PDA

View Full Version : கல்லறையில்

aren
07-09-2007, 05:07 PM
கல்லறையில்

தீயதை அழிக்க
தீயதை செய்தவன்
இங்கே உறங்குறான்!!!!

அரசியல்வாதியைக் கொன்று
தூக்குதண்டனைப் பெற்ற
கைதி!!!!

அக்னி
07-09-2007, 05:15 PM
அரசியல்வாதியை...
அரசில் இயலாவாதியாக்க
போராடியிருந்தால்...
இறப்பும் தவிர்க்கப்பட்டிருக்கும்,
இன்னும்,
பலரும் தடுக்கப்பட்டிருப்பார்கள்...

பாராட்டுக்கள் ஆரென்...

இளசு
07-09-2007, 08:27 PM
கொஞ்சம் தீவிரமான முடிவு!
தீர்த்துக்கட்ட வேண்டியது − பிரசினைகளை..

ஆட்களை என்றால்
அடுத்தடுத்தும் வருவார்களே..

தேவை ஒரு நாடளாவிய மனமாற்றம்?

வருமா? வரும் என நம்புவோம்..

நம்பிக்கைதானே வாழ்க்கை!

நன்றி அன்பின் ஆரென்!

ஓவியன்
07-09-2007, 08:40 PM
ஒரு அரசியல் வாதி செய்யும் தீமைகள் எத்தனை பேர் வாழ்க்கையைப் பாதிக்கின்றன.........
இனியாவது இதனை உணர வேண்டியவர்கள் உணர்வார்களா.........?

jpl
08-09-2007, 01:41 AM
நண்பர் ஆரெனின் கவிக்கரு ஒரு திரைப்படத்திற்கான மையக் கருவாக!!!
உள்ளார்ந்த நவீன கீதையா?
பலவிதமான சிந்தனை எழுச்சிகளைத் தோற்றுவிக்கும் சிந்தனைச் சிற்பமாய்
ஆரெனின் கவிச் சிதறல்.

சிவா.ஜி
08-09-2007, 04:32 AM
தப்பான அரசியல்வாதி அழிக்கப்படவேண்டியவனே....ஆனால் இளசு சொன்னதைப்போல அந்த உடலையல்ல...அந்த கறைபடிந்த உள்ளத்தை அழிக்கவேண்டும்.அமிலத்தின் வீரியத்தைக் குறைக்க அதனோடு தண்ணீர் அதிக அளவில் சேர்க்கப்படுவதைப்போல..அரசியலில் கலந்துவிட்ட அழுக்கை நீர்த்துப்போக வைக்க நல்ல உள்ளங்கள் அந்த அழுக்கில் இறங்கவேண்டும்.அப்போதுதான் இதற்கு ஒரு நிரந்தர தீர்வு கிடைக்கும்.
சிந்திக்கவைத்த கவிதை தந்த ஆரெனுக்கு வாழ்த்துக்கள்.

aren
08-09-2007, 05:10 AM
அரசியல்வாதியை...
அரசில் இயலாவாதியாக்க
போராடியிருந்தால்...
இறப்பும் தவிர்க்கப்பட்டிருக்கும்,
இன்னும்,
பலரும் தடுக்கப்பட்டிருப்பார்கள்...

பாராட்டுக்கள் ஆரென்...

நன்றி அக்னி. நீங்கள் சொல்வதுபோல் செய்திருந்தால் இந்த அரசியல்வாதிகள் அடுத்த தேர்ததில் இன்னொரு கூட்டணியை உருவாக்கி மீண்டும் ஆட்சியில் அமர்ந்துவிடுவார்களே. என்ன செய்வது.

நன்றி வணக்கம்
ஆரென்

aren
08-09-2007, 05:12 AM
கொஞ்சம் தீவிரமான முடிவு!
தீர்த்துக்கட்ட வேண்டியது − பிரசினைகளை..

ஆட்களை என்றால்
அடுத்தடுத்தும் வருவார்களே..

தேவை ஒரு நாடளாவிய மனமாற்றம்?

வருமா? வரும் என நம்புவோம்..

நம்பிக்கைதானே வாழ்க்கை!

நன்றி அன்பின் ஆரென்!

நன்றி இளசு அவர்களே.

நீங்கள் சொல்வது சரிதான். இது சரியான தீர்வு கிடையாது. ஆனால் இப்படி ஒரு சிலது நடந்தாலே அடுத்தவன் தப்பு செய்வதற்கு கொஞ்சம் பயப்பட்டு மக்களுக்கு நல்லது செய்ய நினைப்பார்கள். அப்படி ஒரிருவர் செய்தாலே அது மக்களுக்கு கிடைத்த வெற்றியாகாதா என்ற நம்பிக்கை.

நன்றி வணக்கம்
ஆரென்

aren
08-09-2007, 05:13 AM
ஒரு அரசியல் வாதி செய்யும் தீமைகள் எத்தனை பேர் வாழ்க்கையைப் பாதிக்கின்றன.........
இனியாவது இதனை உணர வேண்டியவர்கள் உணர்வார்களா.........?

நன்றி ஓவியன். ஒருவன் அரசியல்வாதியையே கொலை செய்யத் துணிந்துவிட்டானானால் அவனுக்கு எந்த அளவிற்கு துன்பம் வந்திருக்கும். தான் இறந்தாலும் பரவாயில்லை அந்த அரசியல்வாதியைப் போட்டுத்தள்ளவேண்டும் என்று நினைத்திருக்கிறான்.

நன்றி வணக்கம்
ஆரென்

aren
08-09-2007, 05:14 AM
நண்பர் ஆரெனின் கவிக்கரு ஒரு திரைப்படத்திற்கான மையக் கருவாக!!!
உள்ளார்ந்த நவீன கீதையா?
பலவிதமான சிந்தனை எழுச்சிகளைத் தோற்றுவிக்கும் சிந்தனைச் சிற்பமாய்
ஆரெனின் கவிச் சிதறல்.

நன்றி ஜேபிஎல். சீக்கிரமே தயாரிப்பாளரை அனுப்புங்கள், அக்ரீமெண்ட் போட நான் தயார்.

நன்றி வணக்கம்
ஆரென்

aren
08-09-2007, 05:16 AM
தப்பான அரசியல்வாதி அழிக்கப்படவேண்டியவனே....ஆனால் இளசு சொன்னதைப்போல அந்த உடலையல்ல...அந்த கறைபடிந்த உள்ளத்தை அழிக்கவேண்டும்.அமிலத்தின் வீரியத்தைக் குறைக்க அதனோடு தண்ணீர் அதிக அளவில் சேர்க்கப்படுவதைப்போல..அரசியலில் கலந்துவிட்ட அழுக்கை நீர்த்துப்போக வைக்க நல்ல உள்ளங்கள் அந்த அழுக்கில் இறங்கவேண்டும்.அப்போதுதான் இதற்கு ஒரு நிரந்தர தீர்வு கிடைக்கும்.
சிந்திக்கவைத்த கவிதை தந்த ஆரெனுக்கு வாழ்த்துக்கள்.

நன்றி சிவாஜி. நம் இந்தியாவில் பலர் அரசியல்வாதிகளை திருத்த முயற்சித்து தோற்றுப்போயிருக்கிறார்கள். இது ஒரு சாக்கடையாகிவிட்டது, அதில் எந்த அளவுதான் தண்ணீர் ஊற்றுவது.

நன்றி வணக்கம்
ஆரென்

அக்னி
08-09-2007, 12:49 PM
நன்றி அக்னி. நீங்கள் சொல்வதுபோல் செய்திருந்தால் இந்த அரசியல்வாதிகள் அடுத்த தேர்ததில் இன்னொரு கூட்டணியை உருவாக்கி மீண்டும் ஆட்சியில் அமர்ந்துவிடுவார்களே. என்ன செய்வது.

நன்றி வணக்கம்
ஆரென்
அரசியலும், அரசியல்வாதிகளும் போற்றப்படவேண்டிய புனிதநிலை...
ஆனால், இன்றைய காலகட்டத்தில் இழிநிலைக்குப் போய்விட்டமை வருத்தத்திற்குரியதே...
மக்கள் மாற்றம் வருமென எதிர்பார்த்து எதிர்பார்த்து, ஏமாற்றமடைவதே வழமையாகிவிட்டது...
"நீ உன்னைத் திருத்திக்கொள்.., சமூகம் தானாகவே திருந்திவிடும்..."
என்பார்கள்...
இதற்கிணங்க, தாங்களாக ஒவ்வொரு அரசியல்வாதிகளும் உணர்ந்தால் மட்டுமே,
இந்த இழிநிலை மாறி புனித சேவையாகும் அரசியல்...

அக்னி
08-09-2007, 12:50 PM
நன்றி ஜேபிஎல். சீக்கிரமே தயாரிப்பாளரை அனுப்புங்கள், அக்ரீமெண்ட் போட நான் தயார்.

நன்றி வணக்கம்
ஆரென்

எதற்கு நடிக்கவா? இயக்கவா?
பலகோடி தமிழர்களின் வேதனைக்கு காரணமாகிவிடாதீர்கள்....
அக்னியின் அன்பான உபதேசம்...

aren
08-09-2007, 03:10 PM
எதற்கு நடிக்கவா? இயக்கவா?
பலகோடி தமிழர்களின் வேதனைக்கு காரணமாகிவிடாதீர்கள்....
அக்னியின் அன்பான உபதேசம்...

அதுக்குத்தான் மன்மதன் இருக்கிறாரே. நாம் வேறு போட்டிக்குப் போகனுமா?

ஷீ-நிசி
08-09-2007, 05:34 PM
செமத்தியான கரு ஆரென்....
நல்லா சிந்திக்கறீங்கப்போல....

இன்னும் செதுக்குங்கள்... வாழ்த்துக்கள்!

இலக்கியன்
10-09-2007, 03:03 PM
அரசியல்வாதிகளை சாடும் உங்கள் வரிகள் நியம் வாழ்த்துக்கள்

பென்ஸ்
10-09-2007, 03:10 PM
ஆரெனின் நாயகனின் தற்காலிக முடிவு
இளசுவின் நல்ல நிரந்தர முடிவு...

"இங்கே உறங்குகிறான்" என்பது சரியே... அவனது குறிக்கோள் முடிந்து நிம்மதியாகிவிட்டான்...
உறக்கம் இழந்ததோ இரு குடும்பம் அல்லவா...

முள்ளை முள்ளால்
எடுக்க நினைத்தேன்
காலில் இரண்டு முள்....
(எங்கோ வாசித்த நியாபகம்)...