PDA

View Full Version : டாட்டாவின் மிகச் சிறந்த வியாபாரமூளை



தங்கவேல்
07-09-2007, 04:45 AM
தமிழ் நாட்டில் சாத்தான் குளம் இன்றைய தமிழ் நாட்டின் பரபரப்புசெய்தியாகி உள்ளது. டைட்டானியம் தொழிற்சாலையினை அமைக்க இருக்கும் டாட்டாவின் வியாபார உத்திகள், கணக்குகள் இன்று அனைவரின் பார்வையினையும் உறுத்துகின்றது.

இந்த டைட்டானியம் தொழிற்சாலையினால் டாட்டாவுக்கு வர இருக்கும் லாபம் என்ன என்பதனை திண்ணை இணைய இதழில் விரிவாக எழுதியிருக்கின்றார் ஒரு ஆசிரியர்.

இதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கின்றது என்றெல்லாம் தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் உண்மை. இந்த தொழில் டாட்டாவினால் தொடங்கப்பட்டால், டாட்டாவின் மிகச்சிறந்த வியாபார உத்தி வெற்றி அடைந்ததாக கருதலாம். என்ன ஒரு மூளை. என்ன ஒரு திட்டம். இந்த திட்டத்தை பற்றி அறிய வேண்டுமா இங்கே சொடுக்குங்கள்...

www.thinnai.com

இந்த இணைய தளத்தில், நேற்று அரேபியா, இன்று தேரிக்காடு கட்டுரையினை வாசித்து பாருங்கள்..

இந்தியர் அனைவரும் இப்படி தொழில் செய்தால், அமெரிக்காவை விட இன்னும் உயர இந்தியா சென்று விடும் நாட்கள் வந்து விடும்.

யார் எவ்வளவு சம்பாதிக்கின்றார்கள் என்பது பற்றி இங்கு விவாதம் செய்ய நான் இதை எழுத வில்லை. டாட்டா அவர்களின் வியாபார மூளையினை வியந்து எழுதுகிறேன்.

ஓவியன்
07-09-2007, 04:49 AM
உண்மைதான் தங்கம் அண்ணா!

அந்த வியாபார முளைதானே அவர்களை இந்த அளவுக்கு வளர்தது!.

Narathar
07-09-2007, 07:44 AM
எனகென்னமோ இதில் பாதிக்கப்படப்போவது இந்தியர்கள் மட்டுமல்ல
இலங்கையர்களும் தான் என்று தோன்றுகிறது

lolluvathiyar
07-09-2007, 08:01 AM
ஒரு ஏக்கரில் கிடைக்கும் லாபத்தை வைத்து பார்க்கும் போது டாடா நிச்சியம் ஒரு ஏக்கருக்கு 10 லட்சம் தந்தால் சுலபமாக நிலத்தை வாங்கிவிடலாம்.
தொழிற்சாலையும் ஆச்சு, மக்களுக்கு திருப்தியாக பனம் வாங்கி உருப்பிடியான இடத்தில் முதலீடு செய்து விடுவார்கள்.

தங்கவேல்
07-09-2007, 08:35 AM
வந்துட்டாரய்யா வாத்தியாரு... ஏங்க அப்படி கொட்டி கொடுத்து வாங்க டாட்டா என்ன முட்டாளா ? என்ன வாத்தியாரே தொழில் ரகசியம் தெரியாம பேசுறீங்களே.... அரசியல்வாதிகள் நண்பர்களாக இருக்கும் பட்சத்தில் 50 ஆயிரமே அதிகம் தெரியுமா ?

தங்கவேல்
07-09-2007, 08:36 AM
வைகுண்டராஜன் எங்க வருகிறார் பார்த்தீங்களா வாத்தியாரே... நம்ம ஆளுக்கு வழி விட மாட்டாங்க... என்ன சொல்லுறீங்க....

lolluvathiyar
07-09-2007, 03:53 PM
வந்துட்டாரய்யா வாத்தியாரு... ஏங்க அப்படி கொட்டி கொடுத்து வாங்க டாட்டா என்ன முட்டாளா ?

அப்படி என்னங்க கொட்டி கொடுக்கராபல் சொல்லிபுட்டேன். மத்த ஏரியாவில ஏக்கருக்கு கிடைக்கிற விலையை விட கம்மியாதானே சொன்னேன். கோவையை சுற்றியுள்ள கிரமங்களில் கூட இன்னுக்கு ஏக்கருக்கு 1 கோடி ருபாய் போகுது. ஒரு ஏக்கரில் இவுங்க 5 கோடிக்கு மேல் லாபம் எடுக்கையில் ஒரு 10 லட்சம் தரகூடாதா?


வாத்தியாரே தொழில் ரகசியம் தெரியாம பேசுறீங்களே.... அரசியல்வாதிகள் நண்பர்களாக இருக்கும் பட்சத்தில் 50 ஆயிரமே அதிகம் தெரியுமா ?

ஆமாம் அது கூட இல்லாமா பிடுங்க முடியும். விண்ட் மில் தொழில் பெருக அரசியவாதிகள் ஆதரவுடன் தென் தமிழ் நாட்டில் எக்கசக்க விவசாய நிலம் பிடுங்க பட்டதாக மக்களிடம் ஒரு வதந்தி உண்டு


வைகுண்டராஜன் எங்க வருகிறார் பார்த்தீங்களா

புரியலியே

தங்கவேல்
08-09-2007, 12:58 AM
உங்களுக்கே புரியவில்லை என்றால் நான் என்னத்தை சொல்லி... கஷ்டம்...

lolluvathiyar
08-09-2007, 08:04 AM
லோக்கல் பாலிடிக்ஸில் நான் கொஞ்சம் வீக் தங்கவேல்

மனோஜ்
08-09-2007, 08:16 AM
நன்றி தங்கம் அண்ணா
சரியான மூலைதான் அவர்களுக்கு

தங்கவேல்
09-09-2007, 02:16 AM
மனோஜ் அது மூலை இல்லை மூளை... தவறாக பதிந்து விட்டது என நினைக்கிறேன்.

வாத்தியார், பத்து நாட்களுக்கு முன்பு உள்ள செய்திதாள்களை புரட்டவும். வைகுண்டராஜன் என்ன செய்தார் என்று தெரியவரும். அம்மையார் ஏன் வெகுண்டெழுந்தார் என்பதும் தெரியும். இப்போது அடக்கி வாசிப்பதும் புரியும்...