PDA

View Full Version : Google உம் தமிழ் இடைமுகங்களும்



மயூ
04-09-2007, 01:20 PM
கூகிள் அதன் முதற் பக்கத்திற்கு தமிழில் இடைமுகம் வழங்குவது நாம் அனைவரும் அறிந்ததே. ஆயினும் ஜிமெயில் போன்ற சேவைகளுக்கு இது வரை இடைமுகம் வழங்கப்படவில்லை. ஹிந்திக்குப் பல காலங்களுக்கு முன்பே வழங்கிய பின்னரும் தமிழுக்கு இன்னமும் வழங்கப்படாமை வருத்திற்கு உரிய விடயமே.



இன்று காலை கூகுள் கணக்குகள் பகுதியில் உட்புக முயன்றபோது தமிழ் இடைமுகம் முற்றாக வழங்கப்பட்டிருந்ததைக் கண்டு ஆனந்தப்பட்டேன். உடனே ஓடிச்சென்று ஜிமெயிலில் பார்த்தால் இன்னமும் தமிழ் இடைமுகம் வழங்கப்படவில்லை.

ஏன் இன்னமும் வழங்கப்படவிலலை என்றால் அதற்குச் சில காரணங்கள் எனக்குத் தெரிந்தன அவற்றை நான் உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன். காரணம் மறந்துவிட்டுப் போவதற்கல்ல நிவர்த்தி செய்து தமிழை கணனியில் வாழவைக்க.

கூகிள் தமிழுக்கு உரிய அந்தஸ்து வழங்காமை - அதாவது தமிழ் மொழிமாற்றப்பணிகளுக்கு கூகிள் பணியாளர்களை அமர்த்தாமை.
நம் மக்கள் மொழிமாற்ற உதவி செய்யாமை - அதாவது Google in your language என்றொரு செயற்திட்டம் உள்ளது. இதில் தமிழர் பங்களிப்பு குறைவாக உள்ளமை.
தரம் குறைவான மொழிமாற்றம் - சரி மொழி மாற்றம் செய்தவற்றையாவது சரியாகச் செய்ய வேண்டாமோ?? அஞ்சல் அனுப்புக என எழுத வேண்டிய இடத்தில் Anjal anuppuga என்று தங்கிலீசில் எழுதி வைத்துள்ளமை.
ஒருங்கிணைக்காமை - புதுச் சொற்களுக்கு என்ன தமிழ் சொல் பாவிப்பது என்று மொழி மாற்றுபவர்களுக்குத் தெரியாது. அவரவர் தன்பாட்டுக்கு ஏதாவது போட்டு மொழி மாற்றிவிடுவது. இதனால் கடைசியில் பலவேறு தமிழ் சொற்கள் ஒரு சொல்லுக்கு வந்து சேரும்.
மைக்ரோசாப்டினால் தமிழ் இடைமுகம் வழங்க முடியுமானால் கூகிளாலும் இது வழங்க முடியும். ஆயினும் கூகிள் செய்து முடிக்கும் வரை காத்திருப்பதை விட நாங்களே ஒரு கூட்டமைப்புடன் செயற்பட்டு ஒரு நோக்குடன் கூகிள் சேவைகளை தமிழ் மயப்படுத்த வேண்டும். இதன் மூலம் பல்வேறு ஆங்கிலம் தெரியாத பாமரரும் பயன்பெற வழிசமைக்கும்.

தமிழாக்கப் பணியில் இணைய இங்கே செல்லுங்கள் (http://services.google.com/tcbin/tc.py)

சில திரைக்காட்சிகள்

http://i76.photobucket.com/albums/j37/mayooresan/screen%20shots/accounts.jpg


http://i76.photobucket.com/albums/j37/mayooresan/screen%20shots/newaccount.jpg

இணைய நண்பன்
04-09-2007, 01:24 PM
ஆம்.நீங்கள் குறிப்பிட்ட விடயம் வரவேற்கத்தக்கது.நாம் அனைவரும் ஒன்றினைந்து செயற்பட்டால் தமிழ் வளரும்.ஒன்றினைவோம் செயற்படுவோம்

மயூ
04-09-2007, 01:33 PM
ஆம்.நீங்கள் குறிப்பிட்ட விடயம் வரவேற்கத்தக்கது.நாம் அனைவரும் ஒன்றினைந்து செயற்பட்டால் தமிழ் வளரும்.ஒன்றினைவோம் செயற்படுவோம்

ஆமாம் நண்பரே...
கூகிள் பக்கத்திலும் தமிழை அவ்வளவாகக் கணக்கெடுக்காமல் விட்ட பெரும் பிழை இருக்கின்றது...!!!


யாகூ தமிழ் உட்பட இந்திய மொழிகளில் விஷேட கவனம் செலுத்தி வருவதாக அறிகின்றோம்.. அவர்கள் கூகளை முந்திவிடுவரோ தெரியாது!!!!:fragend005:

ipsudhan
05-09-2007, 02:39 PM
மிகப்பெரிய பணியில் ஈடுபட்டுள்ளீர்கள் ,
சிறப்பாக google discussion group ல் பணியாற்ற வாழ்த்துகள்.

ஷீ-நிசி
05-09-2007, 03:48 PM
நானும் உதவுகிறேன்.... நன்றி மயூ!

ஓவியன்
07-09-2007, 09:55 AM
அருமை மயூரேசா!
நிச்சயமாக தமிழர்கள் எல்லோரும் கவனிக்க வேண்டிய ஒரு விடயம், தக்க தருணத்திலே நினைவூட்டி அறிவூட்டியமைக்கு நன்றிகள் பல............

பூமகள்
08-09-2007, 06:42 AM
பெரும்பான்மையான மக்களால் உபயோகிக்கப்படும் கூகில் தளத்தில் தமிழ் மாற்றத்தில் பிரச்சனையா??!!!
தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருப்பது வருந்தத்தக்க ஒன்று.
ஒன்றுபடுவோம் தமிழர் அனைவரும்.
மிக்க நன்றிகள் மயூ சகோதரரே..!*

சுகந்தப்ரீதன்
08-09-2007, 06:57 AM
எனக்கு இதுபற்றி விரிவாக தெரியாது....நான் வேறுதுறையில் இருப்பதால் தெரியும் வாய்ப்பு கிட்டவில்லை... எதுவாகினும் தமிழ்வளத்திற்க்கு பாடுபட நினைக்கும் உங்கள் அனைவருக்கும் என் நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்...!

மனோஜ்
08-09-2007, 08:27 AM
நானும் ஜு மெயிலில் தமிழை தோடி கிடைக்காவில்லை
ஒன்று படுவோம் செயல் படுவோம்