PDA

View Full Version : பிரிந்த உறவுக்கு...!சிவா.ஜி
03-09-2007, 12:16 PM
உறவுகள் பிரியும் வேதனை
மனதுக்கு ஏற்படும் சோதனை!
கூடிக் குதூகலித்து
ஆடி அகம் களித்து
வாழ்ந்த தருணங்கள்....
காட்டுகின்றது கரணங்கள்!
பிரிவுக்கு எத்தனையோ
தனிக் காரணங்கள்....!
நகையாடி,விளையாடி,
உறவு உணர்ந்து,
உள்ளம் மகிழ்ந்து,
கழிந்த நிமிடங்கள்
இனி இழந்த நினைவுகள்தானா?
நட்பான அந்த
நல்லுறவு நாளையேனும்
வருமென்ற
எதிர்பார்ப்புதான்
காயமடைந்த இதயத்துக்கு
களிம்பாகிறது.........................!

அக்னி
03-09-2007, 12:21 PM
பிறக்கும்போது,
தொப்புள்கொடியில்
தொடங்கும் பிரிவு...
இறக்கும் போது,
உயிர் பிரிகை வரை
தொடர்கின்றதே...

இடைப்பட்ட வாழ்வில்,
சேர்வதே பிரிவதற்காகவா...
பிரிவதே சேர்வதற்காகவா...
என்று,
சோர்ந்த மனதோடு,
வாழும் மனிதர்கள்...

பாராட்டுக்கள் சிவா.ஜி...

சிவா.ஜி
03-09-2007, 12:32 PM
ஆஹா அருமையான அதே அக்னியின் அசத்தல் பின்னூட்டக் கவிதை.பாராட்டுக்கள் மற்றும் நன்றிகள் அக்னி.

இதயம்
03-09-2007, 01:38 PM
இறுகும் என்ற நினைத்து நட்போடு
இணைந்திருக்கும் வேளையில் - உறவு
உருகும் சூழ்நிலை வந்து
உள்ளம் துடிக்க வைத்ததேன்..?

அன்பு என்ற மூன்றெழுத்தால்
ஆதரித்த நீ - இரக்கமின்றி
பிரிவு என்ற மூன்றெழுத்தை தந்து
பித்துப்பிடிக்க வைத்ததேன்..?

முகம் காணாமல் நட்பென்ற மலர்
முழு மதியாய் தோன்றியதில் மகிழ்ந்தேன்.
முடிவில் அதனுள் பிரிவென்ற கொடு முள்
முளைத்து உதிரம் கசிய நின்றேன்.

மன்றத்தால் மனம் நிறைந்த நான் - பிரிவில்
கொண்ட துயர் கண்டு துடித்து நிற்கிறேன்.!
சூழ்நிலையின் சூழ்ச்சியா இது? - அல்லது என்
ஊழ்வினையின் உச்ச தண்டனையா?

என்னென்று சொல்வேன் என் நிலையை..?
என் உயிர் ஊசலாடுது நட்பின் பிரிவில்..!
கண்ணை விட்டு இமை நீங்கலாம்
என்னை விட்டு இனிய நட்பு நீங்கலாகுமோ..?

நீங்குதல் என்பது நெஞ்சின் நிம்மதிக்கு எதிரி..!
ஏங்கி நிற்கும் என் நிலை உணர்ந்து - உயிர்
தாங்கிப்பிடித்து இந்நிலை போக்க
நீங்கா நட்பே மீண்டு(ம்) நீ வருவாயா..?

சாராகுமார்
03-09-2007, 01:54 PM
அய்யோ!எந்த கவிதையை படிப்பது, எதை ரசிப்பது என்றே தெரியவில்லை.முன்றும் வித்தியாசம்.முன்றும் அருமை.சிவா.ஜி,அக்னி,இதயம் முன்று பேருக்கும் வாழ்த்துக்கள்.அருமை.

தங்கவேல்
03-09-2007, 02:09 PM
ஓவியாவுக்கு இந்த கவிதைகள். அடடா... கொன்னுட்டீங்க மூன்று பேரும். ஓவியாவை நினைச்சாத்தான் கவலையா இருக்கு. என்ன ஆச்சோ ஏதாச்சோ தெரியலை.. ஒன்னும் சொல்ல மாட்டேன் என்று சொல்லிவிட்டார்கள். என்ன பன்றது. எங்கிருந்தாலும் நல்லா இருக்கட்டும்.. என்ன நாஞ்சொல்லுறது சரிதானே...

ஆதவா
03-09-2007, 02:11 PM
நினைத்தேன் இப்படி கவிதைகள் வரும் என்று... கவிஞர்கள் என்ன நினைத்தாலும் சரி... எனது கருத்து : இதற்கெல்லாம் கவிதை எழுதுவது அர்த்தமற்றது... (ஓவியாவைக் காரணமிட்டு எழுதின கருத்திற்கு...)

சிவா.ஜி
03-09-2007, 02:16 PM
நினைத்தேன் இப்படி கவிதைகள் வரும் என்று... கவிஞர்கள் என்ன நினைத்தாலும் சரி... எனது கருத்து : இதற்கெல்லாம் கவிதை எழுதுவது அர்த்தமற்றது... (ஓவியாவைக் காரணமிட்டு எழுதின கருத்திற்கு...)

ஓவியா என்று மட்டுமில்லை ஆதவா,பொதுவாக எந்த உறவின் பிரிவும் வலிதானே.அதனாலதான் பொதுவாக எழுதினேன்.பாதிக்கும் எதையும் கவிதையில் வடிப்பது வாடிக்கைதானே....இதில் அர்த்தமுள்ளது,அர்த்தமற்றது என்ற வித்தியாசமில்லை.

இதயம்
03-09-2007, 02:22 PM
நினைத்தேன் இப்படி கவிதைகள் வரும் என்று... கவிஞர்கள் என்ன நினைத்தாலும் சரி... எனது கருத்து : இதற்கெல்லாம் கவிதை எழுதுவது அர்த்தமற்றது... (ஓவியாவைக் காரணமிட்டு எழுதின கருத்திற்கு...)

மன உணர்வின் மறு பிரதிபலிப்புகள் தான் படைப்புகள். குறிப்பாக, கவிஞர்கள் எளிதில் உணர்ச்சி வசப்படுபவர்கள் என்பதால் சிறு விஷயமும் அவர்களை வெகுவாக பாதித்து அதை தன் கவிதைகள் மூலம் வெளிப்படுத்த வைத்துவிடுகிறது. நம் மன்றம் வெறும் தகவல்களை மட்டும் பகிர்ந்து கொள்ளும் தளமல்ல, மன உணர்வுகளையும் கூட தான். அந்த வகையில் நட்பின் பிரிவு என்பது மிகப்பெரிய இழப்பு..! நட்பின் ஆழத்தை பொறுத்து அதன் தாக்கம் வேறுபடுகிறது. இங்கு ஓவியாவின் பிரிவு கவிதைகளை உருவாக்கியிருக்கிறது என்றால் அது நட்பின் ஆழத்தை குறிப்பிடுகிறதே தவிர வேறில்லை.!!

இந்த கவிதைகளில் ஓவியாவின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தால் அதை விமர்சிக்க வழி உண்டு. காரணம், நட்பும், பிரிவும் மன்றத்தில் சகஜமென்பதால்..! ஆனால், நம் நண்பர்கள் நாலும் அறிந்தவர்கள் என்பதால் இதை நட்பின் பிரிவு என்ற கண்ணோட்டத்தினோடே பார்த்து கவி எழுதியிருக்கிறார்கள். எனவே, ஆழ்ந்த நட்பு கொண்டவர்கள் தன் எண்ணத்தை பிரதிபலிக்க இங்கே கவி புனைவது தவறாக படவில்லை. இதை ஓவியாவின் பிரிவாக மட்டும் பார்க்காமல், நல்ல நட்பின் பிரிவாக பாருங்கள். இந்த கவிதைகளுக்கு முழு அர்த்தம் கிடைக்கும்.

ஆதவா
03-09-2007, 02:31 PM
அவர்தான் தற்காலிக பிரிவு என்று சொன்னாரே! அதற்கு கவிதை தேவையில்லையே!!...

அடைப்புக் குறிக்குள் குறிப்பிட்டபடி, ஓவியாவின் பிரிவாக இருப்பின் அது அர்த்தமற்றது.... (எஸ்கேப் ஆகறதுக்கு வழி வெச்சோம்ல..)

அங்கே அவ*ர் பிரிய*, இங்கே அதுபோல*வே க*விதை தோன்ற*,, ந*ண்ப*ர் சிவாஜி. நீங்க*ள் உண்மையைச் சொல்லுங்க*ள். ஓவியாவை குறிவைத்துதானே எழுதினீர்க*ள்??? போக*ட்டும். அது என் க*ருத்து... என*க்கு அர்த்த*ம*ற்ற*தாக*த் தெரிகிற*து... (கவிஞர்கள் மன்னிக்கவும்..)

சிவா.ஜி
03-09-2007, 02:39 PM
உண்மைதான் ஆதவா,ஓவியாவை நினைத்துத்தான் எழுதினேன்.அதேசமயம் இது பொதுப்படையாக இருக்க வேண்டுமென்றும் நினைத்துத்தான் பெயரோ மற்ற அவரைக் குறிப்பிடும் எந்த குறிப்புகளும் இல்லாமல் எழுதினேன். அக்னியின் கவிதையையும் பாருங்கள்...பிரிவைப் பற்றி மட்டும்தான் எழுதியிருக்கிறார்.இதயம் சொன்னதுபோல் கவிஞர்கள் கொஞ்சம் சீக்கிரமே உணர்ச்சிவசப்பட்டுவிடுவார்கள்(இந்த சாக்குலயாவது கவிஞர்ன்னு சொல்லிக்கிறோம் கண்டுக்காதீங்க ஆதவா...)

ஆதவா
03-09-2007, 02:42 PM
உண்மைதான் ஆதவா,ஓவியாவை நினைத்துத்தான் எழுதினேன்.அதேசமயம் இது பொதுப்படையாக இருக்க வேண்டுமென்றும் நினைத்துத்தான் பெயரோ மற்ற அவரைக் குறிப்பிடும் எந்த குறிப்புகளும் இல்லாமல் எழுதினேன். அக்னியின் கவிதையையும் பாருங்கள்...பிரிவைப் பற்றி மட்டும்தான் எழுதியிருக்கிறார்.இதயம் சொன்னதுபோல் கவிஞர்கள் கொஞ்சம் சீக்கிரமே உணர்ச்சிவசப்பட்டுவிடுவார்கள்(இந்த சாக்குலயாவது கவிஞர்ன்னு சொல்லிக்கிறோம் கண்டுக்காதீங்க ஆதவா...)

அந்த உணர்ச்சியிலேதான் சிவா அவர்களே நானும் எழுதினேன். எனக்கு அவரின் பிரிவும் அதற்கான பதிவும் பிடிக்கவில்லை. என்னைப் பொறுத்தவரையிலும் மிகச் சரியான காரணம் பிரிவிற்கு இல்லை. அவர் மன்றம் வந்தால் மகிழ்ச்சியே! இங்கே யாராவது அவரை துன்புறுத்தியிருக்கவேண்டும்... அந்த பதிவருக்கு எனது கண்டனம். அவர் சொல்லுவது போல சொந்த அலுவல்தான் காரணம் என்றால் அவர் இணையெமே திறக்கப் போவதில்லையோ???? மேலும் விவாதம் சொல்ல விருப்பமின்றி கவிதைகள் தொடரட்டும்....

அக்னி
03-09-2007, 02:49 PM
ஆதவாவின் அதே மனவோட்டம் என்னிடமும்...

ஆதவா
03-09-2007, 02:51 PM
ஆதவாவின் அதே மனவோட்டம் என்னிடமும்...

இதுக்குத்தாங்க ஓவரா சகவாசம் வெச்சுக்கக்கூடாதுங்கறது.... ரொம்பவே உணர்ச்சிவசப்பட்டுடறோம்

இதயம்
03-09-2007, 02:56 PM
கவிதைகள் என்பவை மனிதனின் அதிக அளவிளான எண்ண பிரதிபலிப்பு.! அது கவிதைக்கே உரிய இலக்கணம். இல்லையென்றால் காதலியின் முகத்தை நிலவோடு ஒப்பிடுவோமா..? அப்படி தான்..! ஓவியாவின் பிரிவு என்பது இங்கு தற்காலிகமானது தான். அதை கவிதையில் சொன்னதில் தான் ஆதவன் ஆடிவிட்டார். இதே கருத்தை நாங்கள் அவர் பிரிவு திரியில் எப்படி சொல்லியிருக்கிறோம் என்று போய் பாருங்கள். நாங்கள் சரியாகத்தான் பின்னூட்டம் இட்டோம். கவிதையையும்(!) படைத்தோம். உங்கள் பார்வையில் தான் கோளாறு சோடாபுட்டி ஆதவா..!!

ஆதவா
03-09-2007, 03:02 PM
கவிதைகள் என்பவை மனிதனின் அதிக அளவிளான எண்ண பிரதிபலிப்பு.! அது கவிதைக்கே உரிய இலக்கணம். இல்லையென்றால் காதலியின் முகத்தை நிலவோடு ஒப்பிடுவோமா..? அப்படி தான்..! ஓவியாவின் பிரிவு என்பது இங்கு தற்காலிகமானது தான். அதை கவிதையில் சொன்னதில் தான் ஆதவன் ஆடிவிட்டார். இதே கருத்தை நாங்கள் அவர் பிரிவு திரியில் எப்படி சொல்லியிருக்கிறோம் என்று போய் பாருங்கள். நாங்கள் சரியாகத்தான் பின்னூட்டம் இட்டோம். கவிதையையும்(!) படைத்தோம். உங்கள் பார்வையில் தான் கோளாறு சோடாபுட்டி ஆதவா..!!


இத*ய*ம் அவ*ர்களுக்கு.....

எந்த* சூழ்நிலையிலிருந்து ம*ற்றும் எப்ப*டி நான் எழுதுகிறேன் என்ப*து உங்க*ளுக்குத் தெரியாது... அவ*ர*து பிரிவுக்கு ஒருசில* கார*ண*ங்க*ள் நானாக*வும் இருக்க*க் கூடும்... மேலும் நான*றிந்த* த*க*வ*ல்க*ளை இங்கே இட*வும் முடியாது. ஆக*வேதான் என*து கோப*ங்க*ள் இப்ப*டி கொப்ப*ளிக்கின்ற*ன*.

ஷீ-நிசி
03-09-2007, 03:04 PM
ஆதவா... உன் கருத்தை வழிமொழிகிறேன்...

இதில் அவர்கள் பிரிவதற்கே வாய்ப்பே இல்லை... இணையம் என்ற ஒன்று இருக்கும்வரையிலும் ஓவியா நம்மை விட்டு பிரியவேண்டிய அவசியமில்ல்லை....

மனோஜ்
03-09-2007, 03:10 PM
பிரிவு என்று ஒற்றை வார்த்தையில்
உறவு என்ற மனஅமைதியை குலைத்தாலும்
வரவு என்ற சொல் அமைதியாக்கும்
பொரு என்ற வார்தையை எதிர்பார்த்து காத்திருப்போம்

சுகந்தப்ரீதன்
04-09-2007, 03:32 AM
நல்லுறவு நாளையேனும்
வருமென்ற
எதிர்பார்ப்புதான்
காயமடைந்த இதயத்துக்கு
களிம்பாகிறது.........................!

மிக அருமையான யதார்த்தமான முடிவு....

நாளை என்ற நினைப்பிலேயே நாளை கடத்துகிறோம்!

வாழ்த்துக்கள் சிவா,...!

தளபதி
04-09-2007, 04:25 AM
ஒரு நல்ல பங்களிப்பார் இருந்தார். நல்லது. பிரிந்தார். வாழ்த்துவோம். வந்தால் வரவேற்போம். :icon_good:

கவிஞர்கள் தங்களைப் பாதித்ததால் கவிதை எழுதுகிறார்கள். இதுவும் சரியே. :icon_08:

இதற்கெல்லாம் டென்சன் எடுத்துக்காதீங்க என்ற ஆதவா கூற்றிலும் உண்மை உள்ளது. :icon_v:

எது நடந்ததோ அது நல்லதாகவே நடந்தது.
எது நடக்கிறதோ அது நல்லதாகவே நடக்கிறது.
எது நடக்குமோ அதுவும் நல்லதாகவே நடக்கும்.:icon_hmm:

சிவா.ஜி
04-09-2007, 04:40 AM
ரொம்ப நல்லது கிருஷ்ணபரமாத்மாவே...நல்லதையே நினைப்போம்.

ஓவியன்
04-09-2007, 04:49 AM
அன்பான சிவா!

இந்தக் கவிதைக்கு இப்போது பின்னூட்ட*மிட முடியாத அளவுக்கு மனசு சரியில்லை.....
(இப்போது உள்ள மன நிலைக்கு அது நலனாக அமையாது.......!)
அப்புறமாக வருகிறேனே.........!

என்னை மன்னியுங்கள்!.

இதயம்
04-09-2007, 04:51 AM
இத*ய*ம் அவ*ர்களுக்கு.....

எந்த* சூழ்நிலையிலிருந்து ம*ற்றும் எப்ப*டி நான் எழுதுகிறேன் என்ப*து உங்க*ளுக்குத் தெரியாது... அவ*ர*து பிரிவுக்கு ஒருசில* கார*ண*ங்க*ள் நானாக*வும் இருக்க*க் கூடும்... மேலும் நான*றிந்த* த*க*வ*ல்க*ளை இங்கே இட*வும் முடியாது. ஆக*வேதான் என*து கோப*ங்க*ள் இப்ப*டி கொப்ப*ளிக்கின்ற*ன*.

இந்த விஷயத்தில் மேலிடத்து விவகாரம் சம்பந்தப்பட்டிருக்கிறது என்பதும், இதன் பின்னணியில் ஏதோ ஒரு வலுவான காரணம் இருப்பதும் புரிகிறது. இதை சம்பந்தப்பட்டவர்கள் வெளிப்படுத்த விரும்பாததால் அதை நாம் தோண்ட தேவையில்லை. ஆனால், இந்த விலகல் குறித்து கவிதை எழுதியவர்களில் நானும் ஒருவன் என்பதால் ஒரு விஷயத்தை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். நம் மன்றத்தில் அதிக பங்களிப்பை அளித்த, நட்பு பாராட்டிய யார் விலகினாலும் அது நமக்கு வருத்தம் தான். அதை வெளிப்படுத்த பதிவுகள் ஏற்படுத்துவதும் இயல்பு. அந்த வகையில் தான் இந்த திரியும். ஒருவேளை ஓவியாவோ, அல்லது சம்பந்தப்பட்டவர்களோ விலகலின் உண்மையான காரணத்தை முன்பே சொல்லியிருந்தால் அதற்கு தகுந்தாற்போல் பதிவுகள் வந்திருக்கும்.

எப்படியோ மன மாச்சரியங்கள் மறைந்து மன்றத்திற்கு திரும்ப வேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பமும், இது ஓவியாவுக்கு மட்டுமல்ல, விலகிய வித்தகர்கள் அனைவருக்கும்..!

இலக்கியன்
04-09-2007, 08:09 AM
நாம் நண்பர்கள் ஆகும் போது தெரிவதில்லை பிரிவின் வலி
தோழியின் மனம் மாறவேண்டும் என்பதே எம் ஆவல்

lolluvathiyar
09-09-2007, 12:36 PM
சிவாஜி பொதுவா தானே பிரிவை பற்றி எழுதினார்
ஆதற்க்குதானே அக்னியும் பின்னூட்டார்.
பின்னால் இதயமும் சொல்லாமால் பின்னீட்டார்.
ஆனா என்ன எல்லாரும் ஒரே திசை திருப்பீட்டீங்களே.
கவிதை அனைத்தும் மனதை தொட்டு விட்டது