PDA

View Full Version : என் நந்தவனம்.....!



வசீகரன்
05-09-2007, 06:43 AM
இதயத்தில் ஒரு இன்ப ஓசை...
இணக்கமானவல் அருகில் இருக்கிறாள்..!

நிமிடங்கள் நினைவிழந்து இருந்தன....
நில*மதி நின்னருகே நின்று கொண்டிருக்கிறாள்....!

கடமைகள் காத தூரம்... போய் விட்டன...
கவிதாயினி கதைத்துகொண்டிருக்கிறாள்....!

பூக்கள் எல்லாம் புன்முறுவலித்துகொண்டிருந்தன
பூவை அவள் என் புறம் வீற்றிருந்தாள்...!

புன்னகை என்ணில் குடிகொண்டிருந்தன....
பொந்நகை... பூண்டவள் குறுநகை புரிகின்றாள்...!

என் உலகம் சிறகு விரிக்கிறது.... அவள் அருகாமையில்
இருந்தாலே....!

அன்றலர்ந்த மலர் என் நந்தவனம்....
நறுமலருவது எந்நாளோ...?

அள்ளி என் மார்போடு நான் அணைப்பது
எந்நாளோ...?


வசீகரன்

Narathar
05-09-2007, 06:50 AM
அந்த நந்தவனம்
உங்கள் சொந்தவனமாக வாழ்த்துகிறேன்

தங்கவேல்
05-09-2007, 12:34 PM
ஆகா ஆகா...காதலியின் அருகாமை இவ்வளவு இன்பம் தருமா ? தந்துள்ளது ஒருவருக்கு...

சுகந்தப்ரீதன்
05-09-2007, 01:36 PM
அன்றலர்ந்த மலர் என் நந்தவனம்....
நறுமலருவது எந்நாளோ...?
அள்ளி என் மார்போடு நான் அணைப்பது
எந்நாளோ...?

பெயருக்கு ஏத்தமாதிரியே இருக்கிறது உங்களின் கவிவரிகள்
வாழ்த்துக்கள் வ*சீக*ர*ன்.....

தளபதி
05-09-2007, 02:04 PM
கெட்டி மேளங்கள் முழங்கியதும்
கட்டி அணைப்பதும் நடக்கும்!!:icon_b:
இன்பஇசை இணக்கமாகும்
நினைவுகள் நிமிடத்தில் நீராகும்!!:food-smiley-022:
கடமைகள் கால் இழுக்கும்
பூக்கள் எல்லாம் முறுவலிக்கும்!!!:nature-smiley-003:
புன்னகை செய்தி சொல்லும்
பொன்னுலகம் மீண்டும் சிறகடிக்கும்!!:angel-smiley-026:

நந்தவனம் பூ பூக்கும்.!!:icon_08: