PDA

View Full Version : நடமாடும் கடவுள் நாம்செக்

தங்கவேல்
04-09-2007, 02:45 AM
தமிழ் மன்றத்துக்கு வந்து பதிப்புகளை பதிந்து பின்னூட்டங்களை படித்து மகிழ்ந்து கொண்டிருந்தபோது நாம் செக் அறிமுகமானார். சென்னையில் வாசம் என்றதும் ஒரு பிடிப்பு வந்தது. தினமும் பேசாமல் தூங்குவதில்லை.
சில பல விஷயங்களை அலசி ஆராய்வோம். பேசுவோம் பேசுவோம் அப்படி பேசுவோம். திடீரென்று ஒருநாள் கோவையில் ஒரு தனியார் கம்பெனியில் பணி செய்து கொண்டு இருந்த என் உறவுக்கார பையன் ஒருவன் வீட்டிற்கு வந்து விட்டான். விசாரித்து பார்த்ததில் குறைந்த சம்பளத்தில் வாய்க்கும் கைக்கும் எட்டாமல் கஷ்டப்பட்டுகொண்டு இருந்ததாக சொன்னான். அந்த நேரம் பார்த்து நாம்செக் அவர்களின் அழைப்பு வர சும்மா தான் கேட்டேன் அவனுக்கு ஒரு வேலை சென்னையில் ஏற்பாடு செய்து தரலாமா என்று. பார்க்கிறேன் என்றார். பயோடேட்டாவை அனுப்பி வையுங்கள் ஏற்பாடு செய்யலாம் என்றார். அவரின் முகவரி வாங்கி கொண்டு , அடேய் பையா, இந்த முகவரிக்கு உனது பயோடேட்டாவை அனுப்பி வை. அவரே அழைப்பார் என்று சொல்லி விட்டு எனது பணியில் மூழ்கிவிட்டேன்.

ஐந்து நாட்கள் என் வீட்டில் இருந்த பையன் அவன் வீட்டிற்கு செல்வதாக சொல்லிவிட்டு சென்றான். இரவு பையனின் அப்பா அழைக்கிறார். இன்னும் அவன் வரவில்லையே என்று வேறு சொல்லி திக்திக் என்றாக்கினார். எங்கு போனான் ? என்ன ஆனான் ஒன்றும் தெரியவில்லை. ஒரே மர்மம். அவனின் அப்பா வேறு அடிக்கடி அழைத்து ஏதாவது போன் பன்னினானா என்று கேட்க எனக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது.

இரண்டு நாள் கழித்து நாம்செக் போன் செய்கிறார். எப்படி இருக்கீங்க ? என்ன பண்ணுறீங்க என்று கேட்டு விட்டு மெதுவாக பையன் இங்கு இருக்கிறான் என்கிறார். எனக்கு எப்படி இருக்கும் பாருங்கள். சரியான கடுப்பு அவன் மேல். அடி போடுங்கள் அவனுக்கு என்றேன். சிரிக்கிறார். சரி நான் பார்த்துகொள்கிறேன் அப்புறம் பேசலாம் என்று சொல்லிவிடுகிறார்.

இன்று காலை பையன் போனில் அழைக்கிறான். பெரிய கம்பெனியில் நேற்று வேலைக்கு சேர்ந்து விட்டதாகவும் நல்ல சம்பளம் என்று சொன்னான். உடனே இந்த பதிவு...

தமிழ் மன்றம் எப்படி எல்லாம் உதவுகின்றது பாருங்கள். ஒரு பையனுக்கு அவனது வாழ்வில் விளக்கேற்றி வைத்த நாம்செக் நடமாடும் கடவுள் தானே... ??

குறிப்பு : பதிவை பார்த்ததும் திட்டு வருமென்ற காரணத்தால் நாம்செக்கின் அழைப்பை அட்டண்ட் செய்யபோவதில்லை இரண்டு நாட்களுக்கு. அதற்குள் கோபம் தீர்ந்து விடும் அல்லவா ? வேறு வழியில்லை நாம்செக் என் நன்றியினை தெரிவிப்பதற்கு...கோபம் வேண்டாம்...

namsec
04-09-2007, 06:32 AM
மனிதனுக்கு மனிதன் செய்யும் உதவியே தவிர கடவுள் என்ற சொல் தவறு. நான் எப்பொழுதும் என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் அதுபோல் இதுவும் ஒரு உதவி

தயவுசெய்து கடவுள் என்றசொல்லை எடுத்துவிடவும்.

சூரியன்
04-09-2007, 06:39 AM
உதவும் மனம் அனைவருக்கும் வருவதில்லை.
பாராட்டுக்கள் நாம்செக்..

Narathar
04-09-2007, 06:41 AM
நல்ல விஷயம் செய்தீர்கள் நாம்செக்..............
உங்களைப்போன்ற நல்லவர்கள் மன்றத்தில் இருப்பதுதான் நமக்கு பலமே.....
முகம் தெரியாது விட்டாலும் நல்ல பல நண்பர்கள் நமக்கிருக்கின்றார்கள் என்ற நம்பிக்கை மனதுக்கு தெம்பளிக்கிறது

இதயம்
04-09-2007, 06:54 AM
மனிதனுக்கு மனிதன் செய்யும் உதவியே தவிர கடவுள் என்ற சொல் தவறு. நான் எப்பொழுதும் என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் அதுபோல் இதுவும் ஒரு உதவி

தயவுசெய்து கடவுள் என்றசொல்லை எடுத்துவிடவும்.

முற்றிலும் உண்மை.! இதை நான் எடுத்தவுடன் சொல்லக்கூடாது என்று தான் உங்கள் பதிலுக்காக காத்திருந்தேன் சித்தரே.! மனிதர்கள் தங்களுக்குள் உதவிக்கொள்வது என்பது தான் மனிதாபிமானம். ஆனால், உதவி செய்ததற்காக அவரை கடவுளாக்குவது என்பது எந்த வகையிலும் ஏற்கமுடியாதது. இது மனிதாபிமானம் செத்துக்கொண்டிருப்பதையே தெரிவிக்கிறது. மனிதர்கள் இப்படி உணர்ச்சிவசப்படுவதாலேயே கண்ணில் கண்டதெல்லாம் இன்றைக்கு கடவுளாகி கொண்டிருக்கிறது, கோயில் கட்டப்பட்டதாக சொல்லப்படும் நடிகையையும் சேர்த்து.!! இதை நான் தங்கவேலிடம் இருந்து எதிர்பார்க்கவேயில்லை. அவர் தன் நன்றியை தெரிவிக்க வேண்டும் என்றால் நாம்செக்கின் உதவியை என்றும் மறக்காமல் இருந்து காட்டுவதே சிறந்தது. அதை விடுத்து அவரை கடவுளாக்கியது கண்டிக்கத்தக்கது. மனித வழிபாடு இந்தியாவின் பல தீமைகளுக்கு ஊற்றுக்கண். விவரமறிந்த நண்பர்களே இப்படி செய்வது மிக வருந்ததக்கது.

கடவுள் என்ற சொல்லை மறுத்த நாம்செக்கின் பண்பு, எனக்கு அவர் மேல் இன்னும் மதிப்பை உயர்த்துகிறது. இறைவன் அவருக்கு மகிழ்ச்சியானதொரு வாழ்க்கையை அளிக்க வேண்டும் என்பது என் வேண்டுதல்.

ஆதவா
04-09-2007, 07:05 AM
இந்தமாதிரி கடவுள்கள் இங்கே பலருண்டு.. அதிலொன்று நாம்செக்....

பெருமையோடு மன்றமும்.... நானும்...

சிவா.ஜி
04-09-2007, 07:14 AM
நல்ல செயலை செய்யும் ஒவ்வொருவருமே கடவுள்களாத்தான் பார்க்கப்படுவார்கள்.அந்த காலத்தாற் செய்த உதவியை பெற்றவர்கள்..உதவி செய்தவரை அப்படி நினைப்பது எல்லா காலங்களிலும் நடப்பதுதான்.இது அவர் சார்ந்த சமயத்துக்கு ஒப்புதல் உள்ளதுதான். அதற்காக அவரின் கூற்று கண்டிக்கபடவேண்டியது என்பதெல்லாம் கொஞ்சம் அதிகம்.உதவி பெற்றவர் மனம் நெகிழ்ந்து இப்படி சொல்வதும்,உதவி செய்தவர் அதனை பெருந்தண்மையோடு மறுப்பதும் அவரவரின் விருப்ப செயல்கள்.தன் கருத்தை மற்றவர் மீது திணிப்பது தேவையில்லாத ஒன்று.நாம்செக் அவர்கள் செய்தது நல்ல ஒரு மனிதன் செய்யும் செயல்.அதற்காக அவருடன் நானும் இம்மன்றத்தில் இருப்பதை பெரிய பெருமையாகக்கருதுகிறேன்.வாழ்க நலமுடன் நாம்செக் அவர்களே.

மனோஜ்
04-09-2007, 07:26 AM
வாழ்த்துக்கள் நாம்சோக் தங்களின் இந்த உதவி சிறப்பானது
நல்லமனதுடன் செயல்பட்ட தங்களுக்கு எனது பாராட்டுகளும்

ஜோய்ஸ்
04-09-2007, 07:36 AM
மனிதனுக்கு மனிதன் செய்யும் உதவியே தவிர கடவுள் என்ற சொல் தவறு. நான் எப்பொழுதும் என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் அதுபோல் இதுவும் ஒரு உதவி

தயவுசெய்து கடவுள் என்றசொல்லை எடுத்துவிடவும்.

மிகச் சரியாகச் சொன்னீர்கள்.
ஆமாம் கடவுள் வேறு,மனிதன் வேறு.ஆனால் தாங்கள் ஒரு ஈகையுள்ள மனிதர் என்பதை நிரூபித்திருக்கிறீர்கள்.மனிதருள் மாணிக்கம் என்பேன் நான்.பிரதிபலன் எதிர்பாராமல் செய்யும் உங்கள் தொண்டுக்கும் உங்களுக்கும் இறைவன் நல்லருள் செய்ய பிராத்திக்கிறேன்.

இதயம்
04-09-2007, 07:38 AM
நல்ல செயலை செய்யும் ஒவ்வொருவருமே கடவுள்களாத்தான் பார்க்கப்படுவார்கள்.அந்த காலத்தாற் செய்த உதவியை பெற்றவர்கள்..உதவி செய்தவரை அப்படி நினைப்பது எல்லா காலங்களிலும் நடப்பதுதான்.இது அவர் சார்ந்த சமயத்துக்கு ஒப்புதல் உள்ளதுதான். அதற்காக அவரின் கூற்று கண்டிக்கபடவேண்டியது என்பதெல்லாம் கொஞ்சம் அதிகம்.உதவி பெற்றவர் மனம் நெகிழ்ந்து இப்படி சொல்வதும்,உதவி செய்தவர் அதனை பெருந்தண்மையோடு மறுப்பதும் அவரவரின் விருப்ப செயல்கள்.தன் கருத்தை மற்றவர் மீது திணிப்பது தேவையில்லாத ஒன்று.நாம்செக் அவர்கள் செய்தது நல்ல ஒரு மனிதன் செய்யும் செயல்.அதற்காக அவருடன் நானும் இம்மன்றத்தில் இருப்பதை பெரிய பெருமையாகக்கருதுகிறேன்.வாழ்க நலமுடன் நாம்செக் அவர்களே.

சித்தரைப்போல் நல்ல செயலை செய்தவர்கள் மட்டும் கடவுளாக பார்க்கப்பட்டால் பரவாயில்லையே..! கடவுளாக பார்க்கப்பட்டவர்கள் பெரும்பாலும் கெட்டவர்களாக தான் இருக்கிறார்கள்..!! நடிகைகள் என்ன நல்லது செய்து, அவர்களுக்காக மக்கள் கோயிலை கட்டுகிறார்கள் என்று சொல்லமுடியுமா..? நீங்கள் எழுதிய "நேரடி ஒளிபரப்பு" கதையில் வரும் போலி சாமியார் நல்லது செய்து கடவுளாக பார்க்கப்பட்டிருந்தால் ஏன் கதாநாயகன் அவன் வேஷத்தை எல்லோரின் முன் கலைக்கிறான்..? சிறைக்குள் போன பெரும்பாலான ஆன்மீகவாதிகள் நல்லது செய்ததால் தான் சிறைக்கு போனார்களா..? நல்ல நகைச்சுவை..! உதவிக்கான உபகாரத்தை வெளிப்படுத்த பல நல்ல வழிகள் இருக்கின்றன. அதை விடுத்து இப்படி செய்வதை கண்டு போலிகள் மகிழ்வார்கள். ஆனால், நல்லவர்கள் மகிழமாட்டார்கள். அதற்கு சித்தரே சிறந்த சாட்சி..!

சித்தரே அதை ஒப்புக்கொள்ளாத நிலையில் தான் நான் என் கருத்தை சொன்னேன். கடவுளாக குறிப்பிட வேண்டாம் என்ற அவரின் கருத்தை ஏற்பது தான் அவர் செய்த உதவிக்கு உபகாரமாக இருக்கும்.

alaguraj
04-09-2007, 07:45 AM
யார் யார் சிவம் நீ நான் சிவம்
வாழ்வே தவம் அன்பே சிவம்

இப்போ நாம்செக் அன்பு .........எதிர்பாராமல் செய்த உதவி சிவமாக தெரிகிறது...

தளபதி
04-09-2007, 08:10 AM
மனிதனுக்கு மனிதன் செய்யும் உதவியே தவிர கடவுள் என்ற சொல் தவறு. நான் எப்பொழுதும் என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் அதுபோல் இதுவும் ஒரு உதவி

தயவுசெய்து கடவுள் என்றசொல்லை எடுத்துவிடவும்.

மிகவும் சரி. சொல்பவருக்கு நன்றியைத் தெரிவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவரைப் புகழ கடவுள் என்ற சொல்லை பயன்படுத்தியிருக்கலாம். ஆனால், நாம் இதை அந்த சொல்லை ஒரு மன்றத்தில் வாங்குபவர் நிலையிலிருந்து யோசிக்கவேண்டும். :icon_hmm:

கடவுள் என்ற சொன்னால் அதை வாங்குபவர்க்கு பெரிய கூச்சமாகப் போகும். :redface:அதுவும் ஒரு மன்றத்தில் இவ்வாறு புகழப்பட்டால் பலர் கருத்துக்களாலும் சிலர் மனதிலும் எள்ளி நகையாடிவிடுவார்களே என்று பயமும் வரும். இது உதவி செய்தவருக்கு சங்கடமான சூழ்நிலையை ஏற்படுத்தும். :icon_03:

இதை அந்த சொல்லைப் பயன்படுத்துபவர் புரிந்துகொள்ள வேண்டும். இதை அவர் சித்தரிடம் நேரிடையாகச் சொல்லியிருந்தால் அவரும் அதற்கு அழகாக பதில் கொடுத்திருப்பார். ஆனால் ஒரு மன்றத்தில் வரும்போது ஒவ்வொருவரும் வித்தியாசமாக கருத்துக்கள் எடுக்க வாய்ப்பிருக்கிறது.:angel-smiley-004:

(நாம்செக்) சித்தர் உதவிசெய்யும் குணத்தையும், அவர் அதிகம் பேசாமல் "கடவுள்" சொல்லை எடுத்துவிடவும் என்று சொல்லியுள்ளது அவரது சங்கடத்தையும் பெருந்தன்மையையும் உணர்த்துகிறது. இதைப்பற்றி மேலும் விமர்சனங்கள் வருவதற்கு முன் நண்பர் தங்கவேல் நமது நண்பர் சித்தருக்கு சங்கடம் இல்லாமல் பதிவைத் திருத்திக் கொடுக்கலாம். :musik010:

நாம் சொல்லும் அனைத்துக் கருத்துக்களும் அனைவருக்கும் ஒத்துக் கொள்பவையாக இருக்காது. என் கருத்தில் தவறு இருப்பின் பொறுத்துக் கொள்ளவும். நண்பரே.!!:icon_good:

lolluvathiyar
04-09-2007, 08:15 AM
இளைஞனுக்கு வேலை கிடைக்க உதவிய தங்கவேலுக்கு நன்றி
தங்கவேலுக்கு உதவிய சித்தருக்கு நன்றி
இருவரையும் இனைத்த தமிழ்மன்றத்துக்கு நன்றி
தமிழ் மன்றம் அமைத்த நிர்வாகத்துக்கு நன்றி
அனைவரையும் நல்லபடி காக்கின்ற இரைவனுக்கு நன்றி

சிவா.ஜி
04-09-2007, 09:54 AM
சித்தரைப்போல் நல்ல செயலை செய்தவர்கள் மட்டும் கடவுளாக பார்க்கப்பட்டால் பரவாயில்லையே..! கடவுளாக பார்க்கப்பட்டவர்கள் பெரும்பாலும் கெட்டவர்களாக தான் இருக்கிறார்கள்..!! நடிகைகள் என்ன நல்லது செய்து, அவர்களுக்காக மக்கள் கோயிலை கட்டுகிறார்கள் என்று சொல்லமுடியுமா..? நீங்கள் எழுதிய "நேரடி ஒளிபரப்பு" கதையில் வரும் போலி சாமியார் நல்லது செய்து கடவுளாக பார்க்கப்பட்டிருந்தால் ஏன் கதாநாயகன் அவன் வேஷத்தை எல்லோரின் முன் கலைக்கிறான்..? சிறைக்குள் போன பெரும்பாலான ஆன்மீகவாதிகள் நல்லது செய்ததால் தான் சிறைக்கு போனார்களா..? நல்ல நகைச்சுவை..! உதவிக்கான உபகாரத்தை வெளிப்படுத்த பல நல்ல வழிகள் இருக்கின்றன. அதை விடுத்து இப்படி செய்வதை கண்டு போலிகள் மகிழ்வார்கள். ஆனால், நல்லவர்கள் மகிழமாட்டார்கள். அதற்கு சித்தரே சிறந்த சாட்சி..!

சித்தரே அதை ஒப்புக்கொள்ளாத நிலையில் தான் நான் என் கருத்தை சொன்னேன். கடவுளாக குறிப்பிட வேண்டாம் என்ற அவரின் கருத்தை ஏற்பது தான் அவர் செய்த உதவிக்கு உபகாரமாக இருக்கும்.

இது வேண்டாத வேலை.போலியும் நிஜமும் ஒன்றாக முடியாது.போலி யார் நிஜம் யார் என்று தெரியாத அளவுக்கு எங்கள் அறிவு சிற்றறிவு அல்ல.இந்த சந்தர்ப்பத்தில் ஒன்றை மட்டுமே சொல்ல நினைக்கிறேன்.
நீங்கள் புத்திசாலியாக இருக்கலாம் ஆனால் அடுத்தவர்கள் முட்டாள்கள் அல்ல. இந்த போக்கை விட வில்லையெனில் அது இந்த நாகரீகமுள்ள மன்றத்துக்கு ஒரு அசிங்கமாகிவிடும்.கண்டிப்பதற்கான உரிமை உங்களுக்கும் இல்லை எனக்குமில்லை அவரவர் அவரவருடைய எல்லயை உணர்ந்து கொள்ளுதல் மிக்க நலம்.

இதயம்
04-09-2007, 10:43 AM

தன் கருத்து தோல்வி தந்த கோபம் உங்கள் பதிலில் தெரிகிறது. அதனால் தான் ஒருவருக்கு சொல்லப்பட்ட கருத்தை ஒட்டுமொத்தமாக அனைவருக்கும் சொன்னதாக தோற்றமேற்படுத்தி உங்கள் கருத்துக்கு மற்றவர்களின் ஆதரவு தேட முயல்கிறீர்கள். அது கிடைக்காது. திரியின் நாயகரே என் கருத்தை தான் வலியுறுத்தி இருக்கிறார்.

நிஜம், போலி என்று தெரியும் அளவுக்கு நீங்கள் அதி புத்திசாலி தான். ஆனால், மன்றத்தில் பதிக்கும் கருத்துக்கள் எல்லாம் உங்களைப்போல் அதிபுத்திசாலிக்கல்ல, எங்களைப் போன்ற கற்றுக்கொள்பவர்களுக்கும் தான்.!! நீங்கள் இப்படி பேசி "எங்கப்பன் குதிருக்குள் இல்லை" என்காதீர்கள். நான் சொன்ன கருத்து தங்கவேல் என்ற தனி நபருக்கு தான், உங்களுக்கல்ல. அது புரியவில்லை உங்களுக்கு.! உங்களுக்கு அப்படி சொல்ல மாட்டேன், உங்களுக்கு தான் எல்லாம் தெரியுமே..! என் கருத்தில் தங்கவேல் அவர்கள் உடன்படாத பட்சத்தில் அதற்காக நான் வருத்தம் தெரிவிப்பேன். அது நட்பின் குறியீடு.

கருத்தை திணிக்க கூடாது என்று சொல்லிவிட்டு எனக்கு அறிவுரை வேறு. ஊருக்கு உபதேசம் வேண்டாம். உங்கள் அளவுக்கு என்னால் கீழிறங்க முடியாது. அதுமட்டுமில்லாமல் ஒரு நடந்த நன்மையை குறித்த திரி இது. அதை பாழ்படுத்த வேண்டாம்.!!

மன்மதன்
04-09-2007, 10:50 AM
மன்றம் மூலம் பல உறவுகள் கிடைத்திருக்கிறது..உதவிகளும் கூட. நாம்செக்கிற்கு எனது மனம்திறந்த நன்றிகள்..

தங்கவேல்
04-09-2007, 11:05 AM
தயவு செய்து மன்றத்தில் யாரும் வாக்கு வாதம் செய்ய வேண்டாம். யார் ஒருவர் மற்றவரின் துன்பத்தை துடைக்கின்றாரோ அவரே கடவுள் என்னைப்பொறுத்தவரை. என் உறவுக்கார பையன் ஒருவனின் வாழ்க்கைக்கு விளக்கேத்தி வைத்த நாம்செக் கடவுள் தான். மற்றவரின் துன்பத்தை துடைக்க விழையும் எவரும் கடவுள் தான். கோவிலுக்கு எதுக்கு செல்கிறார்கள்? தனது துன்பங்களை நீக்கி சந்தோஷமாக வாழவேண்டும் என்று வேண்டிக்கொள்வார்கள். கடவுள் அவரே வந்து உதவமாட்டார். மனிதர்களை அனுப்புவார். அவரைத்தான் கடவுள் என்கிறேன் நான்.....மன்ற நண்பர்கள் நான் சொல்லியதில் தவறு இல்லை என ஆமோதிப்பார்கள் என நம்புகிறேன்.

சிவா.ஜி
04-09-2007, 12:32 PM
உங்கள் நம்பிக்கையைத் தொடருங்கள் தங்கவேல். எந்த ஓட்டை சங்கின் நாராச சத்தமும் காதுகளில் விழாமல், அப்படியே விழுந்தாலும் அதைக் குப்பைக்கு அனுப்பிவிட்டு தொடருங்கள்.நல்லவர்களைத்தான் கடவுள் என்பார்கள் என்று சொல்லும் இந்த நல்லவர்கள்...ஒரு மகத்தான காரியம் செய்த நாம்செக் அவர்களை நல்லவர் இல்லையென்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார்.சிலருக்கு அவர்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு நம்பிக்கையில்லாத எதையும் செய்பவர்கள் முட்டாள்கள்.அதைப்பற்றி நமக்கு கவலையில்லை.சூரியனாய் இருப்போம்...மற்றவற்றைப்பற்றி கவலைப்பட வேண்டாம்.

அக்னி
04-09-2007, 01:46 PM
நண்பர்களே...
இது ஒருவர் தான் பெற்ற உதவியை, நன்றியறிவிக்கும் நிகழ்வு.
இதனில் வீண் விவாதங்களையும், கடுமையான வார்த்தைப் பிரயோகங்களையும் பிரயோகிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கின்றேன். கடும் வார்த்தைகள் பிரயோகிக்கப்படும் பதிவுகள் அகற்றப்படும்.

நன்றி!

பொறுப்பாளர்
~அக்னி

சாராகுமார்
04-09-2007, 02:50 PM
மன்றம் தந்த நல்ல நண்பர்.சேவை தொடரட்டும்.

ஓவியன்
04-09-2007, 02:56 PM
மன்றம் தந்த நல்ல உள்ளத்துக்கு நன்றிகளும் பாராட்டுக்களும்.........!

தொடர்ந்து, ஒரு நல்ல திரியிலே இடம் பெற்ற வாக்குவாதங்கள் என்னை மனம் வருந்த வைத்தன, இனிமேலும் இவ்வாறான வீண் வாதங்கள் இங்கே தேவையில்லை. சரியான நேரத்திலே திரியை அது தொடங்கப் பட்ட நோக்கின் திசையிலே பயணிக்க வைத்த அக்னிக்கு நன்றிகள்!. :icon_good:

பாரதி
04-09-2007, 05:23 PM
எதையும் எதிர்பார்க்காமல், உதவி செய்யும் மனப்பாங்கு கொண்ட நாம்செக் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் உரித்தாகட்டும். உங்களை மன்றத்தில் உறவாய் அடைந்ததற்கு பெருமை கொள்கிறோம் நண்பரே.

அக்னி
04-09-2007, 05:24 PM
உதவும் கரங்கள் என்றும் மேன்மையும் நிறைவும் பெற்று, நீடூழி வாழ வாழ்த்துகின்றேன்...