PDA

View Full Version : இறைவனின் இல்லம்



jpl
07-09-2007, 06:02 PM
இறைவனின் இல்லம்[/B
நல்வரவு கூறும் அழகான இலைகள்
சிரிக்கும் சிறுபுல்களின் மென்பரப்பு
மனங்கவர்ந்த பாடல்கள் பாடும்
பெயரறியா புள்ளினங்கள்,

காலை நனைக்கும் சிற்றலையுடன்
ஓடிவரும் சிற்றோடை
உயர்ந்த மரங்களில் மேல் திரையிடும்
இருண்ட கார்மேகம்
காற்றிசைக்கும் திசையில்
அ(இ)சையும் மலர்கள்

அடிவான ஒளிகீற்றுகள் தழுவலுடன்
இவை அனைத்தும் அழைக்கின்றன
இறைவனின் இல்லத்திற்கு.

ஆங்கிலக் கவிதை.
[B]House of God
Glorious leaves say welcome,
napping tiny grass smiling,
striking songs are singing
unknown name birds.

A brook comes with ripples
wetting palms,
overcast wimple
of the top up tall trees,
to windward fluttering flowers ,
streamer is embracing all of them.

All of them calling to house of god.

அக்னி
07-09-2007, 06:19 PM
திசைகள் யாவும்,
துகள்கள் யாவும்,
இறைவன் இல்லத்திற்கு அழைக்கும் கவிதை நன்று...

பாராட்டுக்கள் jpl...

பி.கு:
ஆங்கிலத்தில் எழுதியதை தமிழாக்கம் செய்தீர்களா அல்லது, தமிழில் எழுதி ஆங்கிலத்தில் மாற்றம் செய்தீர்களா...?
எப்படியிருப்பினும் ரசிப்பைத் தருகின்றது...

இளசு
07-09-2007, 08:10 PM
என்ன ரம்மியம்.. என்ன உள அமைதி..

ஜெயபுஷ்பலதா சுட்டும் அந்த இடத்தை
மனக்கண் காண − மனமே இனிக்கிறதே!

பெயரறியா புள்ளினங்கள்..
சிற்றலையுடன் நீரோடை...

தான் என்ற கர்வமற்ற நிலை..
எதிர்பார்ப்பில்லா இயல்பு நிலை..

இறைவனின் இல்லமாய் இவை
இருப்பதில் வியப்பென்ன..

சாத்தான் வருகைக்கு முன்னர் ஈடனின் தோட்டம்
இப்படித்தான் இருந்திருக்கவேண்டும்..!

வாழ்த்துகள் ஜேபிஎல் அவர்களே!

அறிஞர்
07-09-2007, 08:19 PM
அமைதியான... இடம்..
இயற்கையழகு நிறைந்த இடமே....
இறைவனின் இல்லம்....

நன்றி நண்பரே...

ஓவியன்
07-09-2007, 08:23 PM
என்னதான் பணம் கொழிக்கும் கட்டடக் காடுகளிலே வாழ்ந்தாலும் உங்கள் கவி வரிகள் சொல்லும் இறைவனின் இல்லத்திற்கு ஈடாகுமா........?
ஆனால், என்ன கொடுமையென்றால் இவ்வகையான இல்லங்கள் இன்னும் சில காலங்களின் பின்னர் கவிதைகளிலும் ஓவியங்களிலும் மாத்திரமே மீதமாக இருக்கப் போகின்றன........!

இரு கவிதைகளும் அழகு+அருமை சகோதரி லதா அவர்களே........

எனது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்...........!

jpl
09-09-2007, 02:17 AM
நன்றி அகினி....
ஆங்கிலத்தில் எழுதிய பின்னர் தமிழில்.
என் தோழி ஒருவர் ஆங்கிலக் கவி.
புலியைப் பார்த்து பூனை சூடு போட்ட வ(எ)ண்ணமிது.

jpl
09-09-2007, 02:18 AM
கவித் திறனாய்வினை இளசுவிடமிருந்தே கற்றுக் கொள்ளல் வேண்டும்...
நன்றி இளசு.

jpl
09-09-2007, 02:19 AM
அறிஞருக்கு நன்றி..

jpl
09-09-2007, 02:23 AM
நன்றி ஓவியன்..
உண்மைதான் ஓவியன்...
இயற்கை இனி வருங்காலங்களில் தாங்கள் குறிப்பிடப்பட்ட விதமாக*
மாறும், அபாயக்கட்டத்திற்கு நாம் வந்து விட்டோம் என்றே தோன்றுகிறது.

இளசு
09-09-2007, 11:57 AM
கவித் திறனாய்வினை இளசுவிடமிருந்தே கற்றுக் கொள்ளல் வேண்டும்...
நன்றி இளசு.

அன்பு ஜெபிஎல்,

தங்கமா - உரைகல்லா?
ஒளியா - பிரதிபலிப்பா?

மூலவருக்கே முழு மரியாதை!!

ஜெயாஸ்தா
09-09-2007, 03:44 PM
இறைவனின் படைப்புகளில் எவ்வளவு அற்புதங்கள்உள்ளன. கவிதையைப் படித்ததும் படைத்தவனுக்கு நன்றி சொல்லத் தோன்றுகிறது.

பிச்சி
10-09-2007, 08:22 AM
உங்கள் தமிழ் கவிதையும், ஆங்கில கவிதையும் சூப்பர்.

அன்பு
பிச்சி

jpl
06-05-2013, 04:45 PM
இறைவனின் படைப்புகளில் எவ்வளவு அற்புதங்கள்உள்ளன. கவிதையைப் படித்ததும் படைத்தவனுக்கு நன்றி சொல்லத் தோன்றுகிறது.

நன்றி ஜெயாஸ்தா..


உங்கள் தமிழ் கவிதையும், ஆங்கில கவிதையும் சூப்பர்.

அன்பு
பிச்சி

நன்றி பிச்சி.

கீதம்
08-05-2013, 07:02 AM
அமைதியே ஆண்டவன் உறைவிடம் என்று மனவமைதிக்கு வழிகாட்டும் அழகான கவிதை.

காட்சிகளைக் கண்முன் நிறுத்தி கற்பனையில் லயிக்கவைக்கும் வரிகள்.

ஆங்கிலக்கவிதையும் ஆனந்த ரசனைத்தூவல். பாராட்டுகள் லதா. தொடர்ந்து எழுதுங்கள்.

jpl
08-05-2013, 12:57 PM
ரசனையான பாராட்டுக்களுக்கு நன்றி கீதம்..