PDA

View Full Version : வாழ்க்கை

இலக்கியன்
04-09-2007, 05:42 PM
http://img128.imageshack.us/img128/2963/godtestsad20facegq6.jpg (http://imageshack.us)

விழுந்தவனைத்தான்−இங்கு
மாடும் ஏறி மிதிக்குது

நொந்தவன் புண்ணில்
அம்பு வந்து குத்துது

சுமைதாங்கி மீதுதான்
இடியும் வந்து விழுகுது

கட்டிய மனக்கோட்டை
சுக்கு நூறாய் போகுது

பரதேசி போலத்தான்
இந்த உயிரும் சுத்துது

கால்கள் போன போக்கிலே
இந்த உயிர் போகுது

வாழ்க்கை என்பதே
அர்த்தமின்றி போனது

முடிவு உள்ள வாழ்கையில்
முன்னேற மனம் துடிக்குது

பரந்த உலகில் இறக்கை−இன்றி
பறக்கத் துடிக்குது

கிடைத்தே போதும்−என்று
மனமும் தடுக்குது

பழய கிறுக்கல்

மனோஜ்
04-09-2007, 05:50 PM
நல்லகவிதை ஏழு்மைஎன்பது வறுமை இன்மை என்பது கொடுமை இல்லாமல் இருப்பது அருமை என்பதை கவிதையாக்கியது சொழிமை

இலக்கியன்
04-09-2007, 05:57 PM
நல்லகவிதை ஏழு்மைஎன்பது வறுமை இன்மை என்பது கொடுமை இல்லாமல் இருப்பது அருமை என்பதை கவிதையாக்கியது சொழிமை

கருத்து தந்த மனோஜ் அவர்களுக்கு நன்றி
எனக்கு ஏற்பட்ட வாழ்வியல் தோல்விகளின் போது என் குமுறலாக இந்தக் கிறுக்கலை படைத்தேன். அந்த தோல்விகளை வெற்றியின் படிக்கற்களாக்கினேன் என்பது எனக்கு பெருமையாக உள்ளது

ஷீ-நிசி
05-09-2007, 05:13 AM
தொடருங்கள் நண்பரே!

இளசு
05-09-2007, 06:32 AM
நல்லா இருக்கு இலக்கியன்..

பட்டுக்கோட்டையாரின் இவ்வகை இலக்கியங்களின் ரசிகன் நான்..

பாராட்டுகள்!

lolluvathiyar
05-09-2007, 08:24 AM
என்ன இலக்கியரே ஒரே ஏக்கமாக இருக்கு.
உங்கள் கவிதை நடையிலிருந்து சற்று மாறி இருகிறது.
முக்கியமா படம் இல்லாம இருக்கு

அக்னி
06-09-2007, 09:17 AM
எதிர்வினைகளில்
ஏறிச்செல்வோம்...
எமது சுவடுகளை,
தோல்விக்கான சுவடுகள்
என்று அஞ்சாமல்...
வெற்றிக்கான சுவடுகள்
என்று..,
அழுந்தப் பதிப்போம்...
வாழ்வின் உச்சியில்,
வெற்றிக்கொடி நாட்டுவோம்...

பாராட்டுக்கள் இலக்கியன்...

இலக்கியன்
06-09-2007, 02:14 PM
தொடருங்கள் நண்பரே!

நன்றி ஷீ-நிசி உங்கள் கருத்துக்கு

இலக்கியன்
06-09-2007, 02:15 PM
நல்லா இருக்கு இலக்கியன்..

பட்டுக்கோட்டையாரின் இவ்வகை இலக்கியங்களின் ரசிகன் நான்..

பாராட்டுகள்!

உங்கள் பாராட்டுகிடைத்தமையிட்டு மகிழ்வு நன்றி அண்ணா

இலக்கியன்
06-09-2007, 02:17 PM
என்ன இலக்கியரே ஒரே ஏக்கமாக இருக்கு.
உங்கள் கவிதை நடையிலிருந்து சற்று மாறி இருகிறது.
முக்கியமா படம் இல்லாம இருக்கு

அப்போ படத்தை மட்டுமா இரசிப்பீர்கள்:D
படம் இணைத்துள்ளேன் நன்றி

இலக்கியன்
06-09-2007, 02:19 PM
எதிர்வினைகளில்
ஏறிச்செல்வோம்...
எமது சுவடுகளை,
தோல்விக்கான சுவடுகள்
என்று அஞ்சாமல்...
வெற்றிக்கான சுவடுகள்
என்று..,
அழுந்தப் பதிப்போம்...
வாழ்வின் உச்சியில்,
வெற்றிக்கொடி நாட்டுவோம்...

பாராட்டுக்கள் இலக்கியன்...
பாரட்டுக்கள் அக்னி
உறுதி கொள்ளவைக்க தூண்டும் கருத்து நன்றி

ஓவியன்
07-09-2007, 04:37 AM
பட்ட காலிலேயே படும் என்பார்கள்..........
ஆனால், வெற்றிக்காக போராடுகையில் கிடைக்கும் எதிர்ப்புக்கள், தடைகள் எல்லாம் வெற்றியின் படிக்கற்களே.........
முள்ளிற்கு பயந்தால் ரோஜா மலரை அடைய முடியாது.........
சுட்டால் தான் சங்கு வெண்மை தரும்........

ஆகவே தடைகளை படிகளாக்கி வெற்றியை நமதாக்குவோம்.

இலக்கியன்
09-12-2007, 10:40 AM
பட்ட காலிலேயே படும் என்பார்கள்..........
ஆனால், வெற்றிக்காக போராடுகையில் கிடைக்கும் எதிர்ப்புக்கள், தடைகள் எல்லாம் வெற்றியின் படிக்கற்களே.........
முள்ளிற்கு பயந்தால் ரோஜா மலரை அடைய முடியாது.........
சுட்டால் தான் சங்கு வெண்மை தரும்........

ஆகவே தடைகளை படிகளாக்கி வெற்றியை நமதாக்குவோம்.

முகவும் சிறப்பாக சொன்னீர்கள் ஓவியன் நன்றி