PDA

View Full Version : நாணயம்!!!



aren
08-09-2007, 03:28 PM
அக்னி அவர்கள் கவிச்சமரில் எழுதிய கவிதையைப் படித்ததில் பிறந்தது இந்த வரிகள்:

நாணயம் இன்று
ஒரு செல்லாக்காசு!!!

நாணயமாக இருப்பவன் இன்று
பிழைக்கத்தெரியாதவன்!!!

நாணயமாக இருப்பவன் இன்று
பைத்தியக்காரன்!!!

நாணயமாக இருப்பவன் இன்று
அடிக்கடி வேலைமாற்றம் செய்யப்படுகிறான்!!!!

நாணயமாக இருப்பவன் இன்று
பையன் படிப்பிற்கு மற்றவர்களிடம்
கடன் கேட்கிறான்!!!!

நாணயமாக இருப்பவன் இன்று
தன் மகள் கல்யாணத்திற்கு
இருக்கும் வீட்டை அடகு வைப்பவன்!!!

நாணயமாக இருப்பவன் இன்று
பேசுவதற்கு ஆள் இல்லாமல்
தனிமையில் இருப்பவன்!!!

நாணயமாக இருப்பவன் இன்று
மனைவின் எதிரியாகிறான்
பல வீடுகளில்!!!

நாணயமாக இருப்பவன் இன்று
அரசியல்வாதியின் பார்வையில்
பிறந்ததே வீண்!!!

நாணயமாக இருப்பவன் இன்று
அனைவரின் எதிரி!!!

நாணயமாக இருப்பவன் இன்று
ஒரு அப்பாவி!!!

நாணயமாக இருப்பவன் இன்று
ஐயோ பாவம்!!!

பூமகள்
08-09-2007, 03:51 PM
நாணயமாய் இருப்பது எவ்வளவு கடினம் என்று அழகாகச் சொன்னீர்கள். ஆனாலும் நாணயமாய் இருத்தல் தான் மனிதனின் உயர்ந்த குணம். அவர்களை உயரத்தில் நிறுத்தும்.

பலரது பார்வையில் நாணயமானவர்களின் நிலை நிதர்சனமாய் சொல்லியிருந்தீர்கள் ஆரென் அண்ணா. பாராட்டுக்கள்.:082502now_prv:

கவிதைக் கரு அருமை. :smartass:
வடித்த விதமும் அழகு. உங்கள் கவிதைகள் மெருகேறிக்
கொண்டே செல்கிறது நாளுக்கு நாள்..!!:icon_blush:

நாணயமாக இருப்பவன் இன்று
பையன் படிப்பிற்கு மற்றவர்களிடம்
கடன் கேட்கிறான்!!!!

நாணயமாக இருப்பவன் இன்று
தன் மகள் கல்யாணத்திற்கு
இருக்கும் வீட்டை அடகு வைப்பவன்!!!

அழகு வரிகள். கவிதைக்கு பொய் அழகு என்பது பொய்யாக்கும் உங்களின் கவிகள். நிதர்சனமாய் பார்த்த விசயம் இவை.

என் கண்களை ஏனோ பனிக்கச் செய்து விட்டது இந்த நாணயமானவரின் நிலை.:medium-smiley-100:
வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்..!!:4_1_8::aktion033:

aren
09-09-2007, 12:07 AM
நன்றி பூமகள். இந்த வரிகளின் முதல் எழுத்து அக்னி அவர்களிடமிருந்து கிடைத்தது.

உங்களுக்கு பிடித்திருந்தாலே அது எனக்குக் கிடைத்த வெற்றி.

நன்றி வணக்கம்
ஆரென்

ஷீ-நிசி
09-09-2007, 01:04 AM
நாணயமாக இருப்பவனின் நிலை... இன்றைக்கு எதற்கும் பயன்படாத செல்லாக்காசாய் தான்....

அதை தெளிவாக சொல்லியுள்ளீர்கள்... தொடருங்கள் ஆரென்...

jpl
09-09-2007, 02:41 AM
தற்காலத்திய நிதரிசனம் கண் முன் படமாக விரிக்கின்றது..
அதிலுள்ள உண்மைகள் முகத்தில் அறைகின்றது..

நாணயமாக இருப்பவன் இன்று
ஐயோ பாவம்!!!
முற்றிலும் உண்மை.வாழ்வின் பல சந்தர்ப்பங்களில் நாம் இதை
அனுபவித்திருப்போம்...

இளசு
09-09-2007, 11:47 AM
பிழை-செய்யத் தெரியாதவனின்
புதிய நாகரீகப் பெயர்
பிழைக்கத் தெரியாதவன்!

உள்ளமைதி, சுயமரியாதை, கவிதை எழுத -
மூன்று பயன்கள் மட்டும் இன்னும் மிச்சமாய்!

பாராட்டுகள் அன்பின் ஆரென்!

நாடாளவிய மாற்றம் கலாம் அவர்கள் எண்ணப்படி வந்தால்
இக்கவிதை பொய்யாகலாம் ஒரு நாள்!

சிவா.ஜி
09-09-2007, 11:54 AM
நாணயமாக இருப்பவன் ஆரென் அவர்களின் பட்டியல்படி எத்தனையோவிதமாக அறியப்பட்டாலும் எல்லாவற்றுக்கும் மேலாக"மனிதனாக"இருக்கிறான்.
மற்ற நாணயம் இதயத்தின் மேலுள்ள பையைத்தான் நிறைக்கும்...
இந்த நாணயம் இதயத்தை நிறைக்கும்.
அருமையான கருவுடன் அழகிய கவிதை. பாராட்டுக்கள் ஆரென்.

அக்னி
10-09-2007, 09:53 PM
நாணயம்...
நாம் இறந்தபின்னரும்,
எம்மோடு ஒட்டிக்கொண்டு,
கூடவரும்...

நாணயம்... நயம்...
பாராட்டுக்கள் ஆரென் அவர்களே...

ஓவியன்
18-09-2007, 05:11 PM
நாணயம் கூட இன்று நாணயத்தின் பின் ஓடுவதால் எழுந்த கவிதை....

பாராட்டுக்கள் அண்ணா!

அமரன்
18-09-2007, 05:26 PM
அருகி வரும் ஒன்றைப் பற்றி அருமையாகச் சொன்ன கவிதை...பல(ப்)பக்கம் கொண்ட கவிதை...பாராட்டுக்கள்.

ஆதவா
22-09-2007, 09:13 AM
இன்றைய நிலை... நாணயத்தைத் தொலைத்து நிற்கும் மனிதர்களின் கூட்டத்தை அவர்களின் நிலையிலிருந்தே சொல்லும் கருத்துக் கவிதை..

ஆனாலும்,

தொழில் செய்வாரிடம், நம்பிக்கை வைத்தாரிடம், தன்னை வளர்த்த அன்னை/தந்தையிரிடம், நண்பர்களிடம், தன் மனைவியிடம் நாணயம் இல்லாமல் நா நயமாக இருந்தால் அவர்களைவிட கேவலமாக இறப்பவர்கள் வேறு எவருமில்லை.

நல்ல கவிதை அண்ணா..

lolluvathiyar
23-09-2007, 09:29 AM
கவிதை வார்த்தைகள் அருமை, ஏக்கத்தின் வரிகள்
எத்தனை தோல்விகள் வந்தாலும்
நானையம் நமது மனதுக்கு நிரந்திர இனிமை தரும் செயல்
மற்றவர்களின் பொயான புகழுரைகளும் பணம் என்ற பெயரில் வரும் காதிகங்களும் நிரந்திரமற்றவை.

பழைய வேதம் ஆனால் நிரந்திர உன்மை