PDA

View Full Version : 'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகĬ



mgandhi
05-09-2007, 07:37 PM
'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்' என்ற பழமொழி அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. இதனை ஏற்றுக்கொள்ளாத சில நபர்களும் உண்டு.

அத்தகையோரும் உணர வேண்டும் என்ற நோக்கில், 'இந்தப் பழமொழி என்றென்றும் உண்மையானதே' என நவீன அறிவியல் மருத்துவ ஆய்வுகளும் எடுத்துரைக்கின்றன.

சிரிப்பினால் உடலுக்கு உண்டாகும் நன்மைகள், சிரிக்கும்போது வெளியே மின்னும் பற்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் அதிகம் என்பதை அம்மருத்துவ ஆய்வுகள் வாயிலாக அறியலாம்.

சிரிப்பின் பலன்கள்

* சிரிக்கும்போது, உடலுக்குள் போதுமான அளவில் ஆக்ஸிஜன் செல்கிறது. இதனால், உடல் ஆரோக்கியம் சிறந்தோங்கும்.

* தசைகளில் வலிகள் உண்டாகாமல் பார்த்துக்கொள்வதுடன், மன அழுத்தத்தையும் போக்குகிறது. தகவல்களை உடனுக்குடன் உள்வாங்கும் வகையில் செயல்பட, மூளைக்கு உறுதுணையாக இருக்கிறது.

* சமூகத்தோடு ஒன்றி, மகிழ்ச்சியுடன் வாழ வழிவகுக்கிறது. நகைச்சுவை உணர்வும், எப்போதும் சிரித்துக்கொண்டே இருக்கும் நபர்களைச் சுற்றி, ஒரு கூட்டம் இருப்பதே இதற்குச் சான்று.

* உடல் சோர்வு ஏற்படாமல் தவிர்த்து, புத்துணர்வுடன் செயலாற்ற உதவுகிறது. எவ்வளவு கடினமான பணிகளை மேற்கொண்டாலும், புதிய உத்வேகம் கிடைக்கும் வண்ணம் தூண்டுதலை ஏற்படுத்துகிறது.

* இரத்த ஓட்டம் சீராக இருக்க துணைபுரிகிறது.

* இருதயம் தொடர்பான நோய்கள் வராமல் இருக்கவும் வகை செய்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இத்தகையை பலன்களைத் தரும் சிரிப்பினை, நாம் ஒரு நாளைக்கு 15 தடவைகளாவது உதிர்க்க வேண்டும். அதுவும் வாய்விட்டு, வயிறு குலுங்க சிரித்தால் மேலும் நன்மை பயக்கும்.

நாள்தோறும் சிரிப்பதெற்கென, பிரத்யேக யோகா பயிற்சிகளும் உள்ளன என்பதை கருத்தில்கொண்டு, சிரித்து வாழலாம்.

(மூலம் - வெப்துனியா)

இளசு
05-09-2007, 07:53 PM
நன்றி காந்தி அவர்களே..

மன்ற மகாமருத்துவர்கள் மணியா, ராஜாவுக்கு நன்றிகள் −
ஃபீஸ் வாங்காத புண்ணியவான்களே− நீங்க நல்லா இருக்கணும்!!

ஓவியன்
07-09-2007, 05:51 AM
ஆகா சிரிப்பிலே இவ்வளவு விடயங்கள் இருக்கின்றனவா........
பிறகென்ன தாராளமாக சிரித்து விட்டால் போயிற்று......

ஆமாம் இளசு அண்ணா, எங்கே நம்ம மணியா அண்ணா, ராஜா அண்ணா........? :sport-smiley-018:

சிவா.ஜி
07-09-2007, 06:43 AM
மருந்துக்காக சிரிக்காமல் மனதுவிட்டு சிரிக்க வேண்டும்.அதனால் நம் மனதும் பாரமின்றி லேசாக இருக்கும்.ஆதாலால்...சிரிப்போம்......சிரிக்க வைப்போம்....நோயற்ற சமுதாயம் வளர்ப்போம்.நன்றி மோகன் காந்தி.

பூமகள்
08-09-2007, 10:29 AM
சிரிப்பு பற்றிய முக்கியத்துவத்தை அளித்த அன்புச் சகோதரர் மோகன் காந்தி அவர்களுக்கு மிக்க நன்றிகள் மற்றும் பாராட்டுக்கள்.
அவசர உலகில் சிரிப்பைக் கூட நியாபகப்படுத்தும் நிலையில் தான் நம் சமூகம் உள்ளது வேதனை தான்.
சிரிப்போம்.... உடல் சீர் காப்போம்..!
அனைவரையும் மகிழ்வித்து மகிழ்வுடன் வாழ்வோம்..!!

அனுராகவன்
16-05-2008, 06:20 AM
நன்றி மோகன் அவர்களே!!
சிரிப்பின் முக்கியத்துவம் இப்ப புரியுது..
என் நன்றி..!!

சூரியன்
18-05-2008, 01:32 PM
மிகவும் நல்ல தகவல் அண்ணா.

இதயம்
12-06-2008, 04:42 AM
உண்மை தான்.! எளிமையான, இனிய மருத்துவம் நகைச்சுவை.! அது நம்மிடையே குறைந்து வருவதாலோ என்னவோ மனிதர்களுக்குள் குழப்பங்கள் கூடி வருகிறது. மனநலம், உடல் இரண்டையும் பேண வேண்டுமென்றால் நகைச்சுவை மருந்தை நாள் தவறாமல் உட்கொள்ள வேண்டும். இளசு அண்ணா சொன்னது போல் மற்றவர்களை நகைச்சுவையால் "கொல்லும்" தலைக்கும், ராஜா அண்ணாவிற்கும் சொர்க்கம் நிச்சயம்..!!

sadeekali
27-09-2008, 02:31 AM
அட காந்தி அண்ணே.. நீங்க சொல்றது எல்லாம் சரிண்ணே..என்னா சொன்னாலும் சிரிக்க மாட்டேன்குற ஆளுங்களை… அதுக்கு ஒரு வைதியம் சொன்னா ரொம்ப ரொம்ப புண்ணியமா போகுண்ணே..அடா இதுக்கும் ஒரு சிரிப்பு சிரிக்கிரீங்களே.. என்னண்ணே…

ராஜா
27-09-2008, 04:57 AM
இதழ்களில் உண்டாகும் ஒரு வளைவு, (சிரிப்பு) வாழ்க்கையின் பல கோணல்களை நேராக்குகிறது என்ற தத்துவத்தைச் சொன்ன மோகன் காந்தி அண்ணாவுக்கு நன்றி..!

மனோஜ்
27-09-2008, 07:36 AM
அருமையான தகவல் நன்றி மோகன் சார்