PDA

View Full Version : மௌனம்....!!



பூமகள்
07-09-2007, 12:12 PM
http://img37.picoodle.com/img/img37/9/9/7/poomagal/f_womanalonebm_dc4c428.jpg


நிசப்தத்தில்
சப்தமாய் உன்
நினைவுகள்..

மௌனமே மொழியாக்கி
விட்டிருந்தேன்
அன்று....
அமைதிப் பட்டம்..!!

சத்தமின்றி
சண்டையிடும் என்னுள்
இருக்கும் உன்
உணர்வுகளின் மிச்சங்கள்....

மௌனமே தண்டனையாய்..
மெல்ல சாகடிக்கும்
உனக்கான
நினைவுகள்...
நிசப்த யுத்தம்
சத்தத்திற்காய்
சத்தமாய்... என்னுள்..

சிக்கித் தவித்து
விம்மும் மனத்துடன்
மௌனத் தவிர்ப்புபோராட்டம்
இன்று..
வாயாடிப் பட்டம்...!!

ஓவியன்
07-09-2007, 12:40 PM
அன்று....
அமைதிப் பட்டம்..!!
......
......
இன்று..
வாயாடிப் பட்டம்...!!


உண்மைதான் பூமகள்!
பேசினால், பேசாதே என்பார்கள், பேசாவிட்டால் பேசு என்பார்கள்........
ஆனால் சத்தமாக, சன்னமாக போராடுவதிலும் மெளனமாக போராடுவதிற்கு கொஞ்சம் வலிமை அதிகம்..........
காதலிலே மொளனத்தின் பிரயோகமே அலாதி தானே........
அந்த மெளனத்தின் அர்த்தங்களுக்கு வார்த்தைகளே தேட இயலாது.....

ஆனால் மெளனத்திற்கு எப்பவுமே ஒரு எல்லையுண்டு எல்லை மீறப் படுகையில் அது விம்மி வெடிக்கும் உங்கள் கவிதைக் கருவைப் போலவே.........


சத்தமின்றி
சண்டையிடும் என்னுள்
இருக்கும் உன்
உணர்வுகளின் மிச்சங்கள்....


நிரம்பவே இரசித்த வரிகளிவை..........
பாராட்டுக்கள் பூமகள்!.

விடுப்பிலே இருந்த நீங்கள், மீள மன்றாம் வந்தவுடன் கவிதையுடன் கலக்க வந்தமை மெத்த மகிழ்ச்சி - தொடர்ந்து கலக்குங்க சகோதரி!.

ஆதவா
07-09-2007, 01:02 PM
நிசப்தத்தில்
சப்தமாய் உன்
நினைவுகள்..

மௌனமே மொழியாக்கி
விட்டிருந்தேன்
அன்று....
அமைதிப் பட்டம்..!!

சத்தமின்றி
சண்டையிடும் என்னுள்
இருக்கும் உன்
உணர்வுகளின் மிச்சங்கள்....

மௌனமே தண்டனையாய்..
மெல்ல சாகடிக்கும்
உனக்கான
நினைவுகள்...
நிசப்த யுத்தம்
சத்தத்திற்காய்
சத்தமாய்... என்னுள்..

சிக்கித் தவித்து
விம்மும் மனத்துடன்
மௌனத் தவிர்ப்புபோராட்டம்
இன்று..
வாயாடிப் பட்டம்...!!



மெளனமும் ஒரு மொழி என்று சொல்வார்கள். அதிலும் பெண்களின் மெளனம் பலவித அர்த்தம் அடங்கிய மொழியாம்.. அவர்களின் நடவடிக்கைகளால் பட்டங்கள் வழங்கப்படுவதுண்டு.. ஓவியன் சொல்லுவதைப் போல, பேசாமலிருந்தால் அது குற்றம், பேசினால் அது மாபெரும் குற்றம்.. என்னதான் செய்வது?

மெளன தவிர்ப்பால் விளைவது வார்த்தைப் பிரசவங்கள். அது மொழிப்பிறலல்..

நன்று கவிதை.... இ-பணம் உங்களுக்கு வந்து சேரும்...(சரி பாருங்க.)

பூமகள்
07-09-2007, 07:48 PM
மிக்க நன்றிகள் ஓவியன் அண்ணா.
நான் ஊரிலிருந்து வரும் போது சில மணித்துளிகளில் பேருந்தில் தோன்றிய கன்னிக் கவிதை இது.
இந்த அளவு உங்களுக்கு பிடித்தது கண்டு மிக்க மகிழ்ச்சி.
நன்றிகள் அன்பு அண்ணா.

அக்னி
07-09-2007, 07:54 PM
மௌனம் போர்த்திய சத்தம்,
மனதின் போராட்டம்...
சத்தம் போர்த்திய மௌனம்,
மனதின் தேரோட்டம்...

பாராட்டுக்கள் பூமகள்...

பூமகள்
07-09-2007, 07:56 PM
அன்புத் தம்பி ஆதவா..
உமது கருத்துக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றிகள்..........!:icon_give_rose:
தாங்கள் அனுப்பிய இ−பணம் 5 காசு வந்தது.
நன்றிகள் வள்ளல் ஆதவா......!:violent-smiley-010:

இளசு
07-09-2007, 08:04 PM
சத்தம் பற்றி எழுதிய பூமகளா???!!!

மௌனம் சப்தத்தை விட கனமானது..

இக்கவிதையும்..

பாராட்டுகள்!

பூமகள்
07-09-2007, 08:09 PM
கலக்கல் குறுங்கவியால் பாராட்டப் படுவது அளவில்லா மகிழ்ச்சி தருகிறது அக்னியாரே..! அழகிய பின்னூட்டம்..(இப்படி சொல்லிச் சொல்லி வாய் இல்லை இல்லை கை வலிக்கிறது... ஹி ஹி.. ஆனால் அது தான் உண்மை...!:aktion033:)
மிக்க நன்றிகள் அன்புச் சகோதரரே...!:icon_give_rose:

பூமகள்
07-09-2007, 08:12 PM
மிக்க நன்றிகள் இளசு அண்ணா.:food-smiley-011:
உங்களின் பின்னூட்டம் கண்டு மிக்க மகிழ்ச்சி..!:icon_give_rose:

அறிஞர்
07-09-2007, 08:14 PM
மௌனம் சாதித்தால் அமைதி..
மௌனம் கலைந்தால் வாயாடி...

அருமை.... பூமகளே...

பூமகள்
07-09-2007, 08:17 PM
அன்புச் சகோதரர் அறிஞர் அவர்களின் பின்னூட்டத்திற்கும் வாழ்த்துக்கும் மிகுந்த நன்றிகள் அண்ணா.
உங்களின் பின்னூட்டம் கண்டு மனம் குதூகளிக்கிறது...!:icon_give_rose:

அக்னி
07-09-2007, 08:33 PM
கலக்கல் குறுங்கவியால் பாராட்டப் படுவது அளவில்லா மகிழ்ச்சி தருகிறது அக்னியாரே..! அழகிய பின்னூட்டம்..(இப்படி சொல்லிச் சொல்லி வாய் இல்லை இல்லை கை வலிக்கிறது... ஹி ஹி.. ஆனால் அது தான் உண்மை...!:aktion033:)
மிக்க நன்றிகள் அன்புச் சகோதரரே...!:icon_give_rose:

இனிச் சொல்லாதீர்கள்... (பொய்யை...)
உங்கள் பதிவுகளே எனக்குத் தூண்டுதல்கள்...
நன்றி...

பூமகள்
07-09-2007, 08:39 PM
இனிச் சொல்லாதீர்கள்... (பொய்யை...)
உங்கள் பதிவுகளே எனக்குத் தூண்டுதல்கள்...
நன்றி...
உண்மை தவிர பூமகள் எதையும் சொல்ல மாட்டாள் என்று உங்கள் தங்கை பற்றி உங்களுக்கு தெரியாதா அக்னியாரே...????!!!!

அதென்ன..:huh: நான் பொய் சொல்வதாய் சொல்லி விட்டீர்கள்... ம்...
போங்க அண்ணா..... :ohmy:

அக்னி
07-09-2007, 08:46 PM
இனிச் சொல்லாதீர்கள்... (பொய்யை...)
உங்கள் பதிவுகளே எனக்குத் தூண்டுதல்கள்...
நன்றி...


அதென்ன..:huh: நான் பொய் சொல்வதாய் சொல்லி விட்டீர்கள்... ம்...
போங்க அண்ணா..... :ohmy:


எங்கே போவது...
இனியும் என்பது இனிச் என்று தொக்கிவிட்டது...

உங்களது பாராட்டுக்களினால் எப்போதுமே உவகை கொள்வேன்.
அதுவே, எனது முயற்சி தொடர உத்வேகம் தருவதுண்டு...

பூமகள்
07-09-2007, 09:12 PM
சரி தான் அண்ணா.
உங்களின் தன்னடக்கம் கண்டு அகம் மகிழ்ந்து போனேன்.
நன்றிகள் தங்களின் விளக்கத்திற்கும் பின்னூட்டத்திற்கும்.

மனோஜ்
08-09-2007, 11:04 AM
உங்கள் சார்பாக பெண்ணை பாவுத்து எழுதியது − மிக அருமை
இது என்சார்பாக
என்ன தான் தீர்வு
உன் மெளவுன மொழிக்கு
விட்டு செல்ல மனம் இல்லை
தொட்டுக்கொள்ள இடம் இல்லை
மனதினை திறந்திடு
மெளவுனத்தை கலைந்திடு

சுகந்தப்ரீதன்
08-09-2007, 11:22 AM
உங்கள் கவிதையை விட அதனுடன் நீங்கள் இணைக்கும் ஓவியம் மிக அழகாக உள்ளது.....கவிதையும் அருமையாகத்தான் இருக்கிறது....தொடருங்கள் சகோதரி.....

வாழ்த்துக்கள்...!

பூமகள்
08-09-2007, 11:23 AM
அற்புதம் மனோஜ் அண்ணா.
அழகிய பின்னூட்டக்கவி.. அருமை.:icon_clap:
உங்களின் சிந்தனை அருமை.. சீக்கிரத்தில் உங்களவளின் மௌனம் கலைய கடவுளை வேண்டிக் கொள்கிறேன்..!:sport-smiley-018:
உங்களின் வாழ்த்திற்கு நன்றிகள் அண்ணா.:aktion033:

பூமகள்
08-09-2007, 11:29 AM
தொடருங்கள் சகோதரி.....
வாழ்த்துக்கள்...!

மிக்க நன்றிகள் ப்ரீதன் அன்பரே..!:icon_blush:


உங்கள் கவிதையை விட அதனுடன் நீங்கள் இணைக்கும் ஓவியம் மிக அழகாக உள்ளது.....
ம்.....:icon_hmm:
அப்படியென்றால் என் கவியை விட படம் தான் அழகா.... ???!!!!:medium-smiley-100:

அமரன்
11-09-2007, 05:58 PM
மௌனமாக இருந்தால்
பவ்வியமென விளம்பாது
கர்வம் என்பவர்கள்

மௌனத்தில் சுரம்பிடித்து
மனமிசைக்கும் கீதம்கேட்டு
கொடுக்கும் பட்டம்
அதிகப் பிரசங்கி

உலகம் இதுதான்
உள்ளதும் இதுதான்.
உரித்தாகட்டும் என் பாராட்டுகள்
உண்மை சொன்ன அன்புத் தங்கைக்கு.

பூமகள்
11-09-2007, 06:16 PM
ஆழமாய் பின்னூட்டக்கவியில் உண்மையின் ஆழத்தை விளக்கிய அமர் அண்ணாவிற்கு என் நன்றிகளை சமர்பித்துக் கொள்கிறேன்.:nature-smiley-002:

கலைவேந்தன்
12-09-2007, 03:52 PM
நம்மை சிலநேரம் போற்றும் இவ்வுலகம்
பலநேரம் தூற்றவே முனைகிறது!
எல்லாம் நாம் இவ்வுலகத்தின்
எதிர்பார்ப்புக்கு எப்படிஎதிர்வினை செய்கிறோம்
என்பதைப் பொறுத்தது!
எல்லோரும் எல்லோராலும் எல்லாநேரத்திலும் பாராட்டப்பட இயலாது!
வரிகள் அருமை பூமகள்!