PDA

View Full Version : அந்தி வானம்....



ஷீ-நிசி
04-09-2007, 11:35 AM
http://i128.photobucket.com/albums/p163/shenisi/Photo%20Poems/EveningSky.jpg


அந்தி வானம்...

வானில் ஒரு கடல்சீற்றம்!
அங்குமிங்கும் சிதறியபடி,
எங்குமெங்கும் மேக அலைகள்...

அலைகின்ற ஒவ்வொரு
மேகலையும் சங்கமித்ததில்,
விலையற்ற ஓவியங்கள்,
ஒவ்வொன்றாய் கருவாகின!

உருவான கருயாவும்
கலைந்தபடியே இருந்தன!

கலைந்தாலும்... மேகங்கள்
அலைந்தபடியே இருந்தன!

ஏனிந்த சீற்றம்?!
ஏனிந்த மாற்றம்?!

அந்தரத்திலிருந்த கதிரவன்,
கடல் கன்னியின்,
அந்தப்புரத்தில் வீழ்ந்தானாம்!

மேகலையின் உடலெல்லாம்
கோபலைகளாய் மாறியது!

அந்த வானமானது,
அந்தி வானமானது!

Narathar
04-09-2007, 11:38 AM
http://i128.photobucket.com/albums/p163/shenisi/Photo%20Poems/Anthivaanam.jpg


அந்தி வானம்...


அந்தரத்திலிருந்த கதிரவன்,
கடல் கன்னியின்,
அந்தபுரத்தில் வீழ்ந்தானாம்!

மேகலையின் உடலெல்லாம்
கோபலைகளாய் மாறியது!

அந்த வானம்,
அந்தி வானமாகியது!

அதீத கற்பனை ஷி - நிசி

வாழ்த்துக்கள்........................

பென்ஸ்
04-09-2007, 11:43 AM
அற்புதம் ஷீ....

அருமையான சிந்தனை....

அந்தி வானம்
சிந்திய வர்ணம்
அலங்கோலமாய்....

காலைமுழுவதும்
உரசி சென்றவன்
மாலையில் அந்தபுரத்திலா..!!!

கோபலையாய் இந்த மேகலைகள்....

அட... உங்களை மிங்ச முடியுமா :−)

ஷீ-நிசி
04-09-2007, 11:46 AM
நன்றி நாரதரே (ஆச்சரியமா இருக்கே! கவிதைப்பக்கம்...)

நன்றி பென்ஸ்!

(நிறைய கவிதைகள் கோபித்துக்கொண்டிருக்கின்றன! உங்களின் விமர்சனம் இல்லாமல்..... )

Narathar
04-09-2007, 11:51 AM
நன்றி நாரதரே (ஆச்சரியமா இருக்கே! கவிதைப்பக்கம்...)


இந்த ளொள்ளு தானே வேணாங்கிறது???
எத்தனை பின்னூட்டங்க கொடுத்திருப்பேன்
சமயத்தில் கவிதை கூட எழுதுவேன்............
மன்ற நன்மைகருதி இப்போதைக்கு விட்டுவிட்டேன்

மன்மதன்
04-09-2007, 12:03 PM
அசத்துங்க ஷீ.. கதிரவன் அந்தப்புரத்திலிருப்பதை நீங்கள் பகிங்கிரமாக சொல்லிவிட்டபடியால் உங்கள் மேல் கோபமாக இருக்கிறானாம்..

ஷீ-நிசி
04-09-2007, 12:07 PM
இந்த* ளொள்ளு தானே வேணாங்கிற*து???
எத்த*னை பின்னூட்ட*ங்க*ள் கொடுத்திருப்பேன்
ச*ம*ய*த்தில் க*விதை கூட* எழுதுவேன்............
ம*ன்ற* ந*ன்மைக*ருதி இப்போதைக்கு விட்டுவிட்டேன்

நாரதரே! கவிதைப்பக்கம் நீங்கள் வருவதில்லை போல இருந்தது...

நாங்களும் கலகம் பன்னுவோம்ல....:icon_08:

மன்மதன்
04-09-2007, 12:07 PM
ச*ம*ய*த்தில் க*விதை கூட* எழுதுவேன்............
ம*ன்ற* ந*ன்மைக*ருதி இப்போதைக்கு விட்டுவிட்டேன்

ஹிஹி .. இது எனக்கும் பொருந்தும்.....:icon_08: :D

ஷீ-நிசி
04-09-2007, 12:08 PM
அசத்துங்க ஷீ.. கதிரவன் அந்தப்புரத்திலிருப்பதை நீங்கள் பகிங்கிரமாக சொல்லிவிட்டபடியால் உங்கள் மேல் கோபமாக இருக்கிறானாம்..

கைவசம் கடல் கன்னியிருக்குல்ல....:nature-smiley-002:

நன்றி மன்மதன்

இணைய நண்பன்
04-09-2007, 12:12 PM
அந்தி வானத்தின் இயற்கை தோற்றத்தை அற்புதமான கற்பனையில் கவிதையாக வடித்துவிட்டீர்கள்.பாராட்டுக்கள்...
(இதோ 200 இகாசு சன்மானம்)

ஷீ-நிசி
04-09-2007, 12:15 PM
நன்றி இக்ராம்

சிவா.ஜி
04-09-2007, 12:22 PM
அந்தி வானம்...
அலைகின்ற ஒவ்வொரு
மேகலையும் சங்கமித்ததில்,
விலையற்ற ஓவியங்கள்,
ஒவ்வொன்றாய் கருவாகின!
பார்ப்பவர் பர்வைக்கேற்ப பல வடிவங்கள் எடுக்கும் அந்த பஞ்சு மேகங்களைக் கருவாக்கிய கவிப்பார்வையை என்னென்று சொல்வது...?
உருவான கருயாவும்
கலைந்தபடியே இருந்தன!

அடடா கலையும் மேகங்கள் கவியின் பார்வையில் எப்படி தெரிகிறது..?

கலைந்தாலும்... மேகங்கள்
அலைந்தபடியே இருந்தன!

ஏனிந்த சீற்றம்?!
ஏனிந்த மாற்றம்?!

அந்தரத்திலிருந்த கதிரவன்,
கடல் கன்னியின்,
அந்தப்புரத்தில் வீழ்ந்தானாம்!
சீற்றத்திற்கும்,மாற்றத்திற்கும் இந்த கவிஞன் கண்டுபிடித்த காரணம் அசர வைக்கிறது.
மேகலையின் உடலெல்லாம்
கோபலைகளாய் மாறியது!

அந்த வானம்,
அந்தி வானமாகியது![/QUOTE]

ஷீ−நிசி...ஒரே வார்த்தையில் சொல்லவேண்டுமானால்....'அற்புதம்' கற்பனை கொஞ்சுகிறது.வார்த்தைக்கு வார்த்தை,வரிக்கு வரி அசத்தல் அதிகரித்துக்கொண்டே போகிறது.என்னிடம் தான் வார்த்தைகளில்லை பாராட்ட.வாழ்த்துக்கள் ஷீ

ஷீ-நிசி
04-09-2007, 12:30 PM
அந்தி வானம்...
அலைகின்ற ஒவ்வொரு
மேகலையும் சங்கமித்ததில்,
விலையற்ற ஓவியங்கள்,
ஒவ்வொன்றாய் கருவாகின!
பார்ப்பவர் பர்வைக்கேற்ப பல வடிவங்கள் எடுக்கும் அந்த பஞ்சு மேகங்களைக் கருவாக்கிய கவிப்பார்வையை என்னென்று சொல்வது...?
உருவான கருயாவும்
கலைந்தபடியே இருந்தன!


அழகாக, விமர்சனம் செய்தீர்கள் சிவா... நன்றி!

சாராகுமார்
04-09-2007, 01:56 PM
அந்தி மேகங்களே வாழ்த்துக்கள் திரு.நிசி அவர்களை.
அவர் கவிதை அழகு
அதின் பாங்கு அழகு
அதின் சுவை அழகு.

ஷீ-நிசி
04-09-2007, 02:02 PM
நன்றி சாரா

இலக்கியன்
04-09-2007, 04:51 PM
அந்தரத்திலிருந்த கதிரவன்,
கடல் கன்னியின்,
அந்தப்புரத்தில் வீழ்ந்தானாம்!

மேகலையின் உடலெல்லாம்
கோபலைகளாய் மாறியது!

அந்த வானம்,

அழகான கவிதைகள் படைத்தீர்கள்
நல்ல கற்பனை வளம் வாழ்த்துக்கள்
250 இ− பணம் அன்பளிப்பு

இளசு
04-09-2007, 09:38 PM
காட்சிகள் + கற்பனைகள் = ஷீயின் அழகிய(ல்) கவிதைகள்!

பாராட்டுகள் ஷீ!

(யாரோ பார்த்த வானம் என ஒரு சிறுதொடர் முன்பு தந்திருக்கிறேன்..
திஸ்கியை உருமாற்றும்போது வானம் தென்பட்டால் இங்கே தருவிப்பேன்..
அந்த வானம் − தொட்டுவிடும் தூரம்தான்...)

ஷீ-நிசி
05-09-2007, 03:50 AM
நன்றி இலக்கியன்....

நன்றி இளசு அவர்களே! (அந்த கவிதை கிடைத்தால் சுட்டி கொடுங்கள்)

lolluvathiyar
05-09-2007, 08:32 AM
இயற்கையின் அற்புதங்களை கான சலிக்காது
உதயம்
கரு மேகங்கள்
மின்னும் மேகங்கள்
அஸ்தமன்

இதை பார்க்க பார்க்க பொழுது போவது தெரியாது
ஷீ நிசி போன்றவர்கள் கவிதை கலக்கி கொண்டு வரும்

ஷீ-நிசி
05-09-2007, 08:44 AM
நன்றி வாத்தியார்

அக்னி
05-09-2007, 11:26 PM
வானும் கடலும்
சங்கமிக்கும் தூரத்தில்,
கதிரவன் தானும்,
சஞ்சலப்பட்டானோ...
இரண்டையும் தழுவிட...

வார்த்தையாடல்கள், மனதில் மெல்லிசையாய் கானமிசைக்கின்றது...
மனம் மெல்லிசாய் தாளமிட்டு ரசிக்கின்றது...

பாராட்டுக்கள் ஷீ−நிசி...

ஷீ-நிசி
06-09-2007, 04:03 AM
நன்றி அக்னி

சுகந்தப்ரீதன்
06-09-2007, 07:51 AM
அந்தரத்திலிருந்த கதிரவன்,
கடல் கன்னியின்,
அந்தப்புரத்தில் வீழ்ந்தானாம்!

அந்தரம்...அந்தபுரம்.... சொல்லடுக்கு சுவையாக உள்ளது கவிஞ்ரே.....எங்களுக்கும் கொஞ்சம் சொல்லிகொடுங்களேன்......

வாழ்த்துக்களுடன் ப்ரீதன்...

ஆதவா
06-09-2007, 08:04 AM
கவிதை எழுத எத்தனை காரணிகள் உள்ளன.!! சிலர் துவைத்த துணியையே துவைத்துக் கொண்டிருக்க, சற்றே வித்தியாசமாய் எழுதும் ஷீ-நிசியின் அந்தி வானம் உண்மையிலேயே அசந்தேன் நானும்..

வானில் ஒரு சீற்றம்... அதை அழகு படுத்த கடல் சீற்றமாய் வர்ணித்தது மிகவும் அழகு. மேகங்களைக் காணுகையில் இயற்கை எழுதிய நவீன ஓவியமோ என்று எண்ணுவதுண்டு... அதை அப்படியே விலையற்ற ஓவியங்கள் என்று கொடுத்த ஷீ-நிசியைக் கண்டு வியந்து நிற்கிறேன்...

மேக அலை - மேகலை.. அத்தோடு அது ஒரு பெண்ணாக உருவகித்தது... சிம்பிளீ சூப்பர்...

மேகக் கூட்டங்களை கடலாகவே வர்ணித்து இறுதிவரை செல்லுவது பிளஸ்.. அதிலும் கதிரவனின் மையலில் கோபம் கொண்டு வானம் சிவந்தது என்று சொன்னதே புதுமை....

மேகங்களைப் பற்றி எழுதலாம் எழுதலாம்.. எழுதிக் கொண்டே இருக்கலாம்... இயற்கை அளித்த நன்கொடை மேகங்கள்.. மேகங்கள் செய்த மோகங்களைப் பற்றி ஒரு கதையில் கொடுத்திருப்பேன்.. என்றாலும் வர்ணிப்பு இவ்வளவாக கொடுத்ததில்லை.. எவற்றோடு எவை பொறுந்தலாம் என்று பாடம் எடுத்துக் கொள்ளாலாம் அண்ணாரிடம்...

வானம் சிவக்கிறது. அதற்குப் பெயர் அந்தி வானம்... இதைக்கூட விட்டு வைக்காமல் கவிதையாக்குவதுதான் சிறந்த கவிஞருக்கு அழகு. (காட்சியழகுக் கவிஞராயிற்றே!!) நமக்கு கருக்கள் அங்கங்கே அலைந்தபடி இருக்கிறது. எடுத்து பேனாவில் பொறுத்திக் கொண்டு எழுத முன்வருவதே நாம் அடுத்த நிலை அடைவதற்கான வழி.....

வாழ்த்துக்கள். உடன் 500 பணம்.

ஷீ-நிசி
06-09-2007, 08:48 AM
நன்றி ப்ரீதன்...நான் கற்கவேண்டியதே நிறைய இருக்கிறது ப்ரீதன்...

---------------------


மேக அலை - மேகலை.. அத்தோடு அது ஒரு பெண்ணாக உருவகித்தது... சிம்பிளீ சூப்பர்...

விமர்சனங்களில் இது சொல்லபடுகிறதா என்று எதிர்பார்த்தேன்..

அழகான விமர்சனம் நன்றி ஆதவா...

அமரன்
15-09-2007, 09:44 PM
மேதினியின் மேற்பரப்பில் சஞசரிக்கும் உயிரிகளுக்கு கூரையான வானத்தில், சிதறிக்காணப்படும் மீன்களைவிட அதிகமான எண்ணிக்கையில்கவிதைகள் அங்கே சிறைப்பட்டுள்ளன. அவைகளை மீட்பது மெத்தக் கடினமானது. கடினங்களுடன் கற்பனை இரசாயனம் கலந்து இளகச்செய்து தாகம்தீர்க்கும் இளநீர்களாக பறிமாறுவது கவிகளுக்கு கைவரபெற்றது. அப்படி எமக்குக் கிடைத்த வரப்பிரசாதம் ஷீ. அவர் சிறைமீட்ட மோகம் கொள்ளவைக்கும் மேகக்கவிதை இது.....

கவிதையின் சுவையில் சொக்கி ஒவ்வொரு பின்னூட்டமாக படித்துக்கொண்டு வரும்போது மேகலை எனக்காக விடப்படுள்ளதோ என நினைத்து குதூகலித்தபோது ஆதவாவின் பதிவு கண்ணில் பட்டுவிட்டது..நண்பர்கள் விமர்சிப்பை விஞ்ச என்னிடம் ஒன்றுமில்லை..

ஓவியங்கள் கரையும்போது கோணல் அலை கோடுகளான வண்ணங்களால் புதிதாக ஒரு ஓவியம் உருப்பெறும். புதிய வர்ணம் கிடைக்கும். காலத்துளிகளால் அவை முற்றாகக் கலைக்கப்படும். வேறு சித்திரம் சுவரை கொஞ்சும். அதுபோன்ற ஒரு மனதை மயக்கும் மாண்பு ஆகாயத்துக்கு உருத்தானது. அந்திக்கு அது கிட்டத்து சொந்தமானது.

வேண்டாத விருந்தாளியான கடல் சுனாமியின் தாக்கத்தில் உலகமே அதிர்ந்தது.
ஷீயின் மேகச்சுனாமிக்கவிதையால் ஆனந்தமாக எனது உள்ளம் அதிர்கிறது.
பாராட்டுக்கள் ஷீ....

ஷீ-நிசி
29-10-2007, 04:19 PM
வாவ்!

சரியாக 43 நாட்கள் கழித்து பார்க்கிறேன்.. அமரன், உன் விமர்சனத்தை.....

என்ன அழகிய சொற்கள் கொண்டு பதமாய் அமைந்திருக்கிறது.

நன்றி அமரன்!

அறிஞர்
02-11-2007, 01:04 PM
சூரியன் மறைவதை.. இயல்பாய் பார்ப்போம்...

கவிஞனின் பார்வையில் வித்தியாசம்.......

வாழ்த்துக்கள்.. ஷீ-நிசி...

பிச்சி
04-11-2007, 09:28 AM
எப்படின்னா இப்படி எழுதறீங்க? சூப்பர். கவிஞனின் பார்வையே தனிதான். ட்வின்ஸ் வார்த்தைகளாக இருந்தாலும் குணம் மாறுபடுஇகிறது.

பிரமாதம்.

பிச்சி

ஷீ-நிசி
05-11-2007, 03:54 AM
நன்றி அறிஞரே! நன்றி பிச்சி!