PDA

View Full Version : நீЕ



рокрпНро░ро┐ропройрпН
03-09-2007, 11:22 AM
*

நீ
என் கண்ணீர்துளிகளின்
பிரதி!

*

நீ
மின்னல் வரைந்த
ஓவியம்!

*

நீ
காதல் வரைந்த
கடிதம்!

*

நீ
உயிர் நெய்யில் எரியும்
சுடர்!

*

நீ
என் கண்ணீரின்
கடல்!

*

роЪро┐ро╡ро╛.роЬро┐
03-09-2007, 11:55 AM
மீண்டுமொரு நீ.....கவிதை...புதுப்பொலிவுடன்.ஒவ்வொருமுறையும் அழகான உவமைகளுடன் வரும் உங்கள் கவிதை அழகு.பாராட்டுக்கள் ப்ரியன்.

Narathar
03-09-2007, 01:13 PM
நீ
நம் மன்றத்தின்
எதிர்காலம்.

роЕро░роЪройрпН
03-09-2007, 01:30 PM
நீ! கவிதை அருமை. வாழ்த்துக்கள் ப்ரியன்

родро│рокродро┐
03-09-2007, 01:49 PM
நீ
நீங்காத எந்தன்
நினைவு.

роЪро╛ро░ро╛роХрпБрооро╛ро░рпН
03-09-2007, 01:57 PM
நீ
என்றும்
என் நினைவு.

ப்ரியன் உங்கள் காதல் கவிதை அருமை.

роЪрпБроХроирпНродрокрпНро░рпАродройрпН
04-09-2007, 03:29 AM
நீ...
மொத்ததில்
நீயல்ல நான்!

வாழ்த்துக்கள் ப்ரியன்!

рокрпЖройрпНро╕рпН
04-09-2007, 07:11 AM
ப்ரியன்...

இவற்றை என்னால் உவமைகளாக மட்டுமே பார்க்க முடிந்தது... கவிதையாக அனுபவிக்க முடியவில்லையே நண்பா...

роЗро▓роХрпНроХро┐ропройрпН
04-09-2007, 08:04 AM
நீ கவிதை அருமை பாராட்டுக்கள்

рооройрпЛроЬрпН
04-09-2007, 08:08 AM
நீ
என் கவிதையின்
பிரப்பிடம்

அருமை கவிதை வாழ்த்துக்கள்

reader
04-09-2007, 01:02 PM
உங்களது கவிதை பரவாயில்லை ரகம் தான் தலைவா

роЗро│роЪрпБ
05-09-2007, 06:04 AM
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11698

ப்ரியன்..

ஒரு தொடர் சிற்றிலக்கியம் படைக்கும் முயற்சிக்கு வாழ்த்துகள்!

மேலே உள்ள சுட்டியில் உங்களுடன் இணைந்து இக்ராம், இதயம், பூமகள்
தொடுத்த சின்ன சின்ன பூக்களைப் பார்த்தீர்களா?

இத்தனை பேரை இத்தனை முறை எழுதவைத்ததிலேயே
இந்தக் கவிதை பாணியின் வெற்றியை அறியலாம்!

рокрпНро░ро┐ропройрпН
05-09-2007, 07:59 AM
ப்ரியன்...

இவற்றை என்னால் உவமைகளாக மட்டுமே பார்க்க முடிந்தது... கவிதையாக அனுபவிக்க முடியவில்லையே நண்பா...

அன்பின் பென்ஸ்,

உண்மையான விமர்சனம் தந்தமைக்கு நன்றி...

எனக்கும் வந்தது , மற்ற விமர்சனங்களையும் பதில் கவிதைகளையும் பார்த்த போது இது வெறும் உவமையாக மட்டும் எடுத்துக் கொள்ளப்பட்டதோ என்ற சந்தேகம்.

உண்மையில் இதை ''கஸல்'' வகை கவிதை முயற்சியாகதான் செய்தேன் சரியாக வரவில்லை என நினைக்கிறேன். :) ...ஆனாலும் இதே வகையில் இன்னும் 20 கவிதைகள் இருக்கு இட்டுவிடுகிறேன்...பொறுத்தருள்க...

рокрпНро░ро┐ропройрпН
05-09-2007, 08:05 AM
*கஸல்*


காதலியுடன் பேசுதல்
--------------−−−−

'கஸல்' அரபியில் அரும்பிப் பாரசீகத்தில் போதாகி உருதுவில் மலர்ந்து மணம் வீசும் அழகான இலக்கிய வடிவம்.அதன் சுதந்திரமும் மென்மையும் நளினமும் நவீனத்துவமும் எனக்கு மிகவும் பிடிக்கும்.

தமிழில்'கஸல்' எழுத வேண்டும் என்ற என் விருப்பம் இந்த தொகுதியில் நிறைவேறியிருக்கிறது.தமிழில் 'கஸல்' என்ற பேரில் ஓரிரு தொகுதிகள் வந்திருந்தாலும் இதுவே தமிழில் முதல் 'கஸல்' தொகுதி.

'கஸல்' என்றாலே 'காதலியுடன் பேசுதல்' என்று பொருள்.கஸல் பெரும்பாலும் காதலையே பாடும்;அதுவும் காதலின் சோகத்தை.காதலில் புன்னகைகளை விடக் கண்ணீர்தானே அதிகம்.காதலின் சோகம் என்பது உண்மையில் சோகம் அல்ல;சுகம்.மேலும் சோகம்தான் காதலின் ஆழத்திற்கு அழைத்துச் செல்கிறது.இந்த தொகுதியிலும் சோகக் கவிதைகளையே அதிகமாகக் காண்பீர்கள்.


இந்த வயதில் காதல் கவிதைகளா என்று கேட்டார்கள்.இந்த வயதில்தான் காதல் கவிதைகள் மாமிச அழுக்கில்லாமல் தூய்மையாக உதிக்கின்றன.மேலும் இந்தக் காதல் வெறும் பெண் காதல் அல்ல;அனைத்தையும் பெண்ணாகக் கண்டு கட்டித் தழுவிக்
கொள்ளும் காதல்.

இந்தக் காதலில் இறைவனும் காதலியாகிவிடுகிறான்.தன்னை மறப்பதே ஞானம்.காதல் இதை சாத்தியமாக்குகிறது.உண்மையில் காதல் என்பது இறைவனைச் சுவைப்பதுதான்.இந்தக் கவிதைகளில் ஆன்மீகக் காதல் அடி நீரோட்டமக ஓடுகிறது.சில இடங்களில் ஊற்றாகப் பீறிடுகிறது.

'கஸல்' இரண்டடிக் கண்ணிகளால் ஆனது.ஒரு கண்ணிக்கும் அடுத்த கண்ணிக்கும் கருத்துத் தொடர்பு இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை.இந்த சுதந்திரத்தை நான் எடுத்துக்கொண்டிருக்கிறேன்.ஆனால் 'கஸல்' வடிவத்தை அப்படியே பின்பற்றவில்லை.இரண்டடிக் கண்ணியைச் சிறு பத்தியாக்கிக் கொண்டேன்;பேச்சுச் சந்தத்தில் வரிகளை அமைப்பதற்காக.கண்னிகளை இணைக்கும் இயைபுத் தொடை, யாப்புச் சந்தம் இவற்றையும் தவிர்த்து விட்டேன்.இந்தக் கவிதைகளில் காதலின் பல்வேறு பரிணாமங்களை நீங்கள் காணலாம். 'கஸ'லில் இல்லாத பரிணாமங்களையும் நான் இதில் காட்டியிருக்கேன்.

இந்த கவிதைகள் 'பாக்யா' இதலில் 'நட்சத்திரப் பாடகன்' என்ற தலைப்பில் 1998 ஜனவரி தொடங்கி 100 வாரம் தொடராக வெளிவந்தவை.அப்பொழுதே இவை பிரபலமாகிவிட்டன.திரைப்படப் பாடலாசிரியர்கள் சிலர் இவற்றிலிருந்து பல வரிகளை எடுத்துப் பயன்படுத்திக் கொண்டார்கள்..பயன்படுத்துவார்கள்..இது,இந்தக் கவிதைகளின் வெற்றிக்குச் சான்று.

அப்துல் ரகுமான்
சென்னை.




காதல் சாளரம்
திறந்தேன்
கடவுள் தெரிந்தார்.

மின்மினிகளால் ஒரு கடிதம் − கஸல் கவிதை தொகுப்பிலிருந்து...

родро│рокродро┐
05-09-2007, 08:32 AM
[QUOTE=ப்ரியன்;267334]காதலியுடன் பேசுதல்

இந்தக் காதலில் இறைவனும் காதலியாகிவிடுகிறான்.தன்னை மறப்பதே ஞானம்.காதல் இதை சாத்தியமாக்குகிறது.உண்மையில் காதல் என்பது இறைவனைச் சுவைப்பதுதான்.இந்தக் கவிதைகளில் ஆன்மீகக் காதல் அடி நீரோட்டமக ஓடுகிறது.சில இடங்களில் ஊற்றாகப் பீறிடுகிறது.

'கஸல்' இரண்டடிக் கண்ணிகளால் ஆனது.ஒரு கண்ணிக்கும் அடுத்த கண்ணிக்கும் கருத்துத் தொடர்பு இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை.இந்த சுதந்திரத்தை நான் எடுத்துக்கொண்டிருக்கிறேன்.ஆனால் 'கஸல்' வடிவத்தை அப்படியே பின்பற்றவில்லை.இரண்டடிக் கண்ணியைச் சிறு பத்தியாக்கிக் கொண்டேன்;பேச்சுச் சந்தத்தில் வரிகளை அமைப்பதற்காக.கண்னிகளை இணைக்கும் இயைபுத் தொடை, யாப்புச் சந்தம் இவற்றையும் தவிர்த்து விட்டேன்.இந்தக் கவிதைகளில் காதலின் பல்வேறு பரிணாமங்களை நீங்கள் காணலாம். 'கஸ'லில் இல்லாத பரிணாமங்களையும் நான் இதில் காட்டியிருக்கேன்.[QUOTE]



அடடே!! :music-smiley-010::music-smiley-010::music-smiley-010:கஸல் பற்றி அழகாக எழுதியுள்ளார். :music-smiley-010::music-smiley-010::music-smiley-010:
இது எனக்கு செய்திகள். :4_1_8: :food-smiley-008:நன்றி.

பென்ஸ் அவர்களே!! உங்கள் பின்னூட்டம் ப்ரியனிடம் இருந்த நிறைய விசயங்களை வெளிக்கொண்டு வந்துள்ளது.:icon_clap:

புதிய முயற்சிகள் வரவேற்கப்பட வேண்டியவைகளே.!!!:ernaehrung004:

рокрпЖройрпНро╕рпН
05-09-2007, 08:52 AM
அன்பின் ப்ரியன்...

கவிதை ஞானம் எனக்கு குறைவாக இருப்பது அன்றி வேறு என்ன... நான் ஒரு சராசரி ரசிகன் தானே....
ஹைக்கு ஒன்று எழுதி அதற்கு தலைப்பு "ஹைக்கு" என்று கொடுத்தால் மட்டும்ற் அது ஹைக்கு என்று புரிந்து கொள்ளமுடிகிறது....
இலக்கணம் இல்லாமல் உணர்வுகளை மட்டுமே அடுக்கி வரும் இந்த புதுகவிதைகளை மட்டுமே த*ப்பு தப்பாக புரிந்து கொள்ளும் ஒரு சராசரி ரசிகர்களில் நானும் ஒருவன்.
இலக்கணம் கவிதைக்கு அழகு சேர்ப்பது என்று அறியாமலே, அது எண்ணக்களை கட்டி போடும் வேலியாய் நானும் நினைப்பது உண்டு... அதனால் தான் என்னவோ வார்த்தைகளை மட்டும் ஒன்றன் கீழ் ஒன்றாக அடுக்கும் எல்லாவற்றையும் நானும் கவிதை என்றே வாசிக்க நினைக்கிறேன்.

படிக்க வேண்டியது பலதும் இன்னும் இருக்கிறது... நான் கூறிய பின்னூடம் முட்டாள் தனமாக இருந்தாலும் அது ஒரு புதிய விசயத்தை அறிய உதவியதில் மிக்க மகிழ்ச்சி....

தளபதி... பார்த்தீர்களா... என் பின்னூட்டம் கூட சில நேரம் பயனுள்ளதாய் இருக்கு...

родроЩрпНроХро╡рпЗро▓рпН
05-09-2007, 12:31 PM
வார்த்தை ஜாலங்கள் மனதை மயக்கிவிடுகின்றது...