரோமிங் புண்ணியத்தில் எஸ்.எம்.எஸ் அனுப்பியது புரிந்திருக்க, இவ்வளவு நேரம் என்னுடன் தானே இருந்தார் என்னவாயிருக்கும்னு பயந்து போய் மெசேச்சைப் பார்த்தால் 'IF YOU HAVE TIME, PLEASE COME TO ONLINE' அப்படினு இருந்தது. எனக்கு எங்கேடா டைமிருக்கு என்று கோபத்துடன் பக்கத்து அறைக்குள் நுளைந்தால் :sauer028:. ஓவி எனி புரோப்ளம் என்றார் ஆதவன் வெரி கூலாக :cool:, இது என்னது மேசேச் அனுப்பியிருக்கிறீர் ஒன்லைனுக்கு வரச் சொல்லி என கேட்க, ஓ சாரி ஓவி நான் தவறுதலாக அனுப்பிட்டேன் போல, வேற ஒரு முக்கியமானவருக்கு அனுப்ப நினைச்சேன் அப்படினார். எனக்கு உச்சந்தலை கிர்ர்ர்ருங்க, சரி ஆதவா காலையில் சந்திப்போம்னு கூறி நான் மீள என் அறை வந்து உறக்கத்தில் ஆழ்ந்தேன்.

காலையில் தூக்கி எழுந்ததும் நான் ஆபிசுக்கு புறப்பட வேண்டியிருந்தமையால், காலைக் கடன்களை முடித்து ஆதவனுக்கும் சேர்த்து காப்பி தயாரித்துக் கொண்டு சென்று ஆதவனின் அறைக் கதவினைத் தட்டினேன், பதில் ஒன்றும் வராமலிருக்க மீண்டும் தட்டினேன் மீளவும் பதில் வராதிருக்க பூட்டியிராத அறைக் கதவினை தள்ளிக் கொண்டு உள்ளே நுளைந்தால் அந்த அதிர்ச்சி எனக்காகக் காத்திருந்தது. அதனைக் கண்டதும் நான் பயத்தில் வீலென அலற என் கையிலிருந்த காப்பி கோப்பைகள் தரையில் விழுந்து நொறுக்கின. :eek:


ஆதவனின் ரவுசு தொடரும்....

அக்னி
26-04-2011, 05:24 PM
என்னவாயிருக்கும்... :icon_hmm:

அக்னி... தப்புத்தப்பா ஏறுமாறா யோசிச்சுடாத...

ஓவியன் அடுத்தப் பதிவப் போடும் வரைக்கும் ரகஸ்யா திரிக்குப் போயிடு...

கீதம்
27-04-2011, 12:42 AM
நான்கு வயது நிறைந்த ஞாபகக் குழந்தையைத் தொட்டிலிட்டாட்டுகிறார் இன்று...

அங்கே இவர் காலை அவர் வார...

இங்கே அவர் காலை இவர் வார...

அந்தரத்தில் தொக்காமல் இருவரும் தொடர்ந்தால் சரிதான்.......

ஆதவா
27-04-2011, 05:24 AM
ஹாஹா....ஹய்யோஓ... ஹய்யோ!!!

தூக்க மப்புல ஓவியாக்கு மெஸெஜ் அனுப்பப் போயி உங்களுக்கு அனுப்பிட்டேன்... இதையேல்லாம் போயி பெரிசா எடுத்துக்கிட்டு.......நாங்கல்லாம் தூங்கினவங்களை எழுப்பி “தூங்கியாச்சா?”ன்னு கேட்கிற பரம்பரை... (ரிவிட்டு!!) எங்க கிட்டயேவா??? :lachen001:

ஆதவா
27-04-2011, 05:34 AM
என்னவாயிருக்கும்... :icon_hmm:

அக்னி... தப்புத்தப்பா ஏறுமாறா யோசிச்சுடாத...

.

ஹாஹா......
நீங்க என்ன நினைக்கிறீங்களோ... அது இல்லை....
நீங்க என்ன நினைக்காம இருக்கிறீங்களோ.... அதுவா இருக்க வாய்ப்பிருக்கு
ஆனா.... அது நீங்க நினைச்சமாதிரி இருக்க வாய்ப்பில்லை
ஒருவேளை நினைச்சமாதிரி இருந்தால், அப்படி நடந்திருக்க வாய்ப்பில்லை!! :eek::eek:

Ravee
27-04-2011, 05:47 AM
ஆதவாவை யாரவது சவுதிக்கோ இல்லை ஆப்கானிஸ்தானுக்கோ கூட்டி போங்கப்பா ... அங்க எப்படி ஜொல் கொட்டுறார் ... பார்ப்போம

ஓவியன்
27-04-2011, 05:55 AM
ஆதவாவை யாரவது சவுதிக்கோ இல்லை ஆப்கானிஸ்தானுக்கோ கூட்டி போங்கப்பா ... அங்க எப்படி ஜொல் கொட்டுறார் ... பார்ப்போம

ஆப்கான் வேணாம்ணே, சவூதிதான் சரியாக இருக்கும் ஏன்னா அந்த நல்ல விடயங்களைப் பார்க்க நாமளும் போகணுமிலே... :lachen001::lachen001: :D

Nivas.T
27-04-2011, 05:56 AM
ஆதவாவை யாரவது சவுதிக்கோ இல்லை ஆப்கானிஸ்தானுக்கோ கூட்டி போங்கப்பா ... அங்க எப்படி ஜொல் கொட்டுறார் ... பார்ப்போம

:eek::eek:

ஐயயோ!!!

சோலிய முடிச்சிடுவாங்களே

அப்புறம் ஆதவா

ஆஹா தவா, ஆகிடுவாரே :D:D

ஆதவா
27-04-2011, 06:03 AM
ஆதவாவை யாரவது சவுதிக்கோ இல்லை ஆப்கானிஸ்தானுக்கோ கூட்டி போங்கப்பா ... அங்க எப்படி ஜொல் கொட்டுறார் ... பார்ப்போம


ஆப்கான் வேணாம்ணே, சவூதிதான் சரியாக இருக்கும் ஏன்னா அந்த நல்ல விடயங்களைப் பார்க்க நாமளும் போகணுமிலே... :lachen001::lachen001: :D

இப்படித்தான் ஒரு தடவை சவூதி அரேபியாக்குப் போனப்போ அங்கே “நஸீமா”ங்கிற பொண்ணு எங்கிட்ட வந்து...........

அமரன்: வேணாம்.... சொல்லாதே..................

Ravee
27-04-2011, 09:34 AM
இப்படித்தான் ஒரு தடவை சவூதி அரேபியாக்குப் போனப்போ அங்கே “நஸீமா”ங்கிற பொண்ணு எங்கிட்ட வந்து...........

அமரன்: வேணாம்.... சொல்லாதே..................


நசீமா சொன்னது இருக்கட்டும் ....... அவங்க வாப்பா வந்து என் கிட்ட வந்து சொன்ன சேதி தெரியுமா ஆதவா ...

http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcSmgePz38IBRFTSqh_8OQsl9X-sRYtWmTK5ooGNV38Mf6GTkrmc

sarcharan
27-04-2011, 10:40 AM
அதுக்கு ஏன் பின் லேடன் படத்த போட்டு வெச்சுருக்கீங்க?

சூரியன்
27-04-2011, 10:46 AM
ஹாஹா......
நீங்க என்ன நினைக்கிறீங்களோ... அது இல்லை....
நீங்க என்ன நினைக்காம இருக்கிறீங்களோ.... அதுவா இருக்க வாய்ப்பிருக்கு
ஆனா.... அது நீங்க நினைச்சமாதிரி இருக்க வாய்ப்பில்லை
ஒருவேளை நினைச்சமாதிரி இருந்தால், அப்படி நடந்திருக்க வாய்ப்பில்லை!! :eek::eek:

இதுக்கு நீங்க சொல்லாமயே இருக்கலாம்.

நாஞ்சில் த.க.ஜெய்
18-07-2011, 04:23 PM
ஓவியன்]"]மீண்டும் தட்டினேன் மீளவும் பதில் வராதிருக்க பூட்டியிராத அறைக் கதவினை தள்ளிக் கொண்டு உள்ளே நுளைந்தால் அந்த அதிர்ச்சி எனக்காகக் காத்திருந்தது. அதனைக் கண்டதும் நான் பயத்தில் வீலென அலற என் கையிலிருந்த காப்பி கோப்பைகள் தரையில் விழுந்து நொறுக்கின. :eek:

[/COLOR]வீலென்று அலறி காபி கோப்பினை தவறவிட்டு மயங்கி விழுந்த ஓவியன் அவர்கள் இன்னும் மயக்கம் தெளிந்து எழும்ப வில்லையே ? ...

sakthim
19-07-2011, 04:12 AM
படிக்க நல்ல சுவாரஸ்யம்.

அப்படி என்ன அதிர்சினு தெரிங்க்க ரொம்ப ஆர்வமா இருக்கு.

4ம் பாகத்தை விரவில் பதியுங்கள்.