PDA

View Full Version : வீர்சிங்கும், சதுரங்கமும்



mania
12-06-2003, 04:54 AM
வீர்சிங் ஒருமுறை விமானத்தில் பயணம் செய்தபோது அவருடன் பிரபல சதுரங்க ஆட்டக்காரர் பக்கத்து இருக்கையில்
இருந்தார். பொழுது போவதற்காக சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். பிறகு ரொம்பவும் போர் அடிக்கவே அவர் வீர்சிங்கை
சதுரங்கம் ஆட அழைத்தார் (பந்தயத்துக்குத்தான்). வீர்சிங்கோ,''நீங்கள் யார் என்று எனக்கு தெரியும். நான் எளிதில் தோற்று போய்விடுவேன்''
என்று மறுத்தார். அவரோ விடுவதாக இல்லை. சிறிது நேரம் கழித்து, ''நான் வேண்டுமானால் இடது கையாзளுக்காக !''
என்றார். வீர் சிங்குக்கு ஆசை வந்து விட்டது.(ஊரில் போய் சொல்லிக்கொள்ளலாமே). ஆட ஆரம்பித்தார். சில நிமிடங்களிலேயே
நிறைய ஆட்டங்களும், பணமும் தோற்று விட்டார். ஊருக்கு வந்ததும் முதல் வேலையாக தன் மனைவியிடம் ரொம்ப பெருமையாக அதைப்பற்றி சொன்னார்., அவ்வளவு பெரிய ஆட்டக்காரர், எனக்காக இடது கையால் ஆடினார்"" என்றார். மனைவி உடனே, நீங்கள் ஒரு முட்டாள், ஏமாளி என்பதை மீண்டும் மீண்டும் காட்டி வருகிரீர்கள்''என்றாள். வீர்சிங் ,''அது எப்படி?" என்று மனைவியைக் கேட்டார்.
அவளோ ,'' அவர் சாதரணமாகவே இடது கை பழக்கம் உடையவர். இது தெரியாமல் நீங்கள் போய் இவ்வளவு பணத்தை விட்டு விட்டு
வந்திருக்கிரீர்களே?!!"" என்றாளாம்

aren
12-06-2003, 05:13 AM
நண்பரே, சதுரங்கத்தில் (செஸ்ஸில்), இடது கை வலது கை என்றெல்லாம் கிடையாதே. நீங்கள் வேறு ஏதாவது சதுரங்கத்தைச் சொல்கிறீர்களா?

mania
12-06-2003, 05:28 AM
நானே இந்த அரங்கத்த்ல் போஸ்ட் செய்யும் போது ஒரு தடவைக்கு நாலு தடவை படித்துவிட்டுத்தான்
போஸ்ட் செய்கிறேன். நீங்க வேறு !!நம்ம வீர்சிங் குடும்பத்தின் குணாதிசியங்களில் இதுவும் ஒன்று. வேண்டுமானால்
பிஜிகே வை கேட்டுக்கொள்ளுங்கள்(தயவு செய்து என்னை வித்தியாசமாக நினைக்க வைக்காதீர்கள்!!)
மணியா

роЗро│роЪрпБ
12-06-2003, 05:52 AM
அட்றா...அட்றா..!! ஜாடிக்கு ஏத்த மூடியா வாய்ச்சிருக்கே!
மனம் போல் மாங்கல்யம் அமைஞ்ச தம்பதியப்பா...
கலக்கல் சிரிப்பு மணியா... வாழ்த்துகள்..

родроЮрпНроЪрпИ родрооро┐ро┤ройрпН
12-06-2003, 08:47 AM
வீர்சிங் வீட்டில் அனைவருமே இப்படித்தானா?????????????

poo
12-06-2003, 03:54 PM
கொஞ்சமே புரிஞ்சமாதிரி... ஆனா கடைசியில ஒண்ணுமே புரியாமா..

suma
12-06-2003, 07:16 PM
நம்ப சிங் குடும்பமே இப்படி எனில் அவர் அனுபவம் படிக்கும் நாம்?

ро╡ро┐роХроЯройрпН
11-08-2007, 08:24 AM
புத்தி சாதூர்யமாக இருந்தால் எங்கும் வெற்றியே என்று உணர்த்தும் நகைச்சுவைத்துணுக்கு.

роЕрооро░ройрпН
16-08-2007, 11:57 AM
குடும்பமே புத்திசாலி குடும்பம்.நன்றி.

рооройрпНроородройрпН
16-08-2007, 12:32 PM
கொஞ்சமே புரிஞ்சமாதிரி... ஆனா கடைசியில ஒண்ணுமே புரியாமா..

இப்ப திரும்ப வந்து :icon_cலப்: படிங்க பூ.. கண்டிப்பா புரியும்... :D