PDA

View Full Version : விபசாரம் செய்த 2 பெண்களின் தலை துண்டிப்பு



mgandhi
07-09-2007, 06:25 PM
விபசாரம் செய்த 2 பெண்களின் தலை துண்டிப்பு : பாகிஸ்தானில் பயங்கரம்
பெஷாவர் : பாகிஸ்தானில் வடமேற்கு மாகாணத்தில் விபசாரத்தில் ஈடுபட்ட இரண்டு பெண்களை தலிபான் பயங்கரவாதிகள் கடத்தி சென்று தலையை துண்டித்தனர். பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தானை ஒட்டிய வடமேற்கு எல்லை மாகாணத்தில் தலிபான் ஆதரவு தீவிரவாதிகள் ஆதிக்கம் உள்ளது. இஸ்லாமிய சட்டத்தை பயங்கரவாதிகள் கடுமையாக பின்பற்றி வருகின்றனர். அங்குள்ள பன்னு என்ற நகரில் 2 பெண்கள் உள்ளூர் அதிகாரிகள் ஆதரவுடன் விபசார தொழில் நடத்தி வந்தனர். இதனால் கோபமடைந்த பயங்கரவாதிகள் இரு பெண்களையும் கடத்தி சென்று தலையை துண்டித்து கொலை செய்தனர்.
நன்றி தினமலர்

அக்னி
07-09-2007, 06:28 PM
என்ன சொல்வதென்றே புரியவில்லை...
நல்ல விடயம் என்பதா... தீயது என்பதா..?
ஆனால்,
உயிர்களின் மதிப்பு குறைந்து செல்வது மட்டும் உண்மை...

தகவலுக்கு நன்றி!

மனோஜ்
07-09-2007, 06:32 PM
உயிருக்கு மதிப்பில்லை
உருப்பிட வழியில்லை

அக்னி
07-09-2007, 06:33 PM
உயிருக்கு மதிப்பில்லை
உருப்பிட வழியில்லை

குறிப்பிட சேதிகள் மட்டும் தாராளமாக...

ஓவியன்
07-09-2007, 07:27 PM
இளசு அண்ணா எனது ஒரு பதிவுக்கு பின்னூட்டமிடுகையிலே கூறினார், மரணதண்டனைகளிலே திருந்துவதற்கு வாய்ப்பு மறுக்கப் படுகிறதே என்று..........

இங்கே தாங்கள் குற்றமற்றவர்களென நிரூபிக்கும் வாய்ப்புமல்லவா மறுக்கப்பட்டிருக்கிறது, உண்மையிலே இவை கொடுரமான மனித நேய படுகொலைகளே...........

lolluvathiyar
08-09-2007, 08:00 AM
மரனதன்டனை தருவது தவறில்லை. கொடுருமான குற்றவாளிகளுக்கு மரன தன்டனை ஒன்று தான் தீர்வு.
ஆனால் விபச்சாரம் ஒழுக்ககேடான விசயமாக இருக்கலாம் ஆனால் கொடூர குற்றமில்லை. அதுவும் மரன தன்டனை தரும் அளவுக்கு குற்றுமில்லை.
ஆனால் தலிபன் தீவரவாதிகள் அங்கீகாரம் இல்லாத அரசு. அவர்கள் விசாரிப்பது, மனிதாபிமானம் எல்லாம் இல்லாதவர்கள். அவர்கள் ஆட்சியில் இருந்த போது பர்தா அனி ந்தும் பாதங்கால் தெரிந்ததால் நடு ரோட்டில் வைத்து பெண்களை சாட்டையில் அடித்து துன்புறுத்தியவர்கள். உருவ வழிபாடு கூடாது என்று பாமியன் என்ற ஏரியாவில் மலை உயர புத்தர் சிலைகளை உடைத்தவர்கள். அமெரிக்கா உருவாக்கிய அவர்களிடம் எந்தவித நியாமமும் எதிர்பார்க்க முடியாது