PDA

View Full Version : குழாய் நீர்



ப்ரியன்
03-09-2007, 11:39 AM
உச்சிப் பொழுதினில்
எட்டி குதித்து
கொட்டமடித்த
அதே ஆற்றின்
நீர்தானென்றாலும்,
குளோரின் கலந்து
குழாயில் வரும் அதனில் இல்லை
பழைய வாசம்!

- ப்ரியன்.

சிவா.ஜி
03-09-2007, 11:53 AM
குதித்துக் குளித்து,
கொட்டமடித்த அந்த
குதூகலத்தின் வாசமில்லா
குழாய்நீர்........
அருமையான மீள் நினைவுடன் ஒரு அழகிய கவிதை.வாழ்த்துக்கள் ப்ரியன்.

இணைய நண்பன்
03-09-2007, 12:05 PM
வாழ்த்துக்கள் ப்ரியன்

இலக்கியன்
04-09-2007, 07:49 AM
வாழ்த்துக்கள் பிரியன்

பென்ஸ்
04-09-2007, 10:01 AM
கூவத்தில் துவங்கியது
இனி அது காவேரியாகி...
கண்ணிரில் முடியும் பாருங்கள்...

தாமரை
04-09-2007, 10:19 AM
ஆற்றிலும் இல்லை
குழாயிலும் இல்லை
கண்களில் மட்டும்
நீர்!

lolluvathiyar
04-09-2007, 10:27 AM
அருமை பிரியன், வளர்ச்சி என்ற பெயரில் தன்னீரை மாசு படுத்தி பிறகு அதை சுத்தம் செய்ய மீண்டும் கெமிகல் கலந்து தரும் அவலம் ஆரம்பித்து விட்டது. இனி எங்கு போய் முடியுமோ

(இது தான் நான் முதல் முதலி படித்த உங்கள் பதிவு என்று நினைகிறேன்)

மன்மதன்
04-09-2007, 12:09 PM
க்ளோரின் தண்ணீர் பற்றிய கவிதை.. மறைமுகமாக சிவாஜி படத்தை குறிக்கிறதோ.. பாராட்டுகள் பிரியன்..

இளசு
05-09-2007, 07:17 PM
செயற்கையான பாதுகாப்பு மாற்றம்
இயற்கை ரசிகனுக்கு ஏமாற்றமே!


அக்கால காலரா, பேதியை மறந்துவிட வேண்டாம்!
ஊரே கொள்ளைபோன காலங்கள் இனி வரவேண்டாம்!

இந்தச் சிறிய விலை அந்தப் பெரிய லாபத்துக்கென்றால்
மூக்கை மூடியபடி அருந்திவிட நான் தயார்!


பாராட்டுகள் ப்ரியன்!

அக்னி
06-09-2007, 08:13 AM
குளிரூட்டப்பட்ட நீரை,
காசு கொடுத்து பருகினாலும்,
தெள்ளிய நீர் நிலைகளில்,
நனைந்தபடி,
கைகளினால் அள்ளிப் பருகும்
சுகம் வருமா..?
அச்சுகமே ஓர்
அலாதிதான்...

பாராட்டுக்கள் ப்ரியன்...