PDA

View Full Version : குப்பைத் தொட்டியிலில் சிசு.

சாராகுமார்
08-09-2007, 05:31 PM
ஒன்றாக வேலை
செய்தார்கள்...
ஒருவர் மனதை ஒருவர்
கொள்ளையடித்தார்கள்...
அவனிடம் அவளை
கொடுத்தாள்...
அவனும் கொடுத்தான்
வயிற்றில்...
கட்ட சொன்னாள்
கழத்தில்...
கழவ சொன்னான்
வயிற்றில்...
மன்றாடினாள்
மங்கை...
மறுத்தான்
மாங்கல்யத்தை...
கைவிரித்தார்கள்
மருத்துவர்கள்...
வெறுக்கப்பட்டாள்;மறுதலிக்கபட்டாள்;
கஷ்டப்பட்டாள்;பெற்றாள்;
இட்டாள்

குப்பைத் தொட்டியிலில்
குழந்தையை.

நண்பர்களே,தவறை சுட்டிகாட்டவும்.நன்றி.

மனோஜ்
08-09-2007, 05:55 PM
திருமணம்
மணம் வீச
முன் மனம்
மாணம் வீச − பெண்ணின் மனம் அருமை கவிதை கருத்து கொடுமை

சாராகுமார்
08-09-2007, 06:13 PM
திருமணம்
மணம் வீச
முன் மனம்
மாணம் வீச − பெண்ணின் மனம் அருமை கவிதை கருத்து கொடுமை

நன்றி மனோஜ் அவர்களே.

ஓவியன்
08-09-2007, 06:25 PM
அன்பான சாராகுமார், ஒருவர் மனதை ஒருவர் கொள்ளையடித்திருந்தால் இப்படி நடந்திருக்காது, அவன் அந்த பேதையின் மனதையல்ல உடலைத் தான் கொள்ளையடித்திருக்கின்றான்........

இந்தக் கொள்ளைக்கு நம் சட்டங்களிலே சரியான தண்டனைகள் இல்லையென்பது மிகக் கொடுமையான ஒரு விடயமே.........

தாய் தகப்பன் செய்த தவறுக்காக பூமியிலே தன் பிஞ்சுக் காலை ஊன்ற முன்னரே வயிற்றுக்குள்ளேயே அந்த சின்னஞ் சிறு ஜீவனை கழுவி அழிக்க முயல இவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது.........
தாயின் அரவணைப்பிலே சுருண்டிருந்து தாய்ப்பாலை அருந்தி தூங்கவேண்டிய அந்த ஜீவனை தொட்டிலிலே தூக்கி வீசுவது தான் என்ன நியாயம்..........?

பின் அந்த குழந்த வளர்ந்து பெரியவனாகி சமூகத்திலே எத்தனை இழி மொழிகளைக் கேட்கப் போகிறது என்றாவது சிந்தித்தார்களா அதன் பெற்றவர்கள், சிந்தித்து தெளிந்திருந்தால் இப்படி செயற்பட்டிருப்பார்களா........?

இனிவரும் காலங்களிலாவது இந்த இழி நிலமை மாறவேண்டுமென பிரார்த்திப்போம்.

சாராகுமார்
08-09-2007, 06:31 PM

ஒவியன் அவர்களே நன்றி.ஆனால் இந்த அவல நிலை மாற வேண்டுமென்றால் பெண்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

அக்னி
10-09-2007, 02:24 PM
ஒன்றையொன்று
கொள்ளை கொண்ட
குருட்டு மனங்கள்...
தூக்கி எறிந்தன,
விலை மதிப்பில்லா,
புது உயிரை...

பாராட்டுக்கள் சாராகுமார்...

இலக்கியன்
10-09-2007, 03:06 PM
கவிதை சிறப்பான கருக்கொண்டுள்ளது வாழ்த்துக்கள், ஓவியன் பின்னூட்டமும் அருமை

சாராகுமார்
10-09-2007, 03:24 PM
ஒன்றையொன்று
கொள்ளை கொண்ட
குருட்டு மனங்கள்...
தூக்கி எறிந்தன,
விலை மதிப்பில்லா,
புது உயிரை...

பாராட்டுக்கள் சாராகுமார்...

நன்றி நன்றி.உங்கள் கவிதை அருமை.

அறிஞர்
10-09-2007, 03:28 PM
எளிய வரிகளில் அருமையான கவிதை... சிறு சிறு எழுத்துப்பிழைகள்.....

ஆரம்பம் - மனம் கொள்ளையடிக்கப்படுகிறது
முடிவு - குழந்தை குப்பைத்தொட்டியில் வீசப்படுகிறது...

சாராகுமார்
10-09-2007, 03:28 PM
கவிதை சிறப்பான கருக்கொண்டுள்ளது வாழ்த்துக்கள், ஓவியன் பின்னூட்டமும் அருமை

நன்றி இலக்கியன் அவர்களே.

சாராகுமார்
10-09-2007, 03:31 PM
எளிய வரிகளில் அருமையான கவிதை... சிறு சிறு எழுத்துப்பிழைகள்.....

ஆரம்பம் - மனம் கொள்ளையடிக்கப்படுகிறது
முடிவு - குழந்தை குப்பைத்தொட்டியில் வீசப்படுகிறது...

நன்றி அறிஞர் அவர்களே.உங்கள் பின்னூட்டம் மகிழ்வு தருகிறது.